Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.

19.12.2025 பத்திரிகை வெளியீடு Deutsche Bundesbank DE

பல வருட சுருக்கத்திற்குப் பிறகு, பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும் என்று பன்டேஸ்பேங்க் எதிர்பார்க்கிறது.  2026 ஆம் ஆண்டில் ஜெர்மன் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றம் அடையும்: ஆரம்பத்தில் முன்னேற்றம் மந்தமாக இருந்தாலும், பின்னர் அது மெதுவாக அதிகரிக்கும் என்று  பன்டேஸ்பேங்க் தலைவர் ஜோச்சிம் நாகல், ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் புதிய முன்னறிவிப்பை முன்வைத்து கூறினார்.  2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கி, பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் வலுவடையும், இது முக்கியமாக அரசாங்க செலவினம் மற்றும் ஏற்றுமதிகளில் மீள் எழுச்சியால் இயக்கப்படும் என்று  அவர் விளக்கினார்.

அரசாங்க உத்தரவுகள் அதிகரிப்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும், விரிவாக்க செலவின நிலைப்பாடு அடுத்த ஆண்டு பிற்பகுதி வரை பொருளாதார வளர்ச்சியை கணிசமாக அதிகரிக்காது. கூடுதல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் பின்னர் அரசாங்கத்தின் தேவையை கடுமையாக அதிகரிக்கும். ஜெர்மனிக்கான முன்னறிவிப்பின்படி, ஏற்றுமதிகள் அடுத்த ஆண்டு மீண்டும் எழுச்சி பெறும். கூடுதலாக, தனியார் குடியிருப்பு கட்டுமானத்தில் முதலீடு மீளத் தொடங்கும். ஊதியங்கள் வலுவாக உயர்ந்து வருவதும், தொழிலாளர் சந்தையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுவதும் உண்மையான வருமானத்தையும், இதனால் நுகர்வுக்கும் அடித்தளமாக இருக்கும். அதிகரித்த திறன் பயன்பாட்டுடன், வணிகங்களும் மீண்டும் அதிக முதலீடு செய்யும். ஒட்டுமொத்தமாக  , 2027 ஆம் ஆண்டில் வளர்ச்சி கணிசமாக துரிதப்படுத்தும் என்று  பன்டேஸ்பேங்க் தலைவர் கூறினார். 

ஜெர்மனிக்கான தற்போதைய முன்னறிவிப்பில், பன்டேஸ்பேங்கின் நிபுணர்கள் காலண்டர்-சரிசெய்யப்பட்ட உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை எதிர்பார்க்கிறார்கள் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) அடுத்த ஆண்டு 0.6% ஆகவும், 2027 இல் 1.3% ஆகவும் உயரும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக வேலை நாட்கள் இருப்பதால், சரிசெய்யப்படவில்லை.மொத்த உள்நாட்டு உற்பத்திவிகிதங்கள் முறையே 0.9% மற்றும் 1.4% என சற்று அதிகமாக உள்ளன. 2028 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி தொடரும், ஆனால் (காலண்டர்-சரிசெய்யப்பட்ட) வளர்ச்சி விகிதம் 1.1% ஆக இருந்தால், அது சிறிது வேகத்தை இழக்கும்.  பின்னர் ஜெர்மன் பொருளாதாரத்தில் திறன் பயன்பாடு மீண்டும் அதிகமாக இருக்கும் என்று  பன்டஸ்பேங்க் தலைவர் நாகல் கூறினார்.  திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை தொழிலாளர் சந்தை இறுக்கத்தை அதிகரிக்கும். 

விரிவாக்க நிதிக் கொள்கை பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் அதே வேளையில், அது ஜெர்மன் பொருளாதாரத்தின் சாத்தியமான உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். முன்னறிவிக்கப்பட்ட எல்லையை விட சாத்தியமான உற்பத்தி ஆண்டுக்கு 0.4% மட்டுமே வளரும் என்று பன்டேஸ்பேங்கின் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதை நிலையான முறையில் வலுப்படுத்த பரந்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படும்.

ஜெர்மனியில் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட சற்று மெதுவாகக் குறைந்து வருவதாக  டாக்டர் நாகல் கூறினார். வரும் ஆண்டுகளில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மெதுவாகக் குறைய ஒரு முக்கிய காரணம், தொடர்ந்து அதிக அளவிலான ஊதிய வளர்ச்சி ஆகும். எரிசக்தி விலைகளில் சிறிய சரிவுகள் மற்றொரு காரணம். ஜெர்மனிக்கான முன்னறிவிப்பின்படி, நுகர்வோர் விலைகளின் இணக்கமான குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்கம் (எச்.ஐ.சி.பி.) இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் 2.3% இலிருந்து 2026 இல் 2.2% ஆகக் குறையும். 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில், இது சுமார் 2% ஐ எட்டும். 

பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கான கூடுதல் செலவுகள், வரி குறைப்புக்கள் மற்றும் பெரிய பரிமாற்றங்கள் ஆகியவை வரும் ஆண்டுகளில் அதிக அரசாங்கக் கடனில் பிரதிபலிக்கும். அரசாங்க பற்றாக்குறை விகிதம் 2028 ஆம் ஆண்டில் 4.8% ஐ எட்டும், அதே நேரத்தில் மாஸ்ட்ரிச் கடன் விகிதம் 68% ஆக உயரும்.  முன்னோக்கிச் செல்ல நல்ல அரசாங்க நிதிகள் மீண்டும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை என்று  பன்டெஸ்பேங்க் தலைவர் நாகல் கூறினார்,  கடன் தடையை மேலும் மேம்படுத்துவதற்கான எங்கள் திட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.  இந்த திட்டத்தின் படி, 2030 ஆம் ஆண்டு தொடங்கி, கடன் வாங்காமல் பாதுகாப்பு செலவினங்களை அதிகளவில் நிதியளிப்பதன் மூலம் பற்றாக்குறைகள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்.  முதலீட்டை எளிதாக்கும் மற்றும் கடன் வாங்குவதற்கான தடுப்புகளை நிறுவும் சீர்திருத்த விதியை நாங்கள் பரிந்துரைக்கிறோம். பன்டெஸ்பேங்க் முன்மொழியப்பட்ட இந்த சீர்திருத்தத்தின் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் அரசாங்கக் கடன் நீண்ட காலத்திற்கு 60% ஆகக் குறைக்கப்படும்.

December 2025 forecast
Year-on-year percentage change

Item

2025

2026

2027

2028

Real GDP, calendar adjusted

0.2 

0.6 

1.3 

1.1 

Real GDP, unadjusted

0.1 

0.9 

1.4 

0.9 

Harmonised Index of Consumer Prices

2.3 

2.2 

2.1 

1.9 

Excluding energy and food

2.8 

2.4 

2.1 

2.2

https://www.bundesbank.de/en/press/press-releases/bundesbank-s-forecast-for-germany-economy-will-gradually-recover-965032?enodia=eyJleHAiOjE3NjY2ODIyMjksImNvbnRlbnQiOnRydWUsImF1ZCI6ImF1dGgiLCJIb3N0Ijoid3d3LmJ1bmRlc2JhbmsuZGUiLCJTb3VyY2VJUCI6Ijg2LjQ4LjguMTYxIiwiQ29uZmlnSUQiOiI4ZGFkY2UxMjVmZDJjMzkzMmI5NDNiNTJlOWQyY2Q2NTA1NzU0ZTE2MjIxMmEyY2UxYmI1YWYxNWMwZDRiYmZlIn0=.3QVmDseDS5fD5KKTfCgsrKZSRL6NVfh6025Sfc5nbJU=

@குமாரசாமி உங்கள் கருத்துகளை கூறவும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

deutsche bundesbank

ஜேர்மன் நாட்டின் அரசவங்கி

ஜேர்மன் நாட்டில் இன்றைய நாளில் பொருளாதாரம் என்பது மந்தமான நிலையில் தான் உள்ளது.

இந்த மந்தமான நிலை ஜெர்மனியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் உள்ளது

அந்த அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் அரசியல் ரீதியாக கணிக்கப்படும் பொழுது சிறிது முன்னுக்குப் பின்னாகவே இருக்கும்.

உலகளாவிய ரீதியில் ஜெர்மனியின் பொருளாதாரம் இனிமேல் முதன்மை நிலைக்கு வரமுடியாது.

மக்கள் அரசையும் அரசு மக்களையும் காரணம் காட்டித் தப்பிக்கும் நிலையில் இன்று ஜெர்மனியின் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கின்றது

சிலர் குடியேறிகளின் மீது பழியுயைச் சுமத்தும் நிலையில்

சிலர் ட்ரம்பின் வரிச் சுமையைக் காரணம் காட்டுகின்றனர்.

என்னுடைய கணிப்பின்படி பொருளாதாரம் உலகிலேயே இன்று ஒரு போர்க் கால சூழ்நிலையில் இருக்கின்றது .

