Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

25 Dec 2025, 6:57 AM

5 simple health habits for people over 60 senior citizen care tips healthy aging

“வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்!

1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள்.

2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும்.

4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும்.

5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல!

முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்!

https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

யேர்மனியில் ஓய்வூதிய வயதெல்லையை 70ஆக்கினால் என்ன என்று அரச சிந்தனைக்குழாம் சிந்திப்பதாகத் தொழிலாளர்களிடையே உரையாடல் வந்துபோகிறது. இதிலே எப்படியாம் 60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது?

பிறந்த ஆண்டின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள்:

1957: 65 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள்.

1959: 66 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்.

1964: 67 ஆண்டுகள் (2031 இல் முழுமையடைகிறது) இந்தத் தரவுப்படி "70மேல் இளமையாக.. " என்றுதான் தலைப்பைப் போட வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

60 வயதுக்கு மேல் இளமையாக இருந்தால் பூட்டின் டொனால்ட் ரம் மெர்ஸ் போன்ற தலைவர்களுக்கு வேலை செய்பவர்களின் வயதை மேலும் கூட்டுவோம் என்ற தீய நோக்கம் வரும் அபாயமும் உள்ளது தான் 🙁

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் முதல் போடவேண்டும் என்பதை போல,

60 களில் ஆரோக்கிய்யம் இயன்ற அளவு அவரவர் கட்டுபாட்டில் இருக்க, ஆக குறைந்தது 50 வயதில் இருந்து தயார் படுத்த வேண்டும்.

விரும்பியதை கைவிடட வேண்டும் என்பது அல்ல, உணவில், அசைவில் .. போன்றவற்றில் வேண்டிய, அல்லது இயன்ற மாற்றங்கள் மாற்றங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கணவன், மனைவி எனக்கூறிக்கொள்வோர் தாங்கள் கணவன்- மனைவியாக வாழவேண்டும்.இது உளவியலை மேம்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளமை என்பதை விட சாகும் வரைக்கும் தேகாரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணித்தியாலமாவது உடம்பு அசையும் படி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

நவீன காலத்து எண்ணைகளும் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும்.

இது எனது சொந்த அனுபவம்.👆

310158-01.jpg schweineschmalz-3628.jpg

அதை விட ஜேர்மனியில் இன்றும் முக்கியமாக வயதானவர்களும் ஏனையவர்களும் பன்றி கொழுப்பை பாணில் பூசி சாப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே பன்றி கொழுப்பை உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிக்கலுமில்லை.ஒரு சிதம்பர ரகசியமும் இல்லை.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.