Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!

Vhg செப்டம்பர் 22, 2025

AVvXsEji-KJId0YAR65fYcSDcJCi4LjoTFxqBACnFLyDXLMSa37awvrmM7Gjo5iV305h2fyMTVn39R182iSDRR9VT30fUjwAivJ0wR1elzi1I-j1VL-vfH396J7hPQNutoekBBA-p2U8fHJY_mWKot8Dc7M1cPLNLMbDo6VSYC7G5tl8vFyWiTM5A4cCklU0-YGU

ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார்.

ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும்.

ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். 

பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 

1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 

1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். 

அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 

1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். 

ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார்.

1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். 

இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார்.

இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர்.

செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நாட்களும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் மீது சேறடிப்பதற்காக இச்சம்பவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசு.

பேரினவாதத்தின் ஏவலைத் தலைமேல் ஏற்று இயங்கும், “சொந்த நலன்களுக்காகவும், அற்பமான விருப்பு வெறுப்புகளுக்காகவும், குறுகிய பழிவாங்கல்களுக்காகவும் சேர்ந்த சிறு கும்பலொன்று ” அயர்ச்சி கொள்ளாமல், “ராஜினியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்” என்று ஒரு தலைமுறைக்கே பிரச்சாரம் செய்து வந்தது.

ஆனால், இன்று இந்த சிறு கும்பலின் நவதூவாரங்களிலும் சுண்ணாம்பை வைத்து அடைத்தது போன்றதொரு வேலையைச் செய்துவிட்டது சிங்கள பேரினவாத அரசு.

1998 ஆம் ஆண்டில் வெளிவந்த தினமுரசு பத்திரிக்கை ஒன்றில் அற்புதன் என்பவர் , ராஜினி இராஜசிங்கத்தை இந்திய அமைதிப்படையும், ஈபிஆர்எல்எப் அமைப்பும் இணைந்து படுகொலை செய்ததை அம்பலப்படுத்தி எழுதிய, 

அந்தக் கட்டுரையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வெளியான சிங்கள அரசின் அதிகாரபுர்வ பத்திரிகை, “சிலுமின”வில், 23 ஆம் பக்கத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்திருந்தார்கள்.

அதே பக்கத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் யாழ் சுதுமலை அம்மன் கோயில் வளாகத்தில் ஆற்றிய உரை தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கின்றது.

பல வருடங்களுக்குப் பிறகு சிறிலங்கா அரசு இந்த விவகாரத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும்?

அதைப் புரிந்து கொள்ள இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட காலப்பகுதியின் அரசியல் நிகழ்வுகளைப் படிக்க வேண்டும்.

கொழும்பு துறை முகத்தை இந்தியாவுக்கு கொடுப்பது தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டிருந்த காலம் அது. சனாதிபதி கோட்டபாய துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். 

அரசாங்க தரப்பின் பிறிதொரு தரப்பு அதை எதிர்த்து கொண்டிருந்த து. குறிப்பாக மகிந்த இராசபக்சவே எதிராக நின்றார்.

எதிர்ப்புகள் காரணமாகத் திட்டத்தை கைவிட்டார் கோட்டபாய. பதிலடியாக இந்தியா கொடுத்திருந்த கடன் ஒன்றை உடனடியாக திருப்பி தா எனக் கேட்டது.

இந்திய அழுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மேற்படி கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கை நிர்வாகத்திற்கு மகிந்தவின் புதல்வர் ஒருவர் நேரடி அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றார்.

இலங்கையுடனான இராசதந்திர உறவுகளில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய விரோத உணர்வாகும். சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பதற்காகப் பலத்த முயற்சி செய்து வருகின்றது இந்தியா. 

அதிலொன்றாக இந்திய மொழி திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது.

