Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டி நடாத்துபவரின் விதிகளுக்கமைய போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பு நடாத்தும் உரிமை கிடையாது! அத்தோடு விதி 240, துணை விதி 3034, உபவிதி 1003 இன்படி போட்டி நடாத்துபவரின் அதிகாரங்களுக்கு அமைய ஏற்கனவே குறிக்கப்பட்ட வகையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்🤪

அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!

UrA_NC.gif

  • Replies 2k
  • Views 64.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!

UrA_NC.gif

ஓமோம். அதுக்குள்ள தலை"விதி" யும் ஒன்று. அந்த விதியின்ர இலக்கம் தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டி நடைபெறப் போகும் வேளை, களம் இவ்வளவு அமைதியாக் கிடக்கு.

ஒருத்தருக்கும் இரண்டு நாடுகளையும் பிடிக்காதோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முன்னால் வீரர்கள் இந்தியா இப்போட்டியில் மிக இலகுவாக வென்றுவிடும் என கூறியுள்ளனர், இந்தியணியின் நம்பிக்கை உயர்வாகவுள்ளது.

இவ்வாறான கருத்துக்களை பார்க்கும் போது இன்றைய இறுதி போட்டி ஒரு பக்க சார்பான (இந்திய) போட்டியாக மாறவாய்ப்புள்ளது போல காணப்படுகிறது.

நியுசிலாந்து பார்வையாளர்களை ஏமாற்றி விடக்கூடாது, ஒரு தரமான கடும் போட்டியினை இந்தியாவிற்கு வழங்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

இறுதிப் போட்டி நடைபெறப் போகும் வேளை, களம் இவ்வளவு அமைதியாக் கிடக்கு.

ஒருத்தருக்கும் இரண்டு நாடுகளையும் பிடிக்காதோ.

அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம்

வந்தாச்சா....வாங்க ..வாங்க ..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம்

இன்றைய போட்டி இந்தியாவிற்கு சார்பான ஒரு பக்க போட்டியாக இருக்கும் என அனைத்து இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் முன்னால் வீரர்களும் கூறுகிறார்கள்.

இப்பவே வெற்றியினை கொண்டாடுகிறார்கள், போட்டி உப்பு சப்பில்லாமல் போய்விடுமோ என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இன்றைய போட்டி இந்தியாவிற்கு சார்பான ஒரு பக்க போட்டியாக இருக்கும் என அனைத்து இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் முன்னால் வீரர்களும் கூறுகிறார்கள்.

இப்பவே வெற்றியினை கொண்டாடுகிறார்கள், போட்டி உப்பு சப்பில்லாமல் போய்விடுமோ என கருதுகிறேன்.

இதுதான் அவர்களுக்கு மிக அழுத்தத்தைக் குடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம்

சுகமா வீட்ட வந்து சேர்ந்தாச்சு போல.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!

UrA_NC.gif

பேசாமல் நம்பிக்கை இல்லாத் தீரடானத்தை கொண்டு வர வேண்டியது தான்.காரனத்துக்கா பஞ்சம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

வருண் சக்கரவர்த்தியின் தடுமாற்றம்

By ஆர். அபிலாஷ் March 05, 2026

AVvXsEjNopok4iHGhESj6ZVxGN1mDYALdw09IM55

வருண் சக்கரவர்த்தியை எதிரணி மட்டையாளர்கள் அடித்துப் பிளப்பதைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா நமக்கெதிராக டி20 தொடரை ஆடினார்கள். அப்போதே இதற்கான முயற்சியை தொடங்கினார்கள். ஆனாலும் அப்போது வருண் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகள் எடுத்ததால் அவர் அடிவாங்கியது பெரிதாகத் தெரியவில்லை. இந்த உலகக்கோப்பையிலோ வருணுக்கு விக்கெட்டுகளும் விழவில்லை. அவர் வந்ததுமே சிக்ஸர்களாக அடிக்கிறார்கள். அவர் முகமும் பார்க்க ஏதோ வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாவி மாணவனைப் போல மாறிவிடுகிறது.

