Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஆதரவளித்தது. நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார் - வெளிநாட்டு ஊடகங்கள்- adaderana.lk

BBC News
No image preview

Live updates: Trump tells Israel to stop bombing Gaza as...

The US president says he believes Hamas is "ready for a lasting peace", as the group seeks further negotiations on his peace proposal.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

ட்ரம்பின் உத்தரவை…. இஸ்ரேல் கணக்கில் எடுக்குமா?

அப்படி எடுத்து… இஸ்ரேல் போரை நிறுத்தினால்… !!! ?

எப்படியும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வாங்கியே தீருவேன் என்று பல வழிகளிலும் “அடாத்தாக அடம் பிடித்துக் கொண்டு நிற்கும் ட்றம்பிற்கு” நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்!? உள்ளதாகவே தெரிகின்றது.

அடுத்த மாதம் நவம்பரில்…. நோபல் பரிசு அறிவிப்பற்கான நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. அது…. ட்றம்பிற்கு கிடைக்காவிட்டால், நோபல் பரிசு அறிவிக்கும் குழுவிற்கு அட்டமத்து சனி ஆரம்பம்தான். 😂

ட்றம்பிற்கு சமாதானத்துக்குரிய,

நோபல் பரிசு கொடுத்தால்…. நோபல் பரிசுக்கு அவமானம்.

கொடுக்காமல் விட்டால்…. ட்றம்பிற்கு அவமானம்.

எப்படிப் பார்த்தாலும்… இன்னும் ஒரு மாதத்தில் நல்ல கூத்து ஒன்று இருக்கின்றது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் திட்டத்தின் பிற விபரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmgbkklj600tdo29nsk902bng

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தன்யாஹுவும், ஹமாஸும் எப்படிப் பாடுபட்டும் டிரம்புக்கு நோபல் பரிசை கிடைக்காமல் செய்யப் பார்ப்பார்கள்.

நெத்தன்யாஹுவுக்கு தனது பதவியை நீடிக்கவேண்டும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பவேண்டும் என்பதுதான் குறி.

ஹமாஸுக்கு பலஸ்தீனர்களை தொடர்ந்தும் அழிவுப் பாதைக்குள் தள்ளுவதுதான் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-46.jpg?resize=750%2C375&ssl=

காசா பகுதியில் குண்டுவீச்சை உடன் நிறுத்தவும்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு!

காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் 2 வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கத் திட்டத்தில் பணயக்கைதிகள் மற்றும் வேறு சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து ட்ரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பணயக்கைதிகளை விடுவித்து ஏனைய பாலஸ்தீனியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகவும், ஆனால் திட்டத்தின் ஏனைய அம்சங்களுக்காக பாலஸ்தீனியர்களிடையே மேலும் ஆலோசனைகளை கோருவதாகவும் கூறியது. 

ஹமாஸ் அறிக்கையை வரவேற்ற ட்ரம்ப், “அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

அத்துடன், காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் சிறிது நேரத்திற்குப் பின்னர், இஸ்ரேலிய ஊடகங்கள், நாட்டின் அரசியல் பிரிவு காசாவில் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியிட்டன.

எவ்வாறெனினும், ஹமாஸின் அறிக்கையில், அவர்கள் ஆயுதங்களை களைவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது ட்ரம்பின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கிய இஸ்ரேலிய கோரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1449500

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-51.jpg?resize=750%2C375&ssl=

ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து இன்று அவர் எக்ஸில் பதிவிட்டுள்ளதாவது,

காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன என்றார்.

மேலும், புது டெல்லியின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

நீடித்ததுமத் நியாயமானதுமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக அமெரிக்க – இந்திய உறவுகள் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் மோடியின் இந்த பதிவு வந்துள்ளது.

வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உக்ரேனுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் தொடர்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரியை விதித்தார். 

இந்த வரிகள் இரு நாடுகளுக்கு இடையிலும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் நிலையில் இந்திய அதிகாரிகள் அவற்றை நியாயமற்றவை என்று கூறியுள்ளன.

Athavan News
No image preview

ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்

##################### #####################

இந்தியன்... சைக்கிள் காப்பிலை, தன்னுடை 50% வரியை குறைக்க...

ட்ரம்பின் தலையில் கிலோ கணக்கில் ஐஸ் வைக்கிறான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ட்ரம்பின் உத்தரவை…. இஸ்ரேல் கணக்கில் எடுக்குமா?

அப்படி எடுத்து… இஸ்ரேல் போரை நிறுத்தினால்… !!! ?

