Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 JUL, 2025 | 01:04 PM

image

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19)  மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு  செய்வதற்கான நிதியை திரட்டும்  முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர்  மகேந்திரன் சங்கீதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கற்றல் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும்  ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பேருந்து ஒன்று தேவை என்ற அடிப்படையில் அதனை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதியை திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் அனுமதிச் சீட்டு, நன்கொடை மற்றும் அனுசரணை மூலமும் நிதி திரட்டப்படவுள்ளது.

25 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. 

இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும்.

குறித்த இசை நிகழ்ச்சிக்கு முன் தினம் 18ம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடகர் ஶ்ரீநிவாசுடன் கலந்துரையாடலுக்கும் இராப்போசன விருந்து உண்பதற்கான சந்தர்ப்பத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கும் 5 ஆயிரம் ரூபாய் அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

அனைத்திலும் கிடைக்கும் வருமானமும் பேருந்து வாங்குவதற்காகவே செலவிடப்படும்.சமூகத்தில் உள்ள அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் - என்றனர்.

https://www.virakesari.lk/article/219797

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

இசை நிகழ்ச்சிக்கு முன் தினம் 18ம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடகர் ஶ்ரீநிவாசுடன் கலந்துரையாடலுக்கும் இராப்போசன விருந்து உண்பதற்கான சந்தர்ப்பத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கும் 5 ஆயிரம் ரூபாய் அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

யாழ்.பல்கலை இந்த நிதித் தேட்டம் தொடர்பாக ஏன் புலம்பெயர் மக்களை நாடியதா? அல்லது நாடவில்லையா?. உள்ளூரில் பல்வேறு வாழ்வாதாரப் பணிகளைத் தமிழ்க் குமுகாயம் மேற்கொள்ள இதுபோன்ற படம் காட்டல்களுக்கு எதற்காக எம்மைக் கருவறுக்க முனையும் சக்திகளை யாழிலே கொண்டுதிரிகிறார்கள். படித்த, அறிவாளர்கள் கொண்ட பல்கலைக் குமுகாயத்தின் வரண்ட சிந்தனையா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

519369514_122204061116114056_13682304213

518472551_122204061434114056_69791430025

514348950_122204059976114056_42321790224

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இன்று யாழ்ப்பாணம் வந்தார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கான பேரூந்தினை கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து இன்று யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தார்.

பாடகர் ஸ்ரீநிவாஸ் இந்த நிகழ்ச்சிக்கான எந்த ஒரு பணத்தையும் பெற்றுக்கொள்ளாது இலவசமாக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளது.

Babu Babugi

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2025 at 18:49, nochchi said:

யாழ்.பல்கலை இந்த நிதித் தேட்டம் தொடர்பாக ஏன் புலம்பெயர் மக்களை நாடியதா? அல்லது நாடவில்லையா?. உள்ளூரில் பல்வேறு வாழ்வாதாரப் பணிகளைத் தமிழ்க் குமுகாயம் மேற்கொள்ள இதுபோன்ற படம் காட்டல்களுக்கு எதற்காக எம்மைக் கருவறுக்க முனையும் சக்திகளை யாழிலே கொண்டுதிரிகிறார்கள். படித்த, அறிவாளர்கள் கொண்ட பல்கலைக் குமுகாயத்தின் வரண்ட சிந்தனையா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

ஶ்ரீநிவாஸ் எப்போ எம்மை கருவறுத்தார் அல்லது முயன்றார்?

புலம்பெயர் குமுகாயம், கமுகமரம் எல்லாம் தென்னிந்திய தயாரிப்புகளை அடியோடு புறக்கணித்தே விட்டீர்களா?

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் என்ன ஒட்டு குழுவா? அவர்களுக்கு தெரியாத?

எப்போதும் உங்களிடம் கை ஏந்த வேண்டுமா?

இசை நிகழ்சி மூலம் தம்மிடையே நிதி திரட்டினால் ஆகாதா?

