Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 JUL, 2025 | 12:32 PM

image

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. 

வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். 

ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை  வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை  கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது.

1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே  தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது.

1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன.

காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது. 

இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும். 

நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு  வழங்கப்பட வேண்டும்.

தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை  யோசனை முன்வைக்கிறது. 

இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான  ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை  அமையும்.

https://www.virakesari.lk/article/220610

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2025 at 13:16, ஏராளன் said:

தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை  யோசனை முன்வைக்கிறது. 

இந்த யோசனை உண்மையில் செயற்பட வேண்டுமானல் இனிப் பிறக்கப்போகும் சிங்களப் பிள்ளைகள் காடையர்களாக இல்லாது மனிதர்களாகப் பிறக்கவேண்டும். இருக்கும் சிங்களக் காடையர்கள் மனிதர்களாக மாறவேண்டும். அதுவரை யோசனை விழலுக்கு இறைத்த நீ்ர்தான்.

On 22/7/2025 at 13:16, ஏராளன் said:

தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன.

இது தவறான இடுகை. உலகில் மிகவும் சாதுவான உயிரினங்கள்கூட ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்புவதற்கு வீறுகொண்டு எழவேசெய்யும். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளும், அந்த இனத்தின் புத்த பிக்குகளும், இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளே இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தமிழர்கள் மேற்கொள்ள வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நடந்தது பயங்கரவாதம் ஒழிய இனவாதமல்ல என்று கூறிய, எச்சரித்த இனவாதிகளுக்கு; செம்மணி புதைகுழியில் வெளிவரும் மனித எச்சங்கள், காலங்காலமாக நடந்த வன்முறைகள் அதற்கான சான்றுகள். இனிமேலும் மூடி மறைக்க முடியாதென்கிற சூழலையும், அதான் தாக்கத்தையும் உணர்த்த தொடங்கி விட்டன. அதற்காக எதையாவது செய்வதாக காண்பித்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்களம். அதற்காக ஏதேதோ சொல்லவும் செய்யவும் தலைப்படிருக்கிறது. அது நாங்களல்ல அந்தக்கட்சி என்று விரல் நீட்டி தப்பி விட துடிக்கின்றன. கட்சிகளின் பெயரில் மாற்றமிருந்ததேயொழிய கொள்கைகளில் மாற்றமில்லை என்பதையே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் நிரூபித்தன. நல்லாட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஏதோ செய்வதாக காட்டிக்கொண்டன. ஐ. நாவில் கால அவகாசமும் பெற்றுக்கொண்டன, இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு ராஜபக்சக்களை மின்சாரகதிரையிலிருந்து நாமே காப்பாற்றினோம் என்று புகழ்ந்து கொண்டார்களே ஒழிய பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதுவும் செய்யவில்லை. இப்போ, அனுரா ஐ .நா. வை சமாளிக்க இப்படி செய்து நாடகம் ஆடுகிறாரா அல்லது உண்மையிலேயே நாட்டை கட்டியெழுப்ப போகிறாரா? எடுத்த திட்டத்தை கைவிட்டால் அதற்கு இவரும் உடந்தையாவதோடு, இவர் வெகு விரைவில் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்படலாம். இங்கு இனமோ இறைமையோ எதுவுமில்லை, அரசியல் அதிகாரமே முக்கியம். தமிழரை ஒடுக்குவதற்கும் அதுவே உண்மையான காரணம். அதை மறைக்க வேறேதோ புனைகிறார்கள். இந்த பெருச்சாளிகளை கைது செய்யாவிட்டால்; நாட்டை காப்பாற்ற முடியாது. குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள் இப்போ தம்மை பாதுகாத்து கொள்வதற்காக இரகசியங்களை வெளியிட்டு வருகிறார்கள். இங்கே அரசியல் பழிவாங்கல் என்கிற கூச்சலுக்கு இடமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சாட்சிகளுக்கும் இந்த அரசுக்கும் ஆபத்தே.

  • கருத்துக்கள உறவுகள்

523490122_1167773388720965_3268668438104

523529150_1167718852059752_6851356584778

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.