Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

Dec 4, 2025 - 06:15 PM

‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட்  நன்கொடை

‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. 

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டிற்காக தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும், தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmirfi8vo02dzo29n31trnb01

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை.

Published By: Vishnu

04 Dec, 2025 | 07:10 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, வியாழக்கிழமை (04)  Royal Electronics மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிதி நன்கொடைகளை வழங்கின.

அதன்படி, Royal Electronics நிறுவனத்தின் தலைவர் பெட்ரிக் பெர்னாண்டோ, 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலை மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிறுவனத்தின் இணைத் தலைவர் ஜீவக விஜேசிங்க, பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் (ஓய்வு) ஆனந்த ரொட்ரிகோ ஆகியோர் 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர்.

WhatsApp_Image_2025-12-04_at_18.05.51_0f

WhatsApp_Image_2025-12-04_at_18.05.52_ff

https://www.virakesari.lk/article/232463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை

04 Dec, 2025 | 03:54 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது.

ஹச்ஸன் ஆசியா டெலிகொம் ஹொங்கொங் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏன் சென் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் இலங்கைப் பிரதான நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இதற்கான காசோலையை இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கி வைத்தனர்.

பின்னர், ஹட்ச் நிறுவன அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் குறுஞ்செய்தி வழங்குதல், நடமாடும் சார்ஜிங் நிலையங்களை நிறுவவும், தகவல் தொடர்பு கோபுரங்களை அவசரமாக சீர்செய்யவும் விமானப் பொறியியலாளர்களை பணியமர்த்தியவும் HUTCH நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், ஹட்ச் (பதில் பிரதான நிதி அதிகாரி) ஷகில விஜேசிங்க, ஹட்ச் சந்தைப்படுத்தல் தொடர்பு முகாமையாளர் திலானி பொன்சேகா, ஹட்ச் இன் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திசர நிபுன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-12-04_at_15.41.35.jp

WhatsApp_Image_2025-12-04_at_15.41.36.jp

WhatsApp_Image_2025-12-04_at_15.41.36__1

WhatsApp_Image_2025-12-04_at_15.41.37.jp

https://www.virakesari.lk/article/232445

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rebuilding SriLanka' நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி!

Dec 5, 2025 - 06:55 AM

Rebuilding SriLanka' நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி!

'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். 

இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் ஊடாக இதுவரை 30,470க்கும் மேற்பட்ட வைப்புக்கள் (transaction) இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பிலிடக்கூடிய கணக்குகள் ஊடாக இந்த நிதியத்திற்கு சுமார் 61 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

33 நாடுகளிலிருந்து உரிய கணக்குகளுக்கு இந்தப் பணம் கிடைத்துள்ளது. 

அதற்கமைய, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக சூரியப்பெரும மேலும் தெரிவித்தார். 

கடந்த 02 திகதி வரையில் 19,000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmis6nid202eco29n1xu82t3u

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி

Dec 8, 2025 - 11:32 PMபண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. 

இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். 

இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmixglft002jfo29n5mf85vaa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC நிதி உதவி

Published By: Vishnu

10 Dec, 2025 | 08:21 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC  30 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.

நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணவர்தனவினால் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் புதன்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

Ceylinco Holdings PLC   பிரதி நிறைவேற்றுத் தலைவர் ஆர். ரங்கநாதன் மற்றும் பணிப்பாளர்/ பிரதான செயற்பாட்டு அதிகாரி பெட்ரிக் அல்விஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/233015

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு  Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd  என்பன 10 மில்லியன் ரூபா நன்கொடை 

Published By: Vishnu 10 Dec, 2025 | 08:29 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நாளாந்தம்  நன்கொடைகள் கிடைத்து வருகிறது.

அதன்படி, புதன்கிழமை (10) Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd  என்பன  தலா 05 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியதோடு அதற்கான காசோலைகள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில்,  Navesta Pharmaceuticals (Pvt) Ltd  சார்பாக  சஞ்சய ஜயரத்ன மற்றும் வைத்தியர் ஜனக விக்ரமசிங்க ஆகியோரும் மற்றும் Citihealth Imports (Pvt) Ltd சார்பாக  கபில சமரவிக்ரம மற்றும் இந்திக திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/233017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மறுகட்டுமான திட்டத்திற்கு EFCITA வழங்கிய ரூ. 20 மில்லியன் நன்கொடை

11 Dec, 2025 | 11:14 AM

image

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு புறக்கோட்டை அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினால் (EFCITA) இன்று 20 மில்லியன் ரூபா பணத்தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நன்கொடை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முன்னிலையில் நிதியமைச்சின் பிரதியமைச்சர் (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் EFCITA வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்ரமணியம், பொருளாளர் ஹரிஹரன் மற்றும் முன்னாள் தலைவர் நிஹால் செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தனிபட்ட செயலாளர் வசந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/233046

