Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நியாயம் said:

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?

இந்தியாவிற்கு அல்ல....சீனாவிற்கு என நினைக்கின்றேன்.

இந்தியாவினது வல்லமையின் அழகு உலகிற்கே தெரிந்த விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இல்லை.

இந்தியாவில் இருந்து புறப்பட்டு, அதன் கடல் எல்லையை தாண்டி, சர்வதேச கடற்பரப்பில், யுத்த முனை நோக்கி நகரும் போது தாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா, இலங்கை எவருக்கும் கொடுக்க பட்ட எச்சரிக்கை அல்ல.

அப்படி கொடுக்கவும் தேவையில்லை.

ஏன் எண்டால் மோடி ஜி, பீபீயின் பொக்கெட்டுக்குள்😂

ஆனால் ஒரு விடயம்,

ரஸ்யா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், என ஈரானின் நண்பர்கள் என சொல்லி கொண்ட பலரும் ஈரானை திரும்பி கூட பார்க்கவில்லை.

இத்தனைக்கும் ரஸ்யாவுக்கு டிரோன் கொடுத்து, அண்மைய முறுகலில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து ஈரான் ரொம்ப நம்பிக்கையாய் நடந்து கொண்டது.

அதே போல் இலங்கையின் இன்வழிப்பு போரில் வெல்ல, தேயிலைக்கு எண்ணை டீல் மூலம் போரின் எரிபொருள் வழங்குனராக ஈரான் இருந்தது. இலங்கையும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை.

என்ன ஜீ ...தமிழ்வாணனின் கிரைம் தொடர் போல் எழுதிக்கொண்டே வாறியள் .... வாசிக்க வாசிக்க ...ஆச்சரியமாக இருக்கு

4 hours ago, தமிழ் சிறி said:

ஈரான் போருக்குப் போக, இப்படி... எல்லாரும் ஒளித்து திரிந்தால்...

இனி இவர்களுக்கு... முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பண உதவி வராது போலுள்ளது. 😂

ஏற்கனவே கள்ளக்காணி பிடித்து ..அதிலை காசுசேர்த்தாச்சு ...இப்ப கவர்மெந்தட்டை காணிக்குப் போறபாதைக்குத்தன் சண்டைபிடிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

இரான் கப்பல், இலங்கை

பட மூலாதாரம்,Mashregh News / File Photo

எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார்.

"அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார்.

ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

அதே சமயம், இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் முன்னர் தெரிவித்திருந்தார்.

நீர்மூழ்கி தாக்குதல் என்பதை மறுத்த இலங்கை கடற்படை

இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார்.

கப்பலை அடிச்சவன் சொல்கிறான் ...நான் அடிச்சது என்று....உதவிக்கு போனாக்கள்..கப்பலையே காணாமல்...அப்படியில்லை என்று மறுக்கினம்...என்னையா அங்கை நடக்குது...லங்காவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

நீங்கள் மஹாபாரத காலத்தில் சூர்ய அஸ்தமனத்தின் பின் போர் செய்ய கூடாது, பென் உருவில் வருபவர்ரை கொல்ல கூடாது என்று ஏதேனும் பண்டைய போர் விதிகளை பின் பற்றுகிறீர்களா?

இதில் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட எந்த யுத்த விதியும் மீறப்படவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேல் நாலு நாளைக்கு முன்பே ஈரானின் அத்தனை அரச சார்புடைய அமைபுகள் மீதும் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள்.

இது ஒரு போர் கப்பல், இந்தியாவில் இருந்து யுத்த முனை நோக்கி நகர்கிறது.

இதை யுத்த முனைக்குள் நுழைந்த பின் தான் தாக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.

2ம் உலக போரில் ஜேர்மனியின் யூபோர்ர்டுகள் பலவும், பிரித்தானியாவின் மேர்ச்ண்ட் நேவி மற்றும் நேவி கப்பல்களும் நடு அத்லாந்திக்கில் வைத்து இரு தரப்பாலும் மூழ்கடிக்கப்பட்டன.

அது போலவே இதுவும்.

