Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான்

புதுடில்லி :

"குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் பற்றிய சர்வேயில் தெரியவந்த தகவல்கள்:

* செக்ஸ் உறவு வைப்பதன் மூலம், கரு உருவாகி விடு மோ என்று கணவர்களை விட, மனைவிகள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர்.

* செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி கிடைக்காது என்று கணவன் நினைப்பதால், காண்டம் பயன்படுத்த விரும்புவதில்லை.

* ஆனால், கருவுறும் நிலை ஏற்படுமோ என்று பயந்து, கருத்தடை மாத்திரை, சாதனத்தை பயன்படுத்துகின்றனர் மனைவியர்.

* "நாங்கள் ஆண்கள்; குடும்பக் கட்டுப் பாடு செய்துகொள்ள முடியாது; இது பெண்களின் "பிசினஸ்' அவர்கள் தான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்' என்று, 32 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.

* "தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், செக்ஸ் வைத்தாலும் கருவுற முடியாது" என்று, பாதி ஆண்கள் நம்புகின்றனர்.

* குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விஷயங்களை தெரிந்து கொண்டு, செக்ஸ் வைப்பதாக, 61 சதவீத ஆண்களும், 49 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.

* ஒரு குழந்தைக்கும் இன் னொரு குழந்தைக்கும் போதிய கால இடைவெளி இருக்க வேண்டும் என்பது தொடர் பான விழிப்புணர்வு, நகர தம்பதியரிடம் தான் உள்ளது. கிராமங்களில் இன்னும் பலருக்கு தெரியவில்லை.

* நகரத்தில் உள்ள 15 49 வயதுள்ள 74 சதவீத பெண்களுக்கு, கருத்தடை விஷயங்கள் முழுமையாக தெரிந்துள்ளது. கிராமங்களில் 54 சதவீதம் பேருக்கு தான் தெரிந்துள்ளது.

*சர்வே எடுத்த 29 மாநிலங்களில், 26ல், பெண்கள் தான் கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்ற மனப் பான்மை வளர்ந்துள்ளது; பெண்கள் ஆபரேஷன் செய்யும் நடைமுறையும் காணப்படுகிறது.

* நகரங்களில் உள்ள பெண்கள், சராசரியாக அதிகபட்சம் இரண்டு குழந் தைகள் பெறுகின்றனர்; கிராமங்களில் இந்த எண்ணிக்கை மூன்றாக உள்ளது.

http://www.dinamalar.com/

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளிலும் பெண்கள் தான் அதிகம் கருத்தடை மாத்திரிகைகள் மற்றும் உபகரணங்களைப் பாவிக்கிறாங்க. காரணம் என்னான்னா.. கரு உருவாகிட்டா கருவை அழிக்கவும் அவங்க தான் அலையனும்.. கரு வளர்ந்திட்டாலும் அவங்களுக்குத்தானே பிரச்சனை. ஆண்களுக்கு என்ன வந்திச்சுது..! ஆண்கள் சிங்கங்களாச்சே.. பெண்கள் பன்றிகளாச்சே குட்டியைப் போட்டிட்டு இருக்க வேண்டியது தான்..! சும்மா தொன தொன என்று பேசாம ஆண்களை மகிழ்விக்கிற காரியத்தைப் பாருங்க.. இதுதான் ஆண்கள் பலரினதும் நிலை..!

கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவால் பெண்கள் படும் வேதனைகள் எல்லாம் ஆண்களுக்குப் புரியாதுங்க.. ! இந்த விசயத்தில என் சப்போட் பெண்களுக்குத்தான். அவங்களும் சீவராசிகள் தானே..! மனசு என்ற ஒன்று அவங்கட்ட இல்லை என்றாலும் உயிர் என்ற ஒன்றிருக்கில்ல..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளில் அதிக பெண்கள் கருகலைப்பும் செய்து கொள்கின்றார்களாம்...சிசுக்கள

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளில் அதிக பெண்கள் கருகலைப்பும் செய்து கொள்கின்றார்களாம்... சிசுக்களை கொலை செய்வதிலும் பெண்கள் முன்னிலை வகிக்கின்றன் என்கின்ற போது வெட்கக்கேடாக இருக்கின்றது...... :D:blink::huh::lol:

அதுதான் சொல்லிட்டனில்ல பெண்களிட்ட மனசு என்ற ஒன்றில்லை என்று. மனசிருந்தா கொலைச் செய்ய சொந்த சிசுவை கருவில அழிக்க மனசு வருமா..??! பெண்கள் உயிருள்ள பொருளா மட்டும் இருக்காங்க. மற்றும் படி அவங்கிட்ட மனசு என்ற ஒன்றிருந்து அதிலிருந்து எழும் மனித உணர்வுகள் செத்தே போச்சுது..! :wub:

அதுதான் சொல்லிட்டனில்ல பெண்களிட்ட மனசு என்ற ஒன்றில்லை என்று. மனசிருந்தா கொலைச் செய்ய சொந்த சிசுவை கருவில அழிக்க மனசு வருமா..??! பெண்கள் உயிருள்ள பொருளா மட்டும் இருக்காங்க. மற்றும் படி அவங்கிட்ட மனசு என்ற ஒன்றிருந்து அதிலிருந்து எழும் மனித உணர்வுகள் செத்தே போச்சுது..! :wub:

அந்தப்பிள்ளையை நன்றாக வளர்த்து ஆளாக்க முடியாது என்று உறுதியாக தெரிந்த பின்னரும் ஒரு தாய் அவ்வாறு முடிவு செய்வதில் தவறில்லை. பிறக்கும் போதும் வளர்க்கும் போதும் வலி அவளுக்கு மட்டும்தான் தெரியும். கருகட்டும் எல்லாப் பிள்ளைகளையும் பெறுவதானால் இன்றும் பல குடும்பங்களில் முன்னர் போல 10, 15 பிள்ளைகள் இருக்க வேண்டுமே. ஏன் உங்கள் குடும்பங்களில் அவ்வாறு சகோதரர்கள் உள்ளனரா? அடுக்கு மாடி வீடுகளில் 10 பிள்ளைகளுடன் குடும்பம் நடத்தமுடியுமா? கருக்கட்டுதல் தவறுதலாக நடைபெறும் ஒரு விடையம். இங்கு எத்தனை பேர் போக்குவரத்து விதிகளை மீறி தண்டம் கட்டாதவர்கள் இருக்கறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

**** சானக்கியா அப்பிடி வளர்க்க கஸ்டம்னா எதுக்கு குழந்தையை கருவில எடுப்பான் எத்தனையோ பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றனவே அதை கடைப்பிடிக்லாமே சற்றுநேரமே கிடைக்க கூடிய ஒரு சுகத்துக்காக ஒரு உயிரை கொள்ளுவதும் அதற்க்கு வளக்கிறது கஷ்டம் அப்பிடினு சாக்கு போக்கு சொல்லுதும் வன்மையாக கண்டிக்க தக்கது....

வளக்கிறது கஷ்டம்னா அண்ணா மேற்கத்தைய நாடகள் பல்வேறு சலுகைள செய்யிதே அதை பெற்றுக்கொள்ளிறது தானே...

