Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஸா, ஹமாஸ், பாலத்தீன், இஸ்ரேல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காஸா தெருக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் வீரர்கள்

கட்டுரை தகவல்

  • ருஷ்டி அபுவாலூஃப்

  • காஸா நிருபர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸாவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் இடங்களில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த தனது பாதுகாப்பு படைகளில் 7000 உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் அழைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ராணுவ பின்னணி கொண்ட மூன்று ஆளுநர்களையும் ஹமாஸ் நியமித்துள்ளது, இவர்களில் சிலர் ஹமாஸின் ராணுவ பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.

இந்த உத்தரவு தொலைப்பேசிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வீரர்கள் பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதன் நோக்கம், "இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றுபவர்களையும், விரோதிகளையும் காசாவிலிருந்து சுத்தப்படுத்துதல்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய ஹமாஸின் பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காஸாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் பொதுமக்கள் உடைகளிலும், மற்றவர்கள் காஸா காவல்துறையின் நீல சீருடையிலும் இருந்தனர்.

காஸா நகரின் சப்ரா பகுதியில் ஹமாஸ் சிறப்பு படைகளைச் சேர்ந்த இருவர் துக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மூத்த தளபதியான இமாத் அகெலின் மகன் ஆவார். இமாத் தற்போது ஹமாஸின் ராணுவ உளவுப்பிரிவின் தலைவராக உள்ளார்.

காஸா, ஹமாஸ், பாலத்தீன், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

தெருக்களில் விட்டுச் செல்லப்பட்ட அவர்களின் உடல்கள் ஹமாஸிடம் கோபத்தை அதிகரித்து பெரிய ராணுவ பதிலடிக்கான சாத்தியங்களை அதிகரித்தது.

பின்னர் 300 ஆயுதமேந்திய துக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள் மெஷின் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இருந்ததாக நம்பப்பட்ட இடத்தை ஹமாஸ் உறுப்பினர்கள் சுற்றி வளைத்தனர்.

இன்று காலை துக்முஷ் குழு உறுப்பினர் ஒருவரைக் கொன்ற ஹமாஸ் மேலும் 30 பேர் சிறைபிடித்துள்ளது.

இந்தக் குழுவின் ஆயுதங்கள் சில போரின்போது ஹமாஸின் கிடங்குகளிலிருந்து களவாடப்பட்டவை. மற்ற ஆயுதங்கள் பல வருடங்களாக இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தவை.

போர் முடிந்த பிறகு காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் சூழலில் ஹமாஸின் அணிதிரட்டல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

டிரம்பின் அமைதி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை சிக்கலாக்கக்கூடிய முக்கியமான பிரச்னை இது தான். ஹமாஸ் ஆயுதத்தை கைவிட வேண்டும் என டிரம்பின் அமைதி திட்டம் கூறுகிறது.

காஸா, ஹமாஸ், பாலத்தீன், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் அதிகாரி ஒருவர் சமீபத்திய படை குவிப்பு பற்றி நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு பிபிசியிடம் பேசுகையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் கொள்ளையர்கள் மற்றும் ஆயுதமேந்தியவர்களின் கருணையில் நாங்கள் காஸாவை விட்டுவிட முடியாது. எங்களின் ஆயுதங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான சட்டப்பூர்வமானவை. ஆக்கிரமிப்பு உள்ளவரை ஆயுதங்கள் எங்களிடம் இருக்கும்." எனத் தெரிவித்தார்.

காஸாவில் பாலத்தீன அதிகார சபைக்காக பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காஸா மீண்டுமொரு உள்நாட்டு சண்டையை நோக்கி நகர்வதாக அஞ்சுகிறேன் எனத் தெரிவித்தார்.

"ஹமாஸ் மாறவே இல்லை. தற்போதும் கூட ஆயுதமும் வன்முறையும் தான் அதன் இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழி என நம்புகிறது," என பிபிசியிடம் தெரிவித்தார்.

"காஸா ஆயுதங்களால் நிறைந்திருக்கிறது. போரின்போது திருடர்கள் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் குண்டுகளையும் ஹமாஸிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். அதில் சில குழுக்களுக்கு இஸ்ரேலிடமிருந்து கூட ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது."

"ஆயுதங்கள், கோபம், ஏமாற்றம், குழப்பம் மற்றும் பிளவுபட்ட மற்றும் நொந்து போயிருக்கும் மக்கள் திரள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த துடியாக இருக்கும் ஒரு இயக்கம் - உள்நாட்டு போருக்கான சிறந்த சூழல் இது தான்." எனத் தெரிவித்தார்.

காஸா, ஹமாஸ், பாலத்தீன், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுமா அல்லது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் காஸாவை மையமாக கொண்ட மனித உரிமைகள் வழக்கறிஞர் கலீல் அபு ஷம்மலா.

"தற்போது உள்நாட்டு சண்டைக்கான அனைத்து சூழல்களும் இருப்பதால் காஸா மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் அச்சத்தில் உள்ளனர்." எனத் தெரிவிக்கிறார் கலீல்.

