Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்

தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது.

அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர்  கட்டியமைத்தார்? 

மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது.

மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. 

அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/54835

  • கருத்துக்கள உறவுகள்

எஸ். எல். திருமாவளவன், ஆமைக்கறி புகழ் சீமான் போன்றோர் தலைவர் பலருக்கும் தெரியாத இரகசியங்களைத் தமக்கு மட்டுமே கூறினார் என்று பு.போ.க.க. கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் பல புதுக் கதைகள் கூட வரலாம். வியப்பொன்றுமில்லை.

2 hours ago, கிருபன் said:

மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ஏரம்பு அய்யாவுக்கு பட்டதாரிக் கனவு என்பதுடன் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என ஒரு சில முதியவர்கள் பேசிக்கொண்டதை கேள்விப்பட்டு இருக்கிறன். காதால் கேட்பதுவும் பொய் கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிச்சு அறிவதே மெய் என்றாதால நான் காதால கேட்ட கதை பொய்யாகத் தான் இருக்கும். பிறகு ஏரம்பு அய்யா ஞனஸ்நானம் எடுத்துத் திருந்தீட்டாராக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

**தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி திருமணம் :

அவதூறுகளுக்கு எதிரான வரலாற்று விளக்கம்**

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி, தந்தை பெரியார் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில், தொல். திருமாவளவன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.

அந்த உரையின் 42ஆம் நிமிடத்திலிருந்து 46ஆம் நிமிடம் வரையான
மூன்று நிமிடங்களுக்கு மேலான பகுதியில், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை தான் நேரில் சந்தித்து உரையாடியதாக நினைவுகூர்ந்த திருமாவளவன், அந்த உரையாடலில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதிவதனி அம்மையாரை காதலித்ததையும்,
அதனால் எழுந்த சிக்கல்களையும், அதனைத் தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கைகளையும் பல நிமிடங்கள் தன்னிடம் பேசினார் எனப் பதிவு செய்துள்ளார்.

அந்த உரையில் அவர், “மதிவதனியை நான் காதலித்ததால் அவரது தந்தையே எங்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை” என பிரபாகரன் கூறியதாகவும், மேலும், “இந்த காதலின் காரணமாக வல்வெட்டித்துறையில் 14 பேரை நான் சுட்டுக் கொன்றேன்” என்று தன்னிடம் பிரபாகரன் தெரிவித்ததாகவும்
மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், “மதிவதனி சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் நான் அல்ல என்பதனால் இந்த மண்ணில் என்னைத் தலைவராக ஏற்கத் தயக்கம் இருந்தது; அது காலப்போக்கில் மாறிவிட்டது” என்றும் கூறியதாக, முற்றிலும் பொய்யான ஒரு வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.



அவதூறுக்கு எதிரான விளக்கம்

திருமாவளவனின் இந்த அவதூறுகளுக்கு எதிராக, நான் ஏற்கனவே
எனது கண்டனக் காணொளி மூலம் பதிவு செய்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து, வரலாறு அறியாத பலர் தேசியத் தலைவர் அவர்களின் திருமண வரலாற்றை உண்மையான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டு, அந்தச் சம்பவங்களின் சுருக்கமான ஆனால் துல்லியமான வரலாற்றை இங்கே பதிவாக வழங்குகிறேன்.



1983–84 : மாணவர் போராட்டப் பின்னணி

ஆயுதப் போராட்டம் மும்முரம் அடைந்த 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில்,
சிங்கள தேசமெங்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இதன் காரணமாக, தெற்கு இலங்கையில் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது.

இதனைத் தொடர்ந்து, தெற்கு பல்கலைக்கழகங்களில் பயின்ற தமிழ் மாணவர்கள், “தாம் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே
கல்வியைத் தொடரும் வசதிகளை செய்து தர வேண்டும்” என்று சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், அந்த வேண்டுகோளுக்கு சிங்கள அரசு செவிசாய்க்கவில்லை.



யாழ் பல்கலைக்கழக உண்ணாவிரதம்

இதன் பின்னணியில், 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் நாள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராதனை (Peradeniya) மற்றும்
கடுப்பொத்த (Katupotha) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் நான்கு மாணவிகளுமாக ஒன்பது பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய நிலை உருவானது.

அதோடு, உண்ணாவிரதத்தின் ஆறாம் நாளில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையை எட்டினார்.



இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்

இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
தலையிட்டு, அந்த மாணவ, மாணவிகளை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாதுகாப்பாக அழைத்து இந்தியாவிற்கு கொண்டு சென்றனர்.

இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் முதலில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மாணவர்களில் ஜனகன் மற்றும் படிகலிங்கம் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர்.

மற்ற மாணவர்கள் தங்களது விருப்பப்படி வேறு வழிகளில் சென்றனர்.



மாணவிகள் குறித்து பிரபாகரனின் முடிவு

மாணவிகளை மதுரையிலேயே வைத்திருக்கவும், பயிற்சி முகாம்களுக்கு அனுப்பவும் பிரபாகரன் அவர்கள் விரும்பவில்லை.

எனவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
• மதிவதனி
• வினோஜா
• ஜெயா
• லலிதா

ஆகிய நான்கு மாணவிகளும், திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் தம்பதிகளின் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.



மதிவதனி : பின்னணி

பிரபாகரன் அனுப்பிய நான்கு பெண்களில், “மதி” என அழைக்கப்பட்ட
மதிவதனி அம்மையார், ஒல்லியான உடல் அமைப்பும், வெளிர்ந்த நிறமும், இனிய முகமும், விளையாட்டுத் தன்மையும் கொண்டு அனைவரையும் ஈர்த்தார் என, “The Will to Freedom” என்ற நூலில் அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மதிவதனி அம்மையார், புங்குடுதீவின் மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்து மதத்தைப் பின்பற்றும், பக்தியுள்ள குடும்பத்தில் ஏரம்பு – சின்னம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர்.

அவரது தந்தை கிராமத்தில் “ஏரம்பு மாஸ்டர்” என அறியப்பட்ட ஆசிரியராக இருந்தார்.

இத்தகைய குடும்பச் சூழலில் வளர்ந்ததால், மதிவதனி அம்மையாருக்கு பக்தி, மென்மை, பரிவு, அறிவு இயல்பாகவே இருந்தது; அவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.



கல்வி மற்றும் உண்ணாவிரதம்

கால்நடை மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்றிருந்த அவர், குடும்பத்தின் விவசாயப் பின்னணியின் தாக்கத்தால் வேளாண்மை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலத்திலேயே தமிழ் மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்தபோது, இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர், வீட்டிற்கு திரும்பி பெற்றோருடன் தங்கி இருந்த நிலையில்தான்
உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மதிவதனி அம்மையார், மேலே குறிப்பிட்டபடி திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் இல்லத்திற்கு
வந்து சேர்ந்தார்.



திருவான்மியூர் இல்லத்தின் சூழல்

சமூக அழுத்தங்களுக்கிடையே, அந்த நான்கு பெண்களின் வருகையால்
திருவான்மியூர் இல்லம் மகிழ்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த இடமாக மாறியது. சமையல் பொறுப்பை அந்த நால்வரும் ஏற்றுக்கொண்டனர். பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாண உணவுகளை ரசித்துச் சாப்பிட்டார். பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வருகை தரும் நாட்களில்
சிறப்பான உணவுகளும் தயாரிக்கப்பட்டன.



காதல் உருவான தருணம்

இயல்பாகவே சுறுசுறுப்பும் குறும்புத்தனமும் கொண்ட மதிவதனி அம்மையார், “ஹோலி பண்டிகை” நாளில் வீதியில் மக்கள் ஒருவர்மீது ஒருவர் வர்ணம் கலந்த நீரை ஊற்றுவதை கவனித்தார். அதே “ஹோலி பண்டிகை” நாளில், பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வந்தபோது, மதிவதனி அம்மையார் மஞ்சள் பொடியைக் கரைத்து வைத்திருந்த நீரை, வேறு ஒரு முக்கிய அலுவலுக்காகச் செல்லத் தயாராக வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்திருந்த பிரபாகரன் அவர்கள் கதவைத் திறந்தவுடன் அவர் மீது ஊற்றினார்.

இதனை எதிர்பாராத பிரபாகரன் அவர்கள், இவ்வாறான உரிமையை
தன்னுடன் எவரும் எடுத்துக்கொண்டதில்லை என்பதால் சற்று அதிர்ச்சி அடைந்தார். தனது சட்டையை பயன்படுத்த முடியாத கோபத்தில், மதிவதனியைத் திட்டிவிட்டார். இதனால், மதிவதனி அம்மையார் அழுதுகொண்டே ஓடினார்.

