Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது எதனை உணர்த்துகிறது...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_40938742_search203.jpg

பிரித்தானியாவில் சந்தேகத்தின் பெயரில் கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களை விட 7 மடங்கு அதிகமாக பொலிஸால் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனராம். ஆசியர்கள், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சந்தேகத்தோடு நோக்கப்படுகின்றனர்.

இது மேற்குலகின் போக்கில் எதனை உணர்த்துகிறது..????!

இது இனவாதம் இல்லையா..??! :blink::huh:

அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது. :unsure:

http://news.bbc.co.uk/1/hi/uk/7069791.stm

Edited by nedukkalapoovan

இது நிச்சயமாக இனவாதம் தான். பிரித்தானிய பொலீசாரின் இனவாத நடவடிக்கைகளை லண்டன் பகுதியில் கண்கூடாக பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது.

வற்சனும் ஒரு வெள்ளை இனவாதி போலும்.

வற்சனின் அக்கூற்று ஆய்வின் பலனாக வந்திருந்தால் அது இனவாதமல்ல என நான் நினைகிறேன்

ஆபிரிக்கர்கள் மாத்திரமல்ல ஆசியர்களும் வெள்ளைகளை விட நுண் அறிவு குறைந்தவர்கள் எண்டதை இன்று அவர்களின் வாழ்க்கைத் தராதரம் அவர்கள் ஆழும் நாடுகளில் நிலைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அவங்கள் எங்களை காலனித்துவப்படுத்தாட்டி சுறண்டாட்டி இப்ப எங்கையே இருப்பம் எண்டு ஒப்பாரிவைப்பினம். காலனித்துவப்படுத்தப்பட ஏன் விட்டனிங்கள்? எங்கடை நுண் அறிவு குறைவு எண்டடியால் தானே தோத்தனாங்கள்?

ஆனால் ஆசியர்கள் ஆபிரிக்கர்கள் மீது காட்டும் இனவாதத்தை விட வெள்ளைகள் காட்டும் இனவாதம் குறைவானது தான்.

உங்களில் எத்தனை பேர் ஆபிர்கர்களை நண்பர்களாக நண்பிகளாக கொண்டுள்ளீர்கள்? அப்படி கொண்டிருப்பவர்கள் அது பற்றி உங்கள் ஆசிய நண்பர்கள் உறவினர்களிற்கு சொல்லிய போது எப்படியான பதில் கிடைத்தது?

அதிகம் வேண்டாம் தொடரூந்திலோ அல்லது பேரூந்திலோ ஏறுகிறீர்கள், இருப்பதற்கு 2 இடங்கள் தான் இருக்கிறது. 1 இற்கு அருகில் ஆபிரிக்கர் மற்றதற்கு அருகில் வெள்ளை. நீங்கள் ஏதை தெரிவு செய்வீர்கள்?

இதுவரை வெள்ளைகளை திருமணம் முடித்த ஆசியர்களோடு ஒப்பிடும் போது ஆபிரிக்கர்களை திருமணம் முடித்த ஆசியர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

உங்களில் எத்தனை பேர் ஆபிர்கர்களை நண்பர்களாக நண்பிகளாக கொண்டுள்ளீர்கள்? அப்படி கொண்டிருப்பவர்கள் அது பற்றி உங்கள் ஆசிய நண்பர்கள் உறவினர்களிற்கு சொல்லிய போது எப்படியான பதில் கிடைத்தது?

எனக்கு அமெரிக்க அபிரிக்கர் ஒருவர் நண்பர் அதனை வெளியில் சொன்னாலும் யாரும் ஒண்டும் சொல்லவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வற்சனின் அக்கூற்று ஆய்வின் பலனாக வந்திருந்தால் அது இனவாதமல்ல என நான் நினைகிறேன்

வற்சனின் கூற்று அறிவியலுக்கு அப்பாலானது என்பதை அவரின் இக்கூற்றுத் தொடர்பான செய்தியை வலைப்பூவில் படித்த போது அறிந்தேன்.

http://kuruvikal.blogspot.com/2007/10/drwatson.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகம் வேண்டாம் தொடரூந்திலோ அல்லது பேரூந்திலோ ஏறுகிறீர்கள், இருப்பதற்கு 2 இடங்கள் தான் இருக்கிறது. 1 இற்கு அருகில் ஆபிரிக்கர் மற்றதற்கு அருகில் வெள்ளை. நீங்கள் ஏதை தெரிவு செய்வீர்கள்?

