Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

Published By: RAJEEBAN

07 AUG, 2025 | 11:28 AM

image

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,

ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன்.

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது.

பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.

ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது.

இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும்.

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும்.

நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும்.

இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு  குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/222030

  • கருத்துக்கள உறவுகள்

சசிகாந்த செந்தில் ஒரு காங்கிரஸ் கட்சி சார்ந்த மக்களவை உறுப்பினர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி. அண்மையில் வடகரோலினாவில் நடந்த FeTNA ஆண்டு விழாவில் இவரது பேச்சைக் கேட்டேன். உலகில் வலதுசாரிகள் ஆட்சி ஏன் ஓங்கி வருகிறது என்பது பற்றிப் பேசினார். மிக அருமையான உரை.

"சாதாரண மக்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம், இந்த வலது சாரிகளுக்கு எதிராகப் பேசாமல் இருப்பது தான்" என்று கூறியிருந்தார், அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது.

அந்த உரையிலும், ஈழத்தமிழர்கள் இன அழிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள், அது இன்னும் தொடர்கிறது என்று பேசியிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அவரோடு எமது புலம்பெயர் உறவுகள் தொடர்பில் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சசிகாந்த் செந்தில்.

சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக புலம்பெயர் மொக்கசாமிகள் மிக அவதூறாக- எழுதியபின்னும் கூட இப்படி இவர் குரல் கொடுப்பது ஒரு ஆச்சரியமான சந்தோசம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நன்றி சசிகாந்த் செந்தில்.

சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக புலம்பெயர் மொக்கசாமிகள் மிக அவதூறாக- எழுதியபின்னும் கூட இப்படி இவர் குரல் கொடுப்பது ஒரு ஆச்சரியமான சந்தோசம்தான்.

சசிகாந்த் செந்தில் இந்திய புலனாய்வு துறையை சேர்ந்தவர் இல்லை என உங்களுக்கு எப்படி தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக

திமுக புலிகள் ஆதரவு நிலைபாடு எடுத்து தனது ஆட்சியை இழந்தது .கொலைகார இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தது. புலிகள் ஒழிப்பு நடவடிக்கை என்று படித்து கொண்டிருந்த இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ஜெயலலிதாவால் நிறுத்தபட்ட விசாவை மீண்டும் வழங்கியது.

சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ...

தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

சசிகாந்த் செந்தில் இந்திய புலனாய்வு துறையை சேர்ந்தவர் இல்லை என உங்களுக்கு எப்படி தெரியும்?

அவர் அப்படி இல்லை என நான் கூறவில்லையே.

ஆனால் சீமான் முகவர் என்பது தெரியும்.

முகவர்களின் அஜெண்டாவுக்குள் வீழ்ந்து இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகளை நாம் பகைக்க கூடாது என்பதே என் கருத்து.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா

ஒரு காங்கிரஸ் அரசியல்வாதியிடம் நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது.

அவர் இந்திய இராணுவ கொடுமையை எதிர்க்கவில்லை என்பதால் - அவரின் செம்மணி ஆதரவு குரலை நாம் உதாசீனம் செய்ய வேண்டுமா?

54 minutes ago, putthan said:

தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..

இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக (சுயநலத்துக்காக கூட) எமக்கு ஆதரவு தரும் குரல்களை கூட, “தானம் கிடைத்த மாட்டை, பல்லை பிடித்து பார்க்கும்” ஈழத்தமிழரின் புத்தியால்தான் -2009 இல் எல்லாரும் சேர்ந்து எம்மை வெளுத்தார்கள், கேட்க நாதியற்று கிடந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக (சுயநலத்துக்காக கூட) எமக்கு ஆதரவு தரும் குரல்களை கூட, “தானம் கிடைத்த மாட்டை, பல்லை பிடித்து பார்க்கும்” ஈழத்தமிழரின் புத்தியால்தான் -2009 இல் எல்லாரும் சேர்ந்து எம்மை வெளுத்தார்கள், கேட்க நாதியற்று கிடந்தோம்.

