Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

இந்திய ஜனாதிபதி மோடியே தமிழே தொன்மையான மொழி எனக்கூறி தமிழில் விளித்ததாகசெய்திகள் வந்தது. அப்போ ஏன் இந்த கன்னடர் தமது எதிர்ப்பை காட்டவில்லை? 

கமல் சொன்னதையே மோடியும் சொல்லியிருந்தால் மோடியின் கொடும்பாவியும் கர்நாடகாவில் எரிந்திருக்கும். கர்நாடக பாஜகவே மோடிக்கு எதிராக தெருவில் இறங்கியிருப்பார்கள். ஆனால் மோடியும், கமலும் சொன்னவை ஒன்றல்ல.

நான் முன்னரேயே எழுதியும் இருந்தேன். தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும் எந்த ஒரு மொழியுடனும், மக்கள் திரளுடனும் ஒப்பீடுகள் இல்லாமலேயே இலகுவாக செய்யமுடியும் என்று. அதுவே சரியான ஒரு வழியும் ஆகும்.

மோடி இந்திய ஜனாதிபதி அல்ல, அவர் பிரதமர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு. இவரை மோடியும், பாஜகவும் ஜனாதிபதியாக தெரிந்தது எடுத்ததே அவர்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலை ஒரு வர்ணம் தீட்டி மறைப்பதற்கே.

மோடி திருக்குறள் சொல்வதும், பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவது, தமிழ் தொன்மை என்று சொல்வதும் இன்னொரு அத்தகைய வர்ணமே. தீவிரமாக இந்தியை திணித்துக் கொண்டே, ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த நிதியை தமிழ் ஆராய்சிகளுக்கு வழங்கிக் கொண்டே அவர் சொல்லும் புகழாரங்கள் வெறும் வாக்கு அரசியல் என்ற புரிதல் தமிழ்நாட்டில் மிக நன்றாகவே இருக்கின்றது.

குஜராத்தி மொழியுடன் ஒப்பிடும் போது இந்தி என்பது உண்மையில் ஒரு மொழியே அல்ல என்று மோடி சொல்வாரா................ இந்தி குஜராத்தியில் இருந்து வந்தது என்று சொல்வாரா....... இந்திக்கு சொந்தத்தில் எழுத்துருவே கிடையாது என்று சொல்வாரா...........

ஒரு தடவை கருணாநிதி அவர்கள் தமிழ் பதினேழு இலட்சம் வருடங்களாக இருக்கின்றது என்று சொல்லியிருந்தார். வேறு எவரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பதினேழு கோடி வருடங்கள் என்று சொன்னால் என்ன, முதல் மொழி என்று சொன்னால் என்ன, இன்னொரு கிரகத்திலும் பேசப்படுகின்றது என்று சொன்னால் என்ன, கன்னட மக்களோ அல்லது வேறு எந்த மக்களோ எதிர்ப்பு எதுவும் காட்டப் போவதில்லை. சிலர் வாய்விட்டு சிரிக்கக்கூடும். கருணாநிதி அவர்கள் சொன்னதைக் கேட்டு நான் சிரித்தேன். இவர்கள் எல்லாம் எங்கள் இனத்தின் பேரறிஞர்கள் என்று நினைத்த போது சிரிப்பு வெடித்துச் சிதறியது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

கந்தரோடையில் அன்று விகாரைகள் இருந்தன, அவை சைவ தமிழர்களால் தழுவப்பட்டது. பின் அதனை கைவிட்டு மீண்டும் தமது பூர்வீக மதத்தை தழுவியதாலேயே சைவ கோவில்கள் விகாரைகளாகி விகாரைகள் மறுபடி கோவில்களாகி இன்று சர்ச்சையாகியுள்ளது. அன்று நம் முன்னோர் சிலர் கிறிஸ்தவத்தை தழுவி, கைவிட்டதுபோல். அதையும் தவிர்த்து சிர்த்தாத்தன் சைவத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்க புறப்பட்டு, அவர் சீடர்களால்  தோற்றுவிக்கப்பட்டது பௌத்தம். அது சிங்கள பௌத்தமல்ல. தமிழ் பௌத்தத்திலிருந்தே சிங்களம் தழுவியது அண்மையில் ஒரு சிங்கள தேரரே கூறியுள்ளார்.

