Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kavi arunasalam said:

எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம்.

தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்

ஓமோம் விஜயின் அரசியல் கூட்டத்துக்கு வந்த சனம் முழுக்க வாக்குரிமை உள்ளவையும் வாக்காள பெருமக்களும் தான்.அவ்வளவு சனமும் வோட் பண்ணி நடிகன் ஜோசப் விஜய் நேரடியாய் முதல்வர் கதிரையில குந்தி இருப்பார்.

இவ்வளவு சனம் செத்தும் சம்பந்தப்பட்ட உறவினர்களை போய் சந்தித்தும் மன்னிப்பும் கேட்டும் ஆறுதல் சொல்லாதவனுக்கு முதல்வர் பதவி ஒரு கேடு.

மன்னிப்பு கேட்க்கக்கூடாது அது மரியாதை கெட்ட வேலை எண்டு ஈழத்தமிழர் யாராவது விஜயின்ர காதில ஓதியிருக்கலாம் யார் கண்டார்? விஜய் ஈழத்து மருமோன் எண்டது ஒரு பிளஸ் பொயின்ற் கண்டியளோ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் மன்னிப்புக்கும் ஒரு நோபல் பரிசு கொடுக்குமாறு சீஸ்லாந்து நாட்டை கோரலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2025 at 23:08, குமாரசாமி said:

இவ்வளவு சனம் செத்தும் சம்பந்தப்பட்ட உறவினர்களை போய் சந்தித்தும் மன்னிப்பும் கேட்டும் ஆறுதல் சொல்லாதவனுக்கு முதல்வர் பதவி ஒரு கேடு.

மன்னிப்பு கேட்க்கக்கூடாது அது மரியாதை கெட்ட வேலை எண்டு ஈழத்தமிழர் யாராவது விஜயின்ர காதில ஓதியிருக்கலாம் யார் கண்டார்? விஜய் ஈழத்து மருமோன் எண்டது ஒரு பிளஸ் பொயின்ற் கண்டியளோ 😂

கொஞ்சம் கோவமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

சிறிது அவகாசம் கொடுத்துத்துப் பார்க்கலாம். இந்த விடயத்தில் கவலைதான் தெரிவிக்க வேண்டுமே தவிர மன்னிப்பு எதற்காக? வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருந்து தீர்ப்பு வரும்.

கண்ணதாசன் திமுக ஆட்சியை சாடி ஒரு பாடல் எழுதியிருந்தார் அந்த பாடலில் இடம் பெற்ற வரி எனக்கு ஞாபகம் வந்தது.

“சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்

தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்

என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்

இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்…”

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2025 at 23:48, goshan_che said:

விஜையால் எப்படி பார்த்தாலும் பாதிப்பு திமுகவுக்கே என்பதில் உடன்பாடுதான் ஐயா.

On 6/10/2025 at 23:48, goshan_che said:

அதிமுக+விஜை+பிஜேபி ஒரே அணியில் வரின் 2026 இல் தமிழ் நாட்டில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போ அரசின் கொள்கை முதல் செயல்திட்டம் வரை கொஞ்சம், கொஞ்சமாக காவி மயமாகும்.

இது வரலாற்றில் முதன் முறை நிகழும் நிகழ்வாக இருக்கும்.

On 6/10/2025 at 23:48, goshan_che said:

இப்படி ஒரு நிலை வருவதை விரைவு படுத்துவதுதான் விஜையின் வேலை என்றால் - அவர் வராமலே இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு.

எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற ரீதியில்.... பா ஜ க அதை புரிந்துகொண்டு அதிமுக NDA இலிருந்து வெளியேறுவதைக் கண்டும் காணாமலும் விட்டால் மட்டுமே விஜய் அதிமுக கூட்டணி உருவாகும் என நினைக்கிறேன்.

விஜய் + அதிமுக + பா ஜ க வுடன் இணைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தாலும் அந்தக் கூட்டணி விஜயின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

இந்த உங்களின் கருத்தில் வேறுபாடு இல்லை.

