Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Google Translate is now available in 110 new languages.

telungu

Tamil

ஜக்கம்மா தயவுசெய்து இந்தியானு ஓடிம்பஜெயண்டி.
  • Replies 1.9k
  • Views 58.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, alvayan said:

அபிசெக்கும்...கிசனும் வந்த வேகத்தில் கதிரையில்..போய் இருந்திட்டினம்

ஒன்னுமாப் புரியல...ஜக்கம்மா பாசையில்..சொன்னால் நமக்கு எப்படிப் புரியும்

ஜக்கம்மா இந்தியாவை தோற்கவை தாயே😂

21 minutes ago, செம்பாட்டான் said:

ஆசை தோசை. 😊

அத்தோட ஒரு பிளேன் டீயிம் கோல்ட் லீபும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

சாம்சனை வீட்டுக்கு அனுப்ப மலையாள மாந்திரீகம்தான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

Google Translate is now available in 110 new languages.

telungu

Tamil

ஜக்கம்மா தயவுசெய்து இந்தியானு ஓடிம்பஜெயண்டி.

அய்யய்யோ.....

பையா ...பையா

பையப்பைய நடந்துவா

இந்தியா கஸ்டப்படுகுது

கண்டிப்பா வரவேணும்

கையிலை தேசிக்காய் வேப்பிலையுடன்..

கையோடை ஜக்கம்மவையும் கூட்டிவா

காம்பீரு முகம் தொங்கிட்டிடுது...

சூரியாவும் சுவிங்கத்தை துப்பிட்டான்

..தாமதம் வேண்டாம் பையா

ஜக்கம்மா வந்து

கட்டறுத்து..

வெற்றி தர வேணும்

வெல்லும் புள்ளி

நான் இரண்டெடுக்க வேணும்..

பையா பையா ஓடிவா..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமோ பகவதே காளி சாமுண்டி

தேவி பைரவி தேவி ஓங்கார நீலி

சத்தி மம வசமாயிக்க சுவாஹா

சஞ்சு சாம்ஸன்சை அவுட் ஆக்கி விடுதாயே!

1 minute ago, alvayan said:

அய்யய்யோ.....

பையா ...பையா

பையப்பைய நடந்துவா

இந்தியா கஸ்டப்படுகுது

கண்டிப்பா வரவேணும்

கையிலை தேசிக்காய் வேப்பிலையுடன்..

கையோடை ஜக்கம்மவையும் கூட்டிவா

காம்பீரு முகம் தொங்கிட்டிடுது...

சூரியாவும் சுவிங்கத்தை துப்பிட்டான்

..தாமதம் வேண்டாம் பையா

ஜக்கம்மா வந்து

கட்டறுத்து..வெற்றி தர வேணும்

வெல்லும் புள்ளி

நான் இரண்டெடுக்க வேணும்..

பையா பையா ஓடிவா..

உந்த ரேட்ல இன்னும் இரெண்டு ஓவர் போதும் இந்தியா வெல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஓம் நமோ பகவதே காளி சாமுண்டி

தேவி பைரவி தேவி ஓங்கார நீலி

சத்தி மம வசமாயிக்க சுவாஹா

சஞ்சு சாம்ஸன்சை அவுட் ஆக்கி விடுதாயே!

உந்த ரேட்ல இன்னும் இரெண்டு ஓவர் போதும் இந்தியா வெல்ல.

நான் டி,விலை இல்ல கம்ப்யூட்டரை சும்மா நோண்டுகின்றேன் ...எட்டிப் பார்க்கப் போனால் திலக்வர்மா அவுட்டயிட்டான்...இனி மச் முடியத்தான்...டி.வி நிற்பாட்ட..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

நான் டி,விலை இல்ல கம்ப்யூட்டரை சும்மா நோண்டுகின்றேன் ...எட்டிப் பார்க்கப் போனால் திலக்வர்மா அவுட்டயிட்டான்...இனி மச் முடியத்தான்...டி.வி நிற்பாட்ட..

டிவிக்கு சேதம் இல்லை, வாங்கோ வெண்டிட்டியள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

டிவிக்கு சேதம் இல்லை, வாங்கோ வெண்டிட்டியள் 😂

மிக்க நன்றிங்க....உங்க மந்திரம்...எனக்காகிவிட்டது ...சஞ்சு ..மலையாளியல்லே...லேசாக அசைக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்தி கடைசி நேரத்தில் வென்றுவிட்டது. தாங்கள் கோப்பையை தூக்க வேண்டும் எனும் உள் நோக்கத்துடன் அரை இறுதி போட்டிகளை தமது மண்ணில் வைத்து உள்ளார்கள். இறுதி போட்டியும் அங்கு தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் அதிரடியான 73 (43 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் டெவால்ட் பிறெவிஸின் விளாசலான 42 (18 பந்துகள்) ஓட்டங்களுடன், றயான் றிக்கெல்டனின் வேகமான 31 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும் , ஜோர்ஜ் லிண்டியின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா மற்றும் இன்றைய போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, றொஸ்டன் சேஸின் வேகமான 40 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 37 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 34 (19 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் நிதானமான 32 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் மின்னல்வேக 27 (12 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 97 (50 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வேகமான 27 (15 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவானது.

