Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு மணிநேரத்தில் உள்ளே சென்று பதிவுசெய்து பொதிகளை பட்டியில் எறிந்துவிட்டு படலை பகுதிக்கு போய்விடலாம். அங்குபோய் மிச்சம் என்ன செய்வது? உண்ணும் பகுதி, கடைகளுக்கு வர திரும்ப நடக்க வேண்டும். விமானத்தில் ஏறும்வரை எத்தனை நெஸ் ரீதான் குடிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இருக்கவே இருக்கிறது

Airport Lounge.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2025 at 20:25, ஈழப்பிரியன் said:

இருக்கவே இருக்கிறது

Airport Lounge.

துரை, அதற்குள் சென்று வர அதிக செலவு ஆகுமே. சிறீ லங்கன் எயார்லைன்ஸ் வணிக வகுப்பு சீட்டு என்றால் உள்ளே போகலாம் என நினைக்கின்றேன். அது அல்லாதவர்கள் உள்ளே செல்லலாமா? பல விமான நிலையங்களில் கட்டணம் செலுத்தியும் உள்ளே செல்ல முடியாது. அதற்குரிய விமான நிறுவன பயணச்சீட்டு அல்லது பிரத்தியேக கிரடிட் மட்டை தேவைப்படும் என நினைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் உள்ளே சென்று பயன்படுத்திய அனுபவம் கிடைத்தால் கூறுங்கள் கேட்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

துரை, அதற்குள் சென்று வர அதிக செலவு ஆகுமே. சிறீ லங்கன் எயார்லைன்ஸ் வணிக வகுப்பு சீட்டு என்றால் உள்ளே போகலாம் என நினைக்கின்றேன். அது அல்லாதவர்கள் உள்ளே செல்லலாமா? பல விமான நிலையங்களில் கட்டணம் செலுத்தியும் உள்ளே செல்ல முடியாது. அதற்குரிய விமான நிறுவன பயணச்சீட்டு அல்லது பிரத்தியேக கிரடிட் மட்டை தேவைப்படும் என நினைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் உள்ளே சென்று பயன்படுத்திய அனுபவம் கிடைத்தால் கூறுங்கள் கேட்போம்.

இதைப்பற்றி தனிதிரி திறந்து நிறைய பேசியுள்ளோமே.

இந்தமுறை போனபோதும் கட்டுநாயக்கா Lounge இல் போய் நேரத்தை போக்கினோம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப்பற்றி தனிதிரி திறந்து நிறைய பேசியுள்ளோமே.

இந்தமுறை போனபோதும் கட்டுநாயக்கா Lounge இல் போய் நேரத்தை போக்கினோம்.

பிளாஸ்ரிக் மட்டை பற்றிய உரையாடல் நினைவு உள்ளது. ஆனால், நீங்கள் விமான நிலையத்தின் பயணிகள் சொகுசு இளைப்பாறும் இடம் பற்றிய அனுபவத்தை கூறவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

பிளாஸ்ரிக் மட்டை பற்றிய உரையாடல் நினைவு உள்ளது. ஆனால், நீங்கள் விமான நிலையத்தின் பயணிகள் சொகுசு இளைப்பாறும் இடம் பற்றிய அனுபவத்தை கூறவில்லையே.

இலவசமாக குடிக்கலாம் சாப்பிடலாம் சிவனே என்று யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் உட்கார்ந்திருக்கலாம்.

பழவகைகள் கேக் பிஸ்கட் சாப்பிடலாம்.

கொண்டும் போகலாம்.

சுத்தமான மலசல கூடம்.

கூடவே இருவரை அழைத்து போகலாம்.எல்லா கடனட்டைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது என்று எண்ணுகிறேன்.

கடனட்டைக்கு கட்டும் பணத்தை எப்படி எல்லாம் மீண்டும் வசூலிக்கலாம் என்று கடனட்டை எடுக்கும் போதே கணக்கு பண்ண வேண்டும்.

அடிக்கடி உலகம் சுற்றுபவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கொண்டும் போகலாம்.