உண்மை ஆனால் உலகம் ஒர் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி நடந்து கொண்டு போகிறது இரண்டாம் உலகப்போரின் பின்பு வரையப்பட்ட நிகழ்ச்சி நிரல் அதை மாற்ற முடியாது ...அந்த நிகழ்ழ்சி நிரலைமாற்ற கூடிய சக்திகள் இன்னும் வரவில்லை...அது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன‌...

இன்று ஹாசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக‌ நடக்கும் அட்டுழியங்களை (அதாவது அமெரிக்காவும்,இஸ்ரேலும் வெளுத்து கட்டுகிறார்கள் )ஏனைநாடுகள் சரி ,இஸ்லாமிய நாடுகள் சரி சும்மா அறிக்கை விட்டு கொண்டு தான் இருக்கின்றனர்....அவர்களுக்கே அந்த நிலை ...

பலஸ்தீனம் என்ற நாடு உருவாக கூடாது என்பது அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று ...யுக்கோஸ்லோவாக்கியாவை 6 மாதங்களில் பிரித்து மூன்று நாடுகளை உருவாக்கியவர்கள் ,பலஸ்தீனருக்கு 60 வருடங்களுக்கு மேல் அழிவுகளை கொடுக்க்க்கின்றனர்

1 hour ago, goshan_che said:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ...

அதை நன்றாக தெரிந்து கொண்ட செந்தில் றோட்டில் கொட்டி கிடங்கின்ற தேங்காயை எடுத்து ஈழ தமிழர்களுக்கு உடைத்து பேய்காட்டுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் உடல்கள் புதைக்கபட்ட மனித புதைகுழி குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நான் நூற்றுக்கணக்கான சடலத்தை புதைத்தேன்'' - India-வை உலுக்கிய Dharmasthala Issue - என்ன நடக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதை நன்றாக தெரிந்து கொண்ட செந்தில் றோட்டில் கொட்டி கிடங்கின்ற தேங்காயை எடுத்து ஈழ தமிழர்களுக்கு உடைத்து பேய்காட்டுகின்றார்.

இதில பகிடி என்ன வென்றால் போராட்டம் தொடங்கிய காலம்(அகிம்சை ,ஆயுதம் முதல் மற்றும் இன்றுவரை ) வகுப்பு எடுத்தல் கருத்து சொல்லுறவையல் எல்லாம்

ஒன்றை சொல்லுவினம்

இந்தியாவுடன் இணைந்து செயல் பட் வேணும் ...

உலக ஆயுத போராட்ட குழுக்களுடன் இணைய வேணும்.(நாங்கள் பலஸ்தீன போராட்ட அமைப்புகளுடன் சேர்ந்து போராட வேணும் ...அப்படி சேர்ந்து போராடியவையல் பின்பு இலஙகை அரசுடன் கைகோர்த்து போராட்ட த்தை அழிப்பதில் முன் நின்றனர்")

எவர் எமக்காக் குரல் கொடுத்தாலும் நாங்கள் விழுந்து கும்பிட வேணும் என இப்ப சொல்லுயினம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/8/2025 at 13:56, goshan_che said:

நன்றி சசிகாந்த் செந்தில்.

சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக புலம்பெயர் மொக்கசாமிகள் மிக அவதூறாக- எழுதியபின்னும் கூட இப்படி இவர் குரல் கொடுப்பது ஒரு ஆச்சரியமான சந்தோசம்தான்.

அவலங்கள் நடந்து பத்து வருங்களுக்கு மேலாகி விட்டுது. இப்போது புதுக்குரல் வருகின்றது.சம்பந்தன் இருந்திருந்தால் இந்த அறிக்கையை வைத்தே இன்னும் அரசியல் மழையில் நனைந்து வாழ்ந்திருப்பார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2025 at 00:06, குமாரசாமி said:

அவலங்கள் நடந்து பத்து வருங்களுக்கு மேலாகி விட்டுது. இப்போது புதுக்குரல் வருகின்றது.சம்பந்தன் இருந்திருந்தால் இந்த அறிக்கையை வைத்தே இன்னும் அரசியல் மழையில் நனைந்து வாழ்ந்திருப்பார். 🤣

சம்பந்தன் மட்டும் அல்ல.

எனக்கும் உங்களுக்கும் கருத்து எழுத கூட இதுதான் பயன்படுகிறது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.