Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னறம்

--------------

large.ElderlyWomen.jpg

நீங்கள் எல்லோரும் நலமா,

ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது.

இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார்.

எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார்.

மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை.

சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும்.

நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை.

நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே.   

நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இன்னமும் இந்த நிலை வராவிட்டாலும் அடுத்து எங்கே போய் இருப்பது?யாருடன் இருப்பது?

எது சாத்தியம்?

இப்படி பலவற்றைப் பற்றி பேசத் தூண்டுகிறது.

எமது வயதுக்காரர் காலமானாலே இப்படியான எண்ணங்கள் கூடுதலாகவே வந்து போகின்றன.

சிறுகதை சிந்திக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்ல நினைவுள்ளது, முதல் முதலாக நான் கண்ணாடி அணிந்து வேலைக்கு போன போது சக பணியாளர் உதட்டில் புன்முறுவலை மறைத்தபடி "எப்படி இருக்கிறது புதிய கண்ணாடி" என கேட்டார், நான் இவருக்கு என்மேல் என்ன நகைசுவை தெரிகிறது என சிந்தித்தபடியே "யன்னலினூடாக உலகை பார்ப்பது போல இருக்கிறது" என கூறினேன்.

உங்கள் கதைகளினூடாக நீங்கள் உலகை பார்க்கும் விதத்தில் உங்களை நாங்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.🤣

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகமே தன்னறம் இல்லாமல்தான் ஆகிக்கொண்டிருக்கின்றது. சுயநலம் கூடிக்கொண்டே போகின்றது. உங்கள் கதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.

எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியே வாழ்க்கையும் முடிஞ்சுடுமோ என்றும் யோசினையாக் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் புதுமை ஒன்றும் இல்லை , முன்பே இருந்தது தான் .

முன்பு முதுமக்கள் தாழி என்று சொல்லிக் கொண்டார்கள் .

இப்போது சொல்வதை இன்னமும் ஐம்பது, நூறு வருடம் கழித்து வேறு மாதிரி தான் சொல்லுவார்கள் .

அழியா மை இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யோசிக்க வைக்குது..அவ்வளவுதான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

எமக்கு இன்னமும் இந்த நிலை வராவிட்டாலும் அடுத்து எங்கே போய் இருப்பது?யாருடன் இருப்பது?

எது சாத்தியம்?

இப்படி பலவற்றைப் பற்றி பேசத் தூண்டுகிறது.

எமது வயதுக்காரர் காலமானாலே இப்படியான எண்ணங்கள் கூடுதலாகவே வந்து போகின்றன.

சிறுகதை சிந்திக்க வைக்கிறது.

👍..............

இப்படியான இரண்டு இக்கட்டான நிலைகளை சமீபத்தில் பார்த்த பின்னரே இப்படி ஒன்றை எழுத வேண்டும் என்று நினைத்தேன், அண்ணா............. சரி பிழைகளையும் தாண்டி மனம் அலைமோதிக் கொண்டேயிருக்கின்றது...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

உங்கள் கதைகளினூடாக நீங்கள் உலகை பார்க்கும் விதத்தில் உங்களை நாங்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.🤣

🤣.................

மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செம்பாட்டான் said:

இந்த உலகமே தன்னறம் இல்லாமல்தான் ஆகிக்கொண்டிருக்கின்றது. சுயநலம் கூடிக்கொண்டே போகின்றது. உங்கள் கதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.

எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியே வாழ்க்கையும் முடிஞ்சுடுமோ என்றும் யோசினையாக் கிடக்கு.

தன்னறம் அல்லது சுதர்மம் என்றால் என்னவென்ற ஒரு விளக்கத்தை சமீபத்தில் வாசித்திருந்தேன். அதற்கு முன்னரே இந்தக் குறுங்கதையில் வரும் நிகழ்வுகள் போல இரு நிகழ்வுகள் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து, அவை மனதில் ஒரு பாரமாக இருந்தன. இப்பவும் இருக்கின்றன. எவர் மீதும் ஒரேயடியாக குற்றம் சுமத்தாமல், மிகவும் இடைவெளிகள் விட்டு, மேலோட்டமாக எழுதி இருக்கின்றேன்..................🙏.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

இதில் புதுமை ஒன்றும் இல்லை , முன்பே இருந்தது தான் .

முன்பு முதுமக்கள் தாழி என்று சொல்லிக் கொண்டார்கள் .

இப்போது சொல்வதை இன்னமும் ஐம்பது, நூறு வருடம் கழித்து வேறு மாதிரி தான் சொல்லுவார்கள் .

அழியா மை இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

மிக்க நன்றி, சாமானியன்.

'அழியா மை................' நல்லதொரு தலைப்பு எந்த விதமான ஆக்கத்திற்கும்..............❤️.

முதுமக்கள் தாழி என்றால் ஈமத்தாழி தானே.......... முன்னைய நாட்களில் இறந்தோரை அடக்கம் செய்ய பயன்படுத்தினார்களே, அவற்றையா சொல்லுகின்றீர்கள்...................

'கலம் செய் கோவே!...............' என்று ஒரு சங்கப்பாடல் இருக்கின்றது. ஒரு அருமையான பாடல்............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

யோசிக்க வைக்குது..அவ்வளவுதான்...

👍................

