Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06 JUN, 2025 | 10:29 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது  ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

“எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். 

உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார்.

trump_musk11.jpg

ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024  தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.

ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

இதோடு  ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க்.

மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார்.  அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட்  அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.  ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.

‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த  டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216740

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பு நன்றிகெட்ட மனிதர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு

trump-1.jpg

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது.

சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அவை குழந்தை துஷ்பிரயோக ஊழலின் ஒரு பகுதியாகும் என்றும், அதனால்தான் விசாரணையின் விவரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலான் மஸ்க் பேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு குழந்தை துஷ்பிரயோகத்திற்கான விசாரணையை எதிர்கொள்ளும் போது சிறையில் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் வன்கொடுமைகளை எப்ஸ்டீன் வழக்கு உள்ளடக்கியது.

இருவருக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் இப்போது வெளிப்படையாக ஒருவரையொருவர் குறிவைத்து வருகின்றன.

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிய பதிவை மஸ்க் உடனடியாகப் பகிர்ந்து கொண்டார்.

‘எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருக்கின்றது. அவர்கள் பகிரங்கப்படுத்தப்படாததற்கு அதுதான் உண்மையான காரணம். இனிய நாள், டிஜேடி!’ என்று மஸ்க் பதிவில் கூறினார்.

இந்த பதிவை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவும். உண்மை வெளிவரும் என்றும் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“மஸ்க்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது. மீண்டும் அது எப்போதாவது கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

எலான் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் மோசமாகப் பேசவில்லை. ஆனால் அடுத்தது அப்படித்தான் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் டிரம்ப் கணித்தார்.

நான் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ஜனநாயகக் கட்சியினர் சபையைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்று மஸ்க் பதிலளித்தார்.

எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் உதவியிருக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருப்பார். டிரம்ப் நன்றி கெட்டவர்.

சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாலேயே அவர் அதனை வெளியிடவில்லை. நாசா உடனான டிராகன் விண்கலன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

மஸ்க் தனது “பெரிய அழகான மசோதாவை” எதிர்த்ததற்காக அவர் ஏமாற்றமடைந்ததாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மஸ்க்கின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக, டிரம்ப் நிர்வாகத்தின் எரிசக்தித் துறையின் (DoD) தலைவர் பதவியில் இருந்து மஸ்க் கடந்த வாரம் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

கோடீஸ்வரர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் கடந்த ஒன்பது மாதங்களாக பிரிக்க முடியாத ஒருவருக்கொருவர் அபிமானிகளாக இருந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=327610

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

“நான் மட்டும் இல்லையென்றால் 2024  தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.

ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின் நீ யாரோ நான் யாரோ. 😎

ஆராவது இதை எலான் மஸ்க்கு இங்கிலிசிலை மொழி பெயர்த்து எழுதி விடுங்கப்பா..🤣

இவர்கள் இருவரினதும் எதிரியான முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் Thierry Breton நேற்று தனது எக்ஸ் பதிவில் பொப்கோர்ன் படம் ஒன்றைப் போட்டிருந்தார். தனைக்கனம் பிடித்த இருவரும் மோதிக் கொள்ளும்போது எங்களுக்குக் கொண்டாட்டம்தான். டிரம்ப் தன்னுடன் மஸ்க்கை வைத்திருந்தால் அவர் ஆதரவாளர்களாலேயே பிரச்சனை வரும். வெட்டி விட்டாலும் பிரச்சனைதான். மஸ்க் பலமானவர். விரைவில் இருவரும் சமாதானம் ஆகாவிட்டால் மஸ்க் டிரம்பை 'வெச்சு செய்வார்' 😀.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் vs மஸ்க்: அதிகாரமும் செல்வமும் சேர்ந்த சக்தி வாய்ந்த கூட்டணியில் பிரிவு ஏன்? அடுத்தது என்ன?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்கா, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 6 ஜூன் 2025, 08:37 GMT

மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்?

அத்தகைய ஒரு காட்சியைத் தான் நாம் காண்கிறோம். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தங்களுக்கான சொந்த சமூக ஊடக தளங்களை வைத்திருப்பதால் பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் 'ஏமாற்றம்' அடைந்ததாக ஈலோன் மஸ்க் அண்மையில் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (டோஜ்- DOGE) வழிநடத்தும் தனது பதவிக்காலம் 'முடிவுக்கு வருகிறது' என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார்.