தீவிர அழுத்தத்தின் காரணமாக தான் ஹமாஸ் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், "பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடுவது உட்பட எந்த வழியிலாவது தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கான அதன் தொடர் முயற்சிகள் ஒப்பந்தத்தை சீர்குலைத்து காஸா மக்களை மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2j21x99dko

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கு முழு பலஸ்தீனத்தையும் தாரை வார்க்காமல் ஹமாஸ் ஓயமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடனான போரின்போது இஸ்ரேலுக்கு உதவினார்கள் என்கிற காரணத்திற்காக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்த்தீனர்களை ஹமாஸ் கைதுசெய்திருக்கிறது. இவர்களுள் பலர் மக்கள் முன்பாக மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மேலும் இன்று ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமைப்பானது இஸ்ரேலினால் வளர்க்கப்பட்டு வரும் சமூக விரோத அமைப்பென்று ஹமாஸும், ஹமாஸிற்குச் சார்பான அல் ஜஸீரா போன்ற செய்தி அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன. இவற்றுள் உண்மை இருக்கலாம். விடுதலைக்காகப் போராடும் இனத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பின்னர் அவ்வினத்தின் போரிடும் வலுவை முற்றாக அழித்து, அடிமைப்படுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கைவந்த கலை. எமது சரித்திரமே அதற்குச் சாட்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ரஞ்சித் said:

இஸ்ரேலுடனான போரின்போது இஸ்ரேலுக்கு உதவினார்கள் என்கிற காரணத்திற்காக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்த்தீனர்களை ஹமாஸ் கைதுசெய்திருக்கிறது. இவர்களுள் பலர் மக்கள் முன்பாக மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மேலும் இன்று ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமைப்பானது இஸ்ரேலினால் வளர்க்கப்பட்டு வரும் சமூக விரோத அமைப்பென்று ஹமாஸும், ஹமாஸிற்குச் சார்பான அல் ஜஸீரா போன்ற செய்தி அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன. இவற்றுள் உண்மை இருக்கலாம். விடுதலைக்காகப் போராடும் இனத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பின்னர் அவ்வினத்தின் போரிடும் வலுவை முற்றாக அழித்து, அடிமைப்படுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கைவந்த கலை. எமது சரித்திரமே அதற்குச் சாட்சி.

நீங்கள் சொல்ல வந்த இரு செய்திகளும் நூறு வீதம் உண்மை என நான் நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் 27 பேர் பலி: இஸ்ரேல் படை வெளியேறிய பிறகு ஹமாசுடன் மோதும் ஆயுதக்குழு - என்ன நடக்கிறது?

காஸாவில் உள்நாட்டு மோதல்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, காஸாவில் ஹமாஸ் படைகளுக்கும் ஆயுதமேந்திய துக்முஷ் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கட்டுரை தகவல்

  • ரஷ்தி அபுஅலௌஃப்

  • காஸா செய்தியாளர் (இஸ்தான்புல்)

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸா நகரில் ஹமாஸ் பாதுகாப்புப் படைகளுக்கும் துக்முஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை முடிவுற்ற பிறகு நடந்த மோசமான மோதல்களில் ஒன்றாகும் இது.

"முகமூடி அணிந்த ஹமாஸ் படையினர் ஜோர்டானிய மருத்துவமனை அருகே துக்முஷ் போராளிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்து தடுத்து வைக்க கடுமையான சண்டையில் ஈடுபட்டனர் என்றார்.

"போராளிகளின் ஆயுதமேந்திய தாக்குதலில்" எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை சண்டை தொடங்கியதில் இருந்து 19 துக்முஷ் உறுப்பினர்கள் மற்றும் எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன?

காஸாவில் உள்நாட்டு மோதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காஸா தெருக்களில் ஹமாஸ் படையினர்

தெற்கு காஸா நகரில் உள்ள டெல் அல்-ஹவா சுற்றுப்புறத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களை கொண்ட ஹமாஸ் படை, துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருந்த குடியிருப்பு கட்டடத்தை தாக்க முன்னேறியதை அடுத்து மோதல்கள் வெடித்தன என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

"கடுமையான துப்பாக்கிச் சூட்டினால் பல டஜன் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்தனர்" என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் போரின் போது பல முறை இடம்பெயர்ந்தவர்கள்.

"இந்த முறை மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடவில்லை, அவர்கள் தங்கள் சொந்த மக்களிடமிருந்து ஓடிக் கொண்டிருந்தனர்" என்று அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் கூறினார்.

காஸாவின் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்றான துக்முஷ் குடும்பம் நீண்ட காலமாக ஹமாஸுடன் பதற்றமான உறவைக் கொண்டுள்ளது. அதன் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஹமாஸ் குழுவுடன் மோதியுள்ளனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகம், அதன் படைகள் காஸாவில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க முயன்று வருவதாக கூறியுள்ளது.

மோதலுக்கு என்ன காரணம்?

மோதல்களுக்கு யார் காரணம் என்பது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் தனது இரண்டு போராளிகளைக் கொன்றதாகவும், அதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், அதுவே மோதலை தூண்டியதாக கூறியுள்ளது.

எனினும் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் அல்-சப்ரா சுற்றுப்புறத்தில் தங்களது வீடுகள் அழிக்கப்பட்ட பின்னர் துக்முஷ் குடும்பம் ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தது. அது ஒரு காலத்தில் ஜோர்டானிய மருத்துவமனையாக செயல்பட்டது. அந்த கட்டடத்துக்குள் ஹமாஸ் நுழைந்ததாக துக்முஷ் குடும்பத்தின் வட்டாரம் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தனது படைகளுக்கு ஒரு புதிய தளத்தை நிறுவுவதற்காக அந்த கட்டடத்திலிருந்து துக்முஷ் குடும்பத்தை வெளியேற்ற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலிய துருப்புகளால் சமீபத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த காஸாவின் பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ஹமாஸ் தனது பாதுகாப்புப் படைகளின் சுமார் 7,000 உறுப்பினர்களை திரும்ப அழைத்துள்ளது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதமேந்திய ஹமாஸ் பிரிவுகள் ஏற்கனவே பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் காஸா காவல்துறையின் நீல நிற சீருடைகளில் உள்ளனர், சில சீருடைகள் அல்லாமல் பொதுமக்கள் போன்ற ஆடைகளை அணிந்துள்ளனர். ஹமாஸ் ஊடக அலுவலகம் "தெருக்களில் போராளிகளை" நிறுத்தியிருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz91weey8l0o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.