இவ்வளவு நாளும் ஒழிச்சிருந்த பூனைக்குட்டி வெளியில வந்துட்டுதடோய்.....எப்ப பார்த்தாலும் இடம் வலம் நேர காலமில்லாமல் கட்டிக்கொண்டுபோற ஊத்தைப்பழக்கம்..😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

1 hour ago, குமாரசாமி said:

இவ்வளவு நாளும் ஒழிச்சிருந்த பூனைக்குட்டி வெளியில வந்துட்டுதடோய்.....எப்ப பார்த்தாலும் இடம் வலம் நேர காலமில்லாமல் கட்டிக்கொண்டுபோற ஊத்தைப்பழக்கம்..😂

ஒறிஜினல் தமிழர்கள் என்றால்... பார்சல் கட்டிக் கொண்டு போவது நோர்மல்தானே. animiertes-geburtstag-smilies-bild-0003.😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இலவசமாக குடிக்கலாம் சாப்பிடலாம் சிவனே என்று யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் உட்கார்ந்திருக்கலாம்.

பழவகைகள் கேக் பிஸ்கட் சாப்பிடலாம்.

கொண்டும் போகலாம்.

சுத்தமான மலசல கூடம்.

கூடவே இருவரை அழைத்து போகலாம்.எல்லா கடனட்டைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது என்று எண்ணுகிறேன்.

கடனட்டைக்கு கட்டும் பணத்தை எப்படி எல்லாம் மீண்டும் வசூலிக்கலாம் என்று கடனட்டை எடுக்கும் போதே கணக்கு பண்ண வேண்டும்.

அடிக்கடி உலகம் சுற்றுபவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

நான் இதில் என்னளவில் முரண்படுகிறேன்.

இது பிழையோ தெரியவில்லை. ஆனால் எனது சூழ்நிலைக்கு இவை சரி வருவதில்லை.

எடுப்பதே கடன் - அதில் ஒரு மாதத்துள் மீள செலுத்தாவிடின் அறாவட்டி அதுவும் அமேரிக்கன் எக்பிரஸ்சின் வட்டி சொல்லி மாளாது.

இதற்குள் அவர்களுக்கு மாத சந்தா வேறு கட்ட வேண்டுமா?

அத்தோடு நான் டி டோட்லர் - அங்கே இருக்கும் இலவச தண்ணியை குடிக்க முடியாது.

சிறுவயது முதலே டயபடிக்ஸ், இனிப்பு உணவுகள் தொட முடியாது.

அங்கே சாப்பாடு நல்லதுதான். ஆனால் அந்த விலையில் விட குறைந்த விலையில் நல்ல ரெஸ்டூரடன் ஒன்றில் buffett யில் போய் பத்தோடு பதினொன்றாக சாப்பிடாமல் நாமே lay carte யாக தேவையான உணவுகளை ஓடர் பண்ணி சாப்பிடலாம்.

இஸ்தான்புல், பாங்கொல்கில் மசாஜ் போகலாம். கிட்டதட்ட அதே பணம்தான்.

எப்படியும் 4 மணத்தியால வெயிட்டிங்கில் கடைசி 1 மணத்தியாலம் போர்டிங் கேட்டில் தொங்க வேண்டும். 1 மணத்தியாலம் bag drop, immigration. 2 மணத்கியாலத்தை மிக வடிவாக உணவகத்தில் செலவழிக்கலாம்.

ஏர்போர்டில் airside இல் இருக்கும் டாய்லெட்டுகளும் அவ்வளவு மோசம் இல்லை.

நான் ஏர்மைல்ஸ் ஐ பயன்படுத்தி, சலுகையாக என சிலதரம் பாவித்துள்ளேன் (கொழும்பில் அல்ல) ஆனால் இவை overhyped என்பதே என் கருத்து.

3 மணி நேர டிரான்சிட்டுக்கு மேல் எடுப்பதில்லை. அப்படி எண்டால் குறைந்தது 22 , 18 மணி நேரம் எடுத்தால் வெளியே போய் ஊரை ஒரு சுத்து சுத்தி வரலாம்.

அதுவும் மத்திய கிழக்கு என்றால் ஏர்போர்ர்ட்டில் பெடியள் நிப்பாங்கள் கூட்டி போக🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

பர்ஸ்ட் கிளாஸ் லவுஞ்சில் தங்கியதில்லை - அவை சிறப்பாக இருக்க கூடும்.