இதற்காக இந்திய மொழித்திரைப்படங்களை சிங்கள உபதலைப்புகளுடன் இருவெட்டுகளில் தெரு தெருவாக விற்கப்படுகின்றது. இருவெட்டு தயாரிக்கும் வேலைகள் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் புறக்கோட்டை மற்றும் தெகிவளை பிரதேசங்களில் இயங்கும் இரண்டு தொழில் இடங்களில் நடந்து வருகின்றது. தொடர் நாடகங்கள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்தியா இப்படி முயற்சிகள் செய்து வரும் நிலையில், தம் மீது அழுத்தங்களைக் கொடுத்தால் இந்திய விரோதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து விடுவோம் என்ற செய்தியைச் சொல்லவே மேற்படி கட்டுரைகளை அரச பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தார்கள். இதற்குப் பதிலடியாகத் தான், லொகானி எனும் சிங்கள பாடகியின் பாடல், இந்திய நடிகரும், இந்திய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரின் கணவருமான அமிதாப்பச்சன் மூலம் இந்தியாவில் பிரபலமாக்கப்பட்டது. இதனால் இந்தியா தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால்....

இந்தியாவுக்குச் சேதி சொல்லப் போய், நீண்டகாலம் பொத்தி வைத்துக் கொண்டிருந்த உண்மையை அவிழ்த்து விட்டு விட்டார்கள். மேற்படி கட்டுரையில் ராஜினி இராஜசிங்கம், இந்திய அமைதிப் படையின் கோரமுகங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த காரணத்தால், அவரை முடக்கும் நோக்கில் இந்திய அமைதிப் படையே ஈபிஆர்எல்எப் அமைப்பை ஏவி கொலை செய்தது என கூறப்படுகின்றது. அடுத்த கட்டுரையில் இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலையை புலிகள் மற்றும் சிங்கள தரப்பின் விருப்பு இன்றி இந்திய அரசு தனது ஏதேசதிகாரத்தை நிலைநாட்டியது என்ற கருத்துச் சொல்லப்படுகின்றது.

இந்த விடயத்தை அரச பத்திரிக்கை ஒன்றின் மூலம் அதுவும் இவ்வளவு காலம் கடந்து வெளியிடுவது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். உண்மை எவ்வளவு தாமதமாக வெளியே வந்தாலும் சுடும். ராஜினி இராஜசிங்கம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பை உருவாக்கி இந்திய அமைதி படையினரின் அயோக்கிய செயல்களை வெளிப்படுத்தி வந்திருந்தார். மேலும், இது தொடர்பான விபரங்கள் அடங்கிய “முறிந்த பனை“ எனும் நூலை, ஆங்கில மொழியில் சக விரிவுரையாளர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஊள், சிமாறிதரன் ஆகியோருடன் இணைந்து வெளியிட இருந்த தறுவாயில் படுகொலை செப்பப்பட்டிருந்தார்.

இந்நூலில் 1948 இல் மலையக தமிழர்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், 1987 இல் அமைதியை காக்கின்றோம் என்ற பெயரில் இந்தியப் படை தமிழ் பகுதிகளில் செய்த அட்டூழியங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்த து. குறிப்பாக இந்திய அமைதிப்படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மட்டத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் ஆங்கில மொழியில் வெளிவருவது சர்வதேச கவனத்தைப் பெறும், அத்துடன் அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா செய்யும் கோரச் செயல்களை உலகின் முன் அம்பலப்படுத்தி விடும் என்ற பதற்றமே, ராஜினியின் படுகொலைக்குப் பிரதான காரணம் என்பதை, 22 வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா அரசே இன்று உறுதிப் படுத்தி இருக்கின்றது.

தமிழ்ச் சூழலில் புதிதாக எழுத வருபவர்கள், முற்போக்கு , இடதுசாரி அரசியலில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எல்லாம் அலேக்காக அள்ளிக் கொண்டு சென்று மூளைச் சலவை செய்ய இலக்கியம் - இடதுசாரியம் - முற்போக்கு அரசில் என இயங்கும் கும்பலொன்று இருக்கின்றது. 