பின்னர் தனது எக்ஸ் தளத்தில், டோஜ் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்து, 'சிறப்பு அரசாங்க ஊழியர்' எனும் பொறுப்பிலிருந்து வெளியேறினார்.

ஆனால், டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் (One big beautiful bill) எனப்படும் அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும்.

அதன் பிறகு, அந்த மசோதா குறித்தும், டிரம்ப் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார் மஸ்க். இந்த மோதல் நேற்று (ஜூன் 5) உச்சக்கட்டத்தை எட்டியது.

டிரம்ப் மிரட்டலுக்கு மஸ்கின் பதிலடி என்ன?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்கா, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம்.

அமெரிக்க அரசாங்கத்துடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்கள் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்கு உயிர்நாடியாக உள்ளன. இப்போது அவற்றை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

"நமது பட்ஜெட்டில் பில்லியன்கணக்கான டாலர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, ஈலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்" என்று டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப், அமெரிக்க அரசாங்க இயந்திரத்தை மஸ்க்கிற்கு எதிராகத் திருப்பினால், அது மஸ்க்கிற்கு வேதனை தரக்கூடிய ஒரு நகர்வாக இருக்கும். இந்த மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று டெஸ்லாவின் பங்கு விலை 14% சரிந்தது.

இருப்பினும், இது ஒரு வழிப் பாதை அல்ல. இந்த வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து, டிரம்பை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்த மஸ்க், தனது நிறுவனங்களுக்கான நிதியைத் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்யுமாறு டிரம்புக்கு சவால் விடுத்தார்.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலங்களை சார்ந்துள்ளது அமெரிக்கா (நாசா).

டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, நாசாவிற்கான தனது டிராகன் விண்கல சேவையை நிறுத்தும் பணியை துரிதப்படுத்தவிருப்பதாக மஸ்க் தெரிவித்தார்.

மஸ்க் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்கா, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்புக்கு பதிலடி தர மஸ்க்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அடுத்த வருட தேர்தல்கள் மற்றும் முதன்மைத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர் நிதியுதவி அளிக்கலாம்.

வியாழக்கிழமை பிற்பகலில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய செய்தியை சொல்ல வேண்டிய நேரம்' என்று பதிவிட்ட மஸ்க் - மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத கோப்புகளில் டிரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார். ஆனால் தனது கூற்றுக்கு ஆதாரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை.

மஸ்க்கின் கூற்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு லேசான மறுப்பை மட்டுமே வழங்கினார்.

"ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதாவின் மீதான ஈலோனின் அதிருப்திக்குக் காரணம், அதில் அவர் விரும்பிய கொள்கைகள் இல்லை என்பது தான். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று கூறினார்.

டிரம்பின் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் மஸ்க் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பை அவரால் ஏற்படுத்த முடியும்.

இதை நன்கு அறிந்த டிரம்ப், நேற்றைய நாளின் (ஜூன் 5) இறுதிக்குள் பதற்றத்தை சற்றே தணித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காவல்துறை பாராட்டு நிகழ்வில் பொதுவில் தோன்றியபோது மஸ்க் குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தார்.

பின்னர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் "அவருக்கு (மஸ்க்) எதிராகத் திரும்புவதில்" தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் பல மாதங்களுக்கு முன்பே அரசாங்க வேலையிலிருந்து மஸ்க் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் தனது 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதா மற்றும் செலவுச் சட்டத்தை ஆதரித்து பேசுவதில் கவனம் செலுத்தினார்.

இருப்பினும், வியாழக்கிழமை நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம்.

டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மஸ்க் பதில் என்ன?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்கா, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப்.

கடந்த வாரம் தொடங்கிய இந்த மோதல், புதன்கிழமை தீவிரமடைந்து, வியாழன் அன்று அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் உச்சகட்டத்தை எட்டியது. அன்றைய தினம், விருந்தினராக வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த ஜெர்மனியின் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் சங்கடத்துடன் மௌனமாக அமர்ந்திருந்த போது, அதிபர் டிரம்ப் ஒருவித விரக்தியுடன் பேசுவதைக் காண முடிந்தது.

தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப்.

'மஸ்க்கின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவி இல்லையென்றால் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்' என்ற கருத்துக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.

மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குடியரசுக் கட்சியின் அழுத்தத்தால் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா பாதிக்கப்படும் என்பதே மஸ்க் தனக்கு எதிராக திரும்ப காரணம் என டிரம்ப் கூறினார்.