எப்படியும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வாங்கியே தீருவேன் என்று பல வழிகளிலும் “அடாத்தாக அடம் பிடித்துக் கொண்டு நிற்கும் ட்றம்பிற்கு” நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்!? உள்ளதாகவே தெரிகின்றது.

அடுத்த மாதம் நவம்பரில்…. நோபல் பரிசு அறிவிப்பற்கான நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. அது…. ட்றம்பிற்கு கிடைக்காவிட்டால், நோபல் பரிசு அறிவிக்கும் குழுவிற்கு அட்டமத்து சனி ஆரம்பம்தான். 😂

ட்றம்பிற்கு சமாதானத்துக்குரிய,

நோபல் பரிசு கொடுத்தால்…. நோபல் பரிசுக்கு அவமானம்.

கொடுக்காமல் விட்டால்…. ட்றம்பிற்கு அவமானம்.

எப்படிப் பார்த்தாலும்… இன்னும் ஒரு மாதத்தில் நல்ல கூத்து ஒன்று இருக்கின்றது. 🤣

ரஸ்யாவை நோக்கிய நகர்வுகளின் தோல்வியைச் சரிசெய்து கொள்ளவும் அனைத்துலகிற்கெதிராக எடுத்த வர்த்தகப் போர் மற்றும் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் எனப் புதிய கூட்டுகளைத் தேடும் முடிவெனப் பல்வகமைகளிலும் வீழ்ந்துள்ள தனது செல்வாக்கை உயர்த்திவிட எடுக்கும் முயற்சி. அதனூடாக நோபலும் இலக்கு. ஆனால், நெத்தன்யாகுவும் கமாசும் அமைதி முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

நெத்தன்யாஹுவும், ஹமாஸும் எப்படிப் பாடுபட்டும் டிரம்புக்கு நோபல் பரிசை கிடைக்காமல் செய்யப் பார்ப்பார்கள்.

நெத்தன்யாஹுவுக்கு தனது பதவியை நீடிக்கவேண்டும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பவேண்டும் என்பதுதான் குறி.

ஹமாஸுக்கு பலஸ்தீனர்களை தொடர்ந்தும் அழிவுப் பாதைக்குள் தள்ளுவதுதான் நோக்கம்.

2 minutes ago, nochchi said:

ரஸ்யாவை நோக்கிய நகர்வுகளின் தோல்வியைச் சரிசெய்து கொள்ளவும் அனைத்துலகிற்கெதிராக எடுத்த வர்த்தகப் போர் மற்றும் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் எனப் புதிய கூட்டுகளைத் தேடும் முடிவெனப் பல்வகமைகளிலும் வீழ்ந்துள்ள தனது செல்வாக்கை உயர்த்திவிட எடுக்கும் முயற்சி. அதனூடாக நோபலும் இலக்கு. ஆனால், நெத்தன்யாகுவும் கமாசும் அமைதி முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

ஆக மொத்தத்தில் நெத்தன்யாஹுவும், ஹமாஸும்.... ட்ரம்பின் ஆசையில் மண் அள்ளிப் போடப் போகிறார்கள் போலுள்ளது. 😂

அப்படி நோபல் பரிசு ட்ரம்பிற்கு கிடைக்காமல் போனால், ட்ரம்ப் தன்னிச்சையாக சில நாடுகளை சேர்த்துக் கொண்டு அமெரிக்க மேற்பார்வையில் (தற்போது ஐ.நா. சபை ஒப்புக்கு சப்பாணியாக உள்ளது போன்று) நோபல் பரிசிற்கு இணையான ஒரு சர்வதேச நிறுவனத்தை ஆரம்பித்து... தனக்கு சமாதானத்துக்குரிய 🥇 பரிசை பெற்றுக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. 🎖️ 🙂

ஏனென்றால்... இது ட்ரம்பின் தனிப்பட்ட தன்மானப் பிரச்சினை. "தனது தோல்வியை... இலகுவில் ஜீரணிக்க முடியாத ட்ரம்ப்... "பேட்டை ரவுடி" மாதிரி எந்த அடி மட்டத்திற்கும் இறங்கி, "நாத்தல்" வேலை செய்யக் கூடியவர்தான் ட்ரம்ப்". 🤣

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-59.jpg?resize=750%2C375&ssl=

ட்ரம்பின் அழைப்புக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை (04) காசாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களின் விளைவாக ஆறு பேர் உயிரிழந்தனர்.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா நகரில் ஒரு வீட்டைத் தாக்கிய இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

அதேநேரத்தில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்கிய ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாகக் கூறிய சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்தன. 

https://athavannews.com/2025/1449546

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.