Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. 

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. 

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. 

ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. 

அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. 

இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். 

இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. 

அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. 

எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. 

மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். 

நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மருத்துவ நிபுணர் மாலை 4 மணி வரை பணியாற்றுவதாக அங்கு பணியாற்றும் ஒருவர் குறிப்பிட்டார். இந்த காரணம் ஒன்று போதுமே?!

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2025 at 01:05, கிருபன் said:

எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது

இவருக்கு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

இவருக்கு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம்?

எனக்கு இதன் பின்னணி தெரியவில்லை, பொதுவாக வேலைக்கு வருபவர்கள் வேலை செய்யும் எண்ணத்துடன் வருவதில்லை, இது ஆசிய இனத்தவர்களுக்குள் உள்ள விடயமா அல்லது இது ஒரு பிரபஞ்ச உண்மையா என தெரியவில்லை.

மேலை நாடுகளில் கூட இந்தநிலை காணப்படுகிறது, தாம் ஊதியம் பெறுகிறோம் அதற்கு வேலை செய்ய வேண்டும் என பார்க்கமாட்டார்கள், மற்றவர்களுடன் ஒப்பிட்டு வேலை செய்தல் அல்லது வேலையினை தவிர்த்தல் புத்திசாலித்தனம் என நினைக்கின்றமை, நான் வேலையிடத்தில் பொதுவாக கூறும் நகைச்சுவை வேலை செய்ய கூடாது எனபதற்காக வெளிக்கிட்டு வேலைக்கு வருகிறார்கள் என🤣.

முக்கியமான வேலைகளில் கூட எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியமாதிரி வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது, பின்னர் குறித்த பிரிவினர் மேலை நாடுகளில் வந்து மிக சிரமமான நடைமுறைகளை கூட மனம் கோணாமல் செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

16 hours ago, ஏராளன் said:

இந்த மருத்துவ நிபுணர் மாலை 4 மணி வரை பணியாற்றுவதாக அங்கு பணியாற்றும் ஒருவர் குறிப்பிட்டார். இந்த காரணம் ஒன்று போதுமே?!

9 - 4 ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

9 - 4 ?

8 - 4 என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

8 - 4 என நினைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம், புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" - அரசவைத்திய அதிகாரிகள் சங்கம்

12 JUN, 2025 | 12:23 PM

image

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான சக்திகளிடமிருந்து வைத்தியசாலையை காத்திட கரம்கோர்த்திடுவோம் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிக்கையொன்றில் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

504947963_1244311583774232_8650130050200

தெல்லிப்பளை மண்ணின் புகழ் பூத்த எங்கள் வைத்தியசாலை, போர் மற்றும் இடப்பெயர்வுகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து புதிய இடத்தில் இயங்கத் தொடங்கியது. குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி அடைந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக வட மாகாண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வைத்தியசாலையாகத் தன்னைத் தரமுயர்த்தி மிடுக்கோடு விளங்குகின்றது. விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றி வரும் மகத்தான வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத் திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக அது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது. அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பற்ற நிலைக்கும் தற்போதைய நிர்வாகம் இட்டுச் செல்கின்றது. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வைத்தியசாலையின் இந்த விரும்பத்தகாத நிலைமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அண்மையில் நாங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தோம்.

மேலும் இவ் வைத்தியசாலையில் புற்றுநோய்ப் பிரிவும் அங்கு சேவையாற்றும் சேவை நோக்கம் கொண்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்தியும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தொடர்ச்சியான நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய வைத்தியசாலை நிர்வாகி மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் பெயர் பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையிலானதாக சந்தேகிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக ஊடகப் பிரச்சாரம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. எனினும், எமது வைத்தியசாலையை மீட்டெடுக்கப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைப் பாதுகாக்க பொது மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கில் தொழிற் சங்க நடவடிக்கையாக தற்போது பொது மக்களிடமும், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் நிலவும் சிக்கல்களை விளக்கும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கால விரயம் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தால் வைத்திய நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன், புற்றுநோயாளர்களுக்குரிய தரமான இலவச சிகிச்சை அளிப்பதில் செயற்கையாக இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதுடன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இதர சுகாதார ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில் நிர்வாக மாற்றத்தை வெகு விரைவில் ஏற்படுத்தாவிடத்து எதிர்வரும் 13 .06.2025 அன்று வைத்தியர்களினால்

"எங்கள் வைத்திய சாலையை மீட்டெடுப்போம் - புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" என்ற தொனிப் பொருளில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளோம்.

மக்கள் நலன்பால் அக்கறை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலை மற்றும் நோயாளர் நலன் விரும்பிகள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

வைத்தியசாலைக்கு எதிரான சக்திகளிடமிருந்து உங்கள் வைத்தியசாலையைக் காத்திடக் கரம் கோர்த்திடுவோம் வாரீர்.

https://www.virakesari.lk/article/217247

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2025 at 04:48, nunavilan said:

இவருக்கு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம்?

எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.ஆனால் இந்த விடையங்களை ஒரு வைத்தியரது பக்கத்தில் பார்த்தேன்.இந்த மருத்துமனையிலும் சில ஊழல்கள் நடை பெற்றுள்ளதால் மல்லாகம் நீதி மன்றில் வழக்கு போய் கொண்டு இருக்கிறது..அது மட்டுமல்ல காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு போன நோயாளியை இரவு 11 மணிக்கு பின்னர் தான் வைத்தியர் ஒருவர் பார்த்துள்ளார்.உண்மையாக அந்த நோயாளியை வைத்தியசாலைக்கு போனதும் பார்த்திருக்க வேண்டிய நிலை(நெஞ்சு வலி வந்திருக்கிறது அந்த நோயாளிக்கு).பயிற்சியிலிருப்பவர்களுக்கு (எவருக்கும் )சில நிபந்தனைகள் இருக்கிறது.அதனை மீறனால் தண்டனைகளுக்கு முகம் குடுக்க வேண்டி வரும் இல்லயா..அப்படித் தான் இந்த நோயாளியை பார்த்தவரும் நாட்டை விட்டு தப்பி ஓடும் முயற்சியிலிந்து தடுக்கபட்டுள்ளார்.இப்படி பல பிரச்சனைகள் நீதி மன்றில் போய் கொண்டு இருப்பதாக பகிர்ந்திருந்தார் வைத்தியர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

1730227101.jpg

புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம்தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்;
இந்த மருத்துவமனையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரேஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது மருத்துவமனை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். 

இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் வாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. 

ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்- என்றார்.

இதன்போது, போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மருத்துவர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://newuthayan.com/article/தெல்லிப்பழை_ஆதார_மருத்துவமனைக்கு_முன்பாக_கவனவீர்ப்பு_போராட்டம்_முன்னெடுப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம் 

Published By: DIGITAL DESK 2

13 JUN, 2025 | 12:05 PM

image

புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது.

ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

VID-20250613-WA0052.jpgVID-20250613-WA0055.jpgVID-20250613-WA0045.jpgVID-20250613-WA0037_1_.jpgIMG-20250613-WA0058.jpg

https://www.virakesari.lk/article/217344

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.