Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vasee said:

இங்கு இந்திய இரசிகர்களும் பாகிஸ்தான் இரசிகர்களும் கேளிக்கை விடுதியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு சண்டை இட்டார்கள் என அவுஸ்ரேலிய வேலை நண்பர் கூறினார்.

நான் அந்த வீடியோவை பார்க்க முயலவில்லை, வசீ, ஆனால் அவர்கள் நிற்கும் நிலைகளைப் பார்த்தாலே அவர்களின் போக்குகள் புரிகின்றன...........

பொதுவாகவே எவ்வகையான கடும் போக்காளர்களிடமும் அவர்களுக்கு சார்பானவற்றை அன்றி வேறு எவற்றையும் பேச முடிவதில்லை............ அவர்களும் இறுதி வரை தாண்டி வெளியே வருவதில்லை................

  • Replies 1.8k
  • Views 55.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியபோதும், றொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 52 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டர் வேகமாக எடுத்த 49 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி எய்டன் மார்க்ரம் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 82 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக் அதிரடியாக எடுத்த 47 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டன் வேகமாக ஆட்டம் இழக்காமல் எடுத்த 45 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான். அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!


இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியா மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வாணவேடிக்கையாக ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் வேகமான 38 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவ் விரைந்து எடுத்த 33 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதுவே தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது!

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணியின் வீரர்களில் பிரயன் பென்னிட் அதிரடியாக ஆட்டமிழக்காமல் எடுத்த 97 (59 பந்துகள்) ஓட்டங்கள், சிகண்டர் ராஸா வேகமாக எடுத்த 31 (21 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து வேகமாக ஆடாததால் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

ரியான‌ த‌ல‌ இடியும் முதுகுவ‌லியும் அது தான் என்னால் உங்க‌ எல்லாருட‌ம் சேர்ந்து ப‌ம்ப‌ல் அடிக்க‌ முடியாம‌ இருக்கு அண்ணா...............கோவ‌ம் ம‌ன‌ஸ்தாவ‌ம் எதுவும் இல்லை....................நீங்க‌ள் தொட்டு ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எழுதுவ‌தை வாசிக்கிறேன்.................இந்த‌ க‌ரும‌ம் பிடிச்ச‌ வ‌ருத்தோட‌ எழுத‌ முடியாம‌ இருக்கு

பையா சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். நன்றாக ஓய்வெடுத்து விட்டு வரவும். எங்களின் பம்பலுக்காக வருத்தத்துடன் வந்து குத்தி முறிய வேண்டாம். பையன் இல்லாத போட்டி போர் அடிக்கும் என்றாலும் பரவாயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி 27 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இங்கிலாந்து (Y1) எதிர் நியூஸிலாந்து (Y2)

ENG. எதிர் NZ

17 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் நான்கு பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

ENG

ஏராளன்

ENG

வசீ

NZ

புலவர்

ENG

சுவைப்பிரியன்

ENG

அல்வாயன்

ENG

ஈழப்பிரியன்

ENG

நியூ பலன்ஸ்

ENG

வாத்தியார்

NZ

கறுப்பி

ENG

வாதவூரான்

ENG

வீரப் பையன்26

NZ

சுவி

ENG

கிருபன்

ENG

கோஷான் சே

ENG

அஹஸ்தியன்

ENG

கந்தப்பு

ENG

நியாயம்

ENG

எப்போதும் தமிழன்

ENG

ரசோதரன்

AFG

பிரபா

ENG

நிலாமதி

AFG

நந்தன்

NZ

இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? chipmunk_1f43f-fe0f.gif

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ பெரிய‌ ஸ்கோர் அடித்து விட்ட‌து 256💪 ஹா ஹா...................

புள்ளிய‌ அள்ளிட்டோம் ஹா ஹா.................

சிம்பாவேயுடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 254 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாவேயுடன் எதிர்த்து விளையாடிய இந்தியா அணியும் 256 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சிம்பாவேக்கு எதிராக விளையாடப்போகிறது.