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

மிக்க நன்றிங்க....உங்க மந்திரம்...எனக்காகிவிட்டது ...சஞ்சு ..மலையாளியல்லே...லேசாக அசைக்க முடியாது

சஞ்சு கிறீஸ்தவ மாடுதின்னி என்பதால் அவரை முடிந்தவரை ஒதுக்கி வைத்தார் சங்கி கம்பீர்.

தொடர் சொதப்பலால் பிரெஷர் அதிகமாகி சாம்சனை வேண்டா வெறுப்பாக அணியில் சேர்த்தார்.

இண்டைக்கு சாம்சன் இல்லாவிட்டால் இந்தியா வீட்டை.

அதுவும் ஆட்ட முடிவில் முட்டுகாலிட்டு சஞ்சு செலிபிரேட் பண்ணியது, மைதானத்தில் வந்து “ஜெய் ஶ்ரீராம்” கோசம் போடும் காவாலிகளுக்கு செம்ம கடுப்பை கொடுத்திருக்கும்😂.

என்னதான் சப்பாத்திகள் உருட்டினாலும் உலக கோப்பையை வெல்ல மாட்டுகறி தேவை (பதான்ஸ், சஞ்சு, சிக்கா, ஷமி).

இந்திய வெண்டது சோகம் எண்டாலும் இப்படி சில சின்ன சந்தோசங்கள், எனக்கும் புள்ளி வேற எனவே அதிக சோகம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்:

large.IMG_5826.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

Error

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2026 at 20:39, goshan_che said:

புர்ஜ் கலிபா பில் ஏறி பார்த்தால் - உச்ச மாடியில் ஒரு தங்க vending machine இருக்கும் - அதில் எனக்கு ஒரு பிஸ்கெட் வாங்கி வரவும்😂

உங்களுக்காக இன்று 154 மாடிக்குப் போய் வெண்டிங் மெஷினைத் தேடினேன்.. காணவில்லை. வெளியே பல்கனியில் நின்று கீழே உள்ள கட்டடங்களைப் பார்த்தபோது ஒரு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. துறைமுகத்தில் தாக்குதல் நடந்தது என்று நினைக்கின்றேன்!

கீழே 148 மாடியில் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்தேன்.. ரவுண்டான பிஸ்கட்! தங்கம் என்று உரசிப் பார்க்கவா முடியும்!

large.IMG_5812.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சஞ்சு கிறீஸ்தவ மாடுதின்னி என்பதால் அவரை முடிந்தவரை ஒதுக்கி வைத்தார் சங்கி கம்பீர்.

தொடர் சொதப்பலால் பிரெஷர் அதிகமாகி சாம்சனை வேண்டா வெறுப்பாக அணியில் சேர்த்தார்.

இண்டைக்கு சாம்சன் இல்லாவிட்டால் இந்தியா வீட்டை.

அதுவும் ஆட்ட முடிவில் முட்டுகாலிட்டு சஞ்சு செலிபிரேட் பண்ணியது, மைதானத்தில் வந்து “ஜெய் ஶ்ரீராம்” கோசம் போடும் காவாலிகளுக்கு செம்ம கடுப்பை கொடுத்திருக்கும்😂.

என்னதான் சப்பாத்திகள் உருட்டினாலும் உலக கோப்பையை வெல்ல மாட்டுகறி தேவை (பதான்ஸ், சஞ்சு, சிக்கா, ஷமி).

இந்திய வெண்டது சோகம் எண்டாலும் இப்படி சில சின்ன சந்தோசங்கள், எனக்கும் புள்ளி வேற எனவே அதிக சோகம் இல்லை.

King of conspiracy என்டு சொல்லுவாங்கள். இப்பிடி போட்டுத் தள்ளுறியலே. முடியல. 😉

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

உங்களுக்காக இன்று 154 மாடிக்குப் போய் வெண்டிங் மெஷினைத் தேடினேன்.. காணவில்லை. வெளியே பல்கனியில் நின்று கீழே உள்ள கட்டடங்களைப் பார்த்தபோது ஒரு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. துறைமுகத்தில் தாக்குதல் நடந்தது என்று நினைக்கின்றேன்!

