Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு

அமெரிக்கா - இரான்

படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • ரிச்சர்ட் இர்வின்-பிரவுன்,

  • அலெக்ஸ் முர்ரே

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்தும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்35 போர் விமானங்கள் உட்பட 90 விமானங்கள் மற்றும் 5,680 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இது ஜனவரி பிற்பகுதியில் வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது வரை செயற்கைக்கோள் படங்களில் காணப்படவில்லை. இது இரானில் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் ஓமன் கடற்கரையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பைப் பற்றி நாம் அறிந்தவற்றோடு ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலின் வருகையும் இணைகிறது.

அங்கு அமெரிக்க போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் இருப்பு அதிகரித்துள்ளதை பிபிசி வெரிஃபை பின்தொடர்ந்துள்ளது.

அமெரிக்கா - இரான்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,பிப்ரவரியில் அமெரிக்க ராணுவம் அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பலின் படத்தை வெளியிட்டது.

மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா எத்தகைய ராணுவ உபகரணங்களை நகர்த்தியுள்ளது?

ஐரோப்பிய சென்டினல்-2 செயற்கைக்கோள்களில் இருந்து பொதுவில் கிடைக்கும் படங்கள், ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (240 கிமீ) தொலைவில் அரபிக்கடலில் ஆபிரகாம் லிங்கன் கப்பல் இருப்பதைக் காட்டுகின்றன.

ஜனவரி மாதம் இப்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதிலிருந்து இது தென்படவில்லை. ஆனால் செயற்கைக்கோள் கண்காணிப்பு குறைவாக உள்ள திறந்த கடற்பரப்பை இது கடந்து கொண்டிருந்தது. நிலத்தில் உள்ள ராணுவ தளவாடங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதோடு, செயற்கைக்கோள்களில் அடிக்கடி படம்பிடிக்கப்படுகின்றன.

அதாவது, மத்திய கிழக்கில் 12 அமெரிக்க கப்பல்களை இப்போது செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் கண்காணித்துள்ளோம். அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ்-வகை விமானந்தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்துகிறது.

மேலும் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் கடற்படை தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள மூன்று சிறப்புப் போர்க்கப்பல்களும் இதில் அடங்கும்.

இப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் வருகையையும் நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி ராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள எஃப்-15 மற்றும் இஏ-18 போர் விமானங்களின் அதிகரிப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கை நோக்கி நகரும் அமெரிக்க சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் மற்றும் தகவல் தொடர்பு விமானங்களின் அதிகரிப்பையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

இரான் எவ்வாறு பதிலளித்துள்ளது?

பிப்ரவரி 6-ஆம் தேதி அரபிக்கடலில் அமெரிக்க மத்திய கட்டளை மையம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் பிற போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் சூழ்ந்திருக்கும் படங்களை வெளியிட்டது. இது ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இரானும் தனது சொந்தப் படை பலத்தைக் காட்டியுள்ளது.

திங்களன்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஓமன் மற்றும் இரானுக்கு இடையே வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் ஒத்திகையைத் தொடங்கியது. இதில், ஒரு கப்பலில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் ஆய்வு செய்ததாக ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய தஸ்நிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகவும், முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமாகவும் கருதப்படுகிறது.

இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு உட்பட, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது.

இரானின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைக் காட்டும் அந்த அறிக்கையில், பாக்பூர் அந்தத் தீவின் மீது ஹெலிகாப்டரில் பறப்பதைக் காண முடிந்தது.

அமெரிக்கா - இரான்

பட மூலாதாரம்,Getty Images

வெனிசுவேலா மற்றும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமருடன் தற்போதைய நடவடிக்கை எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

கடந்த ஜனவரியில் முன்னாள் வெனிவேசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு முன்னரோ அல்லது கடந்த ஜூன் மாதம் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய நடவடிக்கையின் போதோ இருந்ததை விட, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வரும் ராணுவ முன்னெடுப்புகள், "அதிக தீவிரமும் நிலைத்தன்மையும்" கொண்டிருப்பதாக ராணுவப் புலனாய்வு நிபுணர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வெனிசுவேலா மற்றும் இரானில் அமெரிக்கா தனது பலத்தை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலைநிறுத்தியது.