10 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ரியான‌ த‌ல‌ இடியும் முதுகுவ‌லியும் அது தான் என்னால் உங்க‌ எல்லாருட‌ம் சேர்ந்து ப‌ம்ப‌ல் அடிக்க‌ முடியாம‌ இருக்கு அண்ணா...............கோவ‌ம் ம‌ன‌ஸ்தாவ‌ம் எதுவும் இல்லை....................நீங்க‌ள் தொட்டு ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எழுதுவ‌தை வாசிக்கிறேன்.................இந்த‌ க‌ரும‌ம் பிடிச்ச‌ வ‌ருத்தோட‌ எழுத‌ முடியாம‌ இருக்கு

நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்கோ வ‌சி அண்ணா

நான் வாசிச்ச‌ பின் ப‌ச்சை புள்ளி குத்துகிறேன்😍....................

மருந்துகள் தவறாமல் எடுங்கோ. நன்றாக ஓய்வு எடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ரசோதரன்

AFG

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

காச வாங்கிட்டாங்கள் என்று ஒருத்தரும் வரேலையா.

அவர்கள் முதற் சுற்றில் நன்றாகச் செய்ததெல்லாம், இப்போ செய்யவில்லை. களத்தடுப்பு அவர்களின் பலம். அதிலேயே கோட்டை விட்டால். இப்பிடி அடிக்கிறாங்கள் என்ற விரக்தியோ தெரியா.

முதல் சுற்று போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக உதவி செய்கின்றது. சிம்பாவேயின் வெற்றியில் பந்து வீச்சாளர்களுக்கும் பங்கு உண்டு. இந்தியா மைதானங்கள் ( குறிப்பாக சென்னை) பந்து வீச்சுக்கு அண்மைக்காலங்களில் பெரிதாக உதவவில்லை. நேற்று சிம்பாவே தோற்றாலும் 184/6 எடுத்திருக்கிறது. முன்பு சூழல் பந்து விச்சுக்கு சாதகமான சென்னை மைதானம் சென்ற ஐபிஎல் போட்டிகளிலும் CSK அணிக்கு சாதகமாக அமையவில்லை. இந்தியா மைதானத்தில் நேபாள அணியுடன் தட்டு தடுமாறி வெற்றி பெற்ற இங்கிலாந்து பிறகு மேற்கு இந்தியா அணியுடனும் தோற்றது. ஆனால் இலங்கை மைதானங்களில் சிறப்பாக பந்து வீசி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

சிம்பாவே மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலகுவாக பிடிக்க கூடிய பந்தினை நழுவ விட்டதால் ஹெட்மயர் 85 ஒட்டங்களை 34 பந்தில் எடுத்தார். பிடித்திருந்தால் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து இருப்பார். மேற்கிந்தியா அணியும் 26-2 ஆக இருந்திருக்கும்.

சிம்பாவே வென்ற இரண்டு பெரிய நாடுகள் அவுஸ்திரேலியா, இலங்கை. இரண்டு நாடுகளும் T20 க்கு முன்பு நடைபெற்ற தொடர்களில் படுதோல்வி அடைந்தன. அவுஸ்திரேலியா பாகிஸ்தானிடம் 3-0 க்கும், இலங்கை இங்கிலாந்திடம் சொந்த மைதானத்திலேயே 3-0 க்கும் தோற்றது. இலங்கை சூப்பர் 8 இல் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற விதத்தினை பார்க்கும்போது மிகவும் பலமற்ற நாடக தோன்றுகிறது. பலமற்ற நாடுகளைத்தான் சிம்பாவே இத்தொடரில் வென்று இருக்கிறது போல தெரிகிறது.

நான் இந்த போட்டியில் விடைகள் எழுதும்போது அவுஸ்திரேலியாவா தென்னாப்பிரிக்காவா, இலங்கையா நியூசிலாந்தா என்பதை பல முறை யோசித்து பிழையான முடிவுகளை தெரிவு செய்து இருக்கிறேன். இத்தவறான முடிவால் தற்போது போட்டியில் முன்னிலையில் இருக்கும் நான் போட்டி முடிவில் பின்னுக்கு செல்லப்போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

சிம்பாவே வென்ற இரண்டு பெரிய நாடுகள் அவுஸ்திரேலியா, இலங்கை. இரண்டு நாடுகளும் T20 க்கு முன்பு நடைபெற்ற தொடர்களில் படுதோல்வி அடைந்தன. அவுஸ்திரேலியா பாகிஸ்தானிடம் 3-0 க்கும், இலங்கை இங்கிலாந்திடம் சொந்த மைதானத்திலேயே 3-0 க்கும் தோற்றது. இலங்கை சூப்பர் 8 இல் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற விதத்தினை பார்க்கும்போது மிகவும் பலமற்ற நாடக தோன்றுகிறது. பலமற்ற நாடுகளைத்தான் சிம்பாவே இத்தொடரில் வென்று இருக்கிறது போல தெரிகிறது.

