Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-263.jpg?resize=750%2C375&ssl

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது அவரது முதல் சர்வதேச அளவிலான தலைவர்கள் கூட்டம் என்றும் நம்பப்படுகிறது.

“வெற்றி நாள்” என்று அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு, சீனாவின் ஜப்பானுக்கு எதிரான போரின் 80 ஆவது ஆண்டு நிறைவையும், இரண்டாம் உலகப் போரின் முடிவையும் குறிக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சீனா நூற்றுக்கணக்கான விமானங்கள், டாங்கிகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதன் அண்மைய ஆயுதங்களை இதன்போது காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் இராணுவத்தின் புதிய படை அமைப்பு ஒரு அணிவகுப்பில் முழுமையாக காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த அணிவகுப்பில், தியனன்மென் சதுக்கத்தின் வழியாக பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லவுள்ளனர்.

இதில் சீன இராணுவத்தின் 45 பிரிவுகளின் வீரர்களும், போர் வீரர்களும் அடங்குவர்.

வியாழக்கிழமை (28) சீனாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பியோங்யாங்கின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான பெய்ஜிங், அதன் அண்டை நாட்டின் பல தசாப்த கால பாரம்பரிய நட்புறவை பாராட்டியது,

அத்துடன், இரு நாடுகளும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறியது.

இந்த நிலையில் கிம்மின் வருகை, 2015 இல் நடந்த சீனாவின் கடைசி வெற்றி தின அணிவகுப்பிலிருந்து ஒரு முன்னேற்றமாகும்.

இந்த அணிவகுப்பின் போது பியோங்யாங் அதன் உயர் அதிகாரிகளில் ஒருவரான சோ ரியோங்-ஹேயை பெய்ஜிங்கிற்கு அனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444965

  • கருத்துக்கள உறவுகள்

கிம் இன் பிரசன்னம் கிம்முக்கு பெரிது தான்

அனால், இதை கொண்டு சீன வெளியிடும் சமிக்ஞையை எல்லாவற்றிலும் மிகப் பெரிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சீனா நூற்றுக்கணக்கான விமானங்கள், டாங்கிகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதன் அண்மைய ஆயுதங்களை இதன்போது காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் இராணுவத்தின் புதிய படை அமைப்பு ஒரு அணிவகுப்பில் முழுமையாக காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

மேற்குலகின் வயித்தை கலக்குவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மேற்குலகின் வயித்தை கலக்குவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.😎

வட கொரிய அதிபர் கிம்மின் அதிரடி செயல்களைப் பார்த்து, பம்மிக் கொண்டு இருக்கும் மேற்கு உலகம்…. சீனா நடத்தும் 26 நாட்டு உலகப் பெருந்தலைவர்களின் இராணுவ அணிவகுப்பை பார்த்து தமது சாணக்கியம் எங்கே சறுக்கியது என திரும்பி பார்ப்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ஜிங் ராணுவ பேரணியில் பங்கேற்கும் புதின், கிம் ஜாங் உன் - அமெரிக்காவுக்கு சீனா சொல்லும் செய்தி என்ன?

சீனா, ரஷ்யா, வடகொரியா, ஜின்பிங் - புதின் - கிம், டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • லாரா பிக்கர்

  • சீன செய்தியாளர், பிபிசி நியூஸ்

  • 29 ஆகஸ்ட் 2025, 08:11 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும்.

இது ஷி ஜின்பிங்கிற்கு ஒரு முக்கியமான ராஜதந்திர வெற்றியாகவும் அமையும்.

சீன அதிபர் நீண்ட காலமாக உலகிற்கு பெய்ஜிங்கின் வலிமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் தன்னை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமின்றி, வலுவான ராஜதந்திரியாகவும் நிறுவிக்கொள்ள விரும்புகிறார்.

டிரம்பின் வரிக்குவரி யுத்தம் உலகம் முழுவதும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா ஒரு நிலையான வர்த்தகப் பங்காளி என்று அவர் முன்வைக்கிறார்.

யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்க அதிபர் வெகு தொலைவில் உள்ளார். இந்நிலையில், ஷி ஜின்பிங் புதினை பெய்ஜிங்கிற்கு வரவேற்கத் தயாராகி வருகிறார்.