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka   நிதி நன்கொடை

Published By: Vishnu

11 Dec, 2025 | 07:37 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.

குறித்த காசோலையை, அதன் தலைவர் Abdul Razzle Abdul Sattar வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

அந்த சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Mohamed Abdul Hussain, Mohamed Ismail Dawood ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/233121

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு மில்லியன் வழங்கி வைத்தார் கலாநிதி ஜனகன்

Published By: Vishnu

11 Dec, 2025 | 07:41 PM

image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ டி எம் எம் சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் அவர்களினால் இரண்டு மில்லியன் ரூபாய் காசோலை கலாநிதி ஜனகன் அவர்களின் தாயார் தனியார் GIT கற்கை  நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரூபி விநாயகமூர்த்தி அவர்கள் கௌரவ பிரதமர் அவர்களிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/233122

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு  3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

Published By: Vishnu

11 Dec, 2025 | 08:51 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து  3.6 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

WhatsApp_Image_2025-12-11_at_19.50.38.jp

இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, வியாழக்கிழமை (11) குறித்த காசோலையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.

WhatsApp_Image_2025-12-11_at_19.50.37.jp

கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான கொரிய தூதுவர் Lee Miyon, சுவிட்சர்லாந்து தூதுவர் Dr. Siri Walt,, பலஸ்தீன தூதுவர் Ihab I.M. Khalil, மாலைதீவு உயர் ஸ்தானிகர் Masood Imad,, ஓமான் தூதரகத்தின் பணிக்குழாம் பிரதானி Said Al Harbi, இத்தாலிய தூதரக பிரதித் தலைவர் Alberto Arcidiacono  ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-12-11_at_19.50.39.jp

https://www.virakesari.lk/article/233124

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

Published By: Vishnu

11 Dec, 2025 | 08:57 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு People's Leasing & Finance PLC இனால் 7.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும்,People’s Insurance PLC இனால் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.

WhatsApp_Image_2025-12-11_at_19.51.27.jp

குறித்த காசோலைகளை People's Leasing & Finance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க மற்றும் People’s Insurance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜீவனீ காரியவசம் ஆகியோரினால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

People's Leasing & Finance PLC இன் தலைவர் பேராசிரியர் அஜந்த குமார சமரகோனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/233125

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile (Pvt) Ltd நிதி நன்கொடை

Published By: Vishnu

11 Dec, 2025 | 08:58 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

குறித்த காசோலையை Thilakawardena Textile (Pvt) Ltd இன் தலைவர் சுனில் திலகவர்தன, வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி  நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

Thilakawardena Textile (Pvt) Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ரவிந்து திலகவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/233126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited நிதி நன்கொடை

12 Dec, 2025 | 06:17 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited (CWIT)இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

குறித்த காசோலையை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் Satyanjal Pandey மற்றும் Colombo West International Terminal (Private) Limited இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Munish Kanwar ஆகியோரினால் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார். 

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, இந்திய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவின் பிரதானி Devika Lal, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கிருஷான் பாலேந்திர,Colombo West International Terminal  இன் Zafir Hashim மற்றும் Anandhan Nagaysayanu Raj ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/233202

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd நிதி நன்கொடை!

13 Dec, 2025 | 10:22 AM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

குறித்த காசோலையை Almas Holdings (Pvt) Ltd இன் தலைவர் இம்தியாஸ் புஹார்தீன்(Imtiaz Buhardeen) நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

கண்டி மாவட்டத்தில் வெள்ள நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு தொடர்ந்தம் ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாக தலைவர் இம்தியாஸ் புஹார்தீன் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தார்.

Almas Equities Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷமீர் புஹார்தீன், பணிப்பாளர்களான ரிஸ்வி அப்துல் மஜீத் (Risvi Abdul Majeed)‍, ருஸ்லி ஷம்சுதீன்(Ruzly Shamsudeen), Almas Equities Pvt Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி இபாத் மரிக்கார்  (Ifadh Marikar) மற்றும் Almas Holdings Pvt Ltd ஆலோசகர் (மூலோபாய அபிவிருத்தி) தக்சில ஹுலங்கமுவ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-12-13_at_10.12.15.jp

WhatsApp_Image_2025-12-13_at_10.12.13.jp

WhatsApp_Image_2025-12-13_at_10.12.10.jp

WhatsApp_Image_2025-12-13_at_10.12.10__1

https://www.virakesari.lk/article/233245

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்தே இவளவு நிதி உதவி என்பது ஒரு பெரிய விடையம்.இதிலிருந்து தெரிவது என்னவென்டால் உழுகிற மாடு எங்கிருந்தாலும் உழும் என்பதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.