Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-138.jpg?resize=750%2C375&ssl

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

ஸ்ரீலங்கா பொதுஜனர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்ற விதம், அவரது சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரியில் இணைவது தொடர்பான தகவல்கள் பல வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.

அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்ட பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புலனாய்வு ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் சட்ட பட்ட சான்றிதழை , முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்துக்கு பட்டப்பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். 

அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும்.   

சிடி யுனிவர்சிடி ஒப் லன்டண் நிறுவனம் 2009.10.15 ஆம் திகதி  தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25 ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார்.

 விண்ணப்பித்த திகதியன்றே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. 

எனவே, நாடளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை  வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://athavannews.com/2025/1453262

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் ராஜபக்ஷ பட்டச் சான்றிதழ் தொடர்பில் சந்தேகங்கள்; உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தல்

19 Nov, 2025 | 02:32 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ  சிடி  யுனிவர்சிட்டி ஒப் லண்டன்  நிறுவனத்தில்  பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று  சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை  வெளிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை  (19) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்  பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும்  தொழில்   அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின்  சட்ட பட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்ட பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புலனாய்வு  ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ  சிடி  யுனிவர்சிடி ஒப் லண்டன்

நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும்  சட்ட பட்ட சான்றிதழை , முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்துக்கு  பட்டப்பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ  சிடி  யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று  சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற  பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும்.   சிடி  யுனிவர்சிடி ஒப் லன்டண் நிறுவனம்  2009.10.15 ஆம்  திகதி  தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ  சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25 ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார்.விண்ணப்பித்த திகதியன்றே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஆகவே இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை  வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/230803

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

585824525_1296742845801904_4230251121956

585898749_1296742922468563_8949150837026

586050840_1296742972468558_7317409433466

நாமல், போலியாக எடுத்த பட்டத்திற்கு.... கறுப்பு கோட்டு வாங்கி,

அப்பாவிடமும், அம்மாவிடமும் ஆசிர்வாதமும், முத்தமும்

வாங்கியதெல்லாம் வீணாய் போய் விட்டதா. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

586443949_1454085606722382_2078644446380

585056157_1454085546722388_9903601074166

587396226_1454085506722392_3019234492368

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா?

On 19/11/2025 at 19:32, ஏராளன் said:

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற  பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும். 

இதுவரை காலமும் நாமலின் போட்டி பரீட்சை பிந்தைய பரீட்சைகள் சகலதையிம் ஜீ எல் பீரிஸ் எழுதி கொடுத்ததாக அல்லவா சொல்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா?

நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள்.

ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂

லக்ஸ்மன் நாமல் ராஜபக்ச… ஒறிஜினலா, டூப்ளிகேட்டா என்று தெரிந்து விடும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள்.

ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂

அஸ்கு, புஸ்கு…😂

விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂

தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம்.

பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம்.

லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அஸ்கு, புஸ்கு…😂

விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂

தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம்.

பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம்.

லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.

எனக்கும்… ஶ்ரீலங்காவுக்கு “கொலிடே” போற ஐடியா இருக்கு. 😂

எதற்கும் @satan ஐ கேட்டுப் பார்ப்போம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள்.

ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂

லக்ஸ்மன் நாமல் ராஜபக்ச… ஒறிஜினலா, டூப்ளிகேட்டா என்று தெரிந்து விடும். 🤣

நாமலை மட்டுமல்ல...சஜீத்தின் ...சேர்டிபிக்கட்டையும் செக் பண்ணவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

நாமலை மட்டுமல்ல...சஜீத்தின் ...சேர்டிபிக்கட்டையும் செக் பண்ணவேணும்.