ரஸ்யாவின் மேற்குலகின் மீதான போர் அச்சம்

உக்கிரையேன் நாட்டில் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு

நேட்டோவின் ரஷ்ய நாட்டின் மீதான பகை

ஈரான் இஸ்ரேல் காசா தைவான் சீனா போர்ச் சூழல்

எனப் பல வகையான காரணங்கள் உள்ளன

ஆனாலும் ஒரேயடியாக அடிபட்டுப் போகும் அளவில் ஜெர்மனியின் பொருளாதாரம் விழவில்லை .

உண்மையிலேயே ஜெர்மனி நாட்டவர்கள் எந்தச் சூழலிலும் இருந்து மீண்டுவரும் பண்பினைக் கொண்டவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

என்னுடைய கணிப்பின்படி பொருளாதாரம் உலகிலேயே இன்று ஒரு போர்க் கால சூழ்நிலையில் இருக்கின்றது .

💯 சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வாத்தியார் said:

நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்? அவ்வாறாயின் உங்களுக்கு உள்நாட்டு நிலவரம் தெளிவாக தெரியலாம்.

இணையத்தில் ஜேர்மனியின் பிரதான பிரச்சினையாக வயதான சனத்தொகை கூறப்படுகிறது, இது ஒரு பொதுவான வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரச்சினையாக இருக்கிறது, குடிவரவுகள் மூலம் பெரும்பாலும் இந்த பிரச்சினை மேற்கு நாடுகளில் கையாளப்படுகிறது.

ஜேர்மனிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளூக்குள்ள பொதுவான பிரச்சினை இருப்பதாக கூறுகிறார்கள், உற்பத்தி பொருள்களின் உற்பத்தி விலை அதிகரிப்பு அதற்கு பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை பேணவேண்டிய நிலை காணப்படுகிறது.

பூகோள அரசியல்; பிராந்திய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகிறது, இந்த இரஸ்சிய உக்கிரேன் போரின் காலகட்டத்தில் உற்பத்தித்துறை தொடர்ச்சியாக பொருளாதார சுருக்க நிலையிலேயே தொடர்கிறது , ஆனால் சேவைத்துறை பொருளாதார சுருக்க நிலையில் இல்லை.

அரசியல்வாதிகள் சில காரணங்களால் சில முடிவுகளை எடுப்பார்கள், இங்கு அவுஸ்ரேலியா சீன பொருளாதாரத்தில் தங்கியுள்ளது தற்போதுள்ள அரசு அதற்கு முன்னர் இருந்த அரசு சீனாவுடன் ஏற்படுத்திய நெருக்கடி நிலையின் தீவிரத்தினை ஓரளவு குறைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

முன்னர் இருந்த அரசு; மக்களையும் அதற்கேற்ப மக்களிடையே ஒரு சீன அச்ச நிலையினை தோற்றுவித்து சீன எதிர்ப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது, தற்போது மக்களிடையே அவ்வாறான எதிர்ப்புணர்வு தென்படுவதில்லை என்பது போல உணருகிறேன்.

ஐரோப்ப்பாவில் தற்போது இரஸ்சியாவினை பார்த்து பயப்படுவதாக கூறும் நிலை அதிகரித்து காணப்படுகிறது,

உக்கிரேன் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரஸ்சியா நேட்டோவிடம் தனது பாதுகாப்பு உத்தரவாதத்தினை இரந்து நின்றது, போர் ஆரம்பித்த பின்னர் இரஸ்சிய இராணுவம் உலகின் இரண்டாவது பெரிய இராணுவம் அல்ல உக்கிரேனில் இரண்டாவது பெரிய இராணுவம் என கேலியாக பேசிய நிலை, தற்போது இரஸ்சியா ஐரோப்பாவிற்கு ஆபத்து என கூறப்படுகிறது.

நான் நினைக்கிறேன் அரசுகள் தமது ஆட்சியினை தக்கவைப்பதற்காக அச்சுறுத்தல் உளவியலை பயன்படுத்துகிறார்களோ?

தற்போது பெரும்பாலான நாடுகளில் உள்ள பொதுவான பிரச்சினை எரிசக்க்தி, வழங்கல் பாதை தடை உள்நாட்டு உற்பத்தியில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

ஒரு நீண்ட உண்மையான சமாதானமே ஒரு சுமூகமான அபிவிருத்தியினை உலகெங்கும் உருவாக்கும், அதற்கு இதய சுத்தியுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்க முன்வரவேண்டும், போரினை தொடர்வோம், நாட்டினை பாதுகாப்போம் என கூறி போருக்கான செலவீடுகளை அதிகரிப்பதால் உண்மையான பலத்தின் மூலமான சமாதானம் என்பதெல்லாம் எந்தளவிற்கு தற்கால சூழலில் பொருந்து என தெரியவில்லை.