ஆனால் இந்தியாவை தேவையில்லாமல் டென்சன் ஆக்க கூடாது என்பதால் - அதன் territorial waters மட்டும் அல்ல exclusive economic zone ஐயும் தாண்டிய பின் இலங்கை EEA க்குள் வைத்து அடித்துள்ளார்கள்.

இது கூட முடிந்தளவு உயிரிழப்பை தவிர்க்க என்றே நினைக்கிறேன.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே அல்லது மாலைதீவுக்கும் Horn of Africa வுக்கும் இடையில் வைத்து போட்டிருப்பின் - காப்பாற்ற எவரும் இன்றி அத்தனை பேரும் செத்திருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு 

Published By: Digital Desk 3

05 Mar, 2026 | 09:27 AM

image

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க யுத்த விவகார செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார்.

"சர்வதேச கடல் பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் அழித்துள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த "ஐஆர்ஐஎஸ் டெனா" கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இதுவரை பின்வரும் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலில் மிதந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவை மேலதிக பரிசோதனைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

32 பேர் கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருந்த ஏனைய சுமார் 64 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

1979 ஆம் ஆண்டின் சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மாநாட்டின் உடன்படிக்கையின்படி, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் சர்வதேச கடப்பாடு இலங்கைக்கு உண்டு. Beaches & Islands

நேற்று புதன்கிழமை (04) அதிகாலை 5.08 மணியளவில் கிடைத்த அபாய சமிக்ஞையைத் தொடர்ந்து, கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தலைமையிலான குழுவினர் விமானப்படையின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இச்சம்பவம் பிராந்தியத்தில் ஒரு நேரடி யுத்தச் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/240189

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயம் said:

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?

இந்தியாவுக்காக இருக்காது. சீனாவுக்காக இருக்கலாம்.

இசண்டையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் தரமும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Seyed-Abbas-Aragchi.jpg?resize=750%2C375

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena)  அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார். 

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,

ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. 

அமெரிக்காவின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டும் – என்றும் எச்சரித்தார்.

https://athavannews.com/2026/1467254

  • கருத்துக்கள உறவுகள்

646911342_10241389546492958_252398951417

FactCheck: IRISDena - சர்வதேச கடற்பரப்பிலா மூழ்கடிக்கப்பட்டது?

பெப்ரவரி 2026 இல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வுக்கு வந்த ஐந்தே வயதான 100 மிட்டர் நீளமான ஈரானிய கடற்படைக்கப்பலான IRISDena அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மார்க் 48 டோப்பிடோ (Mark 48 torpedo) என்னும் நீரடி ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு காலி கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்கள் தூரத்தில் மார்ச் மாதம் 4ம் திகதி அதிகாலை மூழ்கடிக்கப்பட்டது. இதில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும், 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை வந்த செய்திகளில் கூறப்படுகின்றது.

கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிரதேசம் சர்வதேச கடல் எல்லை என்று பலராலும் கூறப்படுவது உண்மையா?

இணைக்கப்பட்டுள்ள படத்தில் ஈரானிய கப்பலானது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு செல்லும் கடல் வழி காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி இலங்கைக் கரையில் இருந்து 12 கடல் மைகள் தூரம் வரை இலங்கைக்கான பிராந்திய கடல் வலையமாகும் (Territorial sea) . இது இலங்கைக்கான நிலம் போன்ற அதிகாரங்கள் உள்ள பிரதேசமாகும்.

அதன் தொடர்ச்சியாக 12-24 கடல் மைல் பிரதேசம் Contiguous zone என்னும் தொடர்வலய பிரதேசமாகும். இதுவும் இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட சுங்கம், குடியேற்றம், சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் கொண்ட பகுதியாகும்.

இலங்கை கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்கள் பிரதேசம் பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive Economic Zone (EEZ) என்றழைக்கப்படும். இவ்வலயத்தில் மீன்பிடி, கனியவளம், காற்று சக்தி போன்றவை இலங்கைக்கு சொந்தமாகும். (இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல் சிறிதாகையால் அதன் நடுப்புள்ளி எடுக்கப்படும்.)

இதற்கு அப்பால் உள்ள பிரதேசமே உண்மையில் சர்வதேச கடல் பிரதேசமாகும்.