வெனிசுவேலா மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக அமெரிக்கா யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை கரீபியன் கடலுக்கு அனுப்பியது, அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நாங்கள் கண்காணித்த எட்டு போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்று.

இருப்பினும், அது குறைவான விமானங்களையே பயன்படுத்தியது, ஏனெனில் அது அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள சுற்றியுள்ள அமெரிக்க தளங்களில் இருந்தோ அல்லது பியூர்டோ ரிக்கோவில் உள்ள அதன் தளத்திலிருந்தோ எளிதாக போர் விமானங்களை அனுப்ப முடியும்.

அமெரிக்கா கரீபியன் பகுதிக்குள் நீர்நில தாக்குதல் கப்பல்களையும் நிலைநிறுத்தியது. இவை மதுரோ பிடிபட்டபோது பார்த்தது போல ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கான ஏவுதளங்களாகப் பயன்படுத்தப்படலாம்.

ஆனால் வெனிசுவேலாவின் ராணுவம் பொதுவாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்காவிற்கு எதிராகப் பதிலடி கொடுக்கவோ குறைந்த திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' மூலம் அமெரிக்கா இரானைத் தாக்கியபோது, வெனிசுவேலாவை விட மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டை அது தாக்கியது.

இரானின் ராணுவம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் திறன் கொண்டது.

'மிட்நைட் ஹேமர்' நடவடிக்கையின் போது, அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களையும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்களில் போர்க் கப்பல்களையும், வளைகுடாவில் மூன்று போர் கப்பல்களையும் கொண்டிருந்தது.

இது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானப் படைகளையும் எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் நகர்த்தியது, ஆனால் ஃபோர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட பி2 குண்டுவீச்சு விமானங்கள் உண்மையில் மிசௌரியில் உள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்தே புறப்பட்டன.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் அதிகரிப்பு, அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு விமானப்படை தளங்கள் ஆகியவை, இரானின் எந்தவொரு பதிலடியையும் "பயனற்றதாக" மாற்றும் நோக்கத்துடன், ஒரு நாளைக்கு சுமார் 800 வான்வழித் தாக்குதல்களை "மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில்" நடத்த அனுமதிக்கும் என்று ஆபத்து மற்றும் நுண்ணறிவு நிறுவனமான சிபிலைனின் தலைமை நிர்வாகி க்ரம்ப் கூறினார்.

"நாம் காண்பது வெறும் தாக்குதல் தயாரிப்பு மட்டுமல்ல, மாறாக அளவை கூட்டவோ குறைக்கவோ கூடிய ஒரு விரிவான தடுப்பு நடவடிக்கையாகும்," என்று அவர் கூறினார்.

"இதன் பொருள், கடந்த ஆண்டு வெனிசுவேலா அல்லது மிட்நைட் ஹேமர் ஆகியவற்றுக்காக செய்யப்பட்ட முன்தயாரிப்புகளை விட இது அதிக தீவிரமும் நிலைத்தன்மையும் கொண்டது.

இது ஒரு மோதலைத் தக்கவைத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து சாத்தியமான பதிலடிகளையும் எதிர்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் விவரித்தார்.

கூடுதல் அறிக்கை : பார்பரா மெட்ஸ்லர், கோன்சே ஹபிபியாசாத், தாமஸ் கோப்லேண்ட், யி மா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lrjl1gnrgo

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

வெனிசூலாவில் நடந்தது போல தாக்குதல் திட்டங்கள் திட்டமிடும் வரை

பேச்சு வார்த்தை என்று காலம் கடத்தப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகிவிட்ட அமெரிக்கா?! - இந்த வார இறுதிக்குள் ட்ரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? - வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் 

19 Feb, 2026 | 02:12 PM

image

அமெரிக்கா கடந்த 24 மணிநேரத்தில் 50க்கு மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்காசியா நோக்கி அனுப்பியுள்ளதாகவும் இந்த வார இறுதியில் ஈரானை நோக்கி தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தகவல் சர்வதேச மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற நிலையில், ஈரானுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடவேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். எனினும், ட்ரம்ப்பின் அறிவுறுத்தலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்தே வருகிறது.