சஜீத்…. மழைக்குக் கூட, பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத ஆள் போலை இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

எனக்கும்… ஶ்ரீலங்காவுக்கு “கொலிடே” போற ஐடியா இருக்கு. 😂

எதற்கும் @satan ஐ கேட்டுப் பார்ப்போம். 🤣

சாத்தானுக்கு இப்போ அட்டமத்தில சனியனாம். நீங்கள் பயப்படாமல் விசாரித்து பெறுபேற்றை கையோடேயே கொண்டுவாருங்கள். அனுரா தாராளமாக வாங்கிப்பார்ப்பார். அவர் அறியாத விடயமா நாடுமுழுவதும் பேசப்படுகிறது. ஆனால் நாமலோ அவர் சார்ந்தவர்களோ மறுப்புத்தெரிவிக்கவில்லை. அப்போ, விஷயம் உண்மைதான். அந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் உள்நாட்டிலேயே படிக்காமல், யாரோ இவருக்காக பரீட்சை எழுத, இது தாஜுதீனை போட்டுத்தள்ள ஓடித்திரிந்ததும், பாதாள போதைப்பொருள் கடத்தற்காரரிடம் கப்பம் பெற்று சொத்து சேர்த்ததும் தான் செய்த வேலை. ஒரு சட்டத்தரணிக்கு இப்படியான வேலைகள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியாதா? அதெல்லாம் தெரியாத இவர், தன்பெயரில் உள்ள சொத்து எனக்காட்டி விட்டு பின், அது மனைவியின் சொத்து என்கிறார். மனைவியின் சொத்து என்றால் ஏன் தன் பெயரில் காட்டினார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா?

2 hours ago, satan said:

சாத்தானுக்கு இப்போ அட்டமத்தில சனியனாம். நீங்கள் பயப்படாமல் விசாரித்து பெறுபேற்றை கையோடேயே கொண்டு வாருங்கள்.

583068316_1160707792939494_8964004840469

நாமல்.... இந்தப் பதட்டம் தான், உங்களின் பொய்களை, வெளிக் கொணர வைக்கிறது,
நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விரிவான விசாரணையில் இருந்து இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இருந்து புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன,
அவை நாமல் ராஜபக்ச வெறுமனே சட்டக் கல்லூரியில் சேர்க்கைக்குத் தகுதி பெறவில்லை என்பதைக் குறிக்கின்றன.
@ExaminerLK மூலம் நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விசாரணையின்படி, நாமல் ராஜபக்சவின் சட்டக் கல்வி தொடர்பான பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

🔍 வெளிவந்த முக்கிய தகவல்கள்:

1.
அங்கீகரிக்கப்படாத பட்டம்.
நாமல் ராஜபக்சவின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில்,
அவரது பல்கலைக் கழகமான "சிட்டி யுனிவர்சிட்டி" சட்டக் கல்லூரியால் அங்கீகரிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் கிடைத்த தகவலின்படி, சட்டக் கல்லூரி "சிட்டி யுனிவர்சிட்டி" பட்டப் படிப்பை அங்கீகரித்தது 2009 அக்டோபர் 15 முதல் தான், இது ராஜபக்ச பதிவு செய்ததிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு ஆகும்.
2.
முழுமையற்ற விண்ணப்பம்.
சட்டப்பட்டப் படிப்பு வழியாக சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க, முழுமையான மதிப்பெண் பட்டியல் (டிரான்ஸ்கிரிப்ட்) மற்றும் பட்ட சான்றிதழ் (டிகிரி சர்ட்டிபிகேட்) ஆகிய இரண்டும் தேவை. ஆனால்,
சட்டக் கல்லூரியிடம் நாமல் ராஜபக்சவின் பட்ட சான்றிதழ் எப்போதும் கிடைத்ததில்லை, மதிப்பெண் பட்டியல் மட்டுமே கிடைத்துள்ளது.

2025 அக்டோபர் 3 ஆம் தேதி, நாமல் ராஜபக்ஷின் விண்ணப்பம் தொடர்பாக விடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளித்த சட்டக் கல்லூரி,
ராஜபக்சவின் கோப்பில் எந்தவொரு பட்ட சான்றிதழும் இல்லை என உறுதிப்படுத்தியது. அதற்கு பதிலாக, சட்டக் கல்லூரியிடம் 2009 இல் சிட்டி யுனிவர்சிட்டியால் ராஜபக்சக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மட்டுமே உள்ளது.