கீழே 148 மாடியில் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்தேன்.. ரவுண்டான பிஸ்கட்! தங்கம் என்று உரசிப் பார்க்கவா முடியும்!

large.IMG_5812.jpeg

நான் 2012 இல் போன போது உச்ச மாடியில் இருந்தது. நீங்கள் வருவதை அறிந்து பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பார்கள் போலும்😂.

  • கருத்துக்கள உறவுகள்

WIவீரர்கள் இலகுவாகத்தடுக்கக் கூடிய பல பவுண்டரிகளை தடுக்காமால் ஏனோதானே என்று விட்டார்கள். இந்தியா செமிபைனலுக்கு வராவிட்டால் ICCக்கு வருமானம் படுத்து விடும் என்று செய்தார்களா என்று சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

1 hour ago, goshan_che said:

சஞ்சு கிறீஸ்தவ மாடுதின்னி என்பதால் அவரை முடிந்தவரை ஒதுக்கி வைத்தார் சங்கி கம்பீர்.

இது இந்திய அணியில் எப்போதும் நடப்பதுதான் அவர்களுக்கு கபில்தேவ் தலைமையில் முதல் உலகப் கோப்யை வென்றதையே இன்னும் சகிக்க முடியாமல் இலருக்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணியில் தமிழர்களுக்கும் இடம் உன்டு. ஆனால் இலங்கை அணியில் சிங்களவர்களைத்தவிர யாருக்கும் இடம் இல்லை.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புலவர் said:

WIவீரர்கள் இலகுவாகத்தடுக்கக் கூடிய பல பவுண்டரிகளை தடுக்காமால் ஏனோதானே என்று விட்டார்கள். இந்தியா செமிபைனலுக்கு வராவிட்டால் ICCக்கு வருமானம் படுத்து விடும் என்று செய்தார்களா என்று சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

இது இந்திய அணியில் எப்போதும் நடப்பதுதான் அவர்களுக்கு கபில்தேவ் தலைமையில் முதல் உலகப் கோப்யை வென்றதையே இன்னும் சகிக்க முடியாமல் இலருக்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணியில் தமிழர்களுக்கும் இடம் உன்டு. ஆனால் இலங்கை அணியில் சிங்களவர்களைத்தவிர யாருக்கும் இடம் இல்லை.

கபில்தேவ் இந்து மதத்தினை பின்பற்றுபவர். பஞ்சாபி இந்து மதத்தை சேர்ந்த Khatri சமூகத்தை சேர்ந்தவர்.

இந்தியா அணியில் இஸ்லாமியர்கள் அணித்தலைவர்களாக இருந்துள்ளார்கள். முகமத் அசாருதீன், மன்சூர் அலிகான் patudi , இஃப்திகார் அலி கான் படௌடி

80 களில் கவாஸ்கர் தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் அணித்தலைவர் கவாஸ்கரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக 3 வது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து கபில்தேவ் நீக்கப்பட்டார் . அப்போட்டியில் கபில்தேவுக்கு பதிலாக அசாருதின் சேர்க்கப்பட்டார். இதுதான் அசாருதீனின் முதல் போட்டி. முதல் 3 போட்டிகளிலும் 100 ஓட்டங்கள் அசாருதீன் எடுத்தார். இந்த சாதனை இன்னும் முறியடிக்கபடவில்லை. கபில்தேவ் 3 வது போட்டியில் விளையாடி இருந்தால் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் விளையாடியவர் என்ற சாதனையில் இருந்திருப்பார்.

90 களில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்தியா அணி தோல்வியுடன் திரும்பியது. அணித்தலைவர் அசாருதினை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கும்படி குரல் எழும்பப்பட்டது. கபில்தேவ் மீண்டும் அணித்தலைவராக வர வேண்டும் என ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டன. அக்காலத்தில் இந்தியாவின் பிரதமர் நரசிம்மராவ். அசாருதினுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்தியா வந்த இங்கிலாந்து 3-0 என்று தோல்வி அடைந்தது. இந்தியா உள்ளூரில் தொடர்ச்சியாக வெற்றிமேல் வெற்றி பெற்றது. கபில்தேவ் அவர்களை அணியில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என சிலர் (அசாருதீன் உட்பட) விரும்பினார்கள். நியூசிலாந்தின் ரிச்சாட் கார்ட்லியின் அதிக டெஸ்ட் விக்கேட்டுக்கள் எடுத்தவர் என்ற சாதனையை முறியடித்தபின்பு கபில்தேவ் ஓய்வு பெற்றார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.