இதை விட விஜய் தனித்தோ அல்லது இந்திரா காங்கிரசுடனோ கூட்டணி வைத்து போட்டியிட்டு தி முக வை தோற்கடிக்கலாம்

ஆனால் எடப்பாடியார் தான் முதல்வராவார்.

இதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை

ஆகவே இன்னும் காலம் இருக்கின்றது. ஆலோசனைகள் செய்து தனித்து நிற்பதென்ற முடிவை விஜய் எடுத்தால் அவருடை எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற ரீதியில்.... பா ஜ க அதை புரிந்துகொண்டு அதிமுக NDA இலிருந்து வெளியேறுவதைக் கண்டும் காணாமலும் விட்டால் மட்டுமே விஜய் அதிமுக கூட்டணி உருவாகும் என நினைக்கிறேன்.

இந்த கோணத்தில் நானும் சிந்தித்து பார்த்தேன்.

இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் சேருவோம் என டெல்லி தலைமை முடிவெடுத்தாலும்…

உள்ளூர் பாஜக ரொம்பவே சோர்ந்து போய்விடுவார்கள். இது வானதி உட்பட அத்தனை சிட்டிங் எம் எல் ஏ களும் பதவி இழப்பதை உறுதி செய்யும்.

அடுத்த அண்ணாமலையின் இத்தனை வருட உழைப்பு வீண்.

நயினார் முதல் ராஜா வரை ஆவலோடு காத்திருப்போர் நிலை?

இப்படி ஒரு முடிவை டெல்லி எடுத்தால்…

தமிழக பாஜக ரொம்பவே துவண்டு போகும்.

அது என்றோ ஆட்சியை பிடிக்கும் நீண்டகால திட்டத்தை பாதிக்கும்.

எனவே இப்படி ஒரு முடிவு வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.

கூடவே, இன்னும் சில நாட்களில் நயினாரின் பிரச்சாரத்தை பாஜக பொறுப்பாளரும், எடப்பாடியிம் ஆரம்பித்து வைக்கிறார்கள்.

கூட்டணி நன்றாக ஜெல் ஆகிவிட்டது.

இனி பிரிவது கடினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாத்தியார் said:

இதை விட விஜய் தனித்தோ அல்லது இந்திரா காங்கிரசுடனோ கூட்டணி வைத்து போட்டியிட்டு தி முக வை தோற்கடிக்கலாம்

காங்கிரஸ் விஜையை வைத்து ஆட்சியில் பங்கு என ஆரம்பித்து கொஞ்சம் அதிக சீட் கேட்பதோடு அடங்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

விஜை+அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சேர்க்கை.

விஜையோடு தனியே காங்கிரஸ் சேர்ந்தால் விஜை ஒரு சீட் காங்கிரசுக்கு ஏதும் இல்லை என்பதே கரூருக்கு முன்பு கூட நிலமை.

இப்படி இருப்பதையும் கெடுக்க காங்கிரஸ் விரும்பாது. அதுவும் செல்வபெருந்தகை இருக்கும் வரை.

கூடவே பீகாரில் நித்கிஷ், பிஜேபி இடையே லடாய் என்கிறார்கள். ஆகவே இந்தியா கூட்டணியை பலமாக்க கிடைக்கும் சந்தர்பத்தில் பலவருடம் கூட நின்ற திமுகவை விட்டு, விஜையோடு வருவதில் தேசிய, மாநில மட்டங்களில் காங்கிரசுக்கு எந்த அனுகூலமும் இல்லை.

36 minutes ago, வாத்தியார் said:

ஆலோசனைகள் செய்து தனித்து நிற்பதென்ற முடிவை விஜய் எடுத்தால் அவருடை எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்கும்.

இப்படித்தான் நானும் எண்ணுகிறேன்.

ஆனால் விஜை கொஞ்சம் மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும்.