இதன் காரணமாக ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ஈரான் நாட்டுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என்றும் அமெரிக்க இராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி பதிலளித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஈரானை நோக்கி அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதைப் போன்று அமெரிக்கா அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக சர்வதேச மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தெரிவிக்கையில், இந்த வார இறுதியில் இராணுவம் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. ஆனால், அதுதான் சிறந்த முடிவு என ட்ரம்ப் இன்னும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க தலைமை தளபதி தனிப்பட்ட முறையில் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார். சிறந்ததொரு அதிரடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசகர்கள், நட்பு நாடுகளிடமும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த வார இறுதிக்குள் ட்ரம்ப் ஒரு தெளிவான முடிவெடுப்பாரா எனத் தெரியவில்லை. அதை இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரத்தை செலவிடுகிறார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

https://www.virakesari.lk/article/239049

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. யுரேனிய செறிவூட்டலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில், ஈரான் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், சில பிரச்சினைகளில் சிக்கல் நீடிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. 2003 இல் ஈராக்குக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா இப்பகுதியில் படைகளை குவித்தது. அதன் பிறகு தற்போது தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதையே இது காட்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை வாரக்கணக்கில் விரிவடையும் என்றும் முழு அளவிலான போரைப் போன்று இருக்கும் என்றும் ஆக்சியோஸ் குறிப்பிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதலாக இது இருக்கப் போகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மத்திய கிழக்கு நோக்கி தனது அதிநவீன F-35, F-22 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா நகர்த்தி வருகிறது. USS ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல் ஏற்கனவே ஈரான் கடற்கரையின் எல்லைக்குள் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் உத்தரவிடுவாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தாக்குதல் நடத்த அவர் முடிவு செய்தால், அது ஈரான் ஆட்சிக்கும் அதன் பிராந்திய பிரதிநிதிகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தும். ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை குறிவைப்பதாக இந்த தாக்குதல் இருக்கும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை இது ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  (a)

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மத்திய-கிழக்கில்-பதற்றம்-அமெரிக்க-படைகள்-குவிப்பு/50-372767

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளைகுடாவில் ராணுவ குவிப்பு - அமெரிக்கா மிரட்டியும் இரான் உறுதியாக இருப்பது ஏன்?

இரான் அமெரிக்காவிடம் 'சரணடைவதற்கு'பதில் மோதலை தேர்வு செய்வது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • அமீர் அசிமி

  • பிபிசி பாரசீக சேவை

  • 20 பிப்ரவரி 2026, 14:20 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வளைகுடா பிராந்தியத்தில் ராணுவத்தை அமெரிக்கா தொடர்ந்து குவித்து வரும் போக்கு வெறும் எச்சரிக்கை என்பதை தாண்டி மோதலுக்கு நேரடியாக தயாராகும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இரானிய கடல் பகுதிக்கு அருகே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பலின் வருகை ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில், மற்றொரு விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டும் (USS Gerald R Ford) அந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலகின் மிக வலிமையான ராணுவம் மற்றும் மத்திய கிழக்கில் அதன் பலமான கூட்டாளியான இஸ்ரேலை எதிர்கொண்டாலும், இரானியத் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஏன் இன்னும் விட்டுக் கொடுக்காமல் உள்ளனர்?

அதற்கான பதில் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளில் உள்ளது என்றே கூறலாம்.

யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு

பட மூலாதாரம்,US Navy / Reuters

இரான் பார்வை என்ன?

இரான் பார்வையில், அந்த கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கானது மட்டுமல்ல, மாறாக நிபந்தனையற்ற சரணடைதலுக்கு சமமானவை.

யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வரம்பைக் குறைப்பது, பிராந்தியம் முழுவதும் உள்ள ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டபடி, இஸ்லாமியக் குடியரசு தனது சொந்த குடிமக்களை நடத்தும் விதத்தை மாற்றியமைப்பதும் அதில் அடங்கும்.