மும்பையில் கப்சியூஸ் என ஒரு தூங்கும் பெட்டி எடுத்தேன். ஒரு வசதி மிக்க சற்றே விசாலமாம சவப்பெட்டி🤣.

அதை விட கதிரையில் உக்காந்து பராக்கு பார்ப்பது நல்லம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

துரை @ஈழப்பிரியன்

இளைப்பாறும் சொகுசு நிலையத்தில் கையை, காலை நீட்டி ஆறுதலாக சரியலாம். சொகுசு இருக்கை வசதி பொது இடத்தில் இல்லை. டுபாயில் கொஞ்சம் பரவாயில்லை. கீத்திரோவில் ஆஸ்பத்திரி இருக்கைகள் உள்ளன. கீத்திரோவில் காத்து நிற்கும்போது விமானத்தின் ஏறப்போகின்றோமா அல்லது வைத்தியரை பார்க்கப்போகின்றோமா என ஒரு பிரமை ஏற்படும்.

கீத்திரோ சொகுசு நிலையத்தில் காணப்பட்ட குளிக்கும் வசதியை கோவிட் பெருந்தொற்று காலத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

விமானத்திலும் உணவு கிடைக்கின்றது. ஏன் வயிற்றை இனிப்பு, கொழுப்பு பண்டங்களால் நிரப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

நாங்கள் முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண் ஐயா…

சொகுசு…பவிசு…

எது எண்டாலும் முதலில் அவிசு படைக்க வேண்டும்😂.

சட்டதில் இடமில்லை இல்லாவிட்டால் பாய் போட்டிருப்போம்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/10/2025 at 13:23, தமிழ் சிறி said:

ஒறிஜினல் தமிழர்கள் என்றால்... பார்சல் கட்டிக் கொண்டு போவது நோர்மல்தானே. animiertes-geburtstag-smilies-bild-0003.😂

நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்.....? 😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்.....? 😎

அந்த அமெரிக்கர், கூச்ச சுபாவம் உடையவர். அவர் சொல்ல மாட்டார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஒறிஜினல் தமிழர்கள் என்றால்... பார்சல் கட்டிக் கொண்டு போவது நோர்மல்தானே. animiertes-geburtstag-smilies-bild-0003.😂

நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்...

யோவ் பெரிசு

கலியாணவீடு சாமத்தியவீடுகளில் பெட்டி பெட்டியாக அமுக்கியதை எல்லாம் சொல்லவா?படங்களைப் போடவா?

கண்ணாடி வீட்டுக்காரன் கல்லெறியக் கூடாது கண்டியளோ!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு

கலியாணவீடு சாமத்தியவீடுகளில் பெட்டி பெட்டியாக அமுக்கியதை எல்லாம் சொல்லவா?படங்களைப் போடவா?

கண்ணாடி வீட்டுக்காரன் கல்லெறியக் கூடாது கண்டியளோ!

ஒருவர் கட்டிக் கொடுத்தவர், மற்றையவர் கட்டி எடுத்துப் போனவர் 😂.

நீங்கள் ஒரு டசின் கிட்கட்டை பொக்கெட்டுக்குள்ள போட்டதை பெரிசு படுத்தினம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2025 at 07:32, goshan_che said:

நான் இதில் என்னளவில் முரண்படுகிறேன்.

இது பிழையோ தெரியவில்லை. ஆனால் எனது சூழ்நிலைக்கு இவை சரி வருவதில்லை.

எடுப்பதே கடன் - அதில் ஒரு மாதத்துள் மீள செலுத்தாவிடின் அறாவட்டி அதுவும் அமேரிக்கன் எக்பிரஸ்சின் வட்டி சொல்லி மாளாது.

தற்போதைய சூழ்நிலையில் யாருமே பணத்தைக் கொடுத்து ரிக்கட் வாங்குவார்களா தெரியவில்லை.

எப்படியும் கடனட்டையை பாவித்து வாங்கவே செய்கிறோம்.

எனவே அந்த கடனட்டை பாவிப்பதில் பிரச்சனை இருப்பதாக தோன்றவில்லை.

இது முக்கியமா இடைத்தங்கலில் கொஞ்சம் வசதியாக இருந்துவிட்டு போகலாம்.