திடீரென அறிவிக்கப்பட்ட கிம் வருகையும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. கடந்த வாரம் தென் கொரிய அதிபருடனான‌ சந்திப்பின் போது அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌,‌ தான் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.

சீனா, ரஷ்யா, வடகொரியா, ஜின்பிங் - புதின் - கிம், டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜான் உன் சந்திப்பு 2019-ல் நடைபெற்றது.

இந்த சந்திப்பு ஜின்பிங்கிற்கு ஏன் முக்கியம்?

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகாரியுடனான டிரம்பின் முந்தைய ராஜதந்திர முயற்சிகளில் எந்த முடிவும் எட்டவில்லை. உலக கவனத்தை ஈர்த்த இரண்டு உச்சிமாநாடுகள் நடந்தாலும், எந்த உறுதியான முன்னேற்றமும் அடையப்படவில்லை. இப்போது டிரம்ப் மீண்டும் முயற்சி செய்ய விரும்புவதாக சமிக்ஞை காட்டுகிறார்.

இதற்கிடையில், இந்த முழு ஆட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம்தான் இருப்பதாக சீன அதிபர் சமிக்ஞை செய்கிகிறார். கிம், புதின் இருவரிடமும் அவருக்கு உள்ள செல்வாக்கு ஒரு வரம்பிற்குட்பட்டது என்றாலும், எந்தவொரு ஒப்பந்தம் இறுதியாவதிலும் அவரின் முக்கியத்துவம் நிரூபணமாகலாம்.

செப்டம்பர் 3ஆம் தேதி அணிவகுப்பில் சீனா தன்னுடைய ராணுவ வலிமையை வெளிக்காட்டும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. அப்போதுதான் சீனாவின் சில பகுதிகளில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்த கொண்டாட்டத்தை ஷி ஜின்பிங் வேறு ஏதோவொன்றைக் வெளிக்காட்டுவதற்காக பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வு நடக்கும் நேரமும் முக்கியமானது. அக்டோபர் இறுதியில் டிரம்ப் அந்த பிராந்தியத்திற்கு வரக்கூடும் என்றும், அப்போது ஷி ஜின்பிங்கைச் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருந்தது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வரி பற்றிய ஒப்பந்தம், அமெரிக்காவில் டிக்டாக் விற்பனை, யுக்ரேன் போர் நிறுத்தம் அல்லது தீர்வுக்கு புதினை சம்மதிக்க வைக்க சீனாவால் முடியுமா என்ற கேள்வி உட்பட பல பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்கலாம்.

சீனா, ரஷ்யா, வடகொரியா, ஜின்பிங் - புதின் - கிம், டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இப்போது ஷி ஜின்பிங் கிம் மற்றும் புதின் இருவரையும் சந்திப்பதன் மூலம், தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக டிரம்புடன் பேசுகையில் அவர் உணர மாட்டார். உண்மையில், இரு தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய உறவு இருப்பதால், அமெரிக்க அதிபரிடம் இல்லாத பல தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும்.

ரஷ்யா, வட கொரியா இரண்டும் மேற்கத்திய உலகின் பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றன. புதினை விட கிம் அவரது ஆயுதத் திட்டத்தின் காரணமாக நீண்ட காலமாகவே மேற்கு நாடுகளின் இலக்காக ஆனவர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அவர் ஆதரவு அளித்த பின்னர் அவருக்கு எதிரான கண்டனங்கள் மீண்டும் கூடுதலாகின.

இப்படிப்பட்ட சூழலில், பெய்ஜிங்கில் இருந்து வந்திருக்கும் அழைப்பு கிம்முக்கு ஒரு பெரிய‌ சாதகமாகும். கடைசியாக ஒரு வட கொரியத் தலைவர் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது 1959-ல்தான்.