இப்படியவது பண்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு வந்ததே பெரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி அவர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாடுபவர். அவரது இந்தக் கருத்தை சில நாட்களின் முன் வாசித்தேன். மிகவும் முரண்பாடான கருத்து இது. பலருக்கு தெரியாத விடயம் ஒன்று என்ன என்றால் தமிழர் அல்லாத இதர சமூகத்து மாணவர்களின் தொகை கணிசமான அளவு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. யாழ் மருத்துவபீடத்து மாணவர்களின் தீர்மானங்களுக்கு எதிராக குரலை உயர்த்த வேண்டிய தேவை இங்கு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழை வந்தடைந்தனர் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர்

18 JUL, 2025 | 04:40 PM

image

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள், இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக வெள்ளிக்கிழமை (18)  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு  செய்வதற்கான நிதியை திரட்டும்  முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250718-WA0055.jpg

IMG-20250718-WA0056.jpg

IMG-20250718-WA0053.jpg

IMG-20250718-WA0051.jpg

4__3___1_.jpg

4__1___1_.jpg

https://www.virakesari.lk/article/220318

தமனா வரவில்லையா...?

அட் லீஸ்ட் கயாடு லோகர் தானும் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஶ்ரீநிவாஸ் எப்போ எம்மை கருவறுத்தார் அல்லது முயன்றார்?

புலம்பெயர் குமுகாயம், கமுகமரம் எல்லாம் தென்னிந்திய தயாரிப்புகளை அடியோடு புறக்கணித்தே விட்டீர்களா?

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் என்ன ஒட்டு குழுவா? அவர்களுக்கு தெரியாத?

எப்போதும் உங்களிடம் கை ஏந்த வேண்டுமா?

இசை நிகழ்சி மூலம் தம்மிடையே நிதி திரட்டினால் ஆகாதா?

இப்படியவது பண்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு வந்ததே பெரிய விடயம்.

இன்றைய தாயக அரசியலை சீர்கெடுத்ததே இப்படியான புலம் பெயர் முன்னாள்களின் ரிமூட் கொன்றோல் செயற்பாடுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் கனடாவில் ஒரு கோவிலை இடம் மாற்றியிருந்தார்கள். முன்னர் இருந்த இடத்தில் இருந்து ஒரு புதிய இடத்திற்கு. இதனால் கோவிலின் கணக்கில் இருந்த நிதி முழுவதுமாக முடிந்துவிட்டது. இப்பொழுது புதிய நிதியை திரட்டுவதற்காக சில சூப்பர் சிங்கர் பாடகர்களை அழைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் போக்குவரத்து செலவு, தங்குமிடம் மற்றும் கட்டணம் பற்றி ஒரு நண்பன் சில தகவல்களை சொன்னான்.

எங்கேயென்றாலும், சரியாகத் திட்டமிட்டால், நிதி திரட்டுவதற்கு இது ஒரு இலகுவான வழி போல.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நியாயம் said:

பலருக்கு தெரியாத விடயம் ஒன்று என்ன என்றால் தமிழர் அல்லாத இதர சமூகத்து மாணவர்களின் தொகை கணிசமான அளவு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது

இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் பல்கலையிலும், மாணவர் ஒன்றியத்திலும் முடிவெடுக்கும் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே உள்ளார்கள்..

ஆகவே இதில் ஏனைய சமூக மாணவர்கள் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களிடம் பணம் கேட்பதைவிட இசை நிகழ்ச்சி நடத்தி பணம் பெற்று பேருந்து வாங்குவது கவுரவமானது. மக்களுக்கும் இசை நிகழ்ச்சி மகிழ்ச்சியை கொடுக்கும்.

தமனாவை அழைத்திருந்தால் நான், புத்தன் அண்ணா, வலவன் எல்லாம் குழுவாக வந்து இறங்கி இருப்போம் எல்லோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.