இப்பொழுது சொல்லுங்கள், காலியில் இருந்து 40 கடல் மைல்கள் தூரம் சர்வதேச கடலா?

Kumar Ganesh

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

EEZ க்கு அப்பாலான இடமே international waters என்பது சரிதான். ஆனால் territorial zone க்கு அப்பால் எந்த நாட்டுக்கும் இறைமை-உரித்து இல்லை.

Navigational rights எனப்படும் பயணிக்க அனுமதிக்கும் உரிமை ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் territorial zone இல் மட்டுமே உண்டு. EEZ இல் வளங்களை அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு. பயணத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை.

ஆகவே இலங்கையின் EEZ வைத்து போட்டது சட்ட மீறல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

648116252_1243252121351727_6027777800726

################### #######################

அந்த IRIS Dena கப்பல்... போகும் வழியில், இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்காக அனுமதி கோரி... 11 மணித்தியாலத்துக்கு மேல் எதிர்பார்த்து நின்றததாம்.

எனக்கு என்னவோ... நடந்த சம்பவங்களை பார்க்க,

அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலுக்கு.. ஈரான் கப்பல் இரையாக...

இலங்கையும், இந்தியாவும்... மறைமுக உதவி செய்ததாகவே கருத வேண்டி உள்ளது.

இந்த இரண்டு நாடுகளும்... காட்டிக் கொடுக்கக் கூடிய நாடுகள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வந்து கொண்டிருக்கும் செய்தி

இன்னொரு ஈரானிய கப்பல் இலங்கை அருகே நிற்கிறதாம்.

மாலுமிகளை மீட்க இலங்கை நேவி முயற்சி.

அசர்பைஜானின் நக்சிவன் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்.

மீளதாக்கும் உரிமை தமக்கு உண்டென் அசர்பைஜான் கூற்று.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

647212594_1541404304655085_8536097963911

இலங்கை தனது கடற்கரையில் மற்றொரு ஈரானிய கப்பலில் "உயிர்களைப் பாதுகாக்க" முயற்சிப்பதாக அந்நாட்டின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், அந்தக் கப்பல் தெற்காசிய தீவு நாட்டின் பிராந்திய நீர்நிலைகளுக்கு அப்பால் பொருளாதார மண்டலத்தில் இருப்பதாகவும் கூறினார்.

The Morning

##################### ##########################

648101570_4187581338053669_4876710223571

இலங்கைக்கு அருகே இன்னொரு ஈரானிய கப்பல்..!

இலங்கைக்கு அருகே, சர்வதேச கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானியக் கப்பலாகிய Bushehr தரித்து நிற்பதாகவும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்.

Rajeevan Ramalingam 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இந்த கப்பல் தாக்கப்படவில்லை போல தெரிகிறது.

பயணத்தை தொடர்ந்தால் அடி நிச்சயம் என்ற நிலையில் - இலங்கையிடம் கப்பலை விட்டு வெளியேற உதவி கேட்டுள்ளாரோ கப்டன் ?

நேற்று - கமேனி மறைவுக்கு ஈரான் தூதரகம் போய் அஞ்சலி செலுத்தினார் அசர்பைஜன் அதிபர்.

இன்று அசர்பைஜானை தாக்கியது ஈரான்😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இந்த கப்பல் தாக்கப்படவில்லை போல தெரிகிறது.

பயணத்தை தொடர்ந்தால் அடி நிச்சயம் என்ற நிலையில் - இலங்கையிடம் கப்பலை விட்டு வெளியேற உதவி கேட்டுள்ளாரோ கப்டன் ?

hqdefault.jpg

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

நீங்கள் சொல்வது போல்... இப்போது பயணத்தை தொடர்ந்தால் கப்பலுக்கு எப்படியும் அடி விழும்.

இலங்கையில் நிற்க அனுமதி கொடுத்தால்... இலங்கைக்கு பிரச்சினை வரும்.

ஸ்ரீலங்கா எமக்கு எதிரான போரில்... அமெரிக்காவிடமும், ஈரானிடமும் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து இலங்கைக்கு அடி விழப் போகுதோ தெரியாது. 😂

இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் ஷகீட் டிரோன்களை எதிர்பது பற்றிய வழிவகைகளை அரபு நாடுகளுடன் பகிர தன் அரசுக்கு செலென்ஸ்கி உத்தரவு.