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பிள்ளையை நன்றாக வளர்த்து ஆளாக்க முடியாது என்று உறுதியாக தெரிந்த பின்னரும் ஒரு தாய் அவ்வாறு முடிவு செய்வதில் தவறில்லை. பிறக்கும் போதும் வளர்க்கும் போதும் வலி அவளுக்கு மட்டும்தான் தெரியும். கருகட்டும் எல்லாப் பிள்ளைகளையும் பெறுவதானால் இன்றும் பல குடும்பங்களில் முன்னர் போல 10, 15 பிள்ளைகள் இருக்க வேண்டுமே. ஏன் உங்கள் குடும்பங்களில் அவ்வாறு சகோதரர்கள் உள்ளனரா? அடுக்கு மாடி வீடுகளில் 10 பிள்ளைகளுடன் குடும்பம் நடத்தமுடியுமா? கருக்கட்டுதல் தவறுதலாக நடைபெறும் ஒரு விடையம். இங்கு எத்தனை பேர் போக்குவரத்து விதிகளை மீறி தண்டம் கட்டாதவர்கள் இருக்கறீர்கள்?

போரில் மரணத்துக்காக கண்ணீர் வடிக்கிறோம்.. சிறுவர்களின் மனித உரிமைகள் பற்றி வாய் கிழியக் கத்திறம்.. பெண்களுக்கு எதிரா வன்முறை என்று கூவிறம்.. ஆனால் மனித உருவாக்கத்தின் அடிப்படையான கருவை அழிக்கிறதை ஆமோதிக்கிறம். என்ன அற்புதமான மனித சிந்தனையும் மனித உரிமைக் காப்பும்..!

கரு உருவாகாமல் தடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. வீதியில் வாகனம் செலுத்துவது போன்ற செய்றபாடல்ல கருக்கட்டல் செயற்பாடென்பது. இரண்டு வளர்ந்த மனிதர்கள் செய்யும் செயலது. சும்மா கண்ணும் கண்ணும் பார்க்க கருக்கட்டும் என்று இயற்கை அனுமதிச்சிருந்தா உங்கள் வாதப்படி கருக்கட்டல் என்பது அக்சிடண்ட் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இயற்கை கூட சில தயாரிப்புக்களின் ஊடுதான் கருக்கட்டலுக்கான சாத்தியத்தை மனிதர்கள் முன் வைத்திருக்கிறது. அந்தத் தயாரிப்புக்களில் மனிதன் ஈடுபடும் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முனையின் அவசியமற்ற கருக்கட்டல்களை தடுக்க முடியும். இதற்கான அறிவூட்டல் இப்போ எல்லோருக்கும் வழங்கப்பட்டே வருகிறது. அப்படி இருந்தும் கருக்கலைப்புகள் என்பது ஆண்டு தோறும் பெருகி வரும் விடயமாகிவிட்டது. இவை போர்க்களத்துக்கு அப்பால் பல சிவிலியன்களை கண்ணை மூடிக்கொண்டு சுட்டுக் கொல்வதற்கு நிகரானது என்பதை நாம் மறுதலிக்க முடியாது..!

தற்கொலைப்படைக்கு பயங்கரவாதம் என்று பெயர் சூட்டமுடியும் என்றால் கருக்கலைப்பை சட்ட ரீதியாவோ சட்ட விரோதமாவோ அனுமதிக்கும் அரசுகளும் பயங்கரவாத அரசுகள் தான். உடலெடுத்த உயிர் அழிக்கப்படும் போது பார்க்கப்படும் மனித உரிமைகள் உடலெடுக்காத முளையக் கரு அழிக்கப்படும் போது பார்க்கப்படுவதில்லை. முட்டை தனித்தும் விந்து தனித்தும் அவரவர் உடலில் அழிவது என்பது வேறு விடயம். ஆனால் இரண்டும் இணைந்து உருவான கருவை அழிப்பது என்பதும் ஒரு முழு மனிதனை அழிப்பது என்பதும் உயிரின் அடிப்படையில் ஒன்றுதான்..! :blink::wub:

UN Reports 45 Million Abortions Per Year Worldwide -

ஒரு வருடத்தில் கணக்கிடப்பட்டு கருக்கலைப்பு மூலம் கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 45 மில்லியன் (இது இப்ப பத்து வருடத்துக்கு முன்னால் இப்ப இது இன்னும் அதிகரிச்சிட்டுது). இலங்கையின் மொத்த சனத்தொகை சுமார் 19 மில்லியன்.