இதற்கு உடனடியாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்தார் மஸ்க். அவரை எக்ஸ் தளத்தில் 22 கோடி பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் மானியங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதாகவும், அது நாட்டின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார்.

தனது உதவி இல்லாமல் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை" என்று அவர் விமர்சித்தார்.

பின்னர், நேற்று பிற்பகலில், ஈலோன் மஸ்க் தனது தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகள் மூலம் டிரம்புக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடங்கினார். அதன் பிறகு தான் இந்த மோதல் தீவிரமடையத் தொடங்கியது.

மஸ்க் - டிரம்ப் சக்தி வாய்ந்த கூட்டணி பிரிந்தது எப்படி?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்கா, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் டிரம்ப், மஸ்க்

மஸ்க்கும் டிரம்பும் ஒரு சக்தி வாய்ந்த ஆனால் சாத்தியமற்ற கூட்டணியை உருவாக்கினர். அதன் விளைவாக டிரம்பின் நிர்வாகத்தில் அரசின் பட்ஜெட்டைக் குறைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய பதவியைப் பெற்றார் மஸ்க்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிடம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்பின் 'முதல் 100 நாட்கள்' என்ற பிரசாரத்தில் இந்த செலவுக் குறைப்பு பணிக்குழு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அது பல நிறுவனங்களை மூட வழிவகுத்தது, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

சிறந்த நண்பர்களாக டிரம்பும் மஸ்க்கும் தங்களை காட்டிக்கொண்ட போதும், இந்த இரு ஆளுமைகள் எங்கே, எப்போது வேண்டுமானாலும் மோதிக் கொள்ளக் கூடும் என்பது பற்றிய ஊகங்கள் சமீபத்தில் தான் வெளிவரத் தொடங்கின.

அந்த கணிப்புகள் தொடக்கத்தில் தவறாகத் தோன்றின. மஸ்க்கின் புகழ் குறைந்து வந்தாலும், நிர்வாகத்தில் அதிகாரிகளுடன் அவருக்கு பகைமைகள் இருந்தபோதிலும் டிரம்ப் மஸ்க்கிற்கு ஆதரவாகவே இருந்தார்.

ஒரு பிரிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒவ்வொரு முறையும், ஓவல் அலுவலகத்திலோ, அமைச்சரவை அறையிலோ அல்லது மார்-எ-லாகோவிற்கு அதிபர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கும் போதோ மஸ்க் உடனிருப்பார்.

அமெரிக்க அரசில், மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அவர் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைந்தது.

மஸ்க்கிற்கு ஓவல் அலுவலகத்தில் ஒரு ஆடம்பரமான 'ஃபேர்வல்' விழா நடத்திய டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான தங்கச் சாவியை பரிசளித்தார். மஸ்க் எப்போதாவது திரும்பி வரக்கூடும் என்ற குறிப்பும் வழங்கப்பட்டது.

ஆனால், இனி திரும்பி வருவதற்கான அழைப்பு வராது என்பதையும், தங்கச் சாவிக்கு பயன் இருக்காது என்பதையும் நாம் இப்போது சொல்ல முடியும்.

"ஈலோனுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது," என்று டிரம்ப் வியாழக்கிழமை கூறினார். இங்கு அவர் 'இருந்தது' என்ற கடந்த கால வார்த்தையை குறிப்பிட்டது முக்கியமானது.

புதன்கிழமை இரவு டிரம்ப் திடீரென அறிவித்த 12 நாடுகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகள், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மீதான கூடுதல் தடைகள் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தொடர்பான விசாரணை ஆகியவை மஸ்க்கின் விமர்சனத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்று சிலர் கருதினர்.

மஸ்க்கின் முந்தைய விமர்சனங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையும், அதன் ஆதரவாளர்களும் மஸ்க்கை மேலும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.

பின்னர் டிரம்ப் பேசினார், அதற்குப் பிறகு மஸ்க்கிடமிருந்து எதிர்வினைகள் குவிந்தன.

அடுத்து என்ன நடக்கும்?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்கா, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து மஸ்க் விலகியபோது, அவருக்கு ஒரு நினைவுப் பரிசை டிரம்ப் அளித்தார்

இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் பதற்றம் அடுத்து எந்தத் திசையில் செல்லும் என்பதுதான். ஈலோன் மஸ்க்கின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் மசோதாவை ஆதரிப்பது சற்று கடினம்.

