Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு

பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு

காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.

கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார்.

நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர்.

Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர்.

காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள்.

காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

https://thinakkural.lk/article/319073

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.

என் கண்ணீர் அஞ்சலிகள்.

எவ்வளவு கொடுமையான செயல்களை இஸ்ரேல் அரசு செய்கின்றது? கேட்க பார்க்க ஆள் இல்லை எனும் போக்கில் அயல் நாடுகளில் இருக்கும் அப்பாவி மக்களை அந்த அரசு கொன்று குவிக்கின்றது.

உக்ரேனுக்காக துடித்தெழும் மேற்குலக புருஷர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணமாக அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என் கண்ணீர் அஞ்சலிகள்.

எவ்வளவு கொடுமையான செயல்களை இஸ்ரேல் அரசு செய்கின்றது? கேட்க பார்க்க ஆள் இல்லை எனும் போக்கில் அயல் நாடுகளில் இருக்கும் அப்பாவி மக்களை அந்த அரசு கொன்று குவிக்கின்றது.

உக்ரேனுக்காக துடித்தெழும் மேற்குலக புருஷர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணமாக அமையட்டும்.

இஸ்ரேல் மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள், தமது நாட்டில் உள்ள இஸ்லாம் மதமற்ற மக்கள் மேல் ஒரு இன அழிப்பை காலம் காலமாக நடத்துகின்றன கூறப்படுகிறது, தற்போது சிரியாவில் அரச ஆதரவுப்படைகள் ட்ருஸ் இன மக்கள் மேல் ஒரு இன சுத்திகரிப்பினை மேற்கொள்கிறார்கள், இந்த ட்ருஸ் மக்களுக்கு இஸ்ரேல் ஆதரவாக உள்ளதாக கூறப்பட்ட போதும் எதுவும் செய்யாத நிலையில் மக்கள் மிக மோசமாக கொல்லப்படுகிறார்கள்.

லெபனானில் கிறிஸ்தவ பெரும்பான்மை நிலவிய காலத்தில் இதே போல் ஒரு இனசுத்திகரிப்பு மூலம் இஸ்லாமிய பெரும்பான்மையினை கொண்ட நாடாக லெபனான் மாறியுள்ளதாக கூறுகிறார்கள்.

உக்கிரேன் கூட கிழக்கு உக்கிரேனியர்களின் மீது மிக மோசமான அடக்குமுறையில் ஈடுபட்டவர்கள்தான்.

இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் சழைத்தவர்கள் இல்லை, இந்த மூளை இல்லாத மிருகங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளி இணையத்தில் காணப்பட்டது, தற்போதுதான் பார்த்தேஎன் (முதல் 5 நிமிடம்), உக்கிரேன் போரின் பரிணாமம் (அடிப்படை) பற்றியது என கருதுகிறேன், முழுவதுமாக பின்னர் பார்க்கவுள்ளேன்.

இவரரது மனைவி கிழக்கு உக்கிரேனியர் என கூறுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.