http://www.cwnews.com/news/viewstory.cfm?recnum=57

45 மில்லியனை சும்மா கொல்லுறீங்க.. 4 பேர் தாய்நாட்டுக்காக தற்கொலைப்படையாகி இறந்த உடன மனித உரிமைன்னு கண்ணீர் வடிக்கிறீங்க.. என்ன அர்ப்புதமான சிந்தனை..???! 45 மில்லியன் + 4க்காக கண்ணீர் வடியுங்கள் நிச்சயம் அதில் நியாயமிருக்கும்..! :D:huh:

Edited by nedukkalapoovan

ஐயோ, ஐயோ.....நானும் நினைச்சன் நீங்கள் ஏதோ முற்போக்கு சிந்தனையாளர் என்று!

காலை வைச்சது சேற்றிலை என்று தெரிந்தும், விடாமல் அடம்பிடிப்பதை பிற்போக்கு வாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

நீங்கள் ஏதோ உங்கடை விளக்கம்(?) மனக்கட்டுப்பாடு(?) உலகத்தில எல்லோருக்கும் இருக்கவேணும் என்ற எடுகோள் நடைமுறைக்கு ஒவ்வாதது. வாகனமோட்டுவதற்கு கூட பரீட்சையில் சித்தியடைய வேண்டும். கலவியில் ஈடுபடுவதற்கோ அல்லது திருமணம் புரிவதற்கு கூட எந்த மனக்கட்டுப்பாட்டு பரீட்சைகளும் இல்லை. நாட்கூலித் தொழிலாளர்கள், இரந்து பிழைப்பவர்கள், என்று எல்லோருமே மனிதர்கள்தான். அவர்களுக்கும் திரு. நெடுக்ஸ்சிற்கு இருக்கும் அறிவு வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்துனை அறிவீனமானது?

கருவாக இருக்கும் தன்னுணர்வு பெறாத மனிதனின் உரிமைக்காக போராடும் நெடுக்கு, அவ்வாறு பிறந்து வீதிச்சைகை விளக்குகளில் நின்று இரந்து வாழும் கோடானுகோடி சிறுவர்களுக்கு வழியை காண்பிக்க வேண்டும். அல்லது அவ்வாறு குழந்தைகளை வளர்க்க போராடி உயிர் மற்றும் மானம் துறந்த பெற்றோரின் இழப்புகளுக்கு தார்மீக உரிமை கோரவேண்டும். அல்லது அவர்கள் கஸ்டத்தில் பங்கெடுக்கவேண்டும்.

பிறக்காத குழந்தையின் உரிமைபற்றி பேசும் இவர்களுக்கு பிறந்த மனிதனின் உரிமையில் தலையிடும் உரிமையை வழங்கியது யார்?

ஆயிரம் மனிதர்கள் விந்துகளாகவும், முட்டைகளாகவும் இறப்பது பாவமில்லையாம், பிறந்த பின் துன்புற்றாலும் கவலை இல்லையாம், ஆனால் கருவாக இறக்க கூடாதாம்!

என்னே கருவபிமானம்!

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!

**** சானக்கியா அப்பிடி வளர்க்க கஸ்டம்னா எதுக்கு குழந்தையை கருவில எடுப்பான் எத்தனையோ பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றனவே அதை கடைப்பிடிக்லாமே சற்றுநேரமே கிடைக்க கூடிய ஒரு சுகத்துக்காக ஒரு உயிரை கொள்ளுவதும் அதற்க்கு வளக்கிறது கஷ்டம் அப்பிடினு சாக்கு போக்கு சொல்லுதும் வன்மையாக கண்டிக்க தக்கது....

வளக்கிறது கஷ்டம்னா அண்ணா மேற்கத்தைய நாடகள் பல்வேறு சலுகைள செய்யிதே அதை பெற்றுக்கொள்ளிறது தானே...