இன்னொரு தேரர் தமிழர்கள் 'கள்ளத் தோணிகள்' என்றும் சொல்லியிருக்கின்றார். இதையே தான் பெரும்பாலான சிங்கள் மக்களும் நம்ப விரும்புகின்றார்கள். இதை வரலாறாக எழுதியும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வரலாறுகள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சித்தார்த்தரும் சைவரா................. இன்று தான் கேள்விப்படுகின்றேன்.

'ஈழம் ஒரு சிவபூமி..............' என்று இப்பொழுது இடைக்கிடை சொல்லப்படுவதையே சீரணிக்க சிரமமாக இருக்கின்றது. இப்பொழுது சித்தார்த்தர் சைவர், பாகிஸ்தான் இந்துக்கள் சைவர்கள் என்று பலதும் வர ஆரம்பித்திருக்கின்றன.................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சித்தார்த்தரும் சைவரா................. இன்று தான் கேள்விப்படுகின்றேன்.

சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு. சித்தார்த்தர் அன்றைய சனாதன வேத மதத்தை எதிர்ததார். கடவுளை மறுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

மொழிகளை ஒப்பிட்டு இதிலிருந்து இது பிறந்தது என்று அடிபடுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் பிரிவினையையுமே ஏற்படுத்தும். இவ்வாறு செய்யும் போது மொழிவெறியை மட்டுமே வைத்து மக்களிடையே அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தீய சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையும்.

உண்மையில் இது மொழியியல் ஆராய்சசி சம்பந்தமான விடையம். மொழியியல் அறிஞர்கள் மட்டுமே தங்களுக்குள் அறிவியல் ரீதியாக விவாதிக்க வேண்டிய விடயம். ஒரு அளவுக்கு மேல் தரவுகள் இல்லாததால் இதை 100 வீதம் நிறுவுவதும் கடினமான விடயம். உண்மையில் தூய மொழி என்று ஒன்று கிடையாது. எல்லாமே நீண்ட மனித வரலாற்றில் மொழிகள் எல்லாமே கலப்படம் தான். அதில் தவறும் இல்லை. உதாரணமாக இலவசமாக கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. இது வந்தது பிரிட்டில் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவை நிர்வாகம் செய்யயும் போது கடிதங்களை அனுப்பும் போது On Company Service (OC) என்ற முத்திரை சீல் பாவித்தால் கடிதங்களுக்கு முத்திரை ஒட்ட தேவையில்லை. அந்த பாவனை பின்னர் மருவி இலவசமாக பெறுவதற்கெல்லாம் ஓசி என்று கூறும் வழக்கம் உண்டானது.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் கூட இலவசத்தை ஒசி என்று தமிழில் கூறுமளவுக்கு அந்த சொல் மக்களிடையே இரு நூற்றறாண்டு கடந்து சென்றடைந்துள்ளது. யோசித்து பாருங்கள் இரு நூறு ஆண்டுகளிலேயே இவ்வாறு என்றால் நீண்ட மனிதவாழ்வில் எந்த சொற்கள் எப்படி வந்தது என்பதை கண்டறிவது கடினமானது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடாகவில் படம் ஓடாது. மன்னிப்புக்கேட்டால் தமிழகத்தில் படம் ஓடாது. ஆப்பிழுத்த குரங்கின் நிலை கமலுக்கு. எப்படியும் ஓடாத படத்தை ஓடப்பண்ண இதுபோல சர்ச்சைகளை படம் சம்பந்தப்பட்டவர்கள் செய்வது வழமை;. இப்படித்தான் புரட்சித்தமிழன் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் திராவிடப்பங்காளி சத்தியராஜ் மன்னிப்புப் கேட்டார். இப்பொழுது கமலை மன்னிப்புக் கேட்கச்சொல்லி இருப்பதாக ஒரு செய்தி. இதுவெல்லாம் கமலுக்கு சின்னப் பிரச்சினை திமுகவை ஒழிக்க என்று கட்சி தொடங்கி ரோச்லைற்றால் ரிவி உடைத்து விட்டு இப்பொழுது உதயசூரியன் ஒளி இருககையில் ரோச்லைற் தேவை இல்லை என்று ராஜ்யசபா எம்பியாகி நம்பிவந்தவர்களை கைவிட்டு விட்டார். இப்பொழுது அவர்பேசியிருப்பதும் வழக்கம் போல மன்னிப்புக்கேட்டாரா இல்லையா என்று புரியாத மாதிரி பேசியிருக்கிறார்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Vs Kannada | Basic understanding of Kannada language and Tamil language

