Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்; பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மீனவர்கள் பங்கேற்பு

19 AUG, 2025 | 03:02 PM

image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  செவ்வாய்க்கிழமை (19) 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு  ஆதரவு வழங்கும் வகையில் பனங்கட்டிக்கொட்டு, ஜிம் பிரவுன் நகர், எமில்  நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் கிராமம் ஆகிய கிராம மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்  வைத்துள்ளதோடு, ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காது விட்டால் போராட்டம் தொடரும்   என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரித்துள்ளனர்.

DSC_3283__1_.JPG

DSC_3328.JPG

DSC_3287.JPG

DSC_3319.JPG

DSC_3278.JPG

https://www.virakesari.lk/article/222876

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2025 at 18:58, குமாரசாமி said:

என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை?

எமது இடத்துக்கும் ரானஸ்போமர் இருக்கும் இடத்துக்கும் துரம் அதிகமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மக்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டியில் ஊர்வலம்

20 AUG, 2025 | 05:25 PM

image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை  (20) 18 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம்     ஆதரவு வழங்கும் வகையில் கொக்குபுடையான் கிராம   மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தினம்  காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக மக்கள் போராட்ட முன்னனியினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

அதே நேரம் மன்னார் மக்களின் உரிமைக்காக சிங்கள,மற்றும் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இம்மாதம் 23,24 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிபத்கொட வரை ஒரு நடைபவணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற உள்ளதாகவும் மக்கள் போராட்ட முன்னனியினர் தெரிவித்துள்ளனர்.

945de783-d176-415f-97ca-1b6bad6a7ae5.jpe

6602d4d9-772e-42c7-ba1d-75e7580742f3.jpe

235faf6d-061b-45b2-9e52-60d0e0ab4bdc.jpe

31ef38ab-8b70-42ff-9f8b-1d31ff04b74f.jpe

63bd6f06-ba32-40e3-b9b9-662b8ca0a501.jpe

8c4980e0-b1de-4571-8506-f58f872d0524.jpe

af99ffc4-fa7f-4974-bec2-d77483fb2951.jpe

fb18b241-cdf2-4c9a-ad2b-742861c9976a.jpe

https://www.virakesari.lk/article/222967

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு பிரபாகரன் அவர்களின் ஆட்சியின்போது தமிழீழத்தில் அவர் காற்றாலையை நிறுவியதான செய்திஒன்று வந்து வாசித்ததான நினைவு வருகிறது.😇

அது இன்று இல்லை. அரசபடை அதனை அழித்துவிட்டதா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“மனிதர்களைக் கொன்றுவிட்டு மின்சாரம் எதற்கு?” - மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிம மணல் அகழ்வுக்கு எதிராக தொடரும் போராட்டம் 

21 AUG, 2025 | 01:22 PM

image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 19ஆவது நாளாக இன்றும் (21) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம், மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் முச்சக்கரவண்டி சங்கத்தினர் ஆதரவு வழங்குவதோடு, அவர்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

DSC_3377.JPG

இதில் மக்கள், “மனிதர்களைக் கொன்றுவிட்டு மின்சாரம் எதற்கு?”, “காற்றாலை உற்பத்தி எம் கண்ணீரின் கதை சொல்லும்” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக செயற்படுத்தப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றை முழுமையாக நிறுத்தும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என, அதில் பங்கேற்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் நடத்தப்பட்ட இப்போராட்டத்தின்போது வெளிநாட்டு பிரஜை ஒருவர் கலந்துகொண்டு மக்களின் போராட்டம் தொடர்பாக கேட்டறிந்தார்.

ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது.

DSC_3435.JPG

DSC_3441.JPG

DSC_3406.JPG

DSC_3408.JPG

DSC_3392.JPG

https://www.virakesari.lk/article/223006

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள்

22 AUG, 2025 | 04:53 PM

image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் (22) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அவர்கள் இன்று பகல் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர், மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வருகை தந்து கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

DSC_3464.JPG

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்தப் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் தொடர்கிறது. 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் உண்மை நிலையை அறிந்துகொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்டக் குழுவுக்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மக்கள் இன, மத வேற்றுமையின்றி ஒற்றுமையாக போராடும் பட்சத்தில் எமது இலக்கை அடைய முடியும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

DSC_3516.JPG

DSC_3484.JPG

DSC_3501.JPG

DSC_3481.JPG

https://www.virakesari.lk/article/223122

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘வாழ்வாதாரமே பாதிக்கும் அபாயம்’ - போராட்டத்தில் இறங்கிய தமிழர்கள்; மன்னாரில் என்ன பிரச்னை?

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டில் காற்றாலை செயல்பாடு தொடங்கியது. மன்னார் தீவுப் பகுதியில் 36 காற்றாலைகள் தற்போது இயங்கி வருகின்ற நிலையில், புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே, மக்கள் 25 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றாலை மின்சாரம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போரட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

#Colombo #Mannar #WindForm

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம்; புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, பங்கு மக்கள் பங்கேற்பு

04 Sep, 2025 | 02:50 PM

image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (4) 33 ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய  பங்கு சபை, மற்றும்  பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர்.

இதன் போது  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.