அக்கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருப்பது: “நீங்கள் பாடநெறியின் அனைத்து தேவைகளையும் மதிப்பீட்டு வாரியத்தில் நிறைவேற்றியுள்ளதால், பட்டம் in Law, Class Three
(சட்டத்தில் இளங்கலைப் பட்டம், மூன்றாம் வகுப்பு) வழங்கப்படுகிறது என தெரிவித்து மகிழ்கிறேன்.”

1.
ஒரு அசாதாரணமான பட்ட சான்றிதழ்.
நாமல் ராஜபக்ச இலங்கை சட்டக் கல்லூரியில் படித்த சான்றிதழை சமர்ப்பிக்காத போதிலும், அவர் அதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (Master’s) விண்ணப்பத்திற்கு சமர்ப்பித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்த சான்றிதழில், ராஜபக்சக்கு சிட்டி யுனிவர்சிட்டியில் இருந்து "சட்டத்தில் கௌரவம் மற்றும் மூன்றாம் வகுப்பு (Honours in Law Class Three)" பட்டம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ட சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் முரண்பாடு உள்ளது.
•அது 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது.
•ஆனால், கில்லீஸ் அவர்கள் அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.


இது தொடர்பாக கில்லீஸை கேட்டபோது அவர் கூறியதாவது:
“நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பிறகு எனது கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட எந்த சான்றிதழையும் பற்றி நான் அறியேன்.” அந்த நேரத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் கில்லீஸ் அல்ல, பேராசிரியர் ஜூலியஸ் வெய்ன்பெர்க் (Prof. Julius Weinberg) என்பதையும் சிட்டி யுனிவர்சிட்டி உறுதிப்படுத்தியது.
(வலைத்தளச் செய்தி)

Moorththy Dinu

################## ######################

சில பின்னுட்டங்கள்:
Sinniah Selladurai
கள்ளச் சான்றிதழ் ; கள்ள ஒப்பம்...?
அடக் கேவலங் கெட்டவனே!
நீயெல்லாம் ஒரு கட்சித் தலைவர்...?
ஏன்டா!அவனவன் காறித் துப்புறான்.
அசிங்கமா ; வெக்கமா இல்லையா?

#########

Reborn Visu Ranjith Guna
லண்டனில் பட்டம் வாங்குவது கடையில் பொத்து வாங்குவது போல🤪

#########

Abdul Gaffoor Shihaabdeen
இலங்கைல அதுவும் நாம பொறந்த மண்ணுல எடமில்லாம லண்டனுக்கு போயிருக்காரு சாரு பட்டம் உட. உடாங்கணக்குட

##########

Nm Kisho Kizzo
அதானே இங்கதான் கேனபயலுக என்றாலும் லண்டன்காரன் அறிவாளிதானே .. அவன் கொடுப்பானா சம்மா பட்டம்.. மாத்தி யோசிங்க மக்கா...

################

Moorththy Dinu

Nm Kisho Kizzo மாதங்களை வேற மாத்தி இருக்கிறார்கள்.

############

Senthurselvan Thuseeththa
Ithu London kku theriyuma🤭

##########

Thambu Ramanathan
இந்தச்சட்டத்தரணி எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.

################

Krishna Kri

அங்க பணம் குடுத்தாலே பட்டம் குடுத்திடுவான்கள்

Moorththy Dinu

Krishna Kri இதில வேடிக்கை என்னெண்டா 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. ஆனால், கில்லீஸ் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிச்சான் சாத்தான். இதைவிட விரிவாக யாராலும் விசாரித்தறிய முடியாது. அதுதானே. "கூரை மீதேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்." தன்ர நாட்டில படிச்சு பட்டம் பெற முடியாதவரெல்லாம், வெளிநாட்டில படிச்சு பட்டம் பெற்று நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள். இந்தக்குடும்பத்தால நாடே நாறுது. இதுக்குள்ள பிக்குகள் காவடி தூக்குதுகள் இவர்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

586450559_4170119693229994_1867576568803

அண்ணே.... டிகிரியில, என் பெயர் அடிக்கணும்ணே... 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.