Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரைக்கெதிராக  போராடியவா்களுக்கு  சொந்தப் பிணை

adminJanuary 5, 2026

r-2.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனா் எனத் தொிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்  தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்  வாதிட்டார்.

“பொதுத் தொல்லை” (Public Nuisance) தொடர்பான சட்டம். இதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்த முடியாது என்றும், காவல்துறையினா் மேலிடத்து உத்தரவின் பேரில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா சாடினார்.

🔍 பின்னணி:
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

612104141_10225510334384464_205955717804



https://globaltamilnews.net/2026/225683/

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.

3 minutes ago, கிருபன் said:

r-2.jpeg?fit=1170%2C658&ssl=1

பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் மற்றவர்களும் வாதாடியதால் வேலன் சாமி நல்ல சந்தோசமா வெளியே வந்து நிற்கின்றார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன

இவற்றிற்கு நீதிமன்றம், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள், அவைதான் இந்தப்பிரச்னைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவும் மாட்டார்கள். போன பௌர்ணமிதினத்தன்று மக்கள் அமைதியாக தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், போலீசார் அவர்களின் கூடாரங்களை பிடுங்கி, அராஜகம் புரிந்தனர். அது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையோ? எப்படியும் நாட்டில் ஒரு இனவன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற மாட்டோமா எனும் நப்பாசையில் ஒருவரும், இவர்களை உசுப்பிவிட்டால் தம் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தாம் தப்பிவிடாலெமென்கிற கனவில் ஊழல்வாதிகளும் பிக்குகளுக்குப்பின்னால் அலைகிறார்கள். முற்றுந்துறந்த துறவிகள் தமிழரின் காணிகளை அடாத்தாக பிடிப்பதற்கு, மண்ணாசை கொண்டு நாட்டை கொழுத்தியே தீருவோமென கொழுத்தாடு பிடிக்குதுகள். இதுகளின்ர காவியை கழட்டி வீட்டுக்கனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

போன பௌர்ணமிதினத்தன்று மக்கள் அமைதியாக தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், போலீசார் அவர்களின் கூடாரங்களை பிடுங்கி, அராஜகம் புரிந்தனர்.

இது நடப்பது நீங்கள் ஆதரிக்கும் அநுரவின் அரசில்த்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இது நடப்பது நீங்கள் ஆதரிக்கும் அநுரவின் அரசில்த்தானே?

நான், அனுரா செய்யும் நல்ல காரியங்களை வரவேற்கும் அதே நேரம் அடாவடிகளை விமர்சிக்கிறேன். நீங்கள் அதை கவனிப்பது இல்லை. இப்போ நான் விமர்ச்சித்த படியினாலேதான் இப்படி ஒரு பதிவை எனக்கெதிராக இட்டிருக்கிறீர்கள். சரி..... இப்ப சொல்லுங்கள், நான் எந்த அரசை வரவேற்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்? மஹிந்தா, கோத்தா, ரணில், மைத்திரி. இவர்களின் ஆட்சியில் இதைவிட மேலாக ஏதும் நடந்ததா? அவர்கள் போட்ட திட்டம், கட்டடங்கள்தானே இவையனைத்தும், அவர்களின் ஆலோசனைப்படிதான் இவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மெல்லெனப்பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சட்டம் அவர்கள் வீட்டுக்கதவை தட்டுமட்டும் அனுராவை விழுத்த அல்லது தமக்கு கீழ் அடிபணிய வைக்க முயற்சிப்பார்கள். அதையேதான் எதிர்கட்சிகள், விசேடமாக நாமல் சூழுரைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kavi arunasalam said:

சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.

1.jpg

நல்லவேளை நீங்கள் இந்த படத்தை இதற்கு முன்பு பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். பார்த்திருந்தால் தமிழர்களை படிக்க வைத்து கல்வியில் முன்னேற்றவே கடந்த ௩௦ வருடமாக சிங்கள இனவாத இராணுவம் போராடியது என்று சொல்லி இருப்பீர்கள்.

சாதாரண மீன் பிடிக்கவே தூண்டலில் ஒரு இரையை மாட்டிடவேண்டி இருக்கு. ஒரு இனத்தை ஏமாற்ற இதுகூட செய்யாவிடின் எப்படி?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.