Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!

சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன்.

நன்றி - யூரூப்

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

(லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் எப்போதும் தனது நலன்களை முன்னிலைப்படுத்தியே செயற்படும் என்று கூறும் வேலன் அவர்கள், அதே சர்வதேச சமூகத்திடம் தங்களது போராட்டத்தை எடுத்துச் சென்று, அதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துவது எனக்குப் புரியவில்லை. சர்வதேசம் நலன் மட்டுமே பார்க்கும் என்றால், அதிலிருந்து நமக்கான நியாயம் எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி என்னிடம் எழுகிறது.

தான்காவி உடுத்திய துறவிஎன வேலன் அவர்கள் கூறுகின்றார். துறவி என்பவர், உலகியல் ஆசைகளைத் துறந்தவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் அரசியல் ஆசையும் அதிலிருந்து விலகியிருக்க வேண்டாமாஇங்கே பட்டினத்தார் கதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை வயல் வரப்பில், தலைக்கு கை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பட்டினத்தாரைக் கண்ட இரண்டு பெண்களில் ஒருவர், “பார், துறவி எவ்வளவு சுகமாக படுத்திருக்கிறார்என்று கூறினாராம். அந்த வார்த்தை பட்டினத்தாரின் காதில் விழுந்ததும், “இன்னும் நான் துறக்க வேண்டியது நிறைய இருக்கிறதுஎன்று உணர்ந்தாராம். அந்தக் கதையின் தொடர்ச்சியை இங்கே விரிவாக எழுதத் தேவையில்லை. அதன் பொருளைப் புரிந்துகொள்ளலாம்.

வேலன் அவர்கள் ஆன்மீகப் பாதையிலேயே நிலைத்து நிற்பது அவருக்கும் சமூகத்திற்கும் உகந்ததாக இருக்கும் என்பதே என் கருத்து. அரசியல் அவருக்கு அவசியமான துறை அல்ல. ஏற்கனவே எங்கள் மதகுருக்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கிடையாது. அந்தச் சூழலில், போராட்டம், அறம், வீரம் என மக்களின் உணர்வுகளைத் தூண்டி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தால், இருக்கிற மதிப்பும் மெல்ல மெல்லக் குறைந்து போகும்.

அதையும் மீறி அரசியலில் ஈடுபடுவேன் என்று  வேலன் அவர்கள் அடம் பிடித்தால், இன்னொருஅர்ச்சுனாஅவதாரம் எடுத்து வருவதற்கான வாய்ப்பை நாம் அடுத்த தேர்தலில் பார்க்கலாம்.

“பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்களில் …”தலைப்பு வேறு ….

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துவ பாதிரியார்கள், பெளத்த துறவிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவை ஆதரிக்கப்படுவதும், வேலவன் சுவாமிகள் என்றதும் அது ஆதரிக்கப்பட முடியாமல் போவதும், சங்கி என பட்டம் கட்டப்படுவதும் போராட்டத்தை எந்த மத துறவி செய்கின்றார் என்பதை பார்த்தே ஆதரவு கொடுக்கப்படுகின்றதா என ஐயம் ஏற்படுகின்றது. வேலவன் சுவாமிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கிறிஸ்தவ துறவிகளுக்கு கூற முடியுமா? பெளத்த துறவிகளுக்கு கூற முடியுமா? தலாய் லாமாவுக்கு கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நியாயம் said:

கிறிஸ்துவ பாதிரியார்கள், பெளத்த துறவிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவை ஆதரிக்கப்படுவதும், வேலவன் சுவாமிகள் என்றதும் அது ஆதரிக்கப்பட முடியாமல் போவதும், சங்கி என பட்டம் கட்டப்படுவதும் போராட்டத்தை எந்த மத துறவி செய்கின்றார் என்பதை பார்த்தே ஆதரவு கொடுக்கப்படுகின்றதா என ஐயம் ஏற்படுகின்றது. வேலவன் சுவாமிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கிறிஸ்தவ துறவிகளுக்கு கூற முடியுமா? பெளத்த துறவிகளுக்கு கூற முடியுமா? தலாய் லாமாவுக்கு கூற முடியுமா?

மதமும் அரசியலும் கலக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தும் (உலாமா சபைக்கும்).

ஆனால் சங்கிகள் தனியே மதம் சம்பந்தபட்டோர் மட்டும் அல்ல, அவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஜென்ம வைரியான இந்திய தேசியத்தின் கூறுகள்.

ஆகவே சங்கிகளை இனம் கண்டு எதிர்ப்பது அரசியல் தத்துவார்த்த ரீதியானது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

தான்காவி உடுத்திய துறவிஎன வேலன் அவர்கள் கூறுகின்றார். துறவி என்பவர், உலகியல் ஆசைகளைத் துறந்தவராக இருக்க வேண்டும்.