அதென்றால் உண்மைதான். ஆனாலும். ஸிம்பாப்வே அவிஸ்ரேலியாவுடன் விளையாடின விளையாட்டுத்தான் உச்சக்கட்டம். சொல்லி அடிச்சாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

ரசோதரன் AFG

--

வாழ்த்துக்கள்.

🤣...............

ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣.

முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭.

....

புல்லாகிப் பூடாய்

புழுவாய் மரமாகி

பல்விருகமாகி

பறவையாய்ப் பாம்பாகி

....

...

ஆப்கானை தெரிந்து.......................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரசோதரன் said:

🤣...............

ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣.

முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭.

....

புல்லாகிப் பூடாய்

புழுவாய் மரமாகி

பல்விருகமாகி

பறவையாய்ப் பாம்பாகி

....

...

ஆப்கானை தெரிந்து.......................🤣.

ஆப்கானிஸ்தான் இலங்கை, அவுஸ்திரேலியா விளையாடிய குழுவில் இருந்திருந்தால் கட்டாயம் சூப்பர் 8 க்கு சென்று இருக்கும். நானும் சிலவேளை ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தினை வெல்லலாம் என முதலில் நினைத்தேன். பிறகு நியூசிலாந்தினை தெரிவு செய்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣...............

ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣.

முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭.

....

புல்லாகிப் பூடாய்

புழுவாய் மரமாகி

பல்விருகமாகி

பறவையாய்ப் பாம்பாகி

....

...

ஆப்கானை தெரிந்து.......................🤣.

பிச்சுமணி எனும் கோவில் மணி அடிக்கும் கரெக்டரில் இருக்கும் வடிவேலு தனக்கு அரச வேலை கிடைத்ததும் சொல்லுவார்…

நான் அடிச்சமணி ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ அரசாங்கத்துக்கு கேட்டிருக்கு…

அது போல ஆப்கானிஸ்தான் “அடிக்கும்” என நீங்கள் சொன்னது தலிபானுக்கு கேட்டிருக்கு…😂

நேற்றிரவு எல்லையில் பாகிஸ்தான் ஆமிக்கு சப்பல் அடியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

பிச்சுமணி எனும் கோவில் மணி அடிக்கும் கரெக்டரில் இருக்கும் வடிவேலு தனக்கு அரச வேலை கிடைத்ததும் சொல்லுவார்…

நான் அடிச்சமணி ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ அரசாங்கத்துக்கு கேட்டிருக்கு…

அது போல ஆப்கானிஸ்தான் “அடிக்கும்” என நீங்கள் சொன்னது தலிபானுக்கு கேட்டிருக்கு…😂

நேற்றிரவு எல்லையில் பாகிஸ்தான் ஆமிக்கு சப்பல் அடியாம்.

முன்பு இலங்கையில் இந்தியா அமைதிப்படை இருந்தகாலங்களில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் போது அம்பிடும் அப்பாவி பொதுமக்களை அதிகமாக தாக்குவதாக சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

முன்பு இலங்கையில் இந்தியா அமைதிப்படை இருந்தகாலங்களில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் போது அம்பிடும் அப்பாவி பொதுமக்களை அதிகமாக தாக்குவதாக சொல்லுவார்கள்.

நானும் இதை அறிந்திருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

முன்பு இலங்கையில் இந்தியா அமைதிப்படை இருந்தகாலங்களில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் போது அம்பிடும் அப்பாவி பொதுமக்களை அதிகமாக தாக்குவதாக சொல்லுவார்கள்.

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து பொறுமையாக ஆரம்பித்துள்ளனர். முதலாவது பந்துப் பரிமாற்றத்தில் ஓட்டமெதுவும் பெறவில்லை. ஆச்சரின் இறுக்கமான பந்து வீச்சு.

தொடக்கமே நல்லாருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

12வது பரிமாற்றத்திலேயே 100 அடித்துவிட்டார்கள். ஒரு 180 அடிப்பார்களா.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் இந்தத் தொடரின் சகலதுறை ஆட்டக்காரன். பந்தப் போடனுமா. போட்டுக்க.

பந்தப் பிடிக்கனுமா. பிடிச்சுக்க.

பந்த அடிக்கனுமா. அடிச்சுக்க.

