Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

656917908_985595807466563_78491747549004

  • Replies 90
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஏராளன்
    ஏராளன்

    செய்தியில் மாற்றிவிட்டேன் அண்ணை.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    “நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது

  • ஏராளன்
    ஏராளன்

    அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இந்த தடவை பெட்டியை திமுகவிடம் வாங்கி கொண்டு அவர்களை முன்பு போல் விமர்சிப்பதில்லை என மக்கள் மத்தியில் ஒரு நிரூபிக்க முடியாத கதை அடிபடுவது தெரிந்ததே.

இதற்கு வலு சேர்க்கும் படி, சீமானும் திமுகவை விமர்சிக்கிறேன் என ஆரம்பித்து பல நிமிடங்கள் திமுகவின் திட்டங்களை பாசிட்டிவாக பேசி விட்டு, கடைசி அரை நிமிடம் மட்டும் அதை விமர்சிக்கிறார்.

இதனால் இவர் திமுகவின் நல்லதுகளை மக்களிடம் எடுத்து சொல்லவா வந்தார் என தம்பிகள் குழம்பி போயுள்ளனராம்😂.

அண்ணன் சபரீசனிடம் வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக நடக்கிறார் என்பதே என் கருத்து.

அண்ணன் திமுகவை பற்றி பேசியதை எடிட் பண்ணிய தொகுப்பு👇.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் இயக்குநர் சுந்தர் சி

28 Mar, 2026 | 04:23 PM

image

அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் மதுரை மத்திய தொகுதியில் அக்கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக தமிழக முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அக்கூட்டனையில் இடம்பெற்றிருக்கும் கல்வியாளர் ஏ சி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் புதிய நீதி கட்சியின் தலைவரான ஏசி சண்முகமும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கை சாத்திட்டனர்.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக திரைப்பட இயக்குநர் சுந்தர் சி தெரிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் அவர் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் ஆறாம் திகதி தமிழக சட்டப்பேரவைக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு நாள் என்பதால் அதற்குள் சுந்தர் சி வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்கள் இடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே இயக்குநர் சுந்தர் சி யின் மனைவியும் ,நடிகையுமான குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் துணைத் தலைவர் என்பதாலும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பிடித்திருப்பதாலும் சுந்தர் சிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242158

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQRqA3Pj6MUWADKh_--cGh

656870006_917417500924117_29589219385859

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2026 at 16:01, goshan_che said:

சீமான் இந்த தடவை பெட்டியை திமுகவிடம் வாங்கி கொண்டு அவர்களை முன்பு போல் விமர்சிப்பதில்லை என மக்கள் மத்தியில் ஒரு நிரூபிக்க முடியாத கதை அடிபடுவது தெரிந்ததே.

“நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது

large.IMG_0083.jpeg.c768ab00091030263d9a

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

“நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது

large.IMG_0083.jpeg.c768ab00091030263d9a

ஆனாலும் அண்ணனின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது.

என்னதான் சபரீசனிடம் பெட்டி வாங்கினாலும்….திரள்நிதியை திரட்டாமல் விடுவதும் இல்லை. அதற்கும் முழு எபெர்ட் போடுகிறார்.

இங்கே Tesco அன்ற பல்பொருள் அங்காடியின் மகுட வாக்கியம் அண்ணனுக்கும் பொருந்தும்.

Every little helps 😂

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்? பெரம்பூர், திருச்சி கிழக்கை தேர்வு செய்ததன் பின்னணி

விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்? பெரம்பூர், திருச்சி கிழக்கை தேர்வு செய்ததன் பின்னணி

பட மூலாதாரம்,TVK

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 29 மார்ச் 2026

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். அப்போது, தான் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது "நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக" கூறுகிறது திமுக.

ஆனால் விஜயின் இந்த முடிவு "வியூக அடிப்படையிலானது" என த.வெ.க. விளக்கம் அளிக்கிறது.

விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை குறிப்பிட்ட திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய் "தைரியமில்லாதவர்" என விமர்சித்தார். "பெரம்பூரை விட்டு விட்டு திருச்சி கிழக்கில் மட்டும் போட்டியிடத் தயாரா?" என அவர் விஜய்க்கு சவால் விடுத்தார்.

த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "ஜெயலலிதா உட்பட பல தலைவர்களும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்" என்று கூறினார்.

ஆனால் தற்போது, முதலமைச்சர் வேட்பாளர்களாக உள்ள மு.க.ஸ்டாலினோ எடப்பாடி பழனிசாமியோ இரு தொகுதிகளில் நிற்காததை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

"ஜெயலலிதா, ராகுல் காந்தி, மோதி போன்றோர் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கின்றனர், ஆனால் அப்படி நிற்பவர்களை நம்பிக்கையின்மை கொண்டவர்களாகவே நான் பார்க்கிறேன்." என்கிறார் குபேந்திரன்.

இதே கருத்தை வலியுறுத்துகிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமு மணிவண்ணன். "விஜய், தன்னைத் தானே மட்டுமே முன்னிறுத்தி தேர்தலில் களம் காண்கிறார். தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைப்பதை மட்டுமே அவர் முன்னிறுத்துகிறார்." என்கிறார்.

விமர்சனங்களுக்கு பதிலளித தவெகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ், "இது மிகவும் தீர்மானித்து எடுக்கப்பட்ட முடிவு. இரு தொகுதிகளும் திமுகவின் வலுவான தொகுதிகள் என்பதால் அங்கிருந்து போட்டியிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது." என்கிறார்.

"எங்களின் அரசியல் எதிரியின் வலுவான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்." என்றும் ஃபெலிக்ஸ் கூறுகிறார்.

பெரம்பூர் தொகுதி ஏன்?

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர்.

வியாசர்பாடி, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், கொடுங்கையூர் என உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளும் இத்தொகுதிக்குள் வருகின்றன.

இந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆர்.டி. சேகர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

சென்னையின் மையமான தொகுதியாக பெரம்பூர் இருப்பதாகக் கூறும், தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ், "அங்கு விஜய் நிற்கும்போது ஓர் அலை ஏற்படும். அதனால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குகளை அதிகம் பெற்று திமுகவை தோற்கடிக்க முடியும்." என நம்புகிறார்.

தவெகவில் உறுப்பினராக சேர்வதற்கு உருவாக்கப்பட்ட செயலி மூலமாக இந்த தொகுதியில் அதிகமாக சுமார் 45,000 பேர் வரை அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்ததாக தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்? பெரம்பூர், திருச்சி கிழக்கை தேர்வு செய்ததன் பின்னணி

படக்குறிப்பு,குபேந்திரன்

திருச்சி கிழக்கு தொகுதி ஏன்?

திருச்சி கிழக்கு தொகுதியிலும் தற்போது திமுக எம்எல்ஏவாக உள்ள இனிகோ இருதயராஜ் வேட்பாளராக உள்ளார். அதிமுக சார்பில் கே ராஜசேகரன் போட்டியிடுகிறார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருச்சி கிழக்கு தொகுதியில் 2,17,397 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியும் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக உள்ளது. மேலும், குறிப்பிடத்தக்க அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியாகவும் கருதப்படுகிறது.

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெல்லமண்டி நடராஜன் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வென்றார்.

"கரூரில் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு அருகிலுள்ள திருச்சியிலிருந்து ஒரு தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் அந்த தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்கிறார் ராமு மணிவண்ணன்.

விஜய் சிறுபான்மையினர் என்பதை அடிப்படையாக வைத்து அரசியல் காயை நகர்த்திவருவதாக கூறுகிறார் ராமு மணிவண்ணன். "அதை அவருக்கு பின்னால் உள்ளவர்களும் பயன்படுத்துகின்றனர்." என்கிறார்.