இரான் தலைமையை பொறுத்தவரை, அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் இரானின் இரண்டாம் நிலை கொள்கைகள் அல்ல. மாறாக அவை அனைத்தையுமே தங்களின் பாதுகாப்பு கட்டமைப்புக்கான மைய அம்சமாக இரான் கருதுகிறது.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல்

பட மூலாதாரம்,US Navy / Reuters

'எதிர்ப்பின் அச்சு'

தனக்கு வலிமையான சர்வதேச கூட்டாளிகள் இல்லாத நிலையில், 'எதிர்ப்பின் அச்சு' என்ற கட்டமைப்பை உருவாக்க பல ஆண்டு காலத்தை இரான் செலவிட்டுள்ளது.

இது மோதலை இரானின் எல்லைகளிலிருந்து விலக்கி வைத்து, அழுத்தத்தை இஸ்ரேலுக்கு அருகில் தள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் ஒரு வலையமைப்பாகும்.

பழமையான விமானப்படை மற்றும் குறைவான நவீனத்தன்மை கொண்ட தனது ராணுவ தொழில்நுட்பத்துக்கான மாற்றாக இரானுக்கு அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் உள்ளது.

அணுசக்தித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமைதி நோக்கங்களுக்கானது என கூறப்பட்டாலும், அது பெரும்பாலும் ஒரு தடுப்பு சக்தியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே இத்தகைய விஷயங்களில் தனது ஆதிக்கத்தை குறைப்பது இரானின் பார்வையில், அதன் தடுப்பு திறனுக்கான அடித்தளத்தையே தகர்த்துவிடுவது போல.

இரானின் உச்ச தலைவர் அலி காமனெயின் பார்வையில், இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது, அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவுடன் ஒரு வரையறுக்கப்பட்ட போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதாகத் தோன்றலாம்.

பட மூலாதாரம்,NurPhoto via Getty Images

போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதா?

இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி பார்வையில், இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது, அமெரிக்காவுடன் ஒரு சிறிய போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதாக தெரியலாம்.

பெரிய இழப்புகளை ஏற்படுத்தினாலும் ராணுவ மோதல் மீண்டெழுவதற்காக வாய்ப்பாக அவருக்கு தெரியலாம். ஆனால், வியூக ரீதியான விஷயத்தில் பின் வாங்குவது அந்த வாய்ப்பை வழங்காமல் போகலாம்.

ஆனால், இந்த கணக்கீட்டின் பின்னால் உள்ள அபாயங்கள் மேலோட்டமானவை அல்ல, அதே போல அத்தகைய அபாயங்கள் இரானுக்கு மட்டும் இல்லை.

அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் அதன் ஆரம்ப கட்டத்திலேயே உயர்மட்டத் தலைமையைக் குறிவைக்கக்கூடும். காமனெயி கொல்லப்பட்டால், அது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், ஒரு பலவீனமான தருணத்தில் அடுத்த தலைமையை உருவாவதையும் சீர்குலைக்கக்கூடும்.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய குடியரசின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் வன்முறை ஒடுக்குமுறைக்குப் பிறகு சமீபத்தில் கட்டுப்பாட்டை நிலைநாட்டிய கட்டமைப்பை பலவீனப்படுத்தக்கூடும்.

இரானிய நாளிதழான வதன்-இ எம்ரூஸின் பிப்ரவரி 19 பதிப்பு.

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,"கடல் ஆச்சரியங்கள்" என்ற தலைப்புடன், இரானிய நாளிதழான வதன்-இ எம்ரூஸின் பிப்ரவரி 19 பதிப்பு

அண்மையில் வீதியில் இறங்கி போரடியவர்கள் அரசு கடும் பலத்தை பயன்படுத்திய பிறகே பின்வாங்கினார்கள். ஆனால், அவர்கள் இன்னும் அதிருப்தியுடன்தான் உள்ளனர். எனவே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது உள்நாட்டு சமநிலையை கணிக்க முடியாத வகையில் மாற்றக்கூடும்.

மற்றொரு புறம் பொருளாதார அழுத்தமும் ஆபத்தை அதிகரிக்க கூடியதாக உள்ளது.

ஏற்கனவே பொருளாதாரத் தடைகள், பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் பொருட்களை வாங்கும் திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரானின் பொருளாதாரம், ராணுவ மோதலைத் தொடர்ந்து ஏற்படும் அதிர்ச்சிகளைத் எதிர்கொள்ள சிரமப்படும்.