**** சுண்டு,

மேலே எழுதியதுதான் உமக்கும் பதில்!

அப்படியே எங்களை போன்ற கீழைத்தேய மக்கள் எல்லோருக்கும் வதிவிட அனுமதி பெற்றுத் தரலாமே!

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

என்னைப் பொறுத்தவரை கருக்கலைப்பை கருத்தடை முறையாக பாவிக்கும் அசமந்தப் போக்கை உருவாக்காது பார்த்துக் கொண்டால் போதும். அதற்கு தொடர்ச்சியான விழிப்பூட்டல்கள் தேவை. மற்றும்படி கருக்கலைப்பை தடை செய்வது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னங்க பெரியவிடயம்! மழைபெய்கிறதென்கிறது இயற்கையானதுதான். நாமதான் விரும்பினால் நனையலாம். இல்லையெனில் பக்குவமாக நல்ல ஒழுக்கில்லாத குடையாக எடுத்துக்கொண்டுபோய் உலாத்திட்டு வர வேண்டியதுதான்.

இல்ல! குடையும் கூடாது, நனையவும்கூடாது என்றால்.... ம்.ம்.. இப்ப நீங்க காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பிரயாணம் செய்யுறீங்க. கோட்டையில இறங்கினால் பிரச்சனையென்டு தெரியுதெல்ல, பேசாம நீர்கொழும்பில இறங்கி பக்கத்தில இருக்கிற தெமிலியை (இளனி) வாங்கிக் குடித்துக்கொண்டு நடந்து போயிடுங்களேன் பிரச்சினை சால்வ்ட். என்ன நா சொல்றது! :wub::D

என்னைப் பொறுத்தவரை கருக்கலைப்பை கருத்தடை முறையாக பாவிக்கும் அசமந்தப் போக்கை உருவாக்காது பார்த்துக் கொண்டால் போதும். அதற்கு தொடர்ச்சியான விழிப்பூட்டல்கள் தேவை. மற்றும்படி கருக்கலைப்பை தடை செய்வது தவறு.

இந்தத் தலையிடி நமக்கும் வந்தது. அந்த வலியை அனுபவித்தவன் நான். என்னடா இவனே இப்படியா என்று நீங்கள் என்னை கேவலமாக பார்த்தாலும் பரவாயில்லை, எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு உபயோகமாக இருக்கும்.

அது ஒரு நாள் எதிர்பாராமல் நடந்துவிட்டது. திகைத்துப்போன நான் மனைவியுடன் கலந்துபேசினேன். பொருளாதார நிலமை, மற்றும் ஏற்கனவே பிள்ளை வளர்ப்பில் பட்ட துன்பம், கொழும்பில் அகதி வாழ்க்கை என்று எல்லாவற்றையும் யோசித்து அதற்க்கு அவளை சம்மதிக்க வைத்தேன். மருத்துவரிடம் போனால், அவரோ கைவிரித்துவிட்டார் "என்ன என்னை கம்பி எண்ணச் சொல்கிறீர்களா?" என்றார். பின்னர் ஒரு மருந்து(Gynocide) எழுதிக் கொடுத்து சொன்னார் "தம்பி இது 90% வேலை செய்யாது, எதுக்கும் முயற்சி செய்து பாருங்கள்" என்றார். அந்த மருந்து கூட எல்லா மருந்தகங்களிலும் கிடைக்காது. அவர் சொன்ன இடத்திற்கு சென்று கேட்டபோது ஏதோ கெரோயின் வாங்கவந்தது மாதிரி எங்களை உபசரித்தார்கள். இரகசியமாக மருந்தை தந்து மருத்துவர் கூறியதிலும் அதிக பணம் (ரூபாய் 450/=) வாங்கினார். உடனடியாக இணையத்தில் சென்று அந்த மருந்தைப்பற்றி பார்த்தால், அது பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாம், மேலும் இதனை பல நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. பக்கவிளைவுகளை பற்றியும் பாவித்தவர்கள் கருத்துக்களங்களில் எழுதியிருந்தனர். வேறு வழியின்றி பாவிப்பது என்று முடிவெடுத்தோம். போட்ட அன்று தலையிடி, வயிற்றுளைவு இருந்தது, பின்னர் அமைதியாக ஒருவாரம் காத்திருந்தும் ஒரு மாறுதலையும் காணவில்லை.