டெண்டுல்கர் ஆயினும் டிரெசிங் ரூமில் இருந்து செஞ்சுரி அடிக்க முடியாது🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

கொஞ்சம் கோவமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

சிறிது அவகாசம் கொடுத்துத்துப் பார்க்கலாம். இந்த விடயத்தில் கவலைதான் தெரிவிக்க வேண்டுமே தவிர மன்னிப்பு எதற்காக? வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருந்து தீர்ப்பு வரும்.

கண்ணதாசன் திமுக ஆட்சியை சாடி ஒரு பாடல் எழுதியிருந்தார் அந்த பாடலில் இடம் பெற்ற வரி எனக்கு ஞாபகம் வந்தது.

“சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்

தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்

என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்

இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்…”

இல்லை. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் நான் கோபப்படுவதே இல்லை. சரி மன்னிப்பும் தேவையில்லை. அந்த நடிகனை தேடி வந்தவர்கள் உயிரிழந்ததிற்கு உடனடியாக அனுதாபங்களை தெரிவித்திருக்கலாம். இதற்கும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் உங்களைப்போன்ற விஜய் ரசிகர்கள் மீதுதான் கோபம் வருகின்றது.

கரூர் மரணத்திற்கான காரணங்கள் வரும் வரைக்கும் அனுதாபங்களும் அஞ்சலிகளும் காத்திருக்கட்டும்.

இதற்கும் தமிழ்நாட்டு பட்டிமன்ற பாணியில் பாட்டு வேற போடுகின்றீர்கள்?!?!?!?!

அது சரி உங்கள் அபிமான நடிகர் ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன? அவரின் மாற்று அரசியல் கொள்கை என்ன? ஒவ்வொரு கட்சியிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கி எழுதி வைத்து அரசியல் மேடை விண்ணாணம் செய்கின்றார். இதில் கொடுமை என்னவென்றால் சீமானின் அரசியல் வசனங்களைத்தான் திரைப்பட பாணியில் பேசுகின்றார் இந்த ஜோசப்பு விஜய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்…

விஜை அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க போவதில்லை….

சில தம்பிகளின் பிளட் பிரசரை கூட்டியதை தவிர.

இருக்கிறதே 8% அதிலையும் பங்கு கேட்டா கோவம் வருமா இல்லையா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் நினைக்கிறேன்…

விஜை அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க போவதில்லை….

சில தம்பிகளின் பிளட் பிரசரை கூட்டியதை தவிர.

இருக்கிறதே 8% அதிலையும் பங்கு கேட்டா கோவம் வருமா இல்லையா🤣.

நான் நினைக்கிறேன்

விஜய் வந்து சீமானின் வாக்கு வங்கியை முன் தள்ளி செய்திருக்கிறார்.

ஒரு அரசியல் கட்சி, அதன் தலைமை, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதனூடாக எப்படி இருக்க வேண்டும் என்று சீமானின் தலைமை அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் மக்கள் என்பதை உதாரணமாக்கி செல்கிறார். நன்றி வணக்கம் விஜய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நான் நினைக்கிறேன்

விஜய் வந்து சீமானின் வாக்கு வங்கியை முன் தள்ளி செய்திருக்கிறார்.

ஒரு அரசியல் கட்சி, அதன் தலைமை, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதனூடாக எப்படி இருக்க வேண்டும் என்று சீமானின் தலைமை அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் மக்கள் என்பதை உதாரணமாக்கி செல்கிறார். நன்றி வணக்கம் விஜய்.

-கனவு காணுங்கள்-

அப்துல் கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

-கனவு காணுங்கள்-

அப்துல் கலாம்

நீங்களும் கனவு காணுங்கள். விஜய் அதிமுக கூட்டணி அமைத்து வலம் வருவார் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

நீங்களும் கனவு காணுங்கள். விஜய் அதிமுக கூட்டணி அமைத்து வலம் வருவார் என்று.