இதுவரை வெள்ளைகளை திருமணம் முடித்த ஆசியர்களோடு ஒப்பிடும் போது ஆபிரிக்கர்களை திருமணம் முடித்த ஆசியர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

சும்மா அசத்திப்போட்டியள்... 100% / 100% உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எங்கோ வாசித்த்த ஞாபகம் கறுப்பு இனத்தவர்கட்கு மற்றைய இனத்தவர்களை விட மூளையின் அளவு பெரியது என்று.(அவர்கள் அதனை பாவிக்காதது வேறு விடயம்).அந்த ஆய்வு எங்காவது சந்தித்தால் நிச்சயமாக இணைத்து விடுவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எங்கோ வாசித்த்த ஞாபகம் கறுப்பு இனத்தவர்கட்கு மற்றைய இனத்தவர்களை விட மூளையின் அளவு பெரியது என்று.(அவர்கள் அதனை பாவிக்காதது வேறு விடயம்).அந்த ஆய்வு எங்காவது சந்தித்தால் நிச்சயமாக இணைத்து விடுவேன்.

யானையின் மூளை மனிதனிதை விடப் பெரியது. அதற்காக யானை மனிதனை விட நுண்ணறிவானதாகக் கொள்ள முடியுமா..??!

மனித மூளையில் உள்ள மடிப்புத் தடங்கள் (loops) அதிகம். அது மனிதர்களிடையே அதிகம் வேறுபடுவதாக இல்லை. நுண்ணறிவு ஆபிரிக்கர்கள் மத்தியில் குறைவு என்பதை அறிவியல் ரீதியா எங்கும் ஆராய்ந்தறிந்ததாக இல்லை..!

வெறும் அனுமானங்களின் அடிப்படையில் தான் அவை சொல்லப்படுகின்றன. வற்சன் போன்ற விஞ்ஞானிகள் கூட இது விடயத்தில் அறிவிலித்தனமா உரைக்கின்றனரா என்ற கேள்வி எழுந்தே இருக்கிறது உலகில். :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளை பற்றி சில தகவல்கள்

மனித மூளையின் அலைவுக் கோலத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு விதமாகப் வகுக்கின்றார்கள்.

1) டெல்டா நிலை 0.5௩.5

2) தீட்டா நிலை 3.5௭.0

3) அல்பா நிலை 7.0௧4.0

4) பீட்டா நிலை 14.0௩0.0

சரி இனி இங்குள்ள ஒவ்வொரு நிலைபற்றியும் ஒரு அலசல் போடுவோம்.

முதலாவது டெல்டா நிலை. இந்த நிலையிலேயே நாம் நல்ல தூக்கம் போடுகின்றோம். இந்த நிலையில் நம் மூளை ஆழ்ந்த அமைதியான ஓய்வை எடுத்துக்கொள்கின்றது. தொடர்ந்து மனிதன் 72 மணிநேரம் தூங்காமல் விட்டால் என்னாகும் தெரியுமா?. வேறென்ன தெய்வ ஜோதியில் கலக்க வேண்டியதுதான்.

இரண்டாவது தீட்டா நிலை. இதுவே மனிதனிற்கு புத்தாக்கத்தை தூண்டும் நிலையாகும். இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்.

நியூட்டன் புவியீர்ப்பு பற்றி கண்டு பிடித்தது எப்படி?. ஒரு நாள் அவர் அப்பிள் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தபோது ஒரு அப்பிள் நிலத்திலே “டப்” என்று வீழ்ந்தது. அரைத்தூக்கத்தில் இருந்த சேர் ஐசாக் நியூட்டன் விழித்துக் கொண்டார். ஏன் அப்பிள் மேலே போகாமல் கீழே வீழ்ந்தது என்று யோசிக்க தொடங்கினார். முழு விழிப்பில் இருந்திருந்தால் கட்டாயம் அந்த அப்பிளை சாப்பிட்டு இருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் நீண்ட யோசனையில் ஈடுபட்டார். அன்றய அந்த அப்பிளே பூமியின் புவியீர்ப்பு சக்தி பற்றி உலகம் அறிய வழி வகுத்தது.

இதைவிட ஒரு நாள் மென்டலீவ் அரைத்தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் அதில் பந்துகள் ஒரு அட்டவணையில் வீழ்கின்றன. ஒவ்வோரு பந்தும் இலக்கமிடப்பட்டுள்ளது. இப்போது விழித்துக்கொண்ட மென்டலீவ் ஓடிச்சென்று மூலகங்களை அணு எண் வரிசைப்படி அட்டவணைப் படுத்த தொடங்கினார். அடடா என்ன ஆச்சர்யம் ஒத்த குணமுள்ள மூலகங்கள் எல்லாம் ஒரு நிரலில் வந்து இருந்தது.