2019-ல் சீனா-வட கொரியா உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரு தலைவர்கள் சந்தித்த பின்னர் ஷி, கிம்முக்கு இடையில் வெளிப்படையான சந்திப்புகள் குறைவாகவே நடந்துள்ளன. 2018-ல் ட்ரம்ப் உடனான உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கிம் ஜாங் உனின் முதல் வெளிநாட்டுப் பயணமும் பெய்ஜிங்கிற்குத்தான், அப்போது அவர் பியாங்யோங் அணுசக்தித் திட்டத்தைப் பற்றி விவாதிக்கச் சென்றார்.

இது சீனாவிற்கு நன்மையா?

சீனா, ரஷ்யா, வடகொரியா, ஜின்பிங் - புதின் - கிம், டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு முன்பாக, ரஷ்ய, வட கொரிய நாட்டுத் தலைவர்களை சீன அதிபர் சந்திப்பது அவருக்கு சாதகமாக அமையலாம்.

சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யா-வட கொரியா கூட்டணியிலிருந்து ஷி ஜின்பிங் கிட்டத்தட்ட தனித்து நிற்பதாக தோன்றியது. அது சீனா பங்கேற்க விரும்பாத கூட்டணியாக இருக்கலாம்.

யுக்ரேன் போரில் நடுநிலைமை வகிக்க சீனா வெளிப்படையாக முயற்சித்தது. அமைதியான தீர்வுக்காக முறையிட்டது. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களும்,‌ உதிரிபாகங்களும் சீனா வழங்குவதாக குற்றம் சாட்டின.

புதினுடனான கிம்மின் நெருக்கம் சீனா-வட கொரியா இடையிலான உறவுகளை சிதைத்துவிட்டது என்று சிலர் ஊகித்தனர். ஆனால் அடுத்த வாரம் கிம்மின் பெய்ஜிங் வருகை இந்த அனுமானம் தவறு என்பதை நிரூபிக்கிறது.

வட கொரியத் தலைவர் எளிதில் கைவிட முடியாத உறவு‌ சீனாவுடனானது. அவர்களது பொருளாதாரம் சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது, அவர்களது உணவு இறக்குமதியில் சுமார் 90 சதவிகிதத்தை சீனாவே வழங்குகிறது, புதின் மற்றும் ஜின்பிங்குடன் மட்டுமின்றி, இந்தோனீசியா, இரான் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் ஒரே மேடையில் நிற்பது கிம்முக்கு கூடுதல் நியாயத்தை அளிக்கிறது.

ஷி ஜின்பிங்கைப் பொருத்தவரை, டொனால்ட் டிரம்ப் உடனான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகும்.

ஒரு அதீத வரி, வர்த்தகப் போரைத் தவிர்த்து ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் 90 நாள் இடைநிறுத்தம் நடைமுறையில் உள்ளது, ஆனால் நேரம் குறைந்து கொண்டே வருகிறது. பேச்சுவார்த்தைகளின் போது ஜின்பிங் தரப்பு வலுவாக இருக்க வேண்டும்.

அவரிடம் கொடுப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. டிரம்ப் கிம் ஜாங் உன்னை சந்திக்க முயற்சித்த போது, சீனா அவருக்கு உதவியது. ஷி ஜின்பிங் மீண்டும் அந்த உதவியைச் செய்ய முடியுமா?

இன்னும் முக்கியமான கேள்வி என்னவென்றால், யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் சீனாவால் என்ன பாத்திரம் வகிக்க முடியும்.

மேலும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால்: ஷி ஜின்பிங், புதின், கிம் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்திப்பது சாத்தியமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy98z9veld9o

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும்.

இதில் இந்திய தலைவரும் இணைகிறாரே.

ஏன் அவர்பற்றி எதுவும் பேசப்படவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

02 Sep, 2025 | 05:40 PM

image

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், இன்று சீனா சென்றடைந்தார். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளவே கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்.

இந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிம் ஜாங் உன் கடந்த 2023ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்று புட்டினை சந்தித்தார். அதற்குப் பிறகு, இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். இதற்கு முன்னர், அவர் 2019ஆம் ஆண்டு சீனாவுக்குச் சென்றுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதுடன், வீரர்களையும் அனுப்பி வருவதாக வடகொரியா மீது உக்ரைன் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

541594234_1582566276110078_2100706869627

https://www.virakesari.lk/article/224052

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.