இப்போது மீண்டும் பதட்டம் பலமடங்காகியது இனி முன்வைத்த காலை பின்வைக்க முடியாது, ஏனென்றால் இனிப்பிறக்கும் குழந்தை குறையுடன் பிறப்பது உறுதி. உறவினர் யாரிடமும் உதவி கேட்க வழியில்லை, என்ன நினைப்பார்களோ என்று வெட்கம்! நண்பனிடம் ஒருவனிடம் கேட்டபோது விடிவெள்ளியாய் அவன் கூறினான் "ஒரு இடம் இருக்கிறது முகவரி தருகிறேன் போய் பார்" என்று. உடனடியாக செயலில் இறங்கி அங்கு போனால் அது மருத்துவமனை போல இல்லாமல் எந்தவித முறையான அறிவித்தலும் இன்றி ஒரு மர்மமான இடமாக இருந்தது. ஒரு பெரிய வரவேற்பறையில் பல கதிரைகள் போடப்பட்டு, சோடிகளாக பலரும், தாயும் மகளும் போன்று சிலரும் என சுமார் 100 பேர் வரை அங்கே தலையை குனிந்தபடி இறுகி முகத்துடன் ஏதோ குற்றஉணர்வுடன் மயான அமைதியில் இருந்தனர். யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் அங்கிருந்த ஒருவரை அணுகி மருத்துவரை சந்திக்கலாமா என்று கேட்க அவர் கூறினார் "நானும் தெரியாமல்தான் ஒரு மணி நேரமாக இருக்கிறேன்" என்றார் சிங்களத்தில். ஏனையவர்களும் அப்படித்தான் போல் தெரிந்தது. இனம்புரியாத பயம் மற்றும் குற்ற உணர்வில் கூனிக் குறுகி இருவரும் கிடைத்த கதிரையில் அமர்ந்தோம், சுமார் 2 மணி நேரத்தின் பின் மருத்துவர் வந்து ஒவ்வொருவராக அழைத்தார். எங்கள் முறை வந்ததும் உள்ளே போனோம், நாங்கள் எப்படித் துவங்குவது என்று தயங்கும் போதே "ருபாய் 1000 தாருங்கள்" என்றார் ஏன் எதற்கு என்று கேட்காமல் எடுத்துக் கொடுத்தோம், உடனே ஸ்கான் பண்ணினார், சரியாக ஒன்றரை மாதம் இருக்குமா? என்று கேட்டார், நாங்கள் ஆம் என்றோம், சரி ரூபாய் 9,000 செலவாகும் என்றார். நாங்கள் வேறு வழியின்றி தலையை ஆட்டினோம், ஒரு துண்டில் தொகையை எழுதி ஒரு கிழமை கழித்து அதிகாலை வரும்படி கூறினார். உணவேதும் சாப்பிடாமல் காலை 5 மணியளவில் அங்கே சென்றோம் அங்கே எங்களுக்கு முன்னரே ஒரு 30 பேர் வரையில் நின்றனர். பின்னர் எந்த ரசீதும் இன்றி ஒரு பெண் வந்து பணத்தை வாங்கினாள், அப்போது தான் கவனித்தேன் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தொகை அறவிடப்பட்டது. பின்னர் எல்லாப் பெண்களையும் சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இன்னும் ஒருவர் ருபாய் 500 கேட்டார், ஏன் என்று தெரியாமல் கொடுத்தேன். பிறகு அங்கு நின்ற ஒருவர் கூறினார் போலிசுக்காம்.