உலகின் மிகப் பெரிய கலைஞனான மைக்கல் ஆஞ்சலோ கூறுகின்றார் தான் வரையும் ஓவியங்களேல்லாம் காலையில் அரைத்தூக்கதில் கண்டவையே!

மூண்றாவது அல்பா நிலை அதாவது நீங்கள் விழித்து உள்ளீர்கள் ஆனால் நீங்கள் பதட்டம் இல்லாமல் இருக்கின்றீர்கள். உதாரணமாக காலையில் வேலைக்கு சென்றவுடன் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். அதுதான் அல்பா நிலை. வினைத்திறனுடன் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய நிலை. இந்து நிலை பொருளாதார முக்கியத்துவமுடைய நிலையாகக் கொள்ளப் படுகின்றது

நான்காவது பீட்டா நிலை இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த நிலை தெடர நாம் அனுமதிக்க கூடாது. காரணம் உங்களை மன நோயாளி ஆக்குவது இந்த நிலைக்கு நீங்கள் வரும்போதே ஆகும். அதிகளவான மன அழுத்தம் உங்களை இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அதிக மன உளைச்சல்லுக்குட்பட்டு நீங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பரபரப்பாக இருப்பார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இதற்கு ஒரு உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். கொழும்பு இராஜகிரிய பகுதியில் ஒரு ஐந்து வயதுப் பாலகனை அவனது தாயார் கொழும்பு றோயல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் எனக் கனவு காண்கின்றாள். ஆனால் பாவம் அந்தத் தாயின் கனவு மண்ணோடு மண்ணாகிவிடுகின்றது.

சற்றும் மனம் தளராத தாய் தன் மகனை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராக்குகின்றாள். இந்த பரீட்சையை அதிகூடிய புள்ளிகளுடன் சித்தி எய்த வைத்து அவனை றோயல் கல்லூரியில் சேர்க வேண்டும் என்பதே அந்த தாயின் எண்ணம்.

ஆயினும் ஐந்து வயதுப் பையன் தன்வயதுப் பையன்கள் வீதியில் கிரிகட் விளையாடுவதைப் பார்க்கின்றான், வகுப்பில் ஏனையவர்கள் நேற்று ஜய சூர்யா அடித்த சதத்தைப் பற்றி பேசுகின்றார்கள். பாவம் இவனுக்கு இதில் பங்கெடுக்க தாயின் அனுமதியில்லை. பிஞ்சு மனம் தனியே கிடந்து தவிக்கின்றது. காலை முதல் மாலை வரை படிப்பு படிப்பு படிப்பு. ஒரு நாள் இரவு 11 மணியளவில் மகனின் அறைக்குள் தாய் நுழைந்த போது மகன் கட்டிலில் இருந்தவாறே எதையே விறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். தாய் எவ்வளவோ பேசியும் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இப்போ அந்த சிறுவனுக்கு 12 வயது முல்லேரியா மனநோயாளிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். வைத்தியரின் கூற்றுப்படி சுமார் இரண்டு வருடங்களில் அவன் இப்போது இருக்கும் நிலையில் இருந்து மீளலாம் என்று குறிப்பிட்டார்.

மனித மூளை ஒரு அபூர்வமான படைப்பு அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுவர்களை மன அழுத்தத்திற்கு உட்பட விடக்கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே????

http://blogmayu.blogspot.com/2006/07/blog-post_04.html

  • கருத்துக்கள உறவுகள்

there is no appreciable difference between the average brain size between people of recent African origin or those of more distant African ancestry (i.e. Asians, Europeans, North Americans).

In addition, there has been no evidence that would indicate that small variations in brain size have any corellation with intelligence.

Larger scale differences in brain size, as is seen in the difference between Homo sapiens sapiens and Homo erectus, or Homo erectus and Homo habilis, or Homo habilis and Australopithecus africanus are probably indicative of an overall difference in intelligence.

Interestingly, the average size of the Neandertal's brain was larger than the average size of modern man's brain. (~1400 cc for Neandertal, vs. 1260 cc for modern man). Kind of makes that stereotypical view of Neandertals as stupid, brutish louts pretty questionable.

http://answers.yahoo.com/question/index?qi...18051619AAVOAxe

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சொந்த நாட்டிலேயே எங்கள்மீது இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.