அதே போல, எண்ணெய் ஏற்றுமதிக்கு ஏற்படும் இடையூறு அல்லது உட்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம், மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தும்.

சமீபத்திய வாரங்களில் தெருக்களில் இறங்கிப் போராடியவர்கள், பெரும் பலத்தைப் பிரயோகித்த பிறகு பின்வாங்கியவர்கள், இன்னும் ஆழமான அதிருப்தியில் உள்ளனர்.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,இரானில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

இரான் உறுதியுடன் எதிர்ப்பது ஏன்?

இந்த பின்னணியில் பார்த்தால் இரான் உறுதியுடன் எதிர்ப்பது பல நோக்கங்களை கொண்டுள்ளது. அதாவது வெளியுலகிற்கு இஸ்லாமிய குடியரசின் உறுதியைக் காட்டும், உள்நாட்டில் அதன் பலத்தை காட்டும். ஆனால் அதே சமயம் சமரசத்திற்கான வாய்ப்பையும் சுருக்கும்.

ஒருவேளை விரிவான போர் மூண்டால் இரு தரப்பும் விரும்பாத விளைவுகளை உருவாக்கக்கூடும். இரானில் அதிகார வெற்றிடம் உருவானால், புதிய அல்லது தீவிர கருத்துக்களை கொண்ட அதிகார மையங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது.

இது பிராந்திய அதிகார சமநிலையை சிக்கலாக்கி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு விருப்பமற்ற விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

அதி உயர் தலைவருக்கு தற்போது சாதகமான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது இரானின் எதிர்ப்பு உத்தியை பலவீனப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.

அவற்றை நிராகரிப்பது உள்நாட்டிலேயே பலவீனமாக இருக்கும் சமயத்தில் மோதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

அதி உயர் தலைவர் மிக மோசமான வாய்ப்பாக கருதக்கூடியது வீயூக ரீதியான சரணடைதல், அதைவிட குறைவான மோசமான வாய்ப்பு கட்டுப்படுத்தக் கூடிய சிறிய ராணுவ மோதலில் ஈடுபடுவது ஆகிய இரண்டு விஷயங்களில், இரான் இரண்டாவது விஷயத்தை தேர்வு செய்வது போல தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd84ndydd9o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முறை அதாவது ஈரானிலிலை அமெரிக்க பிள்ளையருக்கு ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா,வெனுசுவெலாவில விட்ட சேட்டையள் சரி வராது எண்டு நினைக்கிறன்.

ஏனெண்டால் ஈரானுக்கு பின் பலம் சீனா எண்டு கேள்விப்பட்டன். அதோட சீனாவும் தன்ர ஆயுத கண்டுபிடிப்புகளை பரிசோதிக்க இடமும் வேணுமெல்லோ.....😂

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுடனான ஒரு குறிப்பிடத்தக்க போருக்கு அமெரிக்கா தயாராக இல்லை.சில நாட்களுக்கு முன்பு USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டில் விமான தள செயல்பாடுகள். அமெரிக்க கடற்படை புகைப்படம்.

ஈரானுடனான ஒரு குறிப்பிடத்தக்க போருக்கு அமெரிக்கா தயாராக இல்லை.

பதிவிட்டவர்மேத்யூ வாலின்பிப்ரவரி 20, 2026 அன்று

பிப்ரவரி 19 ஆம் தேதி ஜனாதிபதி டிரம்ப் ஈரான் தொடர்பான தனது நடவடிக்கையை 10 நாட்களுக்குள் தீர்மானிப்பதாகக் கூறிய நிலையில் , அமெரிக்கா போருக்குச் செல்கிறதா என்று பலர் யோசித்து வருகின்றனர். நாடு முழுவதும் தற்போதைய படை நிலைப்பாட்டை ஆராய்வதன் மூலம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியும், இது அமெரிக்கா நீண்டகாலப் போருக்கு நிலைநிறுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் ஒரு சாத்தியமான இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு சமீபத்தில்தான் மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது , மேலும் அது நேரடியாக ஒரு இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கக்கூடிய நிலையை அடைய நேரம் எடுக்கும். அது அந்த நிலையை அடையும் போது, அடுத்த கேள்வி: ஒரு இராணுவ நடவடிக்கை சரியாக என்ன சாதிக்க வேண்டும்?