என்ன நடக்குமோ என்று பயமாக இருந்தது. மனைவிக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டு சுமார் 3 மணி நேரம் வெளியில் காத்திருந்தேன். அப்போது ரூபாய் 20,000 செலுத்தியவரிடம் மெதுவாக கதை கொடுத்தேன். அவர் சொன்னார் மனைவிக்கு 4 மாதமாமாம்! 5 1/2 மாதம் ஆனால் நோயாளியை பாரம் எடுக்கமாட்டாரம் இந்த மருத்துவர். ஆனால் அவரோ என்னை விட ஏழை போல தெரிந்தார். சிலாபத்திலிருந்து இரண்டு பிள்ளைகளுடன் வந்திருந்தார். காரில் கூட சிலர் வந்திருந்தனர். 7 பேர் ஒன்றாக ஒரு வானில் வந்திருந்தனர். அவர்களுடன் வந்த சாரதி அந்த இடத்திற்கு மிகவும் பரீட்சியமானவர் போல தென்பட்டார். எல்லாவற்றிலும் அவருடன் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அவருடன் வந்தவர்கள் பதுளையிலிருந்து வந்திருந்தனர். அவர் ஒரு தரகராம். அங்கே ஒரு மருத்துவ காவு வண்டி ஒன்று நின்றது. ஏதாவது சிக்கல் என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவாம்.

அப்போது இருவர் சிங்களத்தில் கதைத்தது காதில் விழுந்தது, அரசாங்க மருத்துவமனையில் கூட இதனை சில விசேட சந்தர்ப்பங்களில் செய்வார்களாம். அதாவது பெண் பாலியல் வல்லுறவுக் குள்ளானதாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் பேரில், சுற்று வட்டாரத்திலேயே இந்த மருத்துவமனையில்தான் இது நீண்டகாலமாக நடைபெறுகிறதாம். காரணம் உயர் மட்டத்தினரின் அணைவாம். கருத்தடை சாதனங்கள் பொருத்துவதும் நடைபெறுமாம்.

எனது நிலையை நினைக்க எனக்கே வெறுப்பாக இருந்தது. ஏன் இப்படி என்று யோசித்தேன். ஏதற்காக இதை சட்டவிரோதம் என்கிறார்கள்? இப்படி தாங்கள் உழைப்பதற்காகவா? ஒரு வாறு சிக்கல் எதுவும் இன்றி சிகிச்சை முடிவடைந்தது. கனத்த இதயத்துடன் வீடு திரும்பும் போது மனைவி கூறினாள் இதைவிட பிரசவம் மேல் என்று!

கருக்கலைப்பு என்பதில் கருவைவிட கலைப்பவர்களுக்கே வலி அதிகம்! அதை புரிந்துகொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா தலைப்பைத் தொடங்கியதற்காக கண்ணீர் விட்டு அழுவது எனக்குக் கேட்கின்றது. வேற யாருக்காவது கேட்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்காக எழுதுவதற்கும் இலவச அறிவுரைகள் செய்வதற்கும் தாராளமாய் பலர் உள்ளனர்.. விரும்பினால் கருக்கட்டியதற்காகப் பெண்களையும் வசைபாடலாம்.. ஆனால் பிரச்சினை மிகவும் ஆழமானது என்பதைப் பலர் புரிந்துகொள்ளவதில்லை..

அமெரிக்காவில் உள்ள pro-life பிரச்சாரகர்களும், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், இந்திய உபகண்டத்தில் உள்ளவர்களும் கருத்தடையை எதிர்ப்பவர்கள்.. அதைப் போலவே கருத்தடையை ஆதரிக்கச் சமூக, பெருளாதாரக் காரணிகளைத் துணைகொண்டுள்ள நாடுகளும் உள்ளன. எனினும் கருத்தடையை ஆதரிக்கும் பிரச்சாரங்களை விட கருவுறாமல் இருக்க செய்யப்படும் பிரச்சாரங்களே அதிகம்.. பெண் கருவுறாமல் இருப்பது அதிகம் ஆணில்தான் தங்கியுள்ளது, குறிப்பாக இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆணுறையைப் பாவிக்க விரும்புவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, ஐயோ.....நானும் நினைச்சன் நீங்கள் ஏதோ முற்போக்கு சிந்தனையாளர் என்று!