குறிப்பாக, அவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு வாய்மொழியாக மட்டுமல்லாது, நிதி பாதுகாப்பையும் மஸ்க் வழங்க முடியும்.

மஸ்க் உடனான அரசாங்க ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

இருப்பினும், அவர் செலவுக் குறைப்பு பணிக்குழுவில் (DOGE) மஸ்க்கின் முன்னாள் நண்பர்களை குறிவைக்கலாம் அல்லது பைடன் அதிபராக இருந்தபோது மஸ்க்கின் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கலாம். தற்போது, அவருக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

இதற்கிடையில், இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.

மஸ்க் இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு நன்கொடை அளித்தவர் என்பதைக் கருத்தில் கொண்டாலும், மிகச் சில ஜனநாயகக் கட்சி தலைவர்களே மஸ்க்கை மீண்டும் தங்கள் முகாமிற்கு வரவேற்க விரும்புகிறார்கள். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு பழைய பழமொழி உண்டு.

"ஆனால் இந்த விளையாட்டில் இருவருக்குமே லாபம் இல்லை" என்று ஜனநாயக கட்சியின் மூலோபாய நிபுணர் லியாம் கெர், பொலிட்டிகோ எனும் டிஜிட்டல் நாளிதழிடம் கூறினார்.

"அவர் ஜனநாயகக் கட்சியினரை நோக்கி எந்த வகையில் காய் நகர்த்தினாலும், அது குடியரசுக் கட்சியினருக்கு தீங்கு விளைவிக்கும்" என்கிறார்.

இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பிரச்னையில் அமைதியாக இருக்க விரும்புவதாகவும், டிரம்ப்- மஸ்க் இடையிலான மோதல் தொடர்வதை அனுமதிப்பதாகவும் தெரிகிறது.

இருவருக்கும் இடையிலான இந்த கூச்சல், குழப்பம் அடங்காத வரை, அமெரிக்க அரசியலில் உள்ள மற்ற அனைத்து விஷயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது.

"டிரம்பின் அதிபர் பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான், ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது" என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq85127ewdqo

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எனக்கு சாப்பிட நேரமில்லாத வேலை பிசியானாலும், மகிழ்ச்சியான நாள்😂.

பூசலின் தோற்றுவாய் ட்ரம்பின் செலவைக் கூட்டும் (அதுவும் மில்லியனர்களுக்கு வரியைக் குறைத்து செலவைக் கூட்டும்) சட்ட முன்மொழிவு. இதை செனற் அனுமதித்தால், ட்ரம்ப் உடனே கையெழுத்து வைப்பார். ஜூலை 4 இற்கு முன்னர் இதைச் செய்வது ட்ரம்பின் திட்டம். நேற்று மஸ்க் தெரிவித்த ஒரு கருத்து, "ட்ரம்ப் இன்னும் 3.5 ஆண்டுகள் தான் பதவியில் இருப்பார், நான் இங்கே 40+ ஆண்டுகள் இருக்கப் போகிறேன்" - இதைப் பார்த்த சிவப்புக் கட்சி செனரர்களுக்கு வயிற்றில் புளி கரைந்திருக்கும். ஏனெனில், மஸ்க்கின் பண உதவியில்லாமல் அவர்கள் தேர்தலில் வெல்வது கடினம். வீம்பிற்கு மஸ்க் எதிர் தரப்பிற்கு பண ஆதரவைக் கொடுத்தால், சவால் இன்னும் கூடும்.

என் ஆசை: தன் கொள்கை எதிரிகளைக் கையாள்வது போலவே சட்டத்திற்கு வெளியால் ட்ரம்ப் மஸ்க்கை அடக்க முயல வேண்டும். தென்னாபிரிக்காவிற்கே திருப்பி அனுப்பி விட்டாலும் பரவாயில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அவசர தேவைகள் சார்ந்த சுயநலக்காதல் இவ்வாறு தான் நிறைவு பெறும்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது.

ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள்.

எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை.

தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள்.

நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள்.

நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.

images?q=tbn:ANd9GcR67mxnO5ry8_I9vhtIARU

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது.

ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள்.

எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை.

தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள்.

நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள்.

நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.

images?q=tbn:ANd9GcR67mxnO5ry8_I9vhtIARU

பில்லியன்களில் வருட வருமானம் பெறும் மஸ்க், தன்னுடைய முதல் 3 மாதங்களில், வேலையைப் பறித்துத் தெருவில் விட்ட அரச ஊழியர்கள் மாதாந்த வேதனத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மத்திய தர வகுப்பினர். இத்தகைய "ஆன்மா இல்லாத சதைக் கோளமான" எலான் மஸ்க்கை, தீவிர ட்ரம்ப் ஆதரவாளர்கள் "ஒரு கை" பார்ப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை😎!

