Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No image preview

12K views · 319 reactions | அனைத்து போக்குவரத்து பொலிஸாரு...

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் - சிக்கப்போவது யார்..? #SriLankanPolitician #Srilankanpolice #TrafficPolice #tamilwin.

https://tamilwin.com/article/another-procedure-to-implemented-next-two-weeks-1757487619

  • கருத்துக்கள உறவுகள்

ஏ 9 பாதையில் உள்ள பொலிசாருக்கு இதை முதலில் வழங்க வேண்டும் யுவர் ஆனர்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏ 9 பாதையில் உள்ள பொலிசாருக்கு இதை முதலில் வழங்க வேண்டும் யுவர் ஆனர்.

அதுவும் நான் மீண்டும் ஊருக்கு போகமுன்னர்.... யுவர் ஆனர்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏ 9 பாதையில் உள்ள பொலிசாருக்கு இதை முதலில் வழங்க வேண்டும் யுவர் ஆனர்.

A9 நிற்பவர்கள் மலை முழுங்கிகள் காசு வாங்கும் பொழுது காமரா வேலை செய்யாது நிப்பாட்டி விடுவார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

அதுவும் நான் மீண்டும் ஊருக்கு போகமுன்னர்.... யுவர் ஆனர்

அண்ணை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

7 minutes ago, பெருமாள் said:

A9 நிற்பவர்கள் மலை முழுங்கிகள் காசு வாங்கும் பொழுது காமரா வேலை செய்யாது நிப்பாட்டி விடுவார்கள் .

அண்ணை, நிப்பாட்டுவதை விட சைகை மொழியில் பழக்கிவிடுவார்கள்! இப்பவே ஆட்கள் கூட எனின் கையில் காசு வாங்குவதில்லை, பதிவு புத்தகத்தில் மறைவாக வைக்கச் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

545861432_1437982567754892_2179970254550

லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்க, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராகக்ளில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Uduppiddy News

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அதுவும் நான் மீண்டும் ஊருக்கு போகமுன்னர்.... யுவர் ஆனர்

1 hour ago, பெருமாள் said:

A9 நிற்பவர்கள் மலை முழுங்கிகள் காசு வாங்கும் பொழுது காமரா வேலை செய்யாது நிப்பாட்டி விடுவார்கள் .

இங்கும் பாரிய பிரச்சனை உள்ளது.

அதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஒரு இடத்தில் சாரதிக்கு ரிக்கட் கொடுத்தால் வழக்குக்காக அதே இடத்தில் இருக்கும் நீதிமன்றுக்கே போக வேண்டும்.

இதனால் மிகவும் பாதிக்கப்படுவது சாதாரண சாரதிகளே.

அன்றைய வேலையை விட்டுவிட்டு நீதிமன்றில் போய் காய வேண்டும்.

யாழில் இருந்து ஒரு நெடுஞ்சாலை விமானநிலையத்துக்கு இருந்தால் 3 மணிநேரத்தில் போகலாம்.

இதையே சாதாரண வீதிகளில் 7-8 மணிநேரம் கூடிக் குறைந்த வேகக் கட்டுப்பாடுகளைக் கடந்து போவதென்றால் மிகவும் கஸ்டம்.

சாதாரண சாரதிகளுக்கு இது ஒரு சோதனையாக இருக்கும்.

ஏதாவது மாற்று உத்திகளைக் கையாள்வார்கள் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

அனைத்தும் இந்த கெமராகக்ளில் பதிவு செய்யப்படும்

அனேகமாக பெண் சாரதிகள் இனிமேல் மேக்கப் போடாமல் வண்டி ஓட்டமாட்டார்கள் நம்பலாம்.👩‍🎤

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அதுவும் நான் மீண்டும் ஊருக்கு போகமுன்னர்.... யுவர் ஆனர்

எப்ப பாஸ் போறீங்க?

ஒரு இரண்டு கிழமை பொறுக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இரண்டு கிழமைகளுக்கு மட்டும்? பரீட்சார்த்த முயற்சியோ? நிரந்தரமாக அணிய வைத்தால் கையூட்டல் தவிர வேறு பல குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டுபிடிக்கலாம். விமான நிலையத்தில் குடிவரவு துறையில் பணிபுரிபவர்கள் நெஞ்சிலும் கமெரா மாட்டுவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Paanch said:

அனேகமாக பெண் சாரதிகள் இனிமேல் மேக்கப் போடாமல் வண்டி ஓட்டமாட்டார்கள் நம்பலாம்.👩‍🎤

ஐயாவுக்கு எப்பவும் கிளுகிளுப்பு தான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இங்கும் பாரிய பிரச்சனை உள்ளது.

அதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஒரு இடத்தில் சாரதிக்கு ரிக்கட் கொடுத்தால் வழக்குக்காக அதே இடத்தில் இருக்கும் நீதிமன்றுக்கே போக வேண்டும்.

இதனால் மிகவும் பாதிக்கப்படுவது சாதாரண சாரதிகளே.

அன்றைய வேலையை விட்டுவிட்டு நீதிமன்றில் போய் காய வேண்டும்.

யாழில் இருந்து ஒரு நெடுஞ்சாலை விமானநிலையத்துக்கு இருந்தால் 3 மணிநேரத்தில் போகலாம்.

இதையே சாதாரண வீதிகளில் 7-8 மணிநேரம் கூடிக் குறைந்த வேகக் கட்டுப்பாடுகளைக் கடந்து போவதென்றால் மிகவும் கஸ்டம்.

சாதாரண சாரதிகளுக்கு இது ஒரு சோதனையாக இருக்கும்.

ஏதாவது மாற்று உத்திகளைக் கையாள்வார்கள் என நம்புவோம்.

இந்த தொந்தரவு வேணாம் என்றுதான் அநேகர்லண்டனில் இருந்து சென்னை போய் காலையில் இறங்கி அப்படியே பலாலி 1 மணி நேரத்தில் யாழில் மதியம் சாப்பட்டுக்கு வீட்டில் நிக்கினம் என்ன 2௦ கிலோ நிறைக்கு மேல் கொண்டு போக முடியாது அவசர பிரியர்களுக்கு இந்த ரூட் மிகவும் வசதியானது .

அல்லது சென்னையில் இறங்கி ஆசுவாசமாய் சொப்பிங் பண்ணி 9௦கிலோ வுக்கு நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போய் வருகிறது நாலு மணி நேர பயணமே ஒரு வழி பாதை நேரத்துக்கு ஆகுது .

a9 ல் இரவிரவாய் 8௦மைல் வேகத்தில் மாவா போதை பாக்கு போட்டு ஓடும் சாகச வாகன ஓட்டிகளின் தொல்லை வேண்டாம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.