DSC_0221.JPG

DSC_0204.JPG

DSC_0314.JPG

DSC_0311.JPG

DSC_0300.JPG

DSC_0247.JPG

DSC_0289.JPG

DSC_0269.JPG

https://www.virakesari.lk/article/224193

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை, கனிம மணல் அகழ்வுக்கு எதிரான 34ஆம் நாள் போராட்டம் - ரவிகரன் எம்.பி பங்கேற்பு

05 Sep, 2025 | 01:32 PM

image

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனியமணல் அகழ்வு என்பவற்றிற்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (05)  34ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் குறித்த தொடர்போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

குறித்த 34 ஆவதுநாள் போராட்டத்தினை தோட்டவெளி, ஜோசெப்வாஸ் கிராமமக்கள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20250905-WA0019__1_.jpg

IMG-20250905-WA0013__2_.jpg

IMG-20250905-WA0017.jpg

https://www.virakesari.lk/article/224277

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலைகளுக்கு ஏன் எதிர்ப்பு புரிந்து கொள்ளும் முயற்சியில், 2021 இல் இருந்து இயங்கி வரும் முதலாம் கட்ட மன்னார் காற்றாலையின் சூழல் பாதிப்பு அறிக்கையைத் தேடிப் பார்த்தேன். விரிவாக இந்த இணைப்பில், பல பின்னிணைப்புகளோடு சூழல் பாதிப்பு, ஒலி மாசு, காட்டுயிர்களின் பல்லினத்தன்மை, பறவைகள் இறப்பு என ஆய்ந்து தான் தொடர்கிறார்கள் எனப் புரிகிறது.

அடிப்படைகள் எதுவும் இல்லாமல், பதாகையும், கொடியும் பிடிக்கும் மக்கள் கூட்டமாக நாம் மாறி விட்டோம் போல தெரிகிறது.

Asian Development Bank
No image preview

Wind Power Generation Project: Environmental Monitoring R...

Environmental monitoring reports describe the environmental issues or mitigation measures of a project. This document dated July 2024 is provided for the ADB project 49345-002 in Sri Lanka.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - நாளுக்கு நாள் வலுவடையும் காற்றாலைக்கு எதிரான போராட்டம்

05 Sep, 2025 | 05:29 PM

image

மன்னார் தீவில்  காற்றாலை  அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான  குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் காற்றாலை, கணிய மணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்தில் இனியும் வேண்டாம் என்று ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் யோசேவாஸ் கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் .

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிவப்பு நிற தலைப்பட்டிகளை அணிந்து, பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படும் குறித்த செயல் திட்டங்களுக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி யிருந்தனர்.

அதே நேரம் இன்றைய தினம்  மன்னார் மாவட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா வேப்பங்குளம் கிராம மக்களும் அவர்களுடன் வெப்பங்குளம் பங்குதந்தை, அருட்சகோதிரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_5024.jpeg

IMG_5021.jpeg

IMG_5015.jpeg

IMG_4999.jpeg

IMG_5010.jpeg

IMG_4988.jpeg

IMG_4988.jpeg

IMG_4994.jpeg

https://www.virakesari.lk/article/224317

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - நாளுக்கு நாள் வலுவடையும் காற்றாலைக்கு எதிரான போராட்டம்

புரட்சிகர அம்சங்கள் பதாகை பிடித்தல் கொடி பிடித்தலோடு தற்போது தலையில் ஒரு சிவப்பு துணியும் கட்டி முழுமையான புரட்சிகர மக்களாகவே மன்னார் மக்கள் மாறிவிட்டனர்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை, கனிய மணல் செயல்பாடுகளுக்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர்

21 Sep, 2025 | 08:10 AM

image

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை (20) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சனிக்கிழமை (20) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில்  காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை (20) மாலை வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை வழங்கி அமையும் குறிப்பிடத்தக்கது.

DSC_0263.JPG

DSC_0227.JPG

DSC_0218.JPG

DSC_0221.JPG

DSC_0237.JPG

DSC_0259.JPG

DSC_0230.JPG

DSC_0231.JPG

DSC_0265.JPG

https://www.virakesari.lk/article/225628

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்!

22 Sep, 2025 | 09:35 AM

image

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை  எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது கையில் தீ பந்தத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-09-21_at_8.17.06_PM_

WhatsApp_Image_2025-09-21_at_8.16.56_PM_

WhatsApp_Image_2025-09-21_at_8.16.58_PM.

WhatsApp_Image_2025-09-21_at_8.16.56_PM.

WhatsApp_Image_2025-09-21_at_8.16.50_PM.

WhatsApp_Image_2025-09-21_at_8.16.48_PM.

WhatsApp_Image_2025-09-21_at_8.16.48_PM_

WhatsApp_Image_2025-09-21_at_8.16.47_PM.

WhatsApp_Image_2025-09-21_at_8.16.46_PM.

WhatsApp_Image_2025-09-21_at_8.16.47_PM_

https://www.virakesari.lk/article/225712

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

Nov 15, 2025 - 06:22 PM

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் (15) மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கருத்து தெரிவிக்கையில்,

"மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது."

"ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம். எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு."

"எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்."

"கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்."

"எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இதைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmi0adulf01n2o29nq7bk4k1r

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.