21 hours ago, நியாயம் said:

விமானத்திலும் உணவு கிடைக்கின்றது. ஏன் வயிற்றை இனிப்பு, கொழுப்பு பண்டங்களால் நிரப்ப வேண்டும்.

உங்களை யாரும் கட்டாயப்படுத்தி எதையும் தரப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நீங்கள் ஒரு டசின் கிட்கட்டை பொக்கெட்டுக்குள்ள போட்டதை பெரிசு படுத்தினம்

ஏற்கனவே தேநீருக்கே சீனி போடுவதில்லை .ஒரு போதும் இனிப்பு சாமான்களை தொட்டும் பார்ப்பதில்லை.

முதுகில் போடும் பையில் இடமிருந்தால் அப்பிள் தோடம்பழம் ஒன்றிரண்டு எடுத்துப் போடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தற்போதைய சூழ்நிலையில் யாருமே பணத்தைக் கொடுத்து ரிக்கட் வாங்குவார்களா தெரியவில்லை.

எப்படியும் கடனட்டையை பாவித்து வாங்கவே செய்கிறோம்.

எனவே அந்த கடனட்டை பாவிப்பதில் பிரச்சனை இருப்பதாக தோன்றவில்லை.

இது முக்கியமா இடைத்தங்கலில் கொஞ்சம் வசதியாக இருந்துவிட்டு போகலாம்.

நானும் டிக்கெட் வாங்க கடனட்டையைத்தான் பாவிப்பேன்.

விமான டிக்கெட்டுகளை IATA அதிகாரமுள்ள ஏஜெண்டிடம் வாங்கினும் கடன் அட்டை தரும் section75 உத்தரவாதம் ஒரு மேலதிக பாதுகாப்பு. 30-50 நாள் வட்டி இல்லை. Avios போன்ற புள்ளிகளை சேர்த்து கொள்ளலாம். இப்படி அனுகூலங்கள் பல.

ஆகவே ஏர் டிக்கெட் மட்டும் அல்ல, சாண்ட்விச் வாங்குவது, டயருக்கு காத்தடிப்பது ஈறாக கடன் அட்டையில்தான்.

ஆனால் இலவச கடன் அட்டைகள் மட்டும்தான். வாழ்நாளில் மாத சந்தா கடன் அட்டைக்கு கட்டியதே இல்லை.

அதேபோல் அடுத்த தவணைக்குள் முழுவதுமாக (0%வட்டியில்) கட்டி முடிக்க பார்ப்பேன். சில சமயம் அது அடுத்த மாதம், 3ம் மாதம் என தள்ளி போகும் (எதிர்பாரா செலவுகள் தொடர்ந்து வரும் போது).

ஆனால் வட்டி கட்டும் ஒவ்வொரு மாதமும் வங்கியுடனான போட்டியில் தோற்று விட்டேன் என மனம் அல்லல்படும்😂.

ஆனால் ஒரு போதும் ஹொலிடே கடன் அட்டையை நம்பி போவதில்லை என்பது கல்லில் எழுத்து.

போய் வந்து அடுத்த தவணைக்குள் கட்ட வேண்டிய தொகை வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே ஹொலிடே.

இல்லை எண்டால் ஐரோப்பாவுக்குள் போய் வரலாம். அதுவும் இல்லை எண்டால் யூகேயில் பார்க்க எவ்வளவோ இருக்கு. அதுவும் இல்லை எண்டால் - டிவியில் போகும் ஹொலிடே நிகழ்சிகளை பார்த்து இன்புறலாம் 😂.

ஆனால் வட அமெரிக்கா வாழிகளானா உங்களின் அலுப்பும் புரிகிறது. டிரான்சிட்டிலேயே பாதி வாழ்க்கை போய்விடும். உங்களுக்கு ஏர்போர்ட் லவுஞ்சுகள் சொகுசு என்பதை மேவி தேவை என்ற எல்லைக்குள் வரும் என நினைக்கிறேன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே தேநீருக்கே சீனி போடுவதில்லை .ஒரு போதும் இனிப்பு சாமான்களை தொட்டும் பார்ப்பதில்லை.

முதுகில் போடும் பையில் இடமிருந்தால் அப்பிள் தோடம்பழம் ஒன்றிரண்டு எடுத்துப் போடுவேன்.