இவர்களின் சூத்திரக் கயிறு சிறிலங்கா பேரினவாத அரசு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மெல்ல மெல்லவோ, அல்லது எந்த நாடகம் போட்டே தமிழர்கள் சுயமரியாதை, அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையைக் கோருவதை மடைமாற்றுவது. இந்த இடுபணியை செய்ய கையிலெடுத்திருக்கும் பிரதான ஆயுதம் விமர்சனம் என்ற பெயரில் புலிகள் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவதூறு பரப்பி வருவது.

புதியவர்கள் இவர்களது வலையில் விழுவது தவிர்க்க இயலாத நிர்ப்பந்தம். ஏனெனில், இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாப்பியத்தனத்தை மீறி இங்குத் தடம் பதிப்பது இலகுவான காரியம் அல்ல. ஒரு உதாரணம் இதை விளங்கப்படுத்தும். சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வருடாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுகளிலிருந்து ஈழத்து சூழலின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான தீபச்செல்வன் ஒதுக்கப்பட்டிருந்தார். இத்துணைக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் எழுத்தாளர் தீபச்செல்வன் வசிக்கின்றார். காரணம், தீபச்செல்வன் தமிழின விடுதலையை மூச்சாக கொண்டு எழுதி வருபவர். நன்கு அறியப்பட்ட தீபச்செல்வனுக்கே இந்த நிலைமை என்றால்….?

இந்த மாபியா கும்பலின் ஒரு தரப்பு தான் ராஜினி இராஜசிங்கத்தை “விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்“ என்பதைப் பிரச்சாரம் செய்து வருபவர்களும். தமிழ்ச் சூழலில் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எந்த கேள்வியுமின்றி புலி எதிர்ப்பை   ( மறைமுகமாகத் தமிழின விடுதலை எதிர்ப்பு அரசியல் ) ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பது தான் இவர்களது வேலை. இல்லையெனில் அங்கீகாரமும், வாய்ப்பும் இங்கு மறுக்கப்படும். இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களில் எந்த நேர் விளைவுகளும் இருப்பதில்லை. வெறுமனே காழ்புணர்வு மாத்திரமே இருக்கும்.

ராஜினி இராஜசிங்கம் முறிந்த பனை புத்தகத்தை எழுதியதற்காக விடுதலைப் புலிகள் கொலை செய்ததாகச் சொன்னார்கள். ஆனால், புத்தகத்தை வாசித்தால் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளும், இந்தியா அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய கொடூரங்களும் தான் அம்பலமாகி இருந்தது. விடுதலை இயக்கங்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் , குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவர்களது இராணுவ செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியவை அல்ல. அவை சரி செய்து கொள்ளப் பட வேண்டிய கருத்துகளாகவே இருந்தது. முறிந்தபனை நூல், முதலில் ஆங்கிலத்தில் தான் வெளிவந்தது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ராஜினி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் புத்தகம் வெளியே வந்திருக்கின்றது. தமிழ் மொழி பதிப்பு 1996 ஆம் ஆண்டு தான் வந்தது. ஆக, இங்கும் இந்த புத்தகம் விடுதலைப் புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது எனச் சொல்வது அர்த்தமில்லாதது.

புத்தகத்தில் கட்டுரை எழுதுவதற்காக தகவல் திரட்டிய விரிவுரையாளர் ஒருவர் , தான் இந்தியப் படை அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். அச்செய்திகள் அப்போதைய பத்திரிக்கையிலும் வெளி வந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் மிகமிலேச்சத்தனமானவை. இந்த விடயம் வெளியே அதிகமாக கதைக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கே இருக்கின்றது. இன்றுவரை அதை அவர்கள் செய்கின்றார்கள். ராஜினி இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்றில் உள்ளூர் இராணுவ அதிகாரிகள் தன்னை பழிதீர்க்க முயல்வதாக எழுதி இருக்கின்றார்.