ஆனால் மத சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து தொகுதிகளை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஃபெலிக்ஸ், "விஜயை சாதி, மத ரீதியாக அடையாளப்படுத்த முடியாது. அரசியலில் நுழைந்தவுடனே அவர் முதலில் செய்தது, அவரின் அம்மாவுக்காக சாய்பாபா கோவில் கட்டியதுதான்." என்கிறார்.

"தமிழ்நாட்டின் மையமாக விளங்கும் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதன் மூலம் டெல்டா பகுதிகளில் பெரும் தாக்கம் ஏற்பட்டு அப்பகுதிகளில் வெற்றிபெற முடியும்" என்றும் ஃபெலிக்ஸ் கூறுகிறார்.

சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவுக்கே ஆதரவு கிடைக்கும் என அக்கட்சியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நம்பிக்கை தெரிவிக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "தேவாலயம் எப்போதும் அறிவாலயத்தை கைவிடாது" என்று கூறினார்.

விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்? பெரம்பூர், திருச்சி கிழக்கை தேர்வு செய்ததன் பின்னணி

படக்குறிப்பு,ராமு மணிவண்ணன்

ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி முறைகேடு வழக்கில் 2000வது ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவே, முதலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் அவர்.

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தும் அவர் இவ்வாறு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மனுக்களையுமே தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...   https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

முடிவில் ஜெயலலிதா போட்டியிடாமலேயே அந்தத் தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி 197 இடங்களில் வெற்றிபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவி இழக்க நேரிட்டது.

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.

அதேபோன்று, 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி வதோதரா, வாரணாசி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். பின்னர் வதோதரா தொகுதியை அவர் ராஜினாமா செய்தார்.

விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்? பெரம்பூர், திருச்சி கிழக்கை தேர்வு செய்ததன் பின்னணி

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

Contact form

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cevkxvykenwo

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திங்கட் கிழமை பிற்பகலில் பெரம்பூரில் விஜை வேட்புமனு தாக்கல் செய்ய போன போது மறுபடியும் கட்டுக்கடங்கா கூட்டம்.

ஸ்டாலின் போகும் போது வழமையான கூட்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தனது பரப்புரையில் வழமைபோல் அனைவருக்கும் அரசவேலை என அடித்து விட…

கூட்டத்தில் இருந்தே ஒருவர் எழும்பி, இந்த ஊரிலேயே 2000 வேலை தேடி வெளி ஊர் போறாங்க அனைவருக்கும் அரச வேலை எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புகிறார்.

சீமான்

பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா

பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி)

கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது.

#அன்பான சர்வாதிகாரி

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அது 2 லட்சம் பேர் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

அது 2 லட்சம் பேர் அண்ணை.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிர விஜய் 5 கார்கள், 1 இருசக்கர வாகனம் வைத்திருப்பதாகவும் விவரம் வெளியாகிறது.. அதன்படி

விஜய் வைத்திருக்கும் கார்கள்

BMW 530 (2020) — ரூ.80,54,119

Toyota Lexus 350 (2024) — ரூ.3,01,57,881

Toyota Vellfire (2024) — ரூ.1,63,45,118

BMW I7 (2024) — ரூ.2,00,64,296

Maruti Swift (2024) — ரூ.5,35,000

TVS XL Super (2025) — ரூ.67,400

விஜய் வைத்திருக்கும் 5 கார்கள்

விஜய் வைத்திருக்கும் 5 கார்கள்

Vijay:  'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

அசையாச் சொத்துகள் (மொத்தம்: ரூ.82,81,93,010):

விள்பட்டி கிராமம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் நிலங்கள் மற்றும் வணிகக் கட்டடங்கள்.

கல்வித் தகுதி:

B.sc
No image preview

B.Sc Degrees Online 2025 - Best Course After 12th | Compa...

Find the best B.Sc course after 12th. Compare accredited online B.Sc degrees in Computer Science, Data Science, Nursing & more. Start your career journey.

இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992

தொழில்:

சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், விதியா சாரிடபுள் டிரஸ்ட்

குற்றவியல் வழக்குகள்: இல்லை

வெள்ளி பொருட்கள் ரூ.15,00,000 (883 கிராம்)

தங்கம் 3,132 கிராம் — ரூ.4,07,16,000

வைரம் 134.91 கேரட் — ரூ.1,00,00,000

Tvk Vijay: ' BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 இருசக்கர வாகனம்'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்| “BMW among 5 cars, 1 two-wheeler” – Vijay’s nomination affidavit details released. - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

களவு செய்யாமல் உழைச்சு, அதை டிக்ளேரும் பண்ணும் போது கிடைக்கும் பெருமிதம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.

ஸ்டாலின் - தன்னிடம் காரே இல்லை என வழமையான பல்லவியை பாடி உள்ளார்.

உதய்னா ஒரு படி மேலே போய் தன்னிடம் அண்டர்வேரே இல்லை என அபிடெபிட் தாக்கல் செய்தாலும் ஆச்சரியம் இல்லை.

சீமான் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் 50, இலட்சம் பெறுமதியான காணி வாங்கி உள்ளார் மனைவி பெயரில். காணியின் அளவை பார்த்தால் - சொல்லப்பட்ட விலை பொய் என்பது அப்பட்டமாக தெரிகிறதாம்.

கணவனும் மனைவியும் வேலை செய்வதில்லை. போன தடவை இருவர் காட்டியதிலும் அதிக சொத்து வந்த வழி என்ன?

கேள்வி கேட்டால் அவன் தெலுங்கன்😂

28 minutes ago, goshan_che said:

விஜய் கூறிய லிஸ்டில் அந்த ரோல்ஸ்ரோய் கார் விபரம் ஏதும் இல்லை. அத்துடன் 250 கோடி சம்பளம் பெறுவதாக அவரே கூறுகின்றார் எனும் போது அவர் காட்டிய இந்த சொத்தின் பெறுமதி மிகக் குறைவு அல்லவா?

இன்னும் ஒன்றை அவதானித்தேன். வாங்கிய அனைத்தும் அவர் பெயரில் தான் உள்ளது. சங்கீதாவின் பெயரோ பெற்றோரின் பெயரோ, 18 வயதுக்கு மேல் உள்ள மகனது பெயரோ இல்லை. சங்கீதா இந்திய பிரஜை இல்லை என்பதால் அவர் பெயரில் சொத்து வாங்க முடியாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்கள்..?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

மனைவி பெயரில் உள்ளது மட்டும்தான் தேர்தல் கணக்கில் காட்ட வேண்டும் என நினைக்கிறேன்.

RR 2012 கார் என நினைக்கிறேன். வித்திருக்க கூடும். வரி கட்டுவதில் பிரச்சனையான காரை கணக்கில் காட்டாமல் விட்டால் அது பிடிபடும்.

சம்பளம், சொத்து மாறுபாடு. நானும் அவதானித்தேன். இன்னும் பல சொத்து சந்ததியினர் பெயரில் trust இல் இருக்க கூடும். ஆனால் இதை காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என நினைக்கிறேன்.

வேட்பு மனு தாக்கலில் talk of the town இண்டைக்கு அண்ணன் சீமான் தான்.

ஆக்டோபர் 2025 இல் அண்ணன் 25 ஏக்கர் நிலத்தை 50 இலட்சத்துக்கு வாங்கி உள்ளார்.

பலர் அதை இப்போ 1 கோடிக்கு எனக்கு தாங்க அண்ணே என கேட்கிறார்கள்.

6 மாதமுமில்லை 100% இலாபம்.

விற்பாரா சீமான்😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

RR 2012 கார் என நினைக்கிறேன். வித்திருக்க கூடும். வரி கட்டுவதில் பிரச்சனையான காரை கணக்கில் காட்டாமல் விட்டால் அது பிடிபடும்

ETV Bharat News
No image preview

Thalapathy Vijay Lists His Luxurious Rolls Royce Ghost fo...

Popular South star Thalapathy Vijay is reported to have put his luxurious car Rolls Royce Ghost for sale years after a legal battle over the car. The actor purchased the car back in 2012 and it was on

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.