அணித்தலைவர் சூரியகுமாரால் இந்த ஆட்டப்பகுதியைக் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை, விக்கெட் எடுப்பதும் அசாத்தியமாகிறது. பும்ரா, அர்ஷதீப்பை சீக்கிரமாகக் கொண்டு வந்தால் இறுதி ஓவர்கள் பாதிக்கப்படும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா போவதால் இந்த ஒரு முக்கியமான கண்ணி அறுபட்டதும் தடுமாறுகிறோம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் எல்லாமே மத்திய ஓவர்களில் அதிக ரன் அடித்தது இதனால்தான்.

வருண் சக்கரவர்த்திக்கு என்னவாயிற்று? அவரது புதிர்மை முன்பு போல இல்லையா? அவரை சுலபத்தில் கணிக்கிறார்களா? இல்லை, வேறொரு அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளார்கள். இது இப்போதைக்கு எதிரணி மத்திய வரிசை மட்டையாளர்களுக்கு கைகொடுக்கிறது.

வருணிடம் ஏகப்பட்ட மாறுபட்ட பந்துகள் உண்டு. ஆனால் இவை குச்சிகளின் பரப்புக்குள் விழுவன. அதாவது மூன்று குச்சிகளையும் விட்டு அவர் வெளியே பந்தை அதிகம் திருப்புவதில்லை. அப்படிச் செய்தாலும் பந்து வெகுவாகத் திரும்புவதில்லை. அவரது வீச்சில் மட்டையாளர்கள் எக்ஸ்டிரா கவர், லாங் ஆபில் அதிகம் கேட்ச் கொடுப்பதை நீங்கள் பார்க்க முடியாது. அவரை முன்பு பெருக்கி (ஸ்வீப்) அடிக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் முழுநீளத்தை விட சற்று குறைநீளத்தில் வேகமாக வீசுவதால் ஒன்று பவுல்ட் ஆனார்கள் அல்லது எல்.பி.டபிள்யு. அல்லது பந்து குச்சிகளுக்கு மேலாகப் போகும். மட்டையில் படாது. அவரது நீளத்துக்கும் வேகத்துக்கும் இறங்கி வருவதும் சுலபம் அல்ல.

அவரை இவர்களால் வாசிக்க இயலவில்லை என்பதால் தடுத்தாடுவதும் சுலபம் அல்ல. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கத்தான் தென்னாப்பிரிக்கர்கள் முதலில் அவரை நேராக அடிக்க முயன்றார்கள். அதாவது அவரை ஒரு உள்வரும் பந்து வீச்சாளராக ஆடினார்கள். குச்சிகளைக் காட்டிவிட்டு நின்று நேராகவோ மிட்விக்கெட் பகுதியிலோ தூக்கி அடித்தார்கள். பின்னங்காலுக்குப் போய் புல் ஷாட் ஆடினார்கள். அல்லது கட் அடித்தார்கள். வருண் பயந்து போய் பந்தை முழுநீளத்தில் வீச சிலர் ரிவர்ஸ் ஸ்வீப், லேப் அடித்தார்கள். அவர் பந்தை வெளியே கொஞ்சம் வீச அவர்கள் அங்கிருந்து வாரி எடுத்து லாங் ஆன் பகுதியில் சிக்ஸர் அடித்தார்கள். இந்த உலக்கோப்பை சூப்பர் எய்ட்ஸின் போது எதிரணி மட்டையாளர்கள் அடித்த இந்த குறிப்பிட்ட சில ஷாட்கள் சிக்ஸர்கள் போன போது வருண் கடும் அழுத்தத்திற்கு ஆளானார். அவர் மேலும் மேலும் குறைவான நீளத்தில் வீசுவதால் அவருக்கு விக்கெட்கள் விழுவதும் இல்லாமல் போனது. அவரது மாறுபட்ட பந்துகள் சுழல்வதை நிறுத்தின.