புத்த துறவிகளிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பார்.

எனவே துறவிகளையே முதல் திருத்த வேண்டும்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, வேலன் சுவாமிகள் அரசியல் போராட்டம் நடத்தவில்லை, அவரால் வழிநடத்தப்படும் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அதை மீட்க்கும் போராட்டத்தில் அமைதி வழியில் தமது நிலையை தெற்கிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களோடு துணையாக வேலன் சுவாமிகள் நிற்பதில் என்ன தவறு? அப்போ சிங்கள குடியேற்றம், விகாரை கட்டுதல், மக்கள் நிலங்களை அபகரித்தல் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் அவர்களுக்கு இருந்தால், கொடுக்கட்டும் பாப்போம். அந்த சூழலில் உள்ள மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க இவர்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமென்றால் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்கள் இவர்கள்? மக்களின் ஏகோபித்த குரல் நாங்கள் என்று வாக்கு சேர்த்தவர்களும் மக்களோடு இல்லை, மக்களின் தேவைகளை விட அவர்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது? மக்களோடு அவர்கள் பிரச்சனைகளில் அவர்களின் பிரதிநிதிகள் துணையாக நிற்க வேண்டுமோ இல்லையோ? மாகாண சபைத்தேர்தலில் யாரோடு கூட்டுச்சேர்ந்து யாரை வீழ்த்துவது என்று முடிவு செய்வதில் அவர்கள் கவனம். வேலன் சுவாமி போலீசாரை அடித்தாரா? ஆயுதம் தூக்கினாரா? அரசியல்தான் பேசினாரா? அன்று, தூஷண பிக்கர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை கன்னத்தில் அறைந்தபோது இங்கும் சிலர் அவர் செயலை ஆதரித்து கருத்து எழுதியிருந்தார்கள். இன்று சைவ தலைவருக்கு அவமரியாதை நடந்திருக்கிறது, தாக்கப்பட்டிருக்கிறார் அதுவும் சரியென்கிறார்கள். பௌத்த துறவி அரசியல் பேசுகிறார், சண்டித்தனம் செய்கிறார், நிலங்களை அபகரிக்கிறார், சட்டத்தை மீறுகிறார், அதை கண்டிக்க முடியவில்லை, தாக்கப்பட்டவர்களை கண்டிப்பது கோழைத்தனம். சைவ ஆலயங்கள் தகர்க்கப்படுகின்றன, மக்களின் வாழ்விடங்கள் வாழ்வாதாயங்கள் பறிக்கப்படுகின்றன, அதை கேட்பது தவறாம், இது என்ன நிஞாயம் என்று தெரியவில்லை. சரி தவறு என்பது என்றால் என்ன என்பது புரியாதவர்களா? தன் சார்ந்த மக்கள் தாக்கப்படும்போது, அவர்களுக்கு அநிஞாயம் நடக்கும்போது வேலன் சுவாமிகள் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? அப்படியானால் சட்டம் கைகட்டிக்கொண்டு இருப்பதும் சரியே. வேலன் சுவாமியும் இந்த மக்களிடத்தில் இருந்து தோன்றி, மக்களுக்கு சேவை செய்ய, உண்மையை, நிஞாயத்தை, போதிக்க வந்தவரே. அவரும் மக்களோடு அவலங்களை சந்தித்து இடம்பெயர்ந்தவரே. சிங்களத்துக்கு தமிழரில் துறவியும் இல்லை, கிறிஸ்தவன் சைவன் பேதமுமில்லை, எல்லோரும் தமிழர், அழிக்கப்படவேண்டியவர்களே என்பது மட்டுமே அவர்கள் போதிக்கும், சுவாசிக்கும் மதம் பௌத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அவர்களின் பிரதிநிதிகளை விமர்ச்சிக்காதவர்கள், பிக்குகளின் அடாவடிகளை கண்டுகொள்ளாதவர்கள், யாராவது உண்மையின் பக்கம் நின்றால் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். நிஞாயம் என்பது; சந்தர்ப்பத்திற்கு, ஆளுக்கு, பதவிக்கு, இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதில்லை, அது எங்கேயும் எப்போதும் ஒன்றையே பேசும். அதுதான் நிஞாயம் நடுவுநிலைமை!

  • கருத்துக்கள உறவுகள்

அநீதி இழைக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உறுதுணையாக இருப்பதில் தப்பில்லை.

காவி அணிந்தவரெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் என்ற காலம் மலையேறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. யாருடைய சங்கி மங்கி செயல்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.