Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

Published By: Vishnu

16 Dec, 2025 | 08:47 PM

image

(எம்.மனோசித்ரா)

வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒன்டன் செட்ரோன் - Ondansetron (வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து) என்ற மருந்தினைப் பயன்படுத்தியதால் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பாவனையால் உயிரிழப்பு ஏற்பட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இவ்வாறு சந்தேகிக்கப்படும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன.

37 மற்றும் 33 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 12ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் இந்த மருந்தை வழங்கிய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதன் பின்னர் குறித்த மருந்து முழுமையாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாட்டுக்கு விநியோகிக்கும் 11 பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் உள்ளனர். தேசிய ஒளடத கட்டுப்பாட்ட அதிகாரசபையில் ஆகக் கூடியது 15 விநியோகத்தர்கள் பதிவு செய்ய முடியும்.

இங்கு 11 விநியோகத்தர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 விநியோகத்தர்கள் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும், ஏனையோர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும் விநியோகிக்கின்றனர். எனினும் இவ்வனைத்து நிறுவனங்களும் யு.எஸ்.பி. (United States Pharmacopeia ) சான்றுக்கமையவே மருந்தினை விநியோகிக்கின்றனர். மாறாக இந்திய சான்றுக்கமைய அல்ல. அந்த வகையில் இந்த மருந்து குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/233578

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உபகண்டத்தில் தயாரிக்கப்டும் மருந்துகளை பாவித்தால்….

அல்ப ஆயுளில், போய் சேர வேண்டும் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்திய உபகண்டத்தில் தயாரிக்கப்டும் மருந்துகளை பாவித்தால்….

அல்ப ஆயுளில், போய் சேர வேண்டும் போலுள்ளது.

மருந்துகள் ஒருபுறம் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் தவறுகள் மறுபுறமாக மனிதநலவாழ்வுக்கான மருத்துவத்துறை நிச்சயமற்றதாகி வருகிறது. சில தினங்களின் முன் கிளிநொச்சியில் ஒரு உயிரிழப்பு. அது தாதியரின் தவறால் என்று உரையாடல் இடம்பெற்றதாக இறந்தவரது உறவுகள் ஊடாக அறிந்தேன். எல்லாம் பணமயமாகிவிட்டது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வௌியான தகவல்

Dec 19, 2025 - 04:20 PM

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வௌியான தகவல்

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது. 

இன்று (19) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன. 

குறித்த தடுப்பூசியை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பில், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு உள்ள பொறுப்பிலிருந்து அவர்கள் எவ்விதத்திலும் தப்பித்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ விநியோகப் பிரிவின் இணையத்தளத் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மாத்திரம் தரக் குறைபாடுகள் பரிசோதனை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 90 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். 

'ஒன்டன்செட்ரோன்' மருந்திற்குள் பக்டீரியா காணப்பட்டமையே அண்மைய சம்பவமாகும். 

மேலும், குறித்த நிறுவனத்தின் மேலும் 9 மருந்துகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும் என வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmjcr02tk02x6o29nte2l40g3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய மருந்தை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுங்கள் - மான் பார்மாசூட்டிகல்ஸ் கோரிக்கை

21 Dec, 2025 | 11:09 AM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள “ஒன்டன் செட்ரான்”மருந்து தயாரிப்பு  நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) , சர்ச்சைக்குரிய குறித்த மருந்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் (International accredited laboratory) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த நிறுவனம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA), அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவு (MSD) ஆகியவற்றுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

சர்வதேச ரீதியிலான இந்தப் பரிசோதனைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தியுள்ளார்.

பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான், மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வகையான ஊசி மருந்துகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233982

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/12/2025 at 08:50, தமிழ் சிறி said:

இந்திய உபகண்டத்தில் தயாரிக்கப்டும் மருந்துகளை பாவித்தால்….

அல்ப ஆயுளில், போய் சேர வேண்டும் போலுள்ளது.

மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து விவகாரம் : விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழு நியமனம் எவரேனும் குற்றமழைத்திருந்தால் கடும் சட்ட நடவடிக்கை - அரசாங்கம்

Published By: Vishnu

24 Dec, 2025 | 03:53 AM

image

(எம்.மனோசித்ரா)

ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கமைய இந்த விவகாரத்தில் எவரேனும் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த இரு பெண்களும் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மரணம் ஏற்படக் கூடியளவுக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தான் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர்கள் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த மரணங்கள் தொடர்பில் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவை இடம்பெற்றிருக்கக் கூடாத மரணங்கள் ஆகும். அந்த அடிப்படையில் இவை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்தினால் தான் குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வெ வ்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆராய்வதற்காக விசேட வைத்திய நிபுணர் தேதுரு டயஸ் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் இரு வாரங்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய இந்த மருந்தில் பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் தேசிய முகவர் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி இவ்வாறு மருந்துகளை பாவிப்பதால் ஒவ்வாமை ஏற்படும் போது அவற்றை பாவனையிலிருந்து நீக்குவதில் ஏதேனும் கால தாமதம் ஏற்படுகின்றதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.

டிசம்பர் 12ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கண்டி வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய இந்த மருந்தை பாவனையிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமைய செயற்படாமை தொடர்பில் ஏதேனும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயத்தில் ஏதேனும் குற்றமிழைக்கப்பட்டிருந்தால், அதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் எந்த தளர்வுகளும் இல்லை. இதனைக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முயற்சிப்பவர்களுக்கு அதற்கு இடமளிப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை என்றார். 

https://www.virakesari.lk/article/234262

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2025 at 01:05, குமாரசாமி said:

மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡

உண்மை, மருத்துவர் ஒரு நிறுவன மருந்தை எழுத, மருந்தகர் வேறொரு நிறுவன மருந்தைத் தருகிறார். கேட்டால் ஆ.ஓ.கAOK வைக் கேட்கச் சொல்கிறார்கள். மனிதத் தவறுகள் மருத்துவத்துறையில் நிகழ்வதானது உயிரோடு விளையாடுவதாகும். இன்றும் ஒருதகவலை அறிந்தேன். ஒரு இளம் மாணவிக்கான எலும்பு முறிவுச் சத்திர சிகிச்சையின்போது தவறு நடைபெற்றுள்ளது. ஆணிகளைக் கழற்றி எடுத்துவிட்டு மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் கூறியுள்ளார்கள். யேர்மனியில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மருத்துவத்துறையையும் பாதித்துவருகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

Edited by nochchi
திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உண்மை, மருத்துவர் ஒரு நிறுவன மருந்தை எழுத, மருந்தகர் வேறொரு நிறுவன மருந்தைத் தருகிறார். கேட்டால் ஆ.ஓ.கAOK வைக் கேட்கச் சொல்கிறார்கள். மனிதத் தவறுகள் மருத்துவத்துறையில் நிகழ்வதானது உயிரோடு விளையாடுவதாகும். இன்றும் ஒருதகவலை அறிந்தேன். ஒரு இளம் மாணவிக்கான எலும்பு முறிவுச் சத்திர சிகிச்சையின்போது தவறு நடைபெற்றுள்ளது. ஆணிகளைக் கழற்றி எடுத்துவிட்டு மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் கூறியுள்ளார்கள். யேர்மனியில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மருத்துவத்துறையையும் பாதித்துவருகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

இங்கும் என்பு முறிவுக்குள்ளான மாணவி ஒருவர் ஓராண்டாக 2/3 தடவை சத்திரசிகிச்சை செய்தும் குணமடையாத நிலையில் மருத்துவரை மாற்றி மீள ஆணிகளைக் கழட்டி பொருந்த வைப்பதாக கூறியுள்ளார்கள். பழைய சிகிச்சையின் போது என்பு பொருந்தும் இடம் நெருக்கமாக இல்லையாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.