Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண் திறக்கும் பிரித்தானிய ஊடகங்கள்!

Featured Replies

நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 7.35 மணியளவில் "Channel4" தொலைக்காட்சியானது "Unreported World", இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைக்கும்பல்கள், காணாமல் போவோர், கடத்தப்படுவோர், ஒட்டுக்கும்பல்களின் படுகொலைகள் என பல பக்கங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக் காட்டியது.

குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாழ்வியல், சிங்களப் படைகளினால் எவ்வாறு நாசம் செய்யப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலின் கோர முகங்கள், கிழக்கு மக்களின் குரல்களின் மூலமே அம்பலப்படுத்தியது. கிழக்கில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம், அங்கு ஒட்டுக்கும்பல் கருணாவிற்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போன்ற தோற்றப்பாட்டை சிங்கள இனவெறி அரசு உலகிற்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த போலி முகத்திரையை தோலுரித்தும், கருணா ஒட்டுக்கும்பலினால் நடாத்தப்படும் கோரங்களைக் கோடிட்டுக் காட்டியதோடு, இன்று பிரித்தானியாவில் மாட்டுப்பட்டிருக்கும் கூலி கருணா, சட்டத்திலிருந்து தப்ப முடியுமா? என்ற கேள்விக்கு பலருக்கு தெளிவாக பதிலளித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இன்று பிரபல பத்திரிகையான "Guardian" தமிழ்ச்செல்வனின் சில நினைவுகளைத் தாங்கியும் வந்திருக்கிறது.

ஆனால் பிபிசியில் மட்டும், அங்கு ஊடுருவியிருப்பதாக நம்பப்படும் இந்திய புலனாய்வுத்துறை "றோ" பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு காரணாமும் இருப்பதாக இங்கு பலர் கதைக்கிறார்கள். பிபிசியில் செய்திப்பிரிவில் இருக்கும் ஓர் தமிழரே இங்கு எமக்கு எதிரான பல நடவடிக்கைகளில் இலங்கைத்தூதரகத்துடன் இணைந்து ஈடுபடுவதாகக் கதை. ஜோச்சுகளுக்கு அழகானவரான இவரே, பிரித்தானியாவில் பிபிசி கிளப்பிய "கிரடிட் காட்" மோசடியின் சூத்திரதாரி என்றும் சிலர் கதைக்கிறார்கள்.

"அடி மேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்" என்பார்கள். நாம் எடுக்கும் முயற்சிகளிலேயே புலத்திலுள்ள ஊடகங்களில். எம்மவலங்களை உலகிற்கு கொண்டு வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று புலம்பெயர் எம்மவர்களுக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் எதைத் தட்டுவது என்பது தான் என்னும் புரியவில்லை.

சோழன் சொல்வது போல எமக்குள்ளேயே போராட்டம் பற்றிய பிரச்சாரத்தை விட்டு விட்டு, அது அனைத்து மொழிகளுக்கும் அறிவிப்பதற்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அது தான் எமக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலும் சரி, பிற நாடுகளிலும் சரி, ஊடகங்கள் வலது, இடது என்ற கொள்கைகளுடன் உள்ளன. எனவே எல்லா ஊடகங்களும் கண்திறக்கப்போவதில்லை. 2 இலட்சம் தமிழர்கள் வாழ்வதாகச் சொல்லும் பிரித்தானியாவில் தமிழர்களின் உரிமைக்குக் குரல்கொடுக்கச் செய்ய ஊடகங்களைத் தூண்டமுடியாமல் இருப்பது பரிதாபமான நிலைதான்.. தமிழர்களுக்குக் குரல் கொடுக்க இங்கு வாழும் சிறுபான்மையினரைக் கூட அணிதிரட்ட முடியாத பலவீனமான நிலையில் இருப்பதால்தான் தாயகத்தில் பேரழிவுகளைச் சிங்களவர்கள் துணிவாகச் செய்கின்றனர்..

கள்ளக் காட் பிசினசில் மாட்டுப்பட்டு கம்பி எண்ணுபவர்கள் அதிகரிக்கின்றார்கள்.. பிடிபடாமல் "சுளுவாக" இருக்கிறவர்கள் இன்னும் தைரியம் அடைகின்றார்கள். இதற்கெல்லாம் அழகையாவைக் குற்றம் சுமத்திப் பிரயோசனமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு சம்மந்தம் இல்லாத ஒரு கேள்வி.

வலதுசாரி இடதுசாரி எண்டு யாரை சொல்றது. இவ்வளவு நாளும், வலதுசாரி எண்ணடால் ஆதரவானவர்கள் என்றும் இடதுசாரி என்றால் ஆதரிக்காதவர்கள் என்றும் நினைத்திருந்தேன். அது தவறுபோல இருக்கு... அதுதான் கேக்கிறேன்.