நன்றி அல்வாயன். உண்மையில் நடந்த இரண்டு விடயங்களில் பலவற்றை, தனிப்பட்ட விடயங்களை, தவிர்த்து விட்டு பொதுவாக எழுத முயன்றிருக்கின்றேன்...................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

தன்னறம் அல்லது சுதர்மம் என்றால் என்னவென்ற ஒரு விளக்கத்தை சமீபத்தில் வாசித்திருந்தேன். அதற்கு முன்னரே இந்தக் குறுங்கதையில் வரும் நிகழ்வுகள் போல இரு நிகழ்வுகள் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து, அவை மனதில் ஒரு பாரமாக இருந்தன. இப்பவும் இருக்கின்றன. எவர் மீதும் ஒரேயடியாக குற்றம் சுமத்தாமல், மிகவும் இடைவெளிகள் விட்டு, மேலோட்டமாக எழுதி இருக்கின்றேன்..................🙏.

புரிகிறது. மேலோட்டமாகத்தான் சொல்ல முடியும். ஆனால் அழுத்தமாகச் சொன்னால் சரிதானே. உங்கள் எழுத்து அழுத்தமாகவே உள்ளது.

இன்று ஒரு நிகழ்வு பார்த்தேன். விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் போட்டி. தாய்க்கான பாடல்கள். ஒரு பையனை எடுத்த வளர்க்கும் பெற்றோர். மிக உருக்கமாகவே இருந்தது. எப்பெடியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். எனக்கு உடனே மனதில தோன்றியது உங்களின் இந்த "தன்னறம்"

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2025 at 02:22, ரசோதரன் said:

🤣.................

மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.

நீங்கள் ஒரு அடிப்படையில் நல்ல மனிதராக இருப்பீர்கள் எனும் புரிதல் உங்கள் கதைகளை வாசிக்கும் போது உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2025 at 02:44, ரசோதரன் said:

மிக்க நன்றி, சாமானியன்.

'அழியா மை................' நல்லதொரு தலைப்பு எந்த விதமான ஆக்கத்திற்கும்..............❤️.

முதுமக்கள் தாழி என்றால் ஈமத்தாழி தானே.......... முன்னைய நாட்களில் இறந்தோரை அடக்கம் செய்ய பயன்படுத்தினார்களே, அவற்றையா சொல்லுகின்றீர்கள்...................

'கலம் செய் கோவே!...............' என்று ஒரு சங்கப்பாடல் இருக்கின்றது. ஒரு அருமையான பாடல்............................

Copilot

“முதுமக்கள் தாழி” என்பது பழந்தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சவ அடக்கம் செய்யும் முறை. இதன் விளக்கம்:

அர்த்தம்

  • “முதுமக்கள்” = மூதாதையர் அல்லது வயது முதிர்ந்தோர்

  • “தாழி” = பெரிய பானை அல்லது கலம்
    அதாவது, முதுமக்கள் தாழி என்பது மூதாதையர்களின் உடலை (அல்லது எலும்புகளை) வைத்து புதைக்கும் பெரிய மண் பானை. [ta.wikipedia.org], [nadi.lk]


பழமையான நடைமுறை

  • இறந்தவர்களின் உடலை நேரடியாக மண்ணில் புதைக்காமல், பெரிய மண் பானையில் வைத்து புதைத்தனர்.

  • சில சமயங்களில் மிக வயது முதிர்ந்து இயங்க முடியாதவர்களை உயிரோடு அமரவைத்து புதைத்தனர் என்ற கருத்தும் உள்ளது.

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக முன்னதாகவே போய்விடுவார்கள். அவர்கள் போகும்வரை மனைவி துணை நிற்பாள். பெண்கள்தான் தனித்துப் போவார்கள். ஆனாலும் நீங்கள் குறிப்பிடுவது போல் ‘மனம்’தான் காரணம். எதையும் ஏற்றுக் கொள்வதும், இன்னும் வாழ்க்கை இருக்கின்றது என்பதும்தான் சிறந்தது.

இந்த விடயத்தில் உங்களைப் போலவே கண்ணதாசனும் கோழியைத்தான் உதாரணம் காட்டுகின்றார்.

“பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை

கட்டி வைத்தவன் யாரடா..

அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்

சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்

வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா..”

  • கருத்துக்கள உறவுகள்

"தன்னறம் " நல்ல தலைப்பு + நல்ல அனுபவமான கதை . .......!

வீதியில் நேராய் ஓடும் ஒரு பெரிய தேரை ஒரு சிறிய மரக்கட்டை தடம்மாற்றி திருப்பி விடுதல் போல் வாழ்க்கையும் சிறு சிறு நிகழ்வுகளால் தடம்மாறிப் போய் விடுகின்றது .......!

முதுமை வரும்போது மனம் உற்சாகமாய் இருந்தாலும் உடல் அதிகம் ஓய்வை தேடுவதால் மனமும் தானாகவே அமைதியாகி விடுகின்றது . .....!

சமீபத்தில் சில நிகழ்வுகள் வீடியோவில் பார்த்தேன் . ......!

உசைன்போல்ட் ..... ஓட்டத்தில் பல சாதனைகள் செய்த மனிதர் . ....... இப்போது வாசல்படி ஏறவே சிரமப்படுகிறார் .....கொஞ்சம் கூடுதலாக ஓடி விட்டார் போல......!

முகமதலி (கசியஸ்கிலே) எவ்வளவோ போட்டிகளில் எதிரிகளைப் பந்தாடியவர் ....... இப்போது பக்கத்தில் இருவர் அவர் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு வர நடந்து வருகிறார் . ........ கொஞ்சம் கூடுதலாக குத்து வாங்கியிருக்கிறார் போல .......!

சில யதார்த்தங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வாழ்க்கையை கடந்து போகணும் . ......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.