Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-10-12-130002.jpg?resize=

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது.

நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

https://athavannews.com/2025/1450145

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய செயல் .......... பாராட்டுக்கள் ......! 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

559005320_1263706205772235_5111367947149

561751826_1263706379105551_6807244325954

559443888_1263706985772157_4298535601070

561777893_1263706485772207_3610079325484

559123215_1263706339105555_4943352778104

559940240_1263787702430752_2753842399255

559989780_1263787765764079_2820091386605

ஜனாதிபதியால் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கப் பட்ட போது...

  • கருத்துக்கள உறவுகள்

"2000 வீடுகள் அல்ல!, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு! மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம்! - ஜீவன் தொண்டமான்"

Published By: Vishnu

12 Oct, 2025 | 06:38 PM

image

அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது....

"இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்நிகழ்வானது "2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல!", ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே" என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே என ஜீவன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/227561

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர்

Published By: Digital Desk 3

12 Oct, 2025 | 04:23 PM

image

வீடுகள் மட்டுமல்ல,  எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெற்ற இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொகுதி அங்குரார்ப்பண நிகழ்விலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இன்றைய நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இந்தியாவின் உதவியுடன் செயல்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்படுகிறது.

இது இந்தியா – இலங்கை உறவின் ஆழத்தையும் நட்பையும் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் இணைந்து மக்களின் வாழ்க்கை நலனையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்ட இருதரப்பு முயற்சிகளால் இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. “சப்கா சாஸ், சப்கா விகாஸ்” (அனைவருடனும் வளர்ச்சி) என்ற மந்திரத்தின் கீழ் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; அதேபோல் இலங்கையும் “வேறு ஒரு நாடு, அழகான வாழ்க்கை” என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது.

இது இரு நாடுகளின் வரலாற்று, கலாச்சார, சமூக பிணைப்புகளின் சின்னமாகும்.

G3DPoSwWMAADaVV.jpg

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் பாலமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

இன்றைய திட்டம் — மொத்தம் 14,000 வீடுகள் — அந்த சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டத்தில் 4,000 வீடுகள் நிறைவு பெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தபடி, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்று அதில் இரண்டாம் கட்டம் துவங்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 65,000 வீடுகள், ரூ. 64 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தையும் மேம்பட்ட வாழ்க்கையையும் அளிக்கும்.

வீடுகள் கட்டுவது மட்டுமல்ல; எதிர்காலத்தை கட்டுவதே இந்தியாவின் நோக்கம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக உட்புகுத்தல் போன்ற துறைகளிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து பணிபுரிகிறது.

இதுவரை பல பள்ளிகளுக்கு சயின்ஸ் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து, இந்தியா 2.5 பில்லியன் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதன் கீழ் பல சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன — குறிப்பாக STEM ஆசிரியர் பயிற்சி திட்டம் மூலம் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், சுகாதார வசதிகள், கல்வி நிறுவன மேம்பாடு, சமூக இணைப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பிரதமர் மோடி அவர்கள் தனது அண்மைய விஜயத்தின் போது சீகதா அம்மன் ஆலய அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான உதவிகளையும் அறிவித்திருந்தார். இதனால் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் வேகமாக நடைபெறும்.

இந்தியாவின் உதவி என்பது ஒரு நண்பனின் உதவியல்ல — ஒரு குடும்ப உறுப்பினரின் பொறுப்புணர்வு கொண்ட உதவியாகும்.

இன்றைய நிகழ்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய பூர்விகத் தமிழர் சமூகத்துக்கான ஆதரவு எப்போதும் தொடரும்.

திருவள்ளுவர் கூறியது போல —

“விருப்பறாச் சுற்றம் இகயின் அருப்பறா ஆகும் பலவும் தரும்.”

அதாவது, உண்மையான பாசமும் நம்பிக்கையும் கொண்ட உறவு பல நன்மைகளை அளிக்கும்.

அந்த உறவின் அடிப்படையில் தான் இந்தியா–இலங்கை நட்புறவு வேரூன்றி வளர்ந்து வருகிறது.

இறுதியாக, நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்கள் புதிய இல்லங்களில் ஒளியையும் நம்பிக்கையையும் காணட்டும் எனக் குறிப்பிட்டார்.

G3DPoP5W0AAJkqP.jpg

G3DPoSsXsAIKrcw.jpg

G3DPoRUWQAATPFb.jpg

https://www.virakesari.lk/article/227554

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

"2000 வீடுகள் அல்ல!, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு! மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம்! - ஜீவன் தொண்டமான்"

Published By: Vishnu

12 Oct, 2025 | 06:38 PM

image

அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது....

"இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்நிகழ்வானது "2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல!", ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே" என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே என ஜீவன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/227561

யார் ஆட்சிக்கு வந்தாலும், மலையக மக்களை கொத்தடிமைகளாக குத்தகை எடுத்த தொண்டைமானுக்கும், அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு தற்போதைய மாற்றம் குடைச்சல் கொடுக்க தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் தொண்டமான் ஏனைய அரசியல் வியாதிகளை போல பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், அவரின் இந்த எதிர்ப்புக் கருத்தில் ஒரு உண்மையும் இருக்கிறது. வீட்டு பத்திரங்களை வழங்குகிறார்கள், அந்த வீடு இருக்கும் காணி யாருக்கு சொந்தம்? நிலத்துக்கான உரிமம் மலையக தமிழருக்கு எப்போது கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழ் மக்களுக்கள் வாக்குகளுக்காக மாத்திரமே பயன்படுத்தினர் அவர்களுக்கான அபிவிருத்திகளை குழப்புவதற்கு இனியும் முயற்சிக்காதீர் - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

Published By: Vishnu

13 Oct, 2025 | 05:15 AM

image

(எம்.மனோசித்ரா)

மலையக தமிழ் மக்கள் காலம் காலமாக வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரடகனத்தின் ஊடாக அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கடந்த காலங்களைப் போன்று இவற்றைக் குழப்புவதற்கு இனியும் முயற்சிக்க வேண்டாம் என எதிரணியினரிடம் கேட்டுக் கொள்வதாக பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலையக மக்கள் இருநூறு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழ்கின்றனர். நாட்டில் பல வைத்தியர்களையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கிய அவர்களுக்கு இலவச கல்வி கூட மறுக்கப்பட்டது. வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலைமையில் கடந்த ஆண்டு உலகத்திலேயே அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் நாயகனாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரகடனத்தின் ஊடாக பல்வேறு வேலை திட்டங்களை முன்மொழிந்திருந்தது.  அந்த வேலைத்திட்டங்களில் மிக முக்கியமாக மலையக மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டு உரிமத்தை இந்த அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என உறுதியளித்திருந்தோம்.

மலையக மக்களின் வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சிறந்த தலைமைத்துவம் வழங்கப்படுகிறது. மலையக மக்களின் சேவையை இலங்கை மாத்திரம் இன்றி முழு உலகமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. எமது வேலைத் திட்டங்களின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

 இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்காக 10 000 வருட திட்டத்தை அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மொத்த இந்திய அரசுக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இந்திய வீட்டுத்துடன் அந்த மக்களுக்கான காணி உரிமத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என மீண்டும் உறுதியளிக்கின்றேன்.

அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். இன்று எம்மை விமர்சிக்கும் மலையக பிரதிநிதிகள் இதுவரையும் அந்த மக்களுக்கு இழைத்த துரோகம் போதும். எனவே அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் அந்த மக்கள் சமூகத்தை குழப்புவதற்கு இனியும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

 மலையக மக்கள் மாத்திரமின்றி சகல இன மக்களுக்கும் சிறப்பான ஒரு நாட்டை நாம் உருவாக்குவோம். கடந்த ஆட்சியாளர்கள் மலையக மக்களை மறந்திருந்தாலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவ்வாறு செயல்படாமல் அவர்களை நினைவில் இருத்தி அவர்களுக்கான தேசிய வேலை திட்டத்தை ஆரம்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/227570

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.jpeg?resize=750%2C375&ssl=1

இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து இரத்னபுரியிலுள்ள வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்கு கடந்த 11ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளித்தனர்.

இரத்தினபுரியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது, நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக கௌரவ அனுர கருணாதிலக பொறுப்பேற்றார். பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரிதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ ஆகியோரும் குறித்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

6.jpeg?resize=600%2C400&ssl=1

இந்த நிகழ்வில் இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள், சபரகமுவ மாகாண சபை மற்றும் இரத்தினபுரி மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2.jpeg?resize=600%2C400&ssl=1

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் வளர்ச்சிக்கு, குறிப்பாக வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் சமூகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

4.jpeg?resize=600%2C400&ssl=1
மாதிரி கிராமத் திட்டத்திற்காக இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்டோபர் 2017 இல் கையெழுத்தானது. இந்தத் திட்டம் இலங்கையின் 600 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை உள்ளடக்கியது, குடும்பங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு 24 வீடுகளைக் கொண்ட ஒரு மாதிரி கிராமம். இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகம் இந்திய அரசின் மானிய ஆதரவுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
15 மாவட்டங்களில் உள்ள மாதிரி கிராமங்கள் முன்பே ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த திட்ட முன்னேற்றம் 97மூ க்கும் அதிகமாக உள்ளது, மீதமுள்ள மாதிரி கிராமங்களும் விரைவில் திறக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1450321

  • கருத்துக்கள உறவுகள்

கட்டப்பட்ட வீட்டின் படங்கள் கிடைத்தால் போடுங்கள் பார்ப்போம். இது எப்படிப்பட்ட பொருட்கள் மூலம் கட்டப்பட்டது? முன்பு தமிழர் பகுதியில் இந்தியா கட்டி கொடுக்கும் வீடுகளை ஏற்கக்கூடாது என ஒரு பிரச்சனை ஓடியது, பலருக்கு ஞாபகம் வரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.