ஆனால், ரெஸ்லா வாகனம் வைத்திருக்கும் ஆட்கள் கதி தான் கவலை தருகிறது. இது வரை தீவிர இடது சாரிகள் மட்டும் கொழுத்தினார்கள். இனி அவர்களை விட மோசமான வெள்ளையின வலதுசாரிகளும் சேர்ந்து கொழுத்தப் போகிறார்கள். கனடாவிற்கும் தப்பிப் போக முடியாது! அங்கேயும் நொருக்குவார்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உலகில் அதிக செல்வம் மிக்கவர். மற்றவர் உலகில் அதிக அதிகாரம் மிக்கவர்.

டொனால்ட் டிரம்ப் அவர்களின் கொள்கைகள் புதிய விடயங்கள் இல்லை. குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பூமி வெப்பம் அடைதல் போன்ற விடயங்களில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இவை எல்லாம் தெரிந்துகொண்டே மாஸ்க் டிரம்ப்புடன் கை கோர்த்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டும் டிரம்ப், கலகலக்கும் மஸ்கின் தொழில் சாம்ராஜ்யம் - நாசாவுக்கு சிக்கல் வருமா?

ஈலோன் மஸ்க், டொனால்ட் டிரம்ப், உலக செய்திகள், அமெரிக்க செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், லில்லி ஜமாலி

  • பதவி,

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தொழில் அதிபர் ஈலோன் மஸ்க் தெரிவித்தார். இதனால், மஸ்க் தனது கவனத்தை, அவர் நடத்தி வரும் நிறுவனங்களின் மீது திருப்புவார் என்று அவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் வெள்ளை மாளிகை குறித்து வெளிப்படையாக அவர் முன்வைத்த விமர்சனங்கள் போன்றவை, முதலீட்டாளர்கள் நினைத்தது போன்று மஸ்கின் கவனம் திரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மக்களின் பார்வையில் இருந்து விலகி டெஸ்லா மற்றும் இதர நிறுவனங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக, அவரின் மிக முக்கியமான வாடிக்கையாளரான டிரம்பின் பெடரல் அரசு அவருடைய நிறுவனத்தை புறக்கணிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

டெஸ்லாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு அவருடைய பங்குகளின் மதிப்பு 14% வரை குறைந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே பதற்றம் தணிந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இருப்பினும் கூட பல மாதங்களாக நிபுணர்களும், முதலீட்டாளர்களும் மஸ்க் அவருடைய போனை கீழே வைத்துவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர்கள் நினைத்ததற்கு எதிரான சூழலே நிலவுகிறது.

"டெஸ்லா ஏற்கனவே பின்தங்கியுள்ளது"

மஸ்கின் தொழிலில் இருக்கும் பிரச்னையானது, தற்போது டிரம்புடன் இருக்கும் சிறு சச்சரவைக் காட்டிலும் ஆழமானது என்று சிலர் வாதிடுகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்கிற்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதவியானது மஸ்கின் தொழிலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்றும் கூறுகின்றனர்.

மூத்த தொழில்நுட்ப பத்திரிகையாளரான காரா ஸ்விஷர், டெஸ்லா விவகாரத்தில் இது உண்மையாகிவிட்டது என்று கூறுகிறார்.

"டெஸ்லா முடிவுக்கு வந்துவிட்டது," என்று இந்த வாரம் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

"அந்த கார் நிறுவனம் மிகவும் சிறப்பாக இருந்தது. தானியங்கி கார்கள் பிரிவில் திறம்பட போட்டியிட இயலும். ஆனால் அவர்கள் பின்தங்கியுள்ளனர். சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் செயல்பாட்டிற்கு வந்த வாகன ஓட்டிகள் இல்லாத வேமோ (Waymo) வாகனத்துடன் போட்டியிட டெஸ்லா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் வேமோவை உற்பத்தி செய்து வருகிறது. சான்ஃபிரான்சிஸ்கோ மட்டுமின்றி தற்போது பல நகரங்களிலும் வேமோ இயக்கப்பட்டு வருகிறது.

