Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

  • Replies 1.8k
  • Views 55.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பெடுத்தாடத் தொடங்கியது. ஆச்சரின் முதல் பந்து பரிமாற்றத்தில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் மெதுவாக ஆரம்பித்த அவர்கள் துடுப்பாட்டம், மெதுவாக சூடு பிடித்த தொடங்கியது. பவர் பிளேயில் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள். ஆனால், இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள், அவர்களை கட்டுப்படுத்தினார்கள். விக்கெட்டை இளக்கத் தொடங்கி, தட்டுத் தடுமாறி, 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும், தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று, மெதுவாகவே தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். விக்கெட்டை பறிகொடுத்துக் கொண்டே இருந்தார்கள். 17வது பரிமாற்றத்தின் முடிவில் ஆறு விக்கட்டுகளை இழந்து, 117 ஓட்டங்களையே பெற்றிருந்தார்கள். 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில், பில் ஜாக்சுடன் இணைந்த ரெகான் அகமட், அடிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 15 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்து, இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, செம்பாட்டான் said:

பில் ஜாக்ஸ் தொடர்ந்து அசத்திக் கொண்டே இருக்கிறார்.

வர்ணணை கேட்டபோது நீங்கள் சொன்னதுதான் மனதில் வந்து போனது.

இன்னும் எத்தனை போட்டிகளைத்தான் இங்கிலாந்து ஒரு தனி மனிதனால் வெல்ல முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தான் இப்ப என்ன செய்யப் போகிறது. இலங்கையை ஒரு 120 க்க அமத்தி, ஒரு 12 பந்துப் பரிமாற்றத்தில துரத்திப் பிடிக்க வேணும். இது நடக்கும் என்டுறியல்????

சனிப்பிணம் தனிப்போகாது, இலங்கை பாகிஸ்தானையும் கூட்டிகொண்டு வெளியே போகும்.

நியுசிலாந்தின் துடுப்பாட்டம் வேலை இடைவேளையில் பார்த்த போது எடுத்திருந்த ஓட்டம் மிகுதி ஓவருக்கு ஒவ்வொரு பந்திற்கும் 1 ஓட்டமாக எடுதாலே 170 எட்டி விடும், நியுசிலாந்து வென்றுவிடும் என நினைத்தேன் 159 மட்டும் எடுத்துள்ளது, நல்ல போட்டியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன், இங்கிலாந்து அணி உலக கோப்பையினை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (நியுசிலாந்தும் சிறப்பாக விளையாடுகிறது).

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார்.

சுமைதாங்கிகளில் மாற்றமில்லை.

02-27-2026-ranks.jpg

இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

சனிப்பிணம் தனிப்போகாது, இலங்கை பாகிஸ்தானையும் கூட்டிகொண்டு வெளியே போகும்.

😂 வேற லெவல் போங்கோ😂

நாளைக்கு எடுக்கும் போது ஒரு தென்னம்பிள்ளையை சேத்து எரிக்கோணும் 😂

7 minutes ago, செம்பாட்டான் said:

நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார்.

சுமைதாங்கிகளில் மாற்றமில்லை.

02-27-2026-ranks.jpg

இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.

கந்தப்பு செஞ்சுரி அடிச்சிட்டார்.

இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை?

😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

😂 வேற லெவல் போங்கோ😂

நாளைக்கு எடுக்கும் போது ஒரு தென்னம்பிள்ளையை சேத்து எரிக்கோணும் 😂

கந்தப்பு செஞ்சுரி அடிச்சிட்டார்.

இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை?

😂

சாச்சா. நான் சும்மா பியோன். அங்க எடுத்து இங்க வைக்கிற வேலை.

Screenshot-20260227-121659-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரையிறுதியில் இங்கிலாந்தும் இந்தியாவும் (?) மோதும் என நினைக்கிறேன், இங்கிலாந்தினை வெல்வது இலகுவான விடயாமாக இருக்காது போல உள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை?

நன்றி @செம்பாட்டான் .

புள்ளிகளை கூட்டி வரிசையை ஒழுங்காக காண்பித்ததற்கு.

இன்னும் சில நாட்கள் உதவி தேவைப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

டுப்பிளசி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்லாது என கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நன்றி @செம்பாட்டான் .

புள்ளிகளை கூட்டி வரிசையை ஒழுங்காக காண்பித்ததற்கு.

இன்னும் சில நாட்கள் உதவி தேவைப்படும்

தொடர்ந்து செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

அரையிறுதியில் இங்கிலாந்தும் இந்தியாவும் (?) மோதும் என நினைக்கிறேன், இங்கிலாந்தினை வெல்வது இலகுவான விடயாமாக இருக்காது போல உள்ளது!

எதுக்கும் மேற்கிந்தியாவ ஒரு வார்த்தை கேளுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை சனி 28 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, பாகிஸ்தான் (Y3) எதிர் சிறிலங்கா (Y4)

PAK எதிர் SL

13 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 09 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், ஒருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

SL

ஏராளன்

PAK

வசீ

SL

புலவர்

PAK

சுவைப்பிரியன்

NED

அல்வாயன்

PAK

ஈழப்பிரியன்

PAK

நியூ பலன்ஸ்

PAK

வாத்தியார்

SL

கறுப்பி

SL

வாதவூரான்

SL

வீரப் பையன்26

PAK

சுவி

PAK

கிருபன்

PAK

கோஷான் சே

PAK

அஹஸ்தியன்

PAK

கந்தப்பு

PAK

நியாயம்

SL

எப்போதும் தமிழன்

PAK

ரசோதரன்

SL

பிரபா

SL

நிலாமதி

SL

நந்தன்

PAK

இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்? otter_1f9a6.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார்.

சுமைதாங்கிகளில் மாற்றமில்லை.

இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.

❤️........................

மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, செம்பாட்டான் said:

சாச்சா. நான் சும்மா பியோன். அங்க எடுத்து இங்க வைக்கிற வேலை.

Screenshot-20260227-121659-Chrome.jpg

ஜி யிடம் அப்பிரசெண்ட்டா போஸ்டிங் கிடைச்சிருக்கு அப்படியே பிடிச்சு கொள்ளுங்கோ😂

அவர் ஹவாயோ, ஹொங்கொங்கோ…

எங்கயோ ஜாலியா சுத்துறார் போல கிடக்கு @கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.

களத்தில் ஏதோ பிழையோ என்று ஒரு கணம் திகைத்துப் போனேன்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.