தரையில் எந்த சாத்தியமான ஆயுதமேந்திய எதிர்ப்பும் இல்லாததாலும், பிராந்தியத்தை உடல் ரீதியாகக் கைப்பற்ற அமெரிக்க துருப்புக்களும் இல்லாததாலும், 93 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டிற்கு எதிரான வான்வழித் தாக்குதல் இன்னும் வகுக்கப்படாத இலக்குகளை எவ்வாறு அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "நடக்கக்கூடிய சிறந்த விஷயம்" என்று டிரம்ப் விவரித்த ஆட்சி மாற்றம் அசாதாரணமாக கடினமாக இருக்கும். ஈரான் வெனிசுலா அல்ல, மேலும் தெஹ்ரான் அமெரிக்க கடற்படைப் படைகளிலிருந்து கராகஸை விட மிகவும் உள்நாட்டில் உள்ளது, இதனால் திறமையான கொல்ல அல்லது கைப்பற்றும் நடவடிக்கை சாத்தியமில்லை. ஆனால் ஒரு நேரடி படையெடுப்பு அட்டைகளில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 2003 ஈராக் படையெடுப்பில் அமெரிக்க போர் வரிசையில் ஐந்து கேரியர் போர் குழுக்கள் மற்றும் 170,000 படையெடுக்கும் துருப்புக்கள் இருந்தன , மேலும் அந்த நிலையை நெருங்கும் எதுவும் இன்று தியேட்டரில் இல்லை. அந்த வகையான படையை உருவாக்குவதற்கு பல மாதங்களாக வேண்டுமென்றே முயற்சி எடுக்கப்படுகிறது.

அமெரிக்காவால் எல்லை மற்றும் கால அளவு இரண்டிலும் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை எடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. ஜூன் 2025 இல் ஈரானின் அணுசக்தி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல் நிச்சயமாக அந்தத் திறனை நிரூபித்தது. ஆனால் "ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை முழுமையாக அழித்தல்" என்று விவரிக்கப்பட்ட அந்தத் தாக்குதல்களின் அறிவிக்கப்பட்ட வெற்றியைக் கருத்தில் கொண்டு, வரையறுக்கப்பட்ட தொடர் தாக்குதல்கள் சரியாக என்ன சாதிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை - டிரம்ப் நிர்வாகம் 2025 தாக்குதல்கள் விவரிக்கப்பட்டதை நிறைவேற்றத் தவறிவிட்டன என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாவிட்டால். பெரும்பாலும், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ஒரு ஆக்ரோஷமான ஆனால் குறுகிய கால தாக்குதலைக் காண்போம், அதைத் தொடர்ந்து "என்ன நடக்கிறது என்று காத்திருந்து பாருங்கள்" என்ற காலகட்டம் இருக்கும். கோட்பாட்டில், அத்தகைய தாக்குதல் ஈரானை அதன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் அதிக சலுகைகளை வழங்க கட்டாயப்படுத்துவதற்காகவும் , அதே நேரத்தில் அணுசக்தித் தடுப்பை விரும்புவதற்கான உள் நியாயத்தை உருவாக்குவதற்காகவும் இருக்கலாம். இந்த இராணுவத் தாக்குதல்கள் அழுத்தத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஈரானிய ஆட்சி அதன் உயிர்வாழ்வு அச்சுறுத்தலைக் காண வேண்டும், பின்னர் சலுகைகளை வழங்குவதன் மூலம் பாதுகாப்பாக உணர வேண்டும் - அந்த சலுகைகள் தற்போதைய மற்றும் எதிர்கால அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறும் என்ற உத்தரவாதங்களுடன். அதிபர் டிரம்பின் கீழ் அமெரிக்காவுடனான ஈரானின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால், ஆயத்துல்லாவை நம்புவதற்கு எந்த ஊக்கமும் இல்லை. இது தற்செயலாக மிக நீண்ட போருக்கு வழிவகுக்கும் என்பது நிச்சயமாக சாத்தியமாகும்.