பொதுவாக பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டோர்களையும் மாற்றங்களைப் பெரிதாக விரும்பாதவர்களையும் வலது சாரிகள் என்று கொள்ளலாம். தொழிலாளர்/பாட்டாளி/சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளைக் கொண்டோர்களை (உ.ம். கம்மூயுனிசம்) இடது சாரிகள் என்போர்.

குறிப்பு: வலது எப்போதும் பலமானது/அதிகாரமானது, இடது பலவீனமானது/அதிகாரமற்றது.

மனிதர்களில் அதிகம் பேருக்கு வலது கை/கால் உறுதியானது.

பெண்கள் ஆணை விடப் பலவீனமானவர்கள் என்று கருதப்படுவதால் ஆணுக்கு இடப்பக்கமாக அமர/நிற்கச் சொல்வார்கள்!

கள்ளக் காட் பிசினசில் மாட்டுப்பட்டு கம்பி எண்ணுபவர்கள் அதிகரிக்கின்றார்கள்.. பிடிபடாமல் "சுளுவாக" இருக்கிறவர்கள் இன்னும் தைரியம் அடைகின்றார்கள். இதற்கெல்லாம் அழகையாவைக் குற்றம் சுமத்திப் பிரயோசனமில்லை..

நீங்கள் மிகவும் குழம்பிப்போயிருக்கிரீங்களு

  • கருத்துக்கள உறவுகள்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று புலம்பெயர் எம்மவர்களுக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் எதைத் தட்டுவது என்பது தான் என்னும் புரியவில்லை.

சோழன் சொல்வது போல எமக்குள்ளேயே போராட்டம் பற்றிய பிரச்சாரத்தை விட்டு விட்டு, அது அனைத்து மொழிகளுக்கும் அறிவிப்பதற்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அது தான் எமக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

இரண்டும் சமாந்திரமாகச் செல்ல வேண்டும். எமது மொழியில் எமது மக்களுக்கும் பிறமொழிகளில் மற்றைய மக்களுக்கும் செய்யப்படும் பிரச்சாரங்களே எமது மக்களை பிற மக்களுக்கு மேலும் விடயங்களை தெளிவுற எடுத்துச் செல்ல உதவும். எமது மக்களின் விடய அறிவு கீழ் மட்டத்தில் இருக்க பிற மக்களுக்கு நிகழ்வுகள் பற்றி அறிவை மட்டும் ஊட்டிட்டு இருப்பதிலும் அர்த்தமில்லை. இரண்டும் சமாந்திரமாகச் செல்லும் போதே தொய்வின்றி பிரச்சார வெற்றிகளை தொடர்சியாக ஈட்ட முடியும்..! பிரச்சாரத்தில் மக்களின் பங்களிப்புகளையும் அதிகரிக்க முடியும்..!

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் மிகவும் குழம்பிப்போயிருக்கிரீங்களு
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்கியையும் இந்தியையும் நம்பியிருந்தவை இப்ப எங்கையோ சறுக்குது போலை!!!!! சோழியன் குடும்பி சும்மா ஆடாதாமெல்லே?????

சிப் & பின் தான் மிக இலகுவானது என்றும், CCTV கமரா போட்டு பின் எடுக்கிறதில நம்மட ஆட்கள் நல்லா முன்னேறிவிட்டார்கள்

இல்லை! :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை! :)

அப்படியானால் முன்பு "தொழில்" செய்தவர்கள் எல்லாம் தற்போது முதுகு முறியத் தும்படிக்கிறார்களா அவர்களுடைய வழமையான அளவுக்குமீறிய செலவுகளைப் பார்க்க! :)

ஆனால் பிபிசியில் மட்டும், அங்கு ஊடுருவியிருப்பதாக நம்பப்படும் இந்திய புலனாய்வுத்துறை "றோ" பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு காரணாமும் இருப்பதாக இங்கு பலர் கதைக்கிறார்கள். பிபிசியில் செய்திப்பிரிவில் இருக்கும் ஓர் தமிழரே இங்கு எமக்கு எதிரான பல நடவடிக்கைகளில் இலங்கைத்தூதரகத்துடன் இணைந்து ஈடுபடுவதாகக் கதை. ஜோச்சுகளுக்கு அழகானவரான இவரே, பிரித்தானியாவில் பிபிசி கிளப்பிய "கிரடிட் காட்" மோசடியின் சூத்திரதாரி என்றும்

உண்மையான கதை அது அல்ல...

சில காலத்துக்கு முன்னம் கொஞ்சப்பேர் கிறடிட் காட் மோசடியில் சிக்கி கையும் களவுமாய் அகப்பட்டு பிணையில் கூட வரமுடியாத அளவுக்கு கொள்ளை அடித்து இருந்தவர்கள் உள்ளை இருந்தார்கள்...