சும்மா பகிடியண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

நீங்கள் உட்பட யாழில் எழுதும் பலர் கடன் அட்டையை நான் மேலே சொன்னபடி responsible ஆக பாவிப்போர்தான் என்பது அவரவர் எழுத்துக்களிலேயே தெரிகிறது.

ஆனால் யாழுக்கு வெளியே இறாலுக்கு ஆசைபட்டு சுறாவை இழந்த எமது மக்கள் அதிகம்.

குறிப்பாக அடுத்த சந்ததி…கொஞ்சம் பயமாகவே உள்ளது😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தற்போதைய சூழ்நிலையில் யாருமே பணத்தைக் கொடுத்து ரிக்கட் வாங்குவார்களா தெரியவில்லை.

எப்படியும் கடனட்டையை பாவித்து வாங்கவே செய்கிறோம்.

எனவே அந்த கடனட்டை பாவிப்பதில் பிரச்சனை இருப்பதாக தோன்றவில்லை.

இது முக்கியமா இடைத்தங்கலில் கொஞ்சம் வசதியாக இருந்துவிட்டு போகலாம்.

உங்களை யாரும் கட்டாயப்படுத்தி எதையும் தரப் போவதில்லை.

துரை, அவ்வப்போது வேறு சில இடங்களில் இந்த இளைப்பாறும் இடங்களிற்கு சென்றுள்ளேன். சலட், கறுப்பு கோப்பி எடுப்பது, போன் சார்ஜ் செய்வது, இளைப்பாறுவது அவ்வளவு தான். மனதை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் இனிப்பு, உரைப்பு, கொழுப்பு எனவும் சென்றுவிடும். அங்கு வருவோர் உணவை விரயம் செய்வதை பார்க்க கோபம் ஏற்படும். நான் தட்டில் போடுவது அனைத்தும் வயிற்றுக்குள் செல்லும். எதையும் விரயம் செய்வதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

முதுகில் போடும் பையில் இடமிருந்தால் அப்பிள் தோடம்பழம் ஒன்றிரண்டு எடுத்துப் போடுவேன்.

ஆள்! பச்சைக் கள்ளன் ஐயா பச்சைக் கள்ளன்.....😎

இடமிருந்தால் தோடம்பழம் அப்பிள் போன்றவற்றை முதுகில் தொங்கும் பையில் லாவகமாக தூக்கி அமுக்குவேன் என்பதை எவ்வளவு நாகரீகமாக சொல்கிறார் பாருங்கள்?

முதுகு பையிலை தான் கிலோக்கணக்கிலை களவாய் கொண்டு போகலாம் எண்டது வேறை விசயம் கண்டியளோ....😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

துரை, அவ்வப்போது வேறு சில இடங்களில் இந்த இளைப்பாறும் இடங்களிற்கு சென்றுள்ளேன். சலட், கறுப்பு கோப்பி எடுப்பது, போன் சார்ஜ் செய்வது, இளைப்பாறுவது அவ்வளவு தான். மனதை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் இனிப்பு, உரைப்பு, கொழுப்பு எனவும் சென்றுவிடும். அங்கு வருவோர் உணவை விரயம் செய்வதை பார்க்க கோபம் ஏற்படும். நான் தட்டில் போடுவது அனைத்தும் வயிற்றுக்குள் செல்லும். எதையும் விரயம் செய்வதில்லை.

ஓஓஓஓஓஓஓ நீங்க எல்லாம் அனுபவித்துக் கொண்டே தெரியாத மாதிரி நுhல் விட்டிருக்கிறீகளே?

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2025 at 21:51, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓஓஓ நீங்க எல்லாம் அனுபவித்துக் கொண்டே தெரியாத மாதிரி நுhல் விட்டிருக்கிறீகளே?

அப்படி இல்லை துரை. இலங்கையில் அந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பு ஏற்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உள்ளே சென்று பார்க்க ஆவல்.

செரண்டிப் எனும் சஞ்சிகைதானே இலங்கை தேசிய பயணிகள் விமான நிறுவனத்தினுடையது. படிக்கும் காலத்தில் அதை உரை போடுவதற்கு பயன்படுத்துவோம். அப்போது எயார் லங்கா எனும் பெயர். முன்பும் சஞ்சிகையின் பெயர் செரண்டிப் என்றே நினைவு உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.