பின்னர், தானும் அவசரப்பட்டு பேசிவிட்டேன் என மனம் நெகிழ்ந்து, தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்திய அந்தக் கணத்தில்தான் காதல் பொறி பிறந்தது. மதிவதனி அம்மையாரின் காதலை பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தினார்.



திருமணத்திற்கான முடிவு

இந்தக் காதல், பிரபாகரனுக்கு அமைப்பிற்குள்ளும் வெளியிலும் சில சிக்கல்களை உருவாக்கியது. சில மூத்த உறுப்பினர்கள், இது ஒழுக்கக் கோட்பாட்டை மீறுவதாக கருதினர்.

அந்தக் கடினமான காலத்தில், பாலசிங்கம் – அடேல் தம்பதிகள் பிரபாகரனுக்குத் துணை நின்றனர். திருமணம் மனித உணர்வுகளுக்குத் தேவையான ஒன்று என்றும், விதிகளில் நெகிழ்வு இருக்க வேண்டும் என்றும்
பாலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். மேலும், திருமணம் ஒரு பொதுவிதியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.



பெற்றோர் சம்மதம்

திருமண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் முன்னர், மதிவதனி அம்மையாரின் பெற்றோருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்களது சம்மதமும் பெறப்பட்டது.

ஆரம்பத்தில், “உன் வாழ்க்கை எப்போதும் அபாயத்தில் இருக்கும்” என்று தந்தை ஏரம்பு எச்சரித்தபோதும், “அவருக்காக உயிர் தியாகம் செய்யத் தயார்”
என்று மதிவதனி அம்மையார் கூறியதை அடுத்து, அவரது தந்தை ஏரம்புவும்
பூரண சம்மதம் தெரிவித்தார்.



திருமணம்

1984ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில், மிக எளிமையான முறையில், மாப்பிள்ளைத் தோழனாக
கே.பி. இருக்க, மதிவதனி – பிரபாகரன் திருமணம் நடைபெற்றது.

இதுவே வரலாறு.



முடிவுரை

இத்தகைய தெளிவான வரலாறு இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தேவைக்காக திருமாவளவன் பேசிய அவதூறுக் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

இந்தியாவின் தமிழ்நாட்டைப் போலவே, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குள் சாதியைச் சாட்டும் கௌரவக் கொலைகள் நிகழாத நிலையில், தமிழ்நாட்டில் கோலோச்சும் சாதிய விஷத்தை உலகத் தமிழர்களிடையே விதைப்பது மிகவும் தவறானது.

மேலும், தமிழ் ஈழத்தில், விடுதலைப் புலிகளால் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைக்காக போராடிய எந்த ஒரு இயக்கத்தினாலும் கூட சாதியக் கொலைகளோ, அதற்கான மரண தண்டனைகளோ ஒருபோதும் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே உறுதியாகத் தெரிவித்து, திருமாவளவனின் கருத்துக்கு ஈழத் தமிழனாக எனது கண்டனத்தைப் பதிவு செய்து, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையும் போராட்டமும் சாதி மதங்களைத் தாண்டிய ஈழத் தமிழ் மக்களின் விடுதலை அரசியலின் சாட்சி. அதை அபாண்டங்களால் மாசுபடுத்த முடியாது.

கனடா ஈழமுரசு பதிரிகைக்காக

சுவாமி சங்கரானந்தா🙏

https://www.facebook.com/share/1Ew2BqFC3G/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதே ஆமையின் பல்லை தட்டி கையில் கொடுத்திருந்தால் திருமா, குருமா எல்லாம் இப்படி கருமாத்திர வரலாற்று திரிபை சொல்லும் தைரியம் வந்திராது.

ஆமைகதையை பொய்யான தெரிந்தும் கடந்து போனதன், இல்லை உண்மைதான் என் பொய் சாட்சி சொன்ன புலம்பெயர் புஸ்வானங்கள்தான் இந்த இழிநிலைக்கு முழு பொறுப்பு!

1 hour ago, கிருபன் said:

“இந்த காதலின் காரணமாக வல்வெட்டித்துறையில் 14 பேரை நான் சுட்டுக் கொன்றேன்”

பச்சை பொய். திருமாவுக்கு மறை கழண்டு விட்டதா?