🤣

அவர் அப்படி ஒரு கூட்டணி (பாஜக வோடு சேர்ந்து) சேர்ந்தால் - எனது மானசீக வாக்கு திமுகவுக்கு.

பிகு

நான் எழுதுவதை வாசிக்கிறீர்கள்தானே அண்ணை?

எனது நிலைப்பாடு என்ன என்பதையிட்டும் நீங்கள் கனவில் இருப்பது போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

விஜையின் அரசியல் வரவு நாம் த‌மிழர் க‌ட்சியினரை வெகுவாகக் கலவரப்பட வைத்திருந்தது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. விஜையின் கூட்டங்களுக்குக் கூடியவர்களை அணில்க் குஞ்சுகள் என்று அழைக்கும் அளவிற்கு நாம் தமிழர் கட்சியினர் இறங்கியிருந்தனர். கரூர்வரை கடுமையாக விமர்சித்துவந்த நா த க வினர், கரூரின் பின்னர் தி முக வினர் செய்யவேண்டியதை தாமே செய்யத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணுமளவிற்கு மிகவும் வெளிப்படையாகவே தமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர். கரூர் மரணங்களை வைத்து விஜையை அரசியலில் இருந்து அகற்ற தி மு க நினைக்கிறதோ இல்லையோ, நா த க நிச்சயமாக முயன்று வருகிறது.

எமது இனக்கொலையில் நேரடியாகப் பங்கெடுத்த காங்கிரஸ் / தி மு க‌ கூட்டணியினை வீழ்த்த விஜை தனியாகவோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு வருவதை முழுவதுமாக வரவேற்கிறேன். சீமான் செய்யவேண்டிய ஒரு விடயம், ஆனால் அவரால் ஒருபோதுமே அதனைச் செய்ய முடியாது, விஜையினால் அது சாத்தியப்படுமானால் நிச்சயம் வரவேற்பேன்.

கொலைகார காங்கிரஸ் / தி மு க கூட்டணி அவமானகரமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி,

நீங்கள் நிலமையை உணர மறுக்கிறீர்களா? ஒரே நிகழ்வில் 41 உயிர்கள் பலியாகியுள்ள ஒரு பெரும் அனர்த்தம் இது. இதை ஒரு அதிர்ச்சி, ஒரு தடுமாற்றம் என்று உணர வேண்டும்.

நீங்கள் யேர்மனியில் வசிக்கிறீர்கள்.  ஆகவே இது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். சாலையில் ஒரு  வாகன விபத்து நிகழ்கிறது என்றால், அதை ஓட்டி வந்த சாரதிக்கு என்ன பிரச்சினை அந்த விபத்தால் மனதளவில் அவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா? என்றெல்லாம் பார்த்து சிகிச்சை அளிப்பார்கள். இதை நீங்கள் குறைந்தது தொலைக்காட்சிகளிலாவது பார்த்திருப்பீர்கள்.  இதுவே ஊரில் என்றால், சாரதிக்கு அடி உதை தாராளமாக கிடைக்கும்.

இங்கே நடந்து முடிந்த அனர்த்தத்தை அதிகம் பார்க்காமல், விஜய் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை, ஓடி விட்டார், இவர் எல்லாம் தலைவரா? என்ற கேள்விகளுக்குள் அவரை வைத்து அரசியல் இலாபம் தேடும் எண்ணத்தில்தன் பலர் இருக்கிறார்கள். சீமான் கூட, விபத்து பற்றி உடனடியாக சொன்ன கருத்தில், தம்பி விஜய்க்கு சார்பாக நின்றதையும் கவனிக்கவும். பெட்டியும் வராது ஒட்டுதலும் கிடையாது என்றவுடன்  நிலமை தலை கீழாக மாறிவிட்டது.

விஜய் தனது அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். உறவுகளை இழந்த குடும்பத்தோடு கதைத்தும் இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது, அந்தக் குடும்பங்களில் யாருமே விஜய்க்கு எதிராகக் கைகளை நீட்டவில்லை. இப்பொழுது  இந்த வழக்கை சிபிஜ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முடிவு வரட்டும்.

தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். நான் விஜய் ரசிகன் இல்லை. எனவே என்னை ‘ரசிகன்’ என்ற அடையாளத்தில் அடைத்துவைக்க முயலாதீர்கள். ஆனால், ஒரு பொது மனிதனாக, உண்மையை உணர முயற்சிப்பதில்தான் எனது நோக்கம் இருக்கிறது.

சீமான் பற்றி சொல்வதெனில்,அவர் ஒரு கேவலமான, காட்சிக்காகக் கடுமையான மொழிகளைப் பயன்படுத்தும் மாண்புகளற்ற ஒரு அரசியல் வியாபாரி. தமிழ் தேசியத்தின் பெயரில் பிரபாகரனின் புகைப்படத்துடன், இறந்தவர்கள் படங்களையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார். இது பண்பற்ற அரசியலின் ஒரு பகிரங்கமே. இறந்தவர்களின் படம், அவர்கள் உயிர் இல்லாத நிலையில் காட்டப்படும் போது, அது மரியாதையின்மை மட்டுமல்ல, மனிதநேயத்தின் கேள்விக்குறியுமாகும்.

திமுகவைச் சாடி கண்ணதாசன் பல பாடல்கள் எழுதியிருக்கிறார்ஆக திமுக பற்றி எழுதும் போது கண்ணதாசனும் எனக்கு உள்ளே வந்து விடுகிறார். இதை எல்லாம் பட்டிமன்ற கணக்குக்குள் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. தமிழக அரசியலே நாடக, சினிமா  மூலமே பிரச்சாரம் செய்துதான் வந்தது. வருகிறது. எம்ஜிஆர் கூட தனது படங்களில் வரும் பாட்டுக்களூடாகத்தான் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆட்சிக்கும் வந்தார்போராட்டம் கூட…..சரி விடுங்கள். இதற்குள் போனால் நிறைய எழுத வேண்டும்.

பலே பாண்டிய படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் பாடலில் சில வரிகள்,

மூடருக்கும் மனிதர் போல

முகம் இருக்குதடா

மோசம் நாசம்

வேஷம் எல்லாம்

நிறைந்திருக்குதடா

காலம் மாறும்

வேஷம் கலையும்

உண்மை வெல்லுமடா

கதவைத் திறந்து

பறவை பறந்து

பாடிச் செல்லுமடா

அட என்னத்தச்

சொல்வேண்டா

தம்பியோவ்

என்னத்தச்

சொல்வேண்டா

யாரை எங்கே

வைப்பது என்றே

யாருக்கும் தெரியலே...

அட அண்டங்காக்கைக்கும்

குயில்களுக்கும்

பேதம் புரியலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2025 at 22:37, goshan_che said:

கூடவே, இன்னும் சில நாட்களில் நயினாரின் பிரச்சாரத்தை பாஜக பொறுப்பாளரும், எடப்பாடியிம் ஆரம்பித்து வைக்கிறார்கள்.

இதில் எடப்பாடி மிஸ்ஸின்.

8 hours ago, ரஞ்சித் said:

அரசியலில் இருந்து அகற்ற தி மு க நினைக்கிறதோ இல்லையோ, நா த க நிச்சயமாக முயன்று வருகிறது.

உண்மை. இது எமக்கு புரிவது போல் மக்களுக்கும் புரியும்.

திமுகவை இந்த விடயத்தில் விமர்சிக்காமல், விஜையை போட்டு தாக்கோ தாக்குவது எதிர்மறை விளைவையே நாதகவுக்கு கொடுக்கும்.

அதுவும் விகடன் சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி விட்டார் என விகடன் எழுதிய பின், இப்படி நடப்பது கிட்டதட்ட பெட்டி வாங்கியே உள்ளார் என்பதை சாதாரண மக்கள் மனதில் ஆழப்பதிக்கும்.