டெக்சாஸில் அமைந்திருக்கும் ஆஸ்டனில் தானியங்கி ரோபோக்களால் இயக்கப்படும் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்யும் பணியை இந்த மாதம் மஸ்க் மேற்பார்வையிடுகிறார். கடந்த வாரம் எக்ஸ் தளத்தில், மின் வாகன உற்பத்தியாளரான அவரின் நிறுவனம், ஓட்டுநரே இல்லாத மாடல் ஒய் (Model Y) காரை சோதனை செய்து வருகிறது" என்று கூறினார்.

"டெஸ்லாவின் 90% எதிர்கால மதிப்பீடானது தானியங்கி மற்றும் ரோபோக்களை சார்ந்தே இருக்கும்," என்று டான் இவ்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். வெட்புஷ் செக்யூரிட்டீஸில் நிபுணராக பணியாற்றி வரும் அவர் ஆஸ்டினில் நடைபெற இருக்கும் அறிமுக விழா இந்த நோக்கத்தின் முக்கிய கட்டமாக இருக்கும் என்று கூறினார்.

"இதன் முதல் படியானது, தானியங்கி என்ற பார்வையை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதான்," என்று இவ்ஸ் தெரிவித்தார்.

ஈலோன் மஸ்க், டொனால்ட் டிரம்ப், உலக செய்திகள், அமெரிக்க செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு மஸ்கின் பங்குகளின் மதிப்பு 14% வரை குறைந்தது.

தற்போது மஸ்கின் கவனம் திசை திரும்பியுள்ளதால் இந்த திட்டத்தின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது போல் தோன்றுகிறது.

இதில் மற்றொரு காரணியும் உள்ளது. அது மஸ்கின் சொந்த உத்வேகம்.

மஸ்கால் என்ன முடியும் என்கிற பேச்சு குறைந்து அவர் எதைப் பற்றியாவது கவலைப்படுகிறாரா என்ற பேச்சு சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது.

"எதிலாவது கவனம் செலுத்தும் போது அவர் மிகவும் பலம் வாய்ந்த நபராக செயல்படுவார்," என்று கெர்பெர் கவாசகி வெல்த் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான ராஸ் கெர்பெர் கூறுகிறார்.

"இதற்கு முன்பு, வேறு யாராலும் செய்ய இயலாத மின்சார வாகனங்களை உருவாக்க இயலும் என்பதை உலகுக்கு நிரூபித்தார். அதன் பிறகு அவரால் ராக்கெட்டுகளை உருவாக்க இயலும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். அவர் நிரூபித்துக் காட்ட நிறைய இருந்தது," என்று அவர் தெரிவிக்கிறார்.

நீண்ட கால டெஸ்லா முதலீட்டாளரான கெர்பெர் தன் வசமிருந்த பங்குகளை குறைத்துக் கொண்டுள்ளார். மஸ்க் வலதுசாரி அரசியலில் இணைந்த பிறகு தன்னுடைய முதலீட்டை கெர்பெர் குறைத்து வருகிறார். பங்குகள் வீழ்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், "வியாழக்கிழமை மிகவும் வலி மிகுந்த நாள்," என்று குறிப்பிட்டார்.

"நீங்கள் செய்யக் கூடிய அதிகபட்ச முட்டாள்தனம் என்னவென்றால், அமெரிக்காவில் நீங்கள் அதிபரைக் காட்டிலும் பலமிக்க நபர் என்று நினைப்பதாகத் தான் இருக்கும்," என்று டிரம்புக்கு எதிராக மஸ்க் வெளியிட்ட பதிவுகளை சுட்டிக்காட்டினார் கெர்பெர்.

எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களை அணுகி மஸ்கின் கருத்துகளை பெற முற்பட்டது பிபிசி. ஆனால் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக அவர் பிபிசியிடம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஈலோன் மஸ்க், டொனால்ட் டிரம்ப், உலக செய்திகள், அமெரிக்க செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மஸ்கால் என்ன முடியும் என்கிற பேச்சு குறைந்து அவர் எதைப் பற்றியாவது கவலைப்படுகிறாரா என்ற பேச்சு சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது.

டெஸ்லா இறங்குமுகம்

டொனால்ட் டிரம்பின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு முன்பாகவே, மஸ்கின் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவுக்கு எதிராக சமூக வலைதளங்கில் அடிமட்ட அளவில் பிரசாரம் ஒன்று நடைபெற ஆரம்பித்துவிட்டது.

டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு வார இறுதியிலும் #TeslaTakedown என்ற ஹேஷ்டேக்கில் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கார் விற்பனையானது 20% வரை குறைந்துள்ளது என்று டெஸ்லா நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது. அந்த நிறுவனத்தின் லாபம் 70%-க்கும் அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

"நம்முடைய அரசை சில்லுசில்லாக நொறுக்கி நம் ஜனநாயகத்தின் தலையெழுத்தை அவர் தீர்மானிக்கக் கூடாது. இது சரியல்ல," என்று இந்த பிப்ரவரி மாதம் கலிஃபோர்னியாவின் டெஸ்லா டீலர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற லிண்டா கொஸ்டினென் என்னிடம் கூறினார்.

மஸ்கிற்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க விரும்புவதாக லிண்டா கூறினார்.

இந்த போராட்டங்கள் டெஸ்லா நிறுவனம் பற்றியதோ அதன் தொழில்நுட்பம் பற்றியதோ இல்லை என்று கூறுகிறார் ஜான் டோனோவன். #TeslaTakedown போராட்டங்களை சமூக வலைதளங்களில் இணைந்து ஒருங்கிணைத்த அவர் போலி செய்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முக்கியமான ஆய்வாளராவார்.

"இந்த போராட்டம் டெஸ்லாவின் பங்குகள் எவ்வாறு மக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன என்பது பற்றியது. இது எவ்வாறு மஸ்கிற்கு வெளிப்படைத்தன்மையற்ற அதீத அதிகாரத்தை வழங்கியது என்பதைப் பற்றியது," என்று டோனோவன் கூறுகிறார்.

ஈலோன் மஸ்கின் சாம்ராஜ்ஜியத்தின் மற்றொரு அம்சமான சமூக வலைதள நிறுவனமான எக்ஸும் அவர் எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய ஒன்றாகும். முன்பு டிவிட்டர் என்று அறியப்பட்ட நிறுவனத்தை மஸ்க் வாங்கினார்.

"அதன் மூலம் அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க இயலும். எந்தவிதமான தயக்கமும் இன்றி லட்சக்கணக்கான மக்களை அணுக இயலும்," என்று டோனோவன் கூறினார்.

தனிப்பட்ட பிராண்ட்

இங்கு மற்றொரு சாத்தியமும் இருக்கிறது.

டிரம்புடன் இதற்கு முன்னதாக மஸ்க் நெருங்கிய நட்பைக் கடைபிடித்ததால் விலகிச் சென்ற மக்களை, இந்த சச்சரவின் பின்னணியில் மீண்டும் ஈர்க்க முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மூர் இன்சைட்ஸ் & ஸ்ட்ராடெஜி நிறுவனத்தின் தலைமை நிபுணர் பேட்ரிக் மூர்ஹெட் இது சாத்தியம் என்கிறார்.

பிபிசி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட போது, "நாம் மன்னிக்கும் தன்மை கொண்ட நாடு," என்று கூறினார். "இது நடக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால் இது ஒன்றும் முதன்முறையாக நடக்கும் நிகழ்வு அல்ல," என்றும் அவர் கூறினார்.

காரா ஸ்விஷர் இது குறித்து பேசும் போது, மஸ்கின் தனிப்பட்ட பிராண்டை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோ சாஃப்டை நிறுவிய இணை நிறுவனர் பில்கேட்ஸுடன் ஒப்பிடுகிறார்.

"முரட்டுத்தனம் மற்றும் பிடிவாதம் காரணமாக," சிலிகான் பள்ளத்தாக்கின் டார்த் வாடெராக" அறியப்பட்டவர் பில்கேட்ஸ் என்று ஸ்விஷர் கூறுகிறார். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் டார்த் வாடெர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய குறைபாடுகளையும் தாண்டி மஸ்க் தன்னுடைய பிம்பத்தை அவர் மீள்கட்டமைப்பு செய்து கொண்டார்.

"அவர் கற்றுக் கொண்டார். மாறினார். மக்கள் மாறுவார்கள்," என்று கூறுகிறார் அவர். மஸ்க் உண்மையாகவே பிரச்னைக்குரியவராக இருப்பினும் அவரும் மாறுவார் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஸ்விஷர்.

நாசாவுக்கு சிக்கல் வருமா?

மஸ்க் மற்றும் அவரின் நிறுவனங்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகள் என்பது அவர் என்ன செய்ய உள்ளார் என்பது மட்டுமல்ல, டிரம்ப் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்தும் அமைகிறது.