பொதுவாக விடுதலைப்புலிகள் தங்கள் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அவசியம் ஏற்படும் இடங்களில் மாத்திரமே மறுப்பு சொல்வார்கள். அதுவும் பிறர் மீது பழிகள் போடுவதில்லை. ஆனால், ராஜினி படுகொலை விவகாரத்தில் மறுப்பு சொல்லியதோடு, ஈபிஆர்எல்எப் ம், அவ்வமைப்பின் சார்பில் அப்போது வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து இந்திய அமைதி படையுடன் இணைந்து செயற்பட்ட வரதராஜபெருமாளும் தொடர்பு பட்டதைச் சொல்லி இருக்கின்றார்கள். வரதராஜபெருமாள், இந்திய அமைதிப்படையுடனும், தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டும் செய்த அட்டூழியங்களை ராஜினி அம்பலப்படுத்தி இருந்தார். 

படுகொலைக்குப் பின்னர், தியாகி திலீபனின் உடலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பெறுவது தொடர்பாக ராஜினியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என வரதாராஜன் சொல்லி இருந்தார். ( தியாகி திலீபன் விரும்பியபடி விடுதலை புலிகளே அவரது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கொடுத்தனர்) இப்படி எழும் கேள்விகளும், ராஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிக்க வாய்ப்பிருந்தும் செய்யாமையும், இந்த படுகொலையை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய தரப்பு தப்பித்து கொள்ள முயல்வதும்.

ராஜினியை புலிகள் கொன்றார்கள் என பிரச்சாரம் செய்து நினைவு கூர்ந்து வருபவர்கள் ஒருபோதும் அவர் முறிந்த பனை நூல் மூலம் சொல்லிய விடயங்கள் தொடர்பாகக் கதைக்க விழையாமையும் உண்மை என்ன என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது.

இன்று சிறிலங்கா பேரினவாத அரசே அந்த உண்மையை அம்பலப்படுத்தி உதவி இருக்கின்றது

https://www.battinatham.com/2025/09/blog-post_480.html

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி ஒருவரின் கண்ணிலும் படவில்லையா....

அல்லது, வாசித்து விட்டு "கோமா நிலை"க்கு போய் விட்டார்களா.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினி திராணகம திடீரென்று "மனித உரிமை ஆர்வலராக" தலையில் சுமக்கப் படுவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை! அதே நேரம், சிங்களப் பேரினவாத அரசும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் நல்ல தரப்பாக நம்ப வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் "பெயின்ற் அடிக்கும்"😂 குழுவினர்.

அமரர் ராஜினியைச் சுட்ட ஒற்றை நபர் (கட்டையான, சிவந்த ஒருவர்) யாரென்று யாருக்கும் தெரியாது - அற்புதனுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், சுடப் பட்ட அந்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் நிகழ்ந்த சம்பவங்களின், உரையாடல்களின் சாட்சிகளை வைத்துத் தான் முறிந்த பனையின் எழுத்தாளர்கள் புலிகளே சுட்டதாகச் சொல்கிறார்கள். முறிந்த பனையை இங்கே இணைத்து உரையாட இயலாது, ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அற்புதனின் தொடரில் இருக்கும் தகவல்களை விட மிக நுணுக்கமாக (granular) இருப்பதாக நான் உணர்கிறேன். அத்தனை நுணுக்கமான சாட்சிகளையும், உரையாடல்களையும் யாரும் கற்பனையில் உருவாக்கி விட முடியாது.

மிக முக்கியமான இன்னொரு விடயம், இந்திய இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் துகிலுரிந்த முறிந்த பனையை புலிகள் தடை செய்தனர், அமரர் ராஜினியின் உருவப் படத்தைக் கூட பல்கலைக் கழகத்தில் நினைவுச் சுவரில் மாட்ட அனுமதிக்காமல் புலிகள் தடுத்திருந்தனர். 2012 இற்குப் பின்னர் தான் அவரது உருவப் படம் பல்கலை மருத்துவ பீடத்தில் காட்சிப் படுத்தப் பட்டது.