காலை வைச்சது சேற்றிலை என்று தெரிந்தும், விடாமல் அடம்பிடிப்பதை பிற்போக்கு வாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

நீங்கள் ஏதோ உங்கடை விளக்கம்(?) மனக்கட்டுப்பாடு(?) உலகத்தில எல்லோருக்கும் இருக்கவேணும் என்ற எடுகோள் நடைமுறைக்கு ஒவ்வாதது. வாகனமோட்டுவதற்கு கூட பரீட்சையில் சித்தியடைய வேண்டும். கலவியில் ஈடுபடுவதற்கோ அல்லது திருமணம் புரிவதற்கு கூட எந்த மனக்கட்டுப்பாட்டு பரீட்சைகளும் இல்லை. நாட்கூலித் தொழிலாளர்கள், இரந்து பிழைப்பவர்கள், என்று எல்லோருமே மனிதர்கள்தான். அவர்களுக்கும் திரு. நெடுக்ஸ்சிற்கு இருக்கும் அறிவு வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்துனை அறிவீனமானது?

கருவாக இருக்கும் தன்னுணர்வு பெறாத மனிதனின் உரிமைக்காக போராடும் நெடுக்கு, அவ்வாறு பிறந்து வீதிச்சைகை விளக்குகளில் நின்று இரந்து வாழும் கோடானுகோடி சிறுவர்களுக்கு வழியை காண்பிக்க வேண்டும். அல்லது அவ்வாறு குழந்தைகளை வளர்க்க போராடி உயிர் மற்றும் மானம் துறந்த பெற்றோரின் இழப்புகளுக்கு தார்மீக உரிமை கோரவேண்டும். அல்லது அவர்கள் கஸ்டத்தில் பங்கெடுக்கவேண்டும்.

பிறக்காத குழந்தையின் உரிமைபற்றி பேசும் இவர்களுக்கு பிறந்த மனிதனின் உரிமையில் தலையிடும் உரிமையை வழங்கியது யார்?

ஆயிரம் மனிதர்கள் விந்துகளாகவும், முட்டைகளாகவும் இறப்பது பாவமில்லையாம், பிறந்த பின் துன்புற்றாலும் கவலை இல்லையாம், ஆனால் கருவாக இறக்க கூடாதாம்!

என்னே கருவபிமானம்!

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!

வாகனமோட்டுவதற்கு பயிற்சி அளிக்கினம்.. ஆனால்... திருமணம் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும்.. பயிற்சி அளிக்கினமோ..??! :)

தனிமனிதர்கள் தாங்க விடுற தப்புக்காக கருக்களை அழிப்பது எந்த வகையில் நியாயம். கருக்கட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் நியாயம். அதைவிடுத்து உருவான கருவை அழிப்பதை மனித உரிமை மீறலாகக் காண முடியாது என்ற வாதம் எந்த வகையிலும் மானுடம் சார்ந்து எழ முடியாது. அப்படி எழுமாயின் போர்க்களத்தில் மடியும் மனிதனுக்காகவும் நீங்கள் கன்ணீர் விட அருகதையை இழக்கிறீர்கள்..! கருவில் அழிஞ்சால் என்ன பிறந்து அழிஞ்சால் என்ன அழிவது என்னவோ மனித உயிர்தான்..! இதை விளங்கிக் கொள்ள முற்போக்குச் சிந்தனை அவசியமில்லை. சர்வ சாதாரண சிந்தனையே போதும் சாணக்கியன்..! :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.