முழுமையான ஆட்சி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் கூட, ஆயத்துல்லா புரட்சியை விரிவாக நிறுவனமயமாக்கியதன் அர்த்தம், தெளிவான தலைமைத்துவ வழிகாட்டுதல் இல்லாத நிலையில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் கூறுகள் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஈரானின் வன்முறை துணை ராணுவப் படையான பாசிஜ் மிலிஷியாவின் உறுப்பினர்கள், உள் எதிர்ப்பை நசுக்க விரைவாகச் செயல்படுவார்கள், மேலும் மில்லியன் கணக்கான ஈரானிய குடிமக்கள் தெருக்களில் அவர்களைக் கைப்பற்றாவிட்டால் அவ்வாறு செய்ய முடியும். இருப்பினும், நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடந்தாலும், குறிப்பாக, ஜனாதிபதி டிரம்ப் கூறுவது போல், சமீபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் 32,000 பேர் கொல்லப்பட்ட பிறகு, நாட்டின் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றக்கூடிய ஒரு சாத்தியமான எதிர்க்கட்சி இயக்கத்தைக் குறிக்கவில்லை . எதிர்க்கட்சி குழுக்கள் இராணுவ ஆயுதக் கிடங்குகளை சூறையாடுவதில் வெற்றி பெற்றாலும், அமைப்பு மற்றும் ஒற்றுமை இல்லாதது லிபியா பாணியிலான போராளிகளின் குழப்பத்திற்கு வழிவகுக்கும், மேலும் ஆயத்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அமைதியின் பெயரில் தங்கள் ஆயுதங்களை கைவிட வாய்ப்பில்லை.

நீண்ட கால மோதலுக்கு, குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்காக பாடுபடும் மோதலுக்கு அமெரிக்கா வெறுமனே தயாராக இல்லை. அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதற்கான எந்த திட்டமும் இல்லை, நாட்டை நிலைப்படுத்தக்கூடிய எந்த அமெரிக்காவோ அல்லது சர்வதேசப் படையோ இல்லை, மேலும் அத்தகைய நடவடிக்கையில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை நமக்குத் தெரிவிக்க கடந்த பல தசாப்தங்களிலிருந்து எந்தப் பாடங்களும் இல்லை. எந்த பெரிய சர்வதேச கூட்டணியும் கூடவில்லை. உண்மையில், அமெரிக்காவின் தீவிர நட்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய இராச்சியம், ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்த டியாகோ கார்சியாவில் உள்ள அதன் விமானத் தளத்தை வழங்க மறுத்துவிட்டது . உலகளாவிய ஆதரவை உருவாக்க எந்த முயற்சியும் இல்லை, ஈரானை தாக்க அமெரிக்க மக்களிடம் குறிப்பிடத்தக்க விருப்பமும் இல்லை .

அமெரிக்க இராணுவமும் பலவீனமாக உள்ளது. தற்போது பயணத்தில் உள்ள ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, அமெரிக்காவின் புதிய விமானம் மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலாகும், ஆனால் கரீபியனில் நடவடிக்கைகளை நடத்திய பிறகு அதன் கடமை சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கடலில் 8 மாதங்களை நெருங்குகிறது, இந்த கால அளவு அதில் பணியாற்றும் மக்களை பாதிக்கிறது. அமெரிக்காவின் பதினொரு செயலில் உள்ள கடமை தாங்கி கப்பலில் ஆறு தற்போது பராமரிப்பில் உள்ளன , அதாவது அமெரிக்கா தனது கிடைக்கக்கூடிய சொத்துக்களை எங்கு அனுப்புகிறது என்பதை விவேகத்துடன் தேர்வு செய்ய வேண்டும். சீனாவிலிருந்து அச்சுறுத்தல்கள், உக்ரைனில் நடந்து வரும் மோதல் மற்றும் வட கொரியா இன்னும் ஆபத்தை ஏற்படுத்துவதால், அமெரிக்கா ஒரு நெருக்கடியைத் தடுக்க அல்லது பதிலளிக்க பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற சில மூலதனக் கப்பல்களைக் கொண்டுள்ளது - இவை அனைத்தும் விருப்ப இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது. மேலும், சில கப்பல்கள், தீர்ந்துபோன பணியாளர்கள் மற்றும் தேய்ந்த உபகரணங்கள் என்பது விபத்துகளுக்கான அதிக வாய்ப்பைக் குறிக்கிறது. USS ஹாரி எஸ். ட்ரூமனின் 2025 வரிசைப்படுத்தல் பல ஆபத்தான சம்பவங்களைக் காட்டியது . இந்த மாதம் மட்டும், ஒரு அமெரிக்க நாசகார மற்றும் கடற்படை மறுவிநியோகக் கப்பல் மோதியது .