கோமாவில் இருப்போர் இன்னும் "ஆழமான" கோமாவிற்குப் போய் ஒளிந்து கொள்ளட்டும்😎!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ஆழமான ஆனால் விரும்பும் கோமா....ராஜினி திராணகம திடீரென்று "மனித உரிமை ஆர்வலராக" தலையில் சுமக்கப் படுவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை! அதே நேரம், சிங்களப் பேரினவாத அரசும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் நல்ல தரப்பாக நம்ப வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் "பெயின்ற் அடிக்கும்"😂 குழுவினர்.

அமரர் ராஜினியைச் சுட்ட ஒற்றை நபர் (கட்டையான, சிவந்த ஒருவர்) யாரென்று யாருக்கும் தெரியாது - அற்புதனுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், சுடப் பட்ட அந்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் நிகழ்ந்த சம்பவங்களின், உரையாடல்களின் சாட்சிகளை வைத்துத் தான் முறிந்த பனையின் எழுத்தாளர்கள் புலிகளே சுட்டதாகச் சொல்கிறார்கள். முறிந்த பனையை இங்கே இணைத்து உரையாட இயலாது, ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அற்புதனின் தொடரில் இருக்கும் தகவல்களை விட மிக நுணுக்கமாக (granular) இருப்பதாக நான் உணர்கிறேன். அத்தனை நுணுக்கமான சாட்சிகளையும், உரையாடல்களையும் யாரும் கற்பனையில் உருவாக்கி விட முடியாது.

மிக முக்கியமான இன்னொரு விடயம், இந்திய இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் துகிலுரிந்த முறிந்த பனையை புலிகள் தடை செய்தனர், அமரர் ராஜினியின் உருவப் படத்தைக் கூட பல்கலைக் கழகத்தில் நினைவுச் சுவரில் மாட்ட அனுமதிக்காமல் புலிகள் தடுத்திருந்தனர். 2012 இற்குப் பின்னர் தான் அவரது உருவப் படம் பல்கலை மருத்துவ பீடத்தில் காட்சிப் படுத்தப் பட்டது.

கோமாவில் இருப்போர் இன்னும் "ஆழமான" கோமாவிற்குப் போய் ஒளிந்து கொள்ளட்டும்😎!

புலிகளுக்கும் அவருடன் முரண்பாடு இருந்தது எனவே அவர்கள் தான்.....??? நல்ல ஆழமான ஆனால் விரும்பும் கோமா....

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

புலிகளுக்கும் அவருடன் முரண்பாடு இருந்தது எனவே அவர்கள் தான்.....??? நல்ல ஆழமான ஆனால் விரும்பும் கோமா....

உங்களுடைய "விரும்பி ஏற்ற கோமா" வைப் பற்றியா பேசுகிறீர்கள்😎?

அவருக்கு அந்த நேரம் ஆயுதங்களுடன் திரிந்த எல்லோருடனும் முரண்பாடு இருந்தது. ஆனால், சாட்சிகள், சந்தர்ப்பங்கள் வைத்து அவர்கள் அன்று முதல் தெரிவித்து வருவது புலிகளின் ஆயுததாரி கொன்றார் என்று தான். இடையில், புலிகளின் பிஸ்ரல் குழுவிடம் இருந்து தான் தப்பிக் கொள்ள அற்புதன் என்ற ஒருவர் மட்டும் இன்னொரு அமைப்பைக் கைகாட்டி விட்டதால், "பெயின்ற் வாளி" ரீம் அதைத் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு செப்ரெம்பரிலும், புலிகள் நினவு கூராமல் தடை செய்த ராஜினியின் நினைவு தினத்திற்கு அண்மையாக இத்தகைய பெயின்ற் வாளிகள் வெளியே வந்து மீண்டும் நித்திரைக்குப் போய் விடுவது வழமை😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.