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

மோடி இந்திய ஜனாதிபதி அல்ல, அவர் பிரதமர்

சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

9 hours ago, ரசோதரன் said:

கமல் சொன்னதையே மோடியும் சொல்லியிருந்தால் மோடியின் கொடும்பாவியும் கர்நாடகாவில் எரிந்திருக்கும். கர்நாடக பாஜகவே மோடிக்கு எதிராக தெருவில் இறங்கியிருப்பார்கள்.

தொன்மை என்பது மூத்த, பழைமை, முதல், பெருமை என்று பொருள்படும். இன்னும் பல சொற்களுண்டு. அதை மறைக்கவே எல்லா பின்வேலைகளும் நடக்கின்றன. புதிய சரித்திரம், வாழ்விடங்களில் இருந்து துரத்துதல், கொலை செய்தல், பழைய வரலாற்றுச் சின்னங்களை களவாடுதல் அழித்தல், தடுத்தல், புதிய சின்னங்களை அதிகாரத்தின் மூலம் நிறுவுதல்  இவை எல்லாம் சான்றுகள்.. மொழி, மதம், சரித்திரம் இவையெல்லாம் தற்போது சுய நல அரசியலில் பெரும் பங்காற்றுகின்றன, அழிவை ஏற்படுத்துகின்றன. போரில் தான் செய்த கொடுமைகளை மறைத்து தர்மத்தை போதிக்க அசோக சக்கரவர்த்தி கையாண்ட ஆயுதம் பௌத்தம். அதை இலங்கைக்கு தனது மகள் மூலம் கடத்தினார்,அது இலங்கையில் சன்னதம் ஆடுது.  சிங்களம் இலங்கையில் அன்றி வேறெங்குமில்லை, அது தோன்றிய இடத்திலேயே இல்லை. ஹிந்தி பேசுகிறர்கள் எழுத்து வேறு மாதிரியானது. அண்மையில் ஒரு பாகிஸ்தானியை எனது வேலை சம்பந்தப்பட்ட இடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்போ என்னுடன் வந்திருந்த இந்தியர் ஹிந்தியில் அவருடன் பேச ஆரம்பித்து விட்டார். நான் விளக்கம் கேட்ட போது, பாகிஸ்தானியர் சொன்னது தான், உருது, ஹிந்தி, பஞ்சாப் அல்லது குஜராத்தி (சரியாக நினைவில் இல்லை) மொழி பேசுவேனென்றார். இதில் ஹிந்தி, உருது இரண்டுமே ஒரு மொழி. அவர்கள் உருது என்கிறார்கள் இவர்கள் ஹிந்தி என்கிறார்கள். ஆனால் எழுத்துக்கள் ஒரே மாதிரியானவை அல்ல, அவர்கள் இடப்பக்கத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறார்கள் என விளக்கமளித்தார்.ஒருவேளை அரபிக் முறை எழுத்துக்களாக இருக்கலாம். இவை அவர்கள் எனக்குச் சொன்ன விளக்கங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

