Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

September 26, 2025 11:41 am

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

“வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், தளபாடங்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார்.

https://oruvan.com/100-percent-tax-on-medicines-opposition-to-trumps-order/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

யேர்மன் மருந்து உற்பத்தியில் கால் பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு கணக்கிருக்கிறது. மனுசன் அடிக்கடி கரடி விட்டு வெருட்டிக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி - முழு விவரம்

வாஷிங்டன்: இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது அமெரிக்க அதிபரின் அடுத்த தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றது முதல், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் அவர் அறிவித்தார்.

முதலில் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அறிவித்தார். இந்தியா அதை ஏற்காததால், கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்தார். இதனால், இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை தீவிரம்: இதற்கிடையே, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சென்றுள்ளனர். அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை அமைச்சருடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சுமார் 18 சதவீதமாகவும், இறக்குமதி 6.22 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் திடீரென அறிவித்துள்ளார். அதேநேரம், அந்த மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், சமையலறை உபகரணங்கள், குளியலறை, கழிப்பறை உபகரணங்கள் மீது 30 சதவீத இறக்குமதி வரி, பர்னிச்சர் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பு: ட்ரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என தெரிகிறது. அமெரிக்கா உடனான வர்த்தகத்தை மிகவும் சார்ந்திருக்கும் உள்நாட்டுத் தொழில்களில் ஒன்றான இந்தியாவின் மருந்து துறை, ட்ரம்பின் இந்த திடீர் தாக்குதால் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், நல்ல செய்தி வரும் என இந்திய வர்த்தகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மருந்துப் பொருட்களுக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதித்திருப்பது வர்த்தகர்களிடம் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி - முழு விவரம் | 100 percent tax on import of Indian medicines - hindutamil.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kavi arunasalam said:

யேர்மன் மருந்து உற்பத்தியில் கால் பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு கணக்கிருக்கிறது. மனுசன் அடிக்கடி கரடி விட்டு வெருட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜேர்மனியினது பல மருந்து உற்பத்திகள் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை என நான் அறிந்தேன்.

இதற்கு மேல் யாம் அறியோம் பராபரமே.🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2025 at 00:33, குமாரசாமி said:

ஜேர்மனியினது பல மருந்து உற்பத்திகள் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை என நான் அறிந்தேன்.

Die Abhängigkeit der deutschen Arzneimittelfirmen vom US-Markt ist groß. Die Vereinigten Staaten sind das wichtigste Exportland für die Branche. 2024 gingen dem Statistischen Bundesamt zufolge Waren im Wert von 27 Milliarden Euro und damit knapp ein Viertel der deutschen Pharmaexporte in die USA. Damit ist die deutsche Pharmabranche wesentlich stärker vom US-Markt abhängig als etwa der Maschinenbau und die Chemieindustrie. Besonders gefragt waren etwa Impfstoffe.

https://www.zeit.de/wirtschaft/2025-09/medikamente-zoelle-usa-trump-auswirkungen-deutschland-gxe

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.