  • கருத்துக்கள உறவுகள்

159 அடிச்சார்கள். நியுசிலாந்து தோத்தால் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக பெரிய வெற்றி ஒன்றைப் பெறவேண்டும். பாகிஸ்தான் வென்றால், நியுசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளி. ஓட்ட விகிதம் முக்கியம்.

நியுசிலாந்து வென்றால், பாகிஸ்தானின் பயணம் முடிவடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் ஆரம்பம் நியூசிலாந்தை விட மோசமாக இருக்கின்றது. அணித் தலைவர் மீண்டும் அணியை கரை சேர்ப்பாரா

  • கருத்துக்கள உறவுகள்

12 பந்தில் 21. இது இப்பிடிவந்தமையும் என்று யார் நினைச்சா.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

England won.

New Zealand FlagNew Zealand

159/7

England FlagEngland

(19.3/20 ov, T:160) 161/6

  • கருத்துக்கள உறவுகள்

6 பந்தில் 5 ஓட்டங்கள். ஏதாவது கடைசி நிமிட....

இதை எழுதி முடிக்க முதல் முடிச்சு விட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இப்ப என்ன செய்யப் போகிறது. இலங்கையை ஒரு 120 க்க அமத்தி, ஒரு 12 பந்துப் பரிமாற்றத்தில துரத்திப் பிடிக்க வேணும். இது நடக்கும் என்டுறியல்????

  • கருத்துக்கள உறவுகள்

ரேடியோ வர்ணனையில் கேட்டு கொண்டே கார் பார்க்கிங் நோக்கி போனேன். போகும் போது இங்கிலாந்து எப்படியும் தோக்கும், முடிவை கேட்கதேவையில்லை, பார்க் பண்ணி விட்டு இறங்கி போவோம் என நினைத்தேன்:

ரெஹான் ஆஹ்மெட் உள்ளே வர, அவர் அண்மையில் இங்கிலாந்து வீரர்கள் தமாசாக தமக்குள் நடத்திய range hitting இல் வென்றவர் எண்டார்கள்..

அட இதுவும் ஒரு ரேஞ் ஹிட்டிங் போட்டி போலத்தானே வந்து நிக்கிது என நினைத்தபடி, காரில் இருந்து கேட்க ஆரம்பித்தேன்.

சொன்ன படியே அடித்து துவம்சம் பண்ணி விட்டார்கள் ரெஹானும், வில்லும்.

1 hour ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தான் இப்ப என்ன செய்யப் போகிறது. இலங்கையை ஒரு 120 க்க அமத்தி, ஒரு 12 பந்துப் பரிமாற்றத்தில துரத்திப் பிடிக்க வேணும். இது நடக்கும் என்டுறியல்????

ரெஹென் ஆமெட் இரெட்டை குடியுரிமை எடுத்தால் சாத்தியம்😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ரேடியோ வர்ணனையில் கேட்டு கொண்டே கார் பார்க்கிங் நோக்கி போனேன். போகும் போது இங்கிலாந்து எப்படியும் தோக்கும், முடிவை கேட்கதேவையில்லை, பார்க் பண்ணி விட்டு இறங்கி போவோம் என நினைத்தேன்:

ரெஹான் ஆஹ்மெட் உள்ளே வர, அவர் அண்மையில் இங்கிலாந்து வீரர்கள் தமாசாக தமக்குள் நடத்திய range hitting இல் வென்றவர் எண்டார்கள்..

அட இதுவும் ஒரு ரேஞ் ஹிட்டிங் போட்டி போலத்தானே வந்து நிக்கிது என நினைத்தபடி, காரில் இருந்து கேட்க ஆரம்பித்தேன்.

சொன்ன படியே அடித்து துவம்சம் பண்ணி விட்டார்கள் ரெஹானும், வில்லும்.

ரெஹென் ஆமெட் இரெட்டை குடியுரிமை எடுத்தால் சாத்தியம்😂

நானும் ரெகான் இப்பிடி காளி ஆடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து வழமை போல் தாங்களே தங்கள் மேல் மண் அள்ளிப் போட்டார்கள் என்று நினைத்தேன்.

பில் ஜாக்ஸ் தொடர்ந்து அசத்திக் கொண்டே இருக்கிறார். அந்தக் கடைசி நாலை அடித்துவிட்டு தோளை உலுப்பினார். என்னங்டா என்று தன் அணி வீரர்களைப் பார்த்து கேட்டது போல் இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.