அவர்களை வெளிய்யாலை கொண்டுவர சொலிசிட்டர்( பரிஸ்ரர்)) ஒருவர் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒரு பொய்யை சொல்ல சொல்லி குடுத்து அவர்களை சிறிய தண்டனையோட வெளியாலை எடுத்தவர்களாம்... அந்த கள்ள காட் கும்பல் குடுத்த வாக்குமூலம் என்ன எண்டால் " புலிகள் எங்களின் உறவுகளை ஊரிலை பணயமாக வைத்து கொண்டு எங்களை அடயாள மோசடி வளிகளில் பணம் ஈட்டி (கிறடிட் காட் உட்பட) அவர்களுக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள்" இதை வைச்சு கொண்டுதான் BBC யும் பொலிசாரும் தகவல் வெளியிட்டார்கள்..... ( தொடர்ந்து எங்களவர் பலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் புலிகள் தூண்டினார்கள் எண்று சொல்ல இப்ப எல்லாம் பொலீசார் உசர் ஆகி இருக்கிறார்கள் என்பது வேற கதை)

எங்களின் கடை , கறாச் உரிமையாளர்கள் எல்லாம் கடுமையான எதிர்ப்பை கடிதங்களாகவும் , வளக்கறிஞ்ர் மூலமும் (பலர்) அனுப்பியதுக்கு வருத்தம் தெரிவித்து பதில் (சிலருக்கு) அனுப்பி இருக்கிறார்கள்...

இல்லை உந்த பி.பிசி தமிழோசை காரர் பரிசில் நடந்த அத்தியடியானின் சாதிகூட்டம் எல்லாம் செய்தியா எடுத்து பேட்டி எல்லாம் கேட்டு போடுகினம். உந்த சீவகன் இருக்கும் வரை தமிழோசை உருப்படாது.

போற போக்கில் உங்க நடக்கிற ஊர்ச்சங்களின் கூட்டமும் நேரடியாக நேரடியாக ஒளிபரப்பும் போல கிடக்கு.

கண்டபடி கதைக்காதேங்கோ.

Edited by நேசன்

உண்மையான கதை அது அல்ல...

சில காலத்துக்கு முன்னம் கொஞ்சப்பேர் கிறடிட் காட் மோசடியில் சிக்கி கையும் களவுமாய் அகப்பட்டு பிணையில் கூட வரமுடியாத அளவுக்கு கொள்ளை அடித்து இருந்தவர்கள் உள்ளை இருந்தார்கள்...

அவர்களை வெளிய்யாலை கொண்டுவர சொலிசிட்டர்( பரிஸ்ரர்)) ஒருவர் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒரு பொய்யை சொல்ல சொல்லி குடுத்து அவர்களை சிறிய தண்டனையோட வெளியாலை எடுத்தவர்களாம்... அந்த கள்ள காட் கும்பல் குடுத்த வாக்குமூலம் என்ன எண்டால் " புலிகள் எங்களின் உறவுகளை ஊரிலை பணயமாக வைத்து கொண்டு எங்களை அடயாள மோசடி வளிகளில் பணம் ஈட்டி (கிறடிட் காட் உட்பட) அவர்களுக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள்" இதை வைச்சு கொண்டுதான் BBC யும் பொலிசாரும் தகவல் வெளியிட்டார்கள்..... ( தொடர்ந்து எங்களவர் பலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் புலிகள் தூண்டினார்கள் எண்று சொல்ல இப்ப எல்லாம் பொலீசார் உசர் ஆகி இருக்கிறார்கள் என்பது வேற கதை)

எங்களின் கடை , கறாச் உரிமையாளர்கள் எல்லாம் கடுமையான எதிர்ப்பை கடிதங்களாகவும் , வளக்கறிஞ்ர் மூலமும் (பலர்) அனுப்பியதுக்கு வருத்தம் தெரிவித்து பதில் (சிலருக்கு) அனுப்பி இருக்கிறார்கள்...

தயா !!

இப்படியாக சுயநலம் உள்ள சில நபர்கள் ஒரு சமூகத்தின் மீதான பாரமே. இவர்களின் சுமைகளையும் நல்லவர்களே சுமக்க வேண்டியுள்ளது.

இன்னொன்றை கவனித்தீரா? பெரும்பாலான இனக் குழுமங்கள் தத்தம் "பொது நலத்தின் மீதான சுயநலத்தை" கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழர்களில் "சுயநலத்தின்மீதான பொதுநலம்" என்பதே பொதுவாக தெரிகிறது. இது ஆபத்தானதும் கூட. என்னுடைய அவதானிப்பு முற்றுமுழுதாக சரியா என தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில், இவ்வாறானவர்களின் சிந்தனைகளை திசைதிருப்ப வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினாலும் தகும்....! ஒட்டு மொத்த தமிழனின் எழுச்சிக்கு தடையாக இருப்பவர்களை கடுமையாக தண்டிப்பதில் தவறு இல்லை... காரணம் சுயநலம் கொண்ட அவர்களை திருத்துவது கடினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.