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல தசாப்தங்களாக நடந்த மோதல்களிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அமெரிக்காவின் தலைமைக்கு உடனடியாகத் தெளிவாகத் தெரியும். இந்த நாடு தான் ஈடுபட்ட மோதல்களின் பின்விளைவுகளைக் கையாள்வதில் மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை, ஈரான் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை, மேலும் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கும்போது "நாங்கள் கண்டுபிடிப்போம்" என்ற அணுகுமுறை போதுமானதாக இல்லை. உண்மையில் குழப்பம் என்பது விரும்பிய முடிவா? இல்லையென்றால், வேறுவிதமாக உறுதி செய்வதற்கான திட்டம் என்ன?

American Security Project
No image preview

The U.S. is Unprepared for a Significant War with Iran

.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இந்த முறை அதாவது ஈரானிலிலை அமெரிக்க பிள்ளையருக்கு ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா,வெனுசுவெலாவில விட்ட சேட்டையள் சரி வராது எண்டு நினைக்கிறன்.

ஏனெண்டால் ஈரானுக்கு பின் பலம் சீனா எண்டு கேள்விப்பட்டன். அதோட சீனாவும் தன்ர ஆயுத கண்டுபிடிப்புகளை பரிசோதிக்க இடமும் வேணுமெல்லோ.....😂

உலக அரசியலில் தமக்கு தாமே உதவுபவர்களுக்கே கடவுள் உதவுவார் என கூறுகிறார்கள். ஈரானின் உள்ளக அரசியல் நிலை உறுதித்தன்மையில் இல்லாமையால் அந்த ஆட்சி பீடத்தினை ஆதரிக்கும் தரப்பு ஒரு மதில் மேல் பூனை நிலையில் உள்ளதாக கருதுகிறேன்.

அமெரிக்க படை நகர்வுகள் பில்லியஙளை இழக்கின்ற நிலையில் இந்த நிகழ்வு வெறும் அச்சுறுத்தல் நடவடிக்கையாக முடிவடைந்து போக ப்போவதில்லை, ஆனால் பலரது கேள்வியாக இருப்பது அமெரிக்க இராணுவத்தினால் ஒரு முழுமையான மரபு வழிப்போருக்கு அமெரிக்கா தயாராகவுள்ளதா? என்பதாகும், நிச்சயமாக அமெரிக்காவிற்கு அந்த பலம் தற்போது இல்லை என்றே கருதுகிறேன், அமெரிக்காவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கலாம்.

ஒரு நாட்டின் பலமே அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது, வட கொரியாவிடம் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல, ஈரான் இந்த சமரசத்தினை ஏற்றுக்கொள்ளாது (எந்த ஆபத்தினை எதிர்கொள்ளும் நாடும் ஏற்காது).

ஈரானிற்கு சமாதானமாக செல்ல முயன்றாலும் அழிவே கிடைக்கும் அந்த நிலையில் ஈரானுக்கு போர் ஒரு சிறிய சாதக நிலையினை கொண்டதாகவுள்ளது.

இலங்கை உள்நாட்டு போரில் உலக தரப்புக்கள் அனைத்தும் ஒன்றினைந்து ஒரே கோட்டில் இருந்த நிலை இப்போது இல்லை (1990 -2017 Unipolar world order), உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்திலும் அதே போல உலக சக்திகள் பெரும்பாலானவை ஒரு தரப்பில் நிற்க முற்பட்டாலும் பலதுருவ உலக யதார்த்தம் அதனை கேள்வி குறியாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த போர் முயற்சி அமெரிக்காவினை ஒரு மீழ முடியா சிக்கலில் மாட்டி விடலாம்.

போர்களுக்கான காரணங்களில் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது, அதிபர் ட்ரம்பிற்கு உள்நாட்டில் ஏற்படும் அழுத்தங்களின் விழைவாக இந்த போரினை அமெரிக்கா தொடங்க முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.