ஏரம்பு ஆரம்பத்தில் காதலை எதிர்த்தார் என நானும் கேள்விபட்டுள்ளேன்.

இதற்கு பல காரணங்கள் சொல்லபட்ட்டாலும், எந்த தந்தையிம் ஒரு ஆயுத போராளிக்கு மகளை கொடுக்க தயங்குவார். அதுவும் பாலா அண்ணையின் புத்தகம் சொன்னது போல் இப்படி இந்தியா போய் திருமணமானால். இதில் வியப்பேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

, “மதிவதனி சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் நான் அல்ல என்பதனால் இந்த மண்ணில் என்னைத் தலைவராக ஏற்கத் தயக்கம் இருந்தது; அது காலப்போக்கில் மாறிவிட்டது”

திருமா சொன்னதில் இது மட்டுமே உண்மை.

இங்கே இப்போ புலிவால்களாக இருக்கும் பலர் டெலோ, அல்லது புலொட்டின் ஆரம்ப கால அனுதாபிகள்தான்.

ஒரு காலத்தில் தலைவரை சுற்றி இருந்த பல தளபதிகளும் மக்களும் கூட அவர் சார்ந்தோரே.

உமா மேகாஸ்வரனும், தம்பாவும் ஏனைய வெள்ளாள இயக்க தலைவர்கள் எல்லாம் பிஸ்கோத்துக்கள் என்பது புலப்பட, சிங்களவன் போட்டு வெளுத்த வெளுவையில், தலைவரை விட்டால் வேறு வழி இல்லை என புலிகள் பின்னால் திரண்டவர்கள்தான் பலர். இதில் மாவீரர்கள் சேர்த்தியில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.

டெலிகேட் பொசிசன்😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இங்கே இப்போ புலிவால்களாக இருக்கும் பலர் டெலோ, அல்லது புலொட்டின் ஆரம்ப கால அனுதாபிகள்தான்.

இங்கே வெளிநாடுகளில் புலிவால்களாக இருந்த பலர் இப்போ ஒன்றரை வருடமாக அனுரகுமார திசநாயக்கவின் தீவிர இரசிகர்களாக மாறியதை போன்று

1 hour ago, island said:

நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா.

அந்த ஆமை கறி விருந்து புளுகு மோசம் துணிந்து புளுகி இருக்கின்றார் தானே

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

ஆமைகதையை பொய்யான தெரிந்தும் கடந்து போனதன், இல்லை உண்மைதான் என் பொய் சாட்சி சொன்ன புலம்பெயர் புஸ்வானங்கள்தான் இந்த இழிநிலைக்கு முழு பொறுப்பு!

குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை.

ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது.

https://noolaham.net/project/190/18958/18958.pdf
page 9

கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது:

"பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நன்னிச் சோழன் said:

குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை.

ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது.

https://noolaham.net/project/190/18958/18958.pdf
page 9

கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது:

"பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."

நன்றி நன்னி.

இந்த கதை வந்த நாள் தொட்டு உண்மையில் ஆமை ஓட்டை இப்படி பாவிக்கலாமா, ஆமை ஓடு மிதக்குமா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்தது.

யாழிலும் அதை கேட்டபோது ஆமையின் ஆதரவாளர் கூட ஒழுங்காக பதில் சொல்ல இயலவில்லை.

ஆக, இப்படி தெப்பம் போல பாவிக்கலாம் என்பது தெரிகிறது.

ஆனால் இது இரெண்டாம் உலக யுத்த காலத்தில் (பலாலி கட்டிய சமயம்), மிகவும் பிந்தங்கிய நிலையில் இருந்த குப்பிளான் பகுதியில் பாவனையில் இருந்துள்ளது. அப்போ யாழின் பிரதான வாகனம் மாட்டு வண்டி.

இந்த கதையை கேட்டு விட்டுத்தான் அண்ணன் - லேண்ட்குரூசர்கள், பஜ்ரோக்களில், வானூர்த்திகளில் புலிகள் பறந்த காலத்தில், ஆமை ஓட்டில் போனார்கள் என கதை அதை நான் கண்டேன் என கப்ஸா அடித்துள்ளார்.

இதை 100 வருடம் முந்திய கதை என சேரலாதன் போன்றோர் சொல்லி இருக்க கூடும் - சினிமா கூத்தாடி அதை படமாக்கி விட்டார்😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.