இன்னொரு தேரர் தமிழர்கள் 'கள்ளத் தோணிகள்' என்றும் சொல்லியிருக்கின்றார். இதையே தான் பெரும்பாலான சிங்கள் மக்களும் நம்ப விரும்புகின்றார்கள். இதை வரலாறாக எழுதியும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆமாம் உண்மை அதற்காகவே யாழ் நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது, தமிழர் தமது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டப்பட்டு அவர்களது தொன்மைகள் அழிக்கப்பட்டு புதிதான சரித்திரமும் சின்னங்களும் முளைத்து பரப்பப்படுகின்றன, போதிக்கப்படுகின்றன. அவற்றிற்காக  நமது தலைமைகளுக்கு விலைகளும் கொடுக்கப்படுகின்றன. தமிழருக்கெதிராக இனப்படுகொலை நடக்கவில்லை என்றது சிங்களம். அதற்கான ஆதாரம் இல்லை என்றது அவர்களின் கைக்கூலிகள். இன்று அத்தனையையும் தகர்த்து கனடாவில், நடந்தது இனப்படுகொலையே என்று உலகெங்கும் உரத்துச்சொல்கிறது நினைவுத்தூபி. ஒரு சட்ட மேதை, ஆதாரங்களை திரட்டி, உண்மையை நிரூபிக்க தவறிய பட்சத்தில் கனடா செய்து நிரூபித்தது. அதற்கு முதல் கனடாவுக்கு தெரியாதா இதனால் என்ன நடைமுறைச்சிக்கல் வருமென்று? அதற்கு பதிலளிக்க வேண்டிய ஆதாரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, உறுதிப்படுத்திய பின்பே நிறுவுவதற்கு அனுமதி வழங்கியிருப்பார்கள். இவர்களோ அரசியல், வாக்குகள் என்று தங்களது வரலாற்று பதிலை வைத்து கொக்கரிக்கிறார்கள். வேறு நாடுகளெதுவும் விளக்கம் கோரவில்லையே. சரித்திரத்தை அழித்து விட்டோம் மூத்த இனத்தை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று இவர்கள் ஆறுதலடையலாம் இப்போதைக்கு. ஆனால் இந்த நினைவு தூபி உண்மையான சரித்திரத்தை சொல்லும், ஏன் அங்கு இனப்படுகொலை நடந்ததென தேடச்செய்யும் அதை பார்ப்போரை.    

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2025 at 19:41, island said:
On 31/5/2025 at 18:32, ரசோதரன் said:

சித்தார்த்தரும் சைவரா................. இன்று தான் கேள்விப்படுகின்றேன்.

சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு.

🙄

புத்தர் சைவ மதம் என்று என்ன இது புதிய கதை ? இதை எங்கள் புத்தன் அண்ணா கேள்விபட்டால் அப்செற் ஆகிவிடுவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன மொழியியல் அறிஞரா?'' : கன்னடம் குறித்த கருத்துக்கு கமல் ஹாசனை சாடிய உயர் நீதிமன்றம்

03 JUN, 2025 | 02:11 PM

image

பெங்களூரு: கமல் ஹாசனின் கன்னடம் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த மனு ஒன்றினை விசாரித்த உயர்நீதிமன்றம், "நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கடுமையாக சாடியுள்ளது.

வரவிருக்கும் தனது புதிய படமான தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும், திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கமல் ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது உயர் நீதிமன்றம் கமல்ஹாசனை இவ்வாறு சாடியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக்கூடாது. கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள் நீங்கள் வரலாற்றாய்வாளரா? அல்லது மொழியியல் அறிஞரா?

(நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால்) கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள். கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக்கேளுங்கள் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்." என்று தெரிவித்தார்.

முன்னதாக, கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்காவிட்டால், ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது திரைப்பட வெளியீட்டுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், படத்தினை அமைதியாக வெளியிடுவதற்கும், அப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பினை உறுதி செய்யவதில் அவசரமாக தலையிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்திருந்தார்.

கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, படத்தின் வெளியிட்டு தேதியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

என்ன பிரச்சினை?: ‘தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘‘தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/216446

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.