குறைந்தபட்சம் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிதியை அளிக்க டிரம்பிற்கு மஸ்கின் உதவி தேவைப்பட்டது. இப்போது அவருக்கு எந்த விதமான உதவி தேவை என்பதில் தெளிவில்லை.

நோவாபினியன் சப்ஸ்டாக் என்ற பெயரில் எழுதி வரும் நோவா ஸ்மித், "எவ்வளவு முறையற்றதாக இருந்தாலும் கூட ட்ரம்ப் கிரிப்டோகரன்சி மூலமாக அதிக லாபம் ஈட்டியிருப்பது, மஸ்கை நாடியிருக்கும் சூழலில் இருந்து வெளியேற உதவியிருக்கலாம்," என்று கூறுகிறார்.

"இப்படி இருந்தால் மட்டுமே அவர் ஈலோன் பிடியில் இருந்து வெளியேற இயலும்," என்று நினைப்பதாக ஸ்மித் கூறுகிறார்.

மஸ்கின் அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யலாம் என்று மிரட்டும் வகையில் டிரம்ப் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் அவை.

இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட அளவானது மஸ்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. டிரம்பின் அறிவிப்பால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இருப்பினும் டிரம்பின் எச்சரிக்கையானது வெறும் சலசலப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கலாம்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்கிறது. தற்போது அங்கே நாசா விஞ்ஞானிகள் 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்க விண்வெளித்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த அம்சங்களில் வேரூன்றி இருப்பதை காட்டுகிறது. எனவே டிரம்பின் மிரட்டலை அவ்வளவு எளிதில் நிறைவேற்ற இயலாது.

மஸ்கின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ஸ்டார்லிங்கிற்கும் இது பொருந்தும். இதற்கு மாற்று கண்டுபிடித்துவிட இயலும் என்று கூறுவது எளிதாக இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.

ஆனால் டிரம்பால் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருப்பது போன்றே மஸ்கிற்கும் வரம்புகள் இருக்கின்றன.

டிரம்புடனான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மஸ்க் தன்னுடைய டிராகனை கலைத்துவிடுவதாக கூறினார். ஆனால் பின்னர் அதில் இருந்து பின்வாங்கிவிட்டார்.

எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, "நல்ல ஆலோசனை. ஓகே. நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் (டிராகனை கலைப்பது),"என்று மஸ்க் பதில் அளித்தார்.

டிரம்ப் - மஸ்க் இடையேயான நட்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் ஒருவரை மற்றொருவர் நாடியிருக்கும் சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது.

மஸ்க் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருந்தாலும் சரி, டிரம்ப் மற்றும் அவரின் நிர்வாக நடவடிக்கைகள் அதில் முக்கிய பங்காற்றும் என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74qyxv98dxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது'' - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

08 JUN, 2025 | 01:53 PM

image

உலகின் ‘நம்பர் 1’ செல்வந்தரான எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப்பின் முன்னாள் நண்பரான மஸ்க் இப்போது அவரது பிரதான இலக்காக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன்.

தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.

2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் இப்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதை சுட்டும் வகையில் அவரது அண்மைய பேச்சும் இருந்துள்ளது. அரசின் செலவினங்களை குறைக்க மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் போதும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளிப்படையாக ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என கூறியுள்ளார்.

“மஸ்க் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். நிச்சயம் அவர் அரசுடன் இணைந்து பயணிப்பார் என கருதுகிறேன். ஆனால் இப்போது அது நடக்காது. ட்ரம்ப் சிறப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் எந்த தவறையும் செய்யவில்லை. என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்க அதிபர் தேர்தலில்டு ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி ஆனதும் அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் வரவுசெலவு திட்டம் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள் அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மின்சார வாகனங்களுக்கான 7500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால் எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.

வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆண்டு லாபம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு குறையலாம் என கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/216938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்

11 JUN, 2025 | 03:11 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன், அவை மிகைப்படுத்தப்பட்டன.” என்று தெரிவித்திருக்கிறார்.

எலான் மஸ்க், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப்-க்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டன” என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.

வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ட்ரம்ப் அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் மீண்டும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.

2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/217172

  • கருத்துக்கள உறவுகள்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை கைவிட மாட்டோம்; டொனால்ட் ட்ரம்ப்

Star-link.jpg

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் பேசிய அவர், எலான் மஸ்கிடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாகவும் கூறினார்.

தங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் மட்டுமே கூற விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=328494

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.