பல அரபு நாடுகளிடமும் இது சம்பந்தமாக பேச்சு.

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்😂

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் 😂

1 minute ago, தமிழ் சிறி said:

hqdefault.jpg

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

நீங்கள் சொல்வது போல்... இப்போது பயணத்தை தொடர்ந்தால் கப்பலுக்கு எப்படியும் அடி விழும்.

இலங்கையில் நிற்க அனுமதி கொடுத்தால்... இலங்கைக்கு பிரச்சினை வரும்.

ஸ்ரீலங்கா எமக்கு எதிரான போரில்... அமெரிக்காவிடமும், ஈரானிடமும் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து இலங்கைக்கு அடி விழப் போகுதோ தெரியாது. 😂

இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣

😂 இல்லை மாலுமிகளை இறக்கிய பின், கப்பலை ஏதாவது ஒரு துறைமுகத்திற்கு கொண்டு போய் நங்கூரம் இட்டால் அமெரிக்கா அதிகம் டென்சன் ஆகாது என நினைக்கிறேன்.

இந்த பேரீச்சம் பழத்துக்கு போடும் கப்பல் யுத்தமுனைக்கு அப்பால் போர் முடியும் வரை முடக்கப்பட்டால் - அமெரிகா அதை சட்டை செய்யாது.

இப்போ இருக்கும் நிலையில் ஈரானுக்காக இலங்கை அமெரிக்காவை பகைக்காது. அப்படி ஒரு நிலை வந்தால் அமெரிக்கா கேட்பதையே இலங்கை செய்யும்.

சீனாவும், ரஸ்யாவும் கூட அடக்கி வாசிக்க வீணா தலையை கொடுக்க இலங்கை விரும்பாது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் போகலாம்😂 - ஆனால் நேரடி விமானத்தில் அல்லது துருக்கி வழியே போக வேண்டி வரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் இந்தியா

Mar 5, 2026 - 02:19 PM

ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் இந்தியா

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உள்விவகார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' என்ற போர்க்கப்பல் காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது.

இதில் குறித்த கப்பல் கடலில் மூழ்கியதுடன், அதிலிருந்த 32 பேரை உயிருடன் மீட்பதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கமைய, மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காலி தேசிய (கராப்பிட்டிய) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டன.

இதேவேளை, தாம் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலிலேயே குறித்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா நேற்றிரவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் கப்பல் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அருகே நிற்கும் ஈரான் கப்பல் பற்றி தி கார்டியன் வெளியிட்டுள்ள தகவல்கள்.

  1. இது போர்கப்பல் அல்ல. ஆழ்கடல் கேபிள்களை பதிக்கும் கப்பல்.

  2. கப்பல் இலங்கையின் territorial waters இனுள் நிற்கிறது.

  3. எஞ்சின் பழுது என கேப்டன் இலங்கையில் ஒரு துறைமுகத்தில் தரிக்க அனுமதி கோரியுள்ளார்.

  4. என்ன முடிவு என ஜனாதிபதி+அமைச்சரவை கூடி ஆராய்கிறது.

பிகு

இதை இலங்கையில் கட்டிப்போட்டால் அதை இட்டு அமெரிக்கா பெரிதாக அலட்டி கொள்ளாது என நினைக்கிறேன்.

கடலில் பழுதடைந்த கப்பலில் உள்ள மாலுமிகளை பாதுகாக்கும் கடமை இலங்கைக்கு உள்ளது என்பதை அமெரிக்கா உட்பட அனைவரும் ஏற்பார்கள்.

இந்த கப்பலை அமெரிக்க நீர்மூழ்கியும் இலக்கு வைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்கப்பட்ட ஈரானிய கப்பல் இலங்கையில் தரிக்க 11 மணி நேரமாக அனுமதி கேட்டும் இலங்கை இழுத்தடித்தது என்கிறார் முஜிபுர் ரஹ்மான்.

இலங்கையில் அமெரிக்க அல்லது ஈரான் குண்டுகள் வீழாமல் முஜுபிர் ஓயமாட்டார் போலயே😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.