8 hours ago, ரஞ்சித் said:

கொலைகார காங்கிரஸ் / தி மு க கூட்டணி அவமானகரமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்

ஒரு ஈழதமிழனின் நியாயமான மனநிலை.

ஆனால் இதன் பிரதியீடு பாஜக அமைசர்கள் உள்ள தமிழ் நாடு அரசு எனில் - அதை விட தமிழக மக்கள் நலனுக்கு திமுக ஆட்சி தொடர்வதே உசிதமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2025 at 15:04, goshan_che said:

விஜை அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க போவதில்லை….

பாஜ க கூட்டணி விஜய்க்கு எதிர்கால அரசியலில் சிக்கலை ஏற்படுத்தும் ...

அந்த வகையில் இப்போது காங்கிரஸ் அதிக சீட்டுக்களை கேட்டு தி மு க வை நச்சரிக்கும் நிலையில்....

அந்தக் காங்கிரஸையே தி முக விடம் இருந்து பிரித்து விஜய் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் .....

தி மு க வின் தோல்வி உறுதி

அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இது உதவும்

பா ஜ க வை அரசில் சேர்க்காமல் அதிமுக விலத்தி வைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்

அதைவிட விஜய் ஓரளவு கணிசமான வாக்குக்களை வாங்க காங்கிரஸ் கூட்டணி உதவும்

யாருக்குமே வாக்கு அளிக்க விரும்பாமல் இதுவரை இருந்து வரும் சிறுபான்மை மக்கள் விஜய் காங்கிரஸ் கூட்டணியை அதிகம் விரும்புவார்கள்

தி முக பலத்த அடி வாங்கும் சந்தர்ப்பத்தில்.....

விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் வாய்ப்பும் வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

தி முக பலத்த அடி வாங்கும் சந்தர்ப்பத்தில்.....

விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் வாய்ப்பும் வரலாம்

தமிழ் நாட்டில் பா ஜ க கூட்டணி என்பது ஒரு முறை தான் வென்றிருக்கின்றது என்று நினைக்கின்றேன்

அதுவும் வாஜ்பாய் கருணாநிதி கூட்டணி மட்டுமே

இந்திரா காங்கிரஸ் பலமுறை திராவிடர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உதவி இருக்கின்றது

விஜயும் நானும் ரௌடிதான் என்பதை போல திராவிடக் கொள்கையுடன் தான் அரசியலுக்கு வந்திருக்கின்றார்

எதுவும் நடக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாத்தியார் said:

அந்தக் காங்கிரஸையே தி முக விடம் இருந்து பிரித்து விஜய் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் .....

தி மு க வின் தோல்வி உறுதி

அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இது உதவும்

பா ஜ க வை அரசில் சேர்க்காமல் அதிமுக விலத்தி வைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்

இது திமுகவும் தோற்க வேண்டும், பிஜேபியிம் அரசில் அங்கம் வகிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் எமக்கு நல்ல தெரிவு.

ஆனால் காங்கிரசுக்கு இதில் ஒரு இலாபமும் இல்லை.

தவிர அதிமுக பெரும்பான்மைக்கு அதிக சீட்டுகள் எடுத்தாலும் கூட கூட்டணி ஆட்சிதான் என்பதை அமித்ஷா எடப்பாடியை வைத்து கொண்டே சொல்லி விட்டார்,

ஆகவே அதிமுக+பிஜேபி கூட்டணி அமைந்தால் - தமிழ் நாட்டு அரசில் பிஜேபி மந்திரிகள் இருபார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

14 hours ago, வாத்தியார் said:

விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் வாய்ப்பும் வரலாம்

இது விஜை+ காங்கிரஸ் கூட்டணியால் மட்டும் சாதிக்க முடியாத விடயம்.

14 hours ago, வாத்தியார் said:

எதுவும் நடக்கலாம்

நிச்சயமாக.

One week is along time in politics. இன்னும் 6 மாதம் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.