ஜேர்மனி பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது, ஐரோப்பா அமெரிக்கா அற்ற ஒரு பாதுகாப்பு நோக்கி நகரவேண்டிய தேவை உருவாகிக்கொண்டுள்ளது, தனிய பாதுகாப்பு செலவீனங்களை செய்வது மட்டும் ஒரு உண்மையான போரற்ற சமாதானம் நிலவாது, ஐரோப்பியர்கள் கடந்த கால வரலாற்று மனநிலையில் வாழ்கிறார்கள், ஜேர்மனியினை போர்களில் இரஸ்சியா மட்டும் தோற்கடிக்கவில்லை, ஆனால் பின்னர் அவர்களுடன் சமாதானமாக முடிகின்ற நிலையினை ஏற்படுத்த கூடிய நல்லிணக்கம் ஏற்பட்டது போல; ஒட்டு மொத்த ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைதி உருவாக ஐரோப்பிய ஒன்றியம் தனது செயற்பாட்டினை சுமூகமான செயற்பாடாக மாற்ற வேண்டும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/12/2025 at 21:12, vasee said:

@குமாரசாமி உங்கள் கருத்துகளை கூறவும்.

ஜேர்மனியின் பொருளாதாரத்தை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை....அதுவும் இன்றைய நிலையில்....

தினசரி வேலை இழப்புகள்....

மாதாந்தம் சிறு சிறு முதலீட்டு கொம்பனிகள் மூடு விழாக்கள்....

அதே போல் பெரிய தொழிற்சாலைகளில் பல வேலை இழப்புகள்....

ஜேர்மனியின் மூலதனமே உருக்கு தொழிற்சாலைகளும் கார் உற்பத்தி நிறுவனங்களும் தான்....அதனை தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் எரி சக்தியின் அளவில்லா விலையேற்றம்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டு பாவனைக்கும்,வாகன பாவனைக்கும் எரி சக்தி எமக்கு எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகின்றது என. சாதாரண எங்களால் இதனை சமாளிக்க முடியவில்லை எனும் போது..... 24 மணித்தியாலமும் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை எப்படியிருக்கும் என...?

பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை எரிசக்தி என நேரடியாகவே அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டனர்.

மந்த நிலையில் இருந்து முன்னேறிய காலம் போய் விட்டது. மூன்றாம் உலக நாடுகளும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

பூகோள அரசியல்; பிராந்திய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகிறது, இந்த இரஸ்சிய உக்கிரேன் போரின் காலகட்டத்தில் உற்பத்தித்துறை தொடர்ச்சியாக பொருளாதார சுருக்க நிலையிலேயே தொடர்கிறது , ஆனால் சேவைத்துறை பொருளாதார சுருக்க நிலையில் இல்லை.

உக்ரேன் யுத்தம் ஆரம்பிக்க முதலே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.முதலில் இவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் தடை செய்து விட்டார்கள். முக்கியமாக இவர்களின் விவசாய விளைபொருட்கள்.

இதனால் பாதிக்கப்பட்டது யார் என்று பார்த்தால் இவர்களது விவசாயிகள் தான். இது போல் பல விடயங்களை கூறலாம்.

பொதுவாவக கூறினால் ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முக்கியமான ஏற்றுமதி நாடு. அதிலும் ஜேர்மனிக்கு ரஷ்யா மிக மிக பொருளாதார ரீதியாக முக்கியமான நாடு. ஜேர்மனியினது ஏற்றுமதிக்கு ரஷ்யா முக்கிய சந்தையாக இருந்தது.

அமெரிக்காவின் எதிரி ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி. அதை தடுக்க உக்ரேனை தத்தெடுத்தது அமெரிக்கா. அமெரிக்கா விரித்த வலையில் வீழ்ந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதிலும் ஜேர்மனி தான் பெரிய ஆள் என காட்ட வெளிக்கிட்டு பெரிய சகதிக்குள்.....

இது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியின் பொருளாதாரத்தை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை....அதுவும் இன்றைய நிலையில்....

தினசரி வேலை இழப்புகள்....

மாதாந்தம் சிறு சிறு முதலீட்டு கொம்பனிகள் மூடு விழாக்கள்....

அதே போல் பெரிய தொழிற்சாலைகளில் பல வேலை இழப்புகள்....