அதாவது வருணை தடுத்தாட முடியாமல் எதிரணியினர் சிக்ஸர் உத்தியைக் கையில் எடுக்க அது வருணை நிலைகுலைய வைக்கிறது. வருண் இதைச் சரி செய்ய முதலில் சிக்ஸர்களைத் தடுத்து அவர்களை ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் எடுக்க வைக்க வேண்டும். வருணின் பந்துகள் ஒரு கால்சுழரைப் போல வெகுவாக வெளியே சுழல்வதில்லை. அவர் கிட்டத்தட்ட கும்பிளேயைப் போல வீசுபவர். முன்பு கும்பிளேயையும் இப்படித்தான் சில மட்டையாளர்கள் நின்ற வாக்கில் நேராக சிக்ஸர் அடித்தார்கள். பின்னுக்குப் போய் கட் அடித்தார்கள். கும்பிளே தன் கால்சுழல் பந்திலும் நீளத்திலும் கவனம் செலுத்தி சமாளித்தார். இப்போது அவர் வருணுக்குப் பரிந்துரைப்பதும் இந்த உத்தியைத்தான். எனக்கு அது எடுபடாது எனத் தோன்றுகிறது.

வருண் தன் பந்து வீச்சின் முறைமையை மாற்றி மீண்டு வருவதற்கான கால அவகாசம் இல்லை. அதற்குப் பதிலாக அவர் கால் பக்கமாக மட்டையாளர்களை இலக்காக்க வேண்டும் என நினைக்கிறேன். அதாவது மிதவைப் பந்துகள், கால்சுழல் பந்துகளை நடு மற்றும் கால் குச்சிகளை நோக்கி வீசி அதற்கு ஏற்ப லாங் ஆன், டீப் மிட் விக்கெட், பைன் லெக், நேரான களத்தடுப்பாளர்களை வைத்து எதிர்மறையாக வீச வேண்டும். அப்போதும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார்கள். ஆனால் அதைக் குறித்து அவர் அதிகம் கவலைப்படக் கூடாது. வேண்டுமென்றால் கவர் பகுதியில் இருந்து ஒருவரை எடுத்து ஸ்வீப்பில், பாயிண்டில் வைக்கலாம். அந்த ஷாட்டில் எப்படியும் ரிஸ்க் உள்ளது. பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனால், நின்று வந்தால் விக்கெட் கிடைக்கும். அடுத்த சில போட்டிகளில் வருண் எல்.பி.டபிள்யு, பவுல்டை மறந்துவிட வேண்டும். காலில் விழும் பந்துகளை நேராக அடிப்பது சிரமம். மட்டையை வீசுவதற்கான இடமும் கொடுக்காவிட்டால் மிட்விக்கெட், நேரான சிக்ஸர்கள் வருவதும் குறையும். பந்து அதிகமாகச் சுழலும்போது மட்டும் அவர் பழையபடி குச்சிகளுக்கு நேராக வீசலாம். ஒன்றிரண்டு சிக்ஸர்கள் போனாலும் விக்கெட் விழும்.

இந்த உத்தியைத் திறம்படக் கையாள்பவர் சுனில் நரைன். அவர் பந்தை வெளியே தூக்கி அடிப்பதற்கான இடத்தையே தர மாட்டார். எல்லா பந்துகளும் கால்பக்கமாகவே போகும். வருண் அவரது ஐ.பி.எல் பந்துவீச்சை கவனித்தாலே பெரிய திறப்பாக அது அமையும்.

இப்போதைக்கு சிக்ஸர் போனதும் வருண் வெளியே வைடாக, குறைநீளத்தில், முழுநீளத்தில் என என்னென்னவோ முயல்கிறார். இந்த முயற்சிகள் அவரைப் பலவீனப்படுத்த அதிகமாக அடிவாங்குகிறார். அவர் குழப்பத்தில் இருக்கிறார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் தன் திசையை மாற்றுவதுதான். செய்வாரா என இறுதிப் போட்டிவரை காத்திருந்து பார்க்கலாம்.

இப்போதைக்கு துணிச்சலான இந்த அணுகுமுறையைக் கொண்டு வருணின் ஆட்டத்தை நிர்மூலமாக்கிய எதிரணி மட்டையாளர்களை, அவர்களுடைய வியூக அமைப்பாளர்களை, பயிற்சியாளர்களை, பகுப்பாய்வாளர்களை, புள்ளியியலாளர்களைப் பாராட்ட வேண்டும். சபாஷ்!

https://www.writerabilash.in/2026/03/blog-post_5.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

சுகமா வீட்ட வந்து சேர்ந்தாச்சு போல.

சுகமோ, சுகமில்லையோ வீட்டுக்கு வந்தாயிற்று.. விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.