ஜேர்மனியின் மூலதனமே உருக்கு தொழிற்சாலைகளும் கார் உற்பத்தி நிறுவனங்களும் தான்....அதனை தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் எரி சக்தியின் அளவில்லா விலையேற்றம்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டு பாவனைக்கும்,வாகன பாவனைக்கும் எரி சக்தி எமக்கு எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகின்றது என. சாதாரண எங்களால் இதனை சமாளிக்க முடியவில்லை எனும் போது..... 24 மணித்தியாலமும் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை எப்படியிருக்கும் என...?

பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை எரிசக்தி என நேரடியாகவே அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டனர்.

மந்த நிலையில் இருந்து முன்னேறிய காலம் போய் விட்டது. மூன்றாம் உலக நாடுகளும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.

இலகுவான பிரச்சினைகளை இலகுவாக தீர்க்காமல் அதனை தீவிரமாக்குவதனால் எந்த பிரயோசனமும் இருக்காது, அரசியல்வாதிகள் எங்கும் ஒரே பிரச்சினைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்.

அவுச்றேலியாவில் மொரிசன் என ஒரு பிரதமர் தற்போதய பிரதமருக்கு முன்னர் இருந்தார் (அவரது முழுப்பெயர் நினைவில்லை), நாடு பற்றியெரிந்த போது உலகசுற்றுலா போனார், வர்த்தக பங்காளி நாடான சீனாவுடன் சர்ச்சையினை உருவாக்கினார, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முறுகல் நிலையினை தோற்றுவித்தார்.

செய்திகளில் இந்த போர் அந்தா போர் என அவர்கள் பங்கிற்கு கதையளந்தார்கள், பின்னர் அவர் தேர்தலில் தோற்று எங்கோ காணாமல் போய்விட்டார்.

ஆனால் அவர் ஏற்படுத்திய சமூக பொருளாதார பிரச்சினைகள் இன்னும் தொடர்கிறது.

சொந்த நாட்டின் நலனை கவனியாது; நாட்டினை சிக்கலில் மாட்டி விட்டு பின்னர் எதாவது ஒன்றியங்களில் ஏதாவது மதிப்புமிக்க வேலைகளை தேடுவதற்காக சுயநலமாக செயல்படும் தலைவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் யுத்தம் ஆரம்பிக்க முதலே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.முதலில் இவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் தடை செய்து விட்டார்கள். முக்கியமாக இவர்களின் விவசாய விளைபொருட்கள்.

இதனால் பாதிக்கப்பட்டது யார் என்று பார்த்தால் இவர்களது விவசாயிகள் தான். இது போல் பல விடயங்களை கூறலாம்.

பொதுவாவக கூறினால் ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முக்கியமான ஏற்றுமதி நாடு. அதிலும் ஜேர்மனிக்கு ரஷ்யா மிக மிக பொருளாதார ரீதியாக முக்கியமான நாடு. ஜேர்மனியினது ஏற்றுமதிக்கு ரஷ்யா முக்கிய சந்தையாக இருந்தது.

அமெரிக்காவின் எதிரி ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி. அதை தடுக்க உக்ரேனை தத்தெடுத்தது அமெரிக்கா. அமெரிக்கா விரித்த வலையில் வீழ்ந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதிலும் ஜேர்மனி தான் பெரிய ஆள் என காட்ட வெளிக்கிட்டு பெரிய சகதிக்குள்.....

இது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி.

இந்த யுரியூப் ஒரு உக்கிரேன் சார்பான பெரும்பாலும் ஒரு தரப்பு கருத்துக்கொண்டது, இன்ட்க காணொளி பற்றிய உங்கள் கருத்தினை கூறுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, vasee said:

இலகுவான பிரச்சினைகளை இலகுவாக தீர்க்காமல் அதனை தீவிரமாக்குவதனால் எந்த பிரயோசனமும் இருக்காது, அரசியல்வாதிகள் எங்கும் ஒரே பிரச்சினைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மத பிரச்சனை இருந்தது. இனப்பிரச்சனை இருந்தது.

ஆனால் இன்றோ...

அரசியல்வாதிகளின் பிரச்சனையே முக்கியமாக உள்ளது. அதை விட பொது ஊடகங்களுக்கு செய்திகள் தேவைப்படுகின்றது. அதனால் உலகில் அவர்களுக்கு பிரச்சனைகள் தேவைப்படுகின்றது.

கற்கால போர்களை முட்டாள்த்தனம் என பாடங்களில் படிக்க சொல்லி விட்டு அதையே..... கணணி உலகிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.