Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-5-15.jpg?resize=750%2C375&ss

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

வடக்கு லண்டனில் உள்ள ஒரு யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை மிகவும் அதிர்ச்சியளிக்கும் யூத எதிர்ப்புத் தீவைப்புத் தாக்குதல் என்று பிரதமர் இங்கிலாந்து கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டார்.

தீ விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களையும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பிய லண்டன் தீயணைப்புப் படை, வாகனங்களில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததால் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல்கள் நொறுங்கியதாகக் கூறியது. 

எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது.

கோல்டர்ஸ் கிரீனில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலுக்கு ஈரானுடன் இணைந்த பன்னாட்டுப் போராளிகள் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் நிறுவனமான ‘The SITE Intelligence’ இணையதளம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடந்த இதேபோன்ற தீவிபத்துகளுக்குப் பின்னணியில் இந்தக் குழு இருந்ததாகவும் அது கூறியது.

https://athavannews.com/2026/1469640

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

பெல்ஜியம், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடந்த இதேபோன்ற தீவிபத்துகளுக்குப் பின்னணியில் இந்தக் குழு இருந்ததாகவும் அது கூறியது.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவனுக்கு கல்லெறிந்தால் இது தான் நடக்கும்.

பிரச்சனைகளை தீர்க்காத வரைக்கும் எங்கும் எதிலும் தனகிக்கொண்டே இருப்பார்கள்.

தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவனுக்கு கல்லெறிந்தால் இது தான் நடக்கும்.

பிரச்சனைகளை தீர்க்காத வரைக்கும் எங்கும் எதிலும் தனகிக்கொண்டே இருப்பார்கள்.

தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.

சரியாகச் சொன்னீர்கள். உண்மையில் எதிர்காலத்தில் உலகம் எங்கும்… விமான நிலையம், பஸ் நிலையம், பல் பொருள் அங்காடிகள், மற்றும் பெருமளவு மக்கள் கூடும் விழாக்கள் என்று… தொடர் குண்டு வெடிப்புகள். நடக்க சாத்தியக் கூறுகள் மிக அதிகம்.

அந்தக் கடைசி வரி… மிக அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.

6 hours ago, தமிழ் சிறி said:

அந்தக் கடைசி வரி… மிக அருமை

2009 இல் நீங்களும், உங்கள் பரம்பரைகளும் பாதுகாப்பாக ஜேர்மனியில் இருந்தீர்கள் அல்லவா?

ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கோ, அல்லது இலண்டனில் உள்ள விகாரைக்கோ வந்து ஒரு போத்தலில் பெற்றோலை நிரப்பி எரிய விட்டு ஏன் எறியவில்லை?


ஒரு மேற்கு நாட்டில் இருக்கும், இன மத வேறுபாடின்றி மக்களின் உயிரை காக்கும் தன்னார்வ அமைப்பின் மீது தாக்குதலை நடத்ததாத இனமாக நாம் இருப்பதில் ஒரு தவறும் இல்லை.

அப்படி ஏதேனும் மோட்டுதனமாக செய்திருப்பின் இன்றுவரை அது வெளிநாட்டில் எம்மை அடக்க ஒரு கருவியாக பயன் பட்டிருக்கும்.

இப்படியான முட்டாள் சிந்தனையாளர்கள் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்தபடியால்தான் நாமும், போராட்டமும் தலைமையும் தோற்றுப்போகும் படி ஆனது.

பிகு

இதை செய்தது ஈரானின் உளவு அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு இயக்கம். சாதாரண யூகே வாழ் முஸ்லிம்கள் அல்ல.

இந்த பழியில் இருந்து தம்மை பாதுகாக்க யூகே முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள்.

ஆனால் - இதைவைத்து ரிபோர்ம் கட்சி - முஸ்லிம் எதிர்ப்பை ஊதி வளர்கிறது.

இப்படியா அடி முட்டாள்தனங்களை ஏன் செய்ய கூடாது, அவை இப்படி செய்தோர் சார் சமூகத்கை பாதிக்கும், இதை வரவேற்பது எவ்வளவு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

இந்த தன்னார்வ அமைப்பினரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு படைப்பாக கீழே 👇

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

658068162_2795080314167651_7242775466218

சர்வதேச அரசியலில் ஒரு தரப்பு செய்யும் கொடூரமான குற்றத்தை, தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு தரப்பு மீது சுமத்தி, அதன் மூலம் அரசியல் மற்றும் நிதி லாபம் அடைவதே 'False Flag Operation' எனப்படும்.

இதற்குப் பின்னால் பெரும்பாலும் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளே (CIA, Mossad போன்றவை) இருக்கின்றன என்பது பல வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சதித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன:

The Lavon Affair - 1954

எகிப்தில் இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நூலகங்கள் மீது இஸ்ரேலிய உளவுப்பிரிவு (மொசாட்-ன் முன்னோடி) ரகசியமாகக் குண்டு வீசியது. இந்தத் தாக்குதலை எகிப்திய தீவிரவாதிகள் செய்ததாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளுக்கும் எகிப்திற்கும் இடையே பிளவை உண்டாக்குவதே நோக்கம். ஆனால், ஒரு குண்டு முன்கூட்டியே வெடித்ததால், இஸ்ரேலிய உளவாளிகள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். உண்மை அம்பலமானது.

Operation Northwoods - 1960

கியூபா மீது போர் தொடுக்கக் காரணத்தைத் தேடிய அமெரிக்க ராணுவம், அமெரிக்காவிற்குள்ளேயே சில தாக்குதல்களைத் தாங்களே நடத்தி, அதை கியூபா மீது சுமத்தத் திட்டமிட்டது. இது ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சதித் திட்டம்.

Dancing Israelis 2001

இரட்டை கோபுரத் தாக்குதலின் போது, நியூஜெர்சியில் சில இஸ்ரேலிய இளைஞர்கள் கட்டிடங்கள் விழுவதைக் கண்டு கொண்டாடியதாகவும், அவர்கள் முன்பே கேமராக்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் FBI விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் பின்னாள்களில் மொசாட் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் எனச் உறுதிபடுத்த பட்டுள்ளது.

தற்சமயம் மார்ச் 23, 2026 அன்று லண்டனின் Golders Green பகுதியில் hatzola யூத அம்புலன்ஸ்கள் தீயிடப்பட்ட சம்பவம் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. காவல்துறையின் தரவுகளும், சம்பவத்தின் வேகமும் இது ஒரு திட்டமிட்ட 'False Flag' என்பதன் அப்பட்டமாக தெரிகிறது.

லண்டனில் அதிகாலை 1:45 மணிக்கு அவசர அழைப்பு செல்கிறது. ஆனால், சரியாக 2:00 மணிக்கு (அதாவது 15 நிமிடங்களில்) நியூயார்க்கில் உள்ள ஒரு யூத செய்தி நிறுவனம் இதை வீடியோ ஆதாரத்துடன் ஒளிபரப்புகிறது.

இது எப்படி சாத்தியம்?

எரிக்கப்பட்ட அந்த ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே பழையவை. அவற்றுக்குப் பதிலாகப் புதிய வாகனங்களை வாங்கும் 'Replacement Project' ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பழைய வாகனங்களை எரிப்பதன் மூலம் காப்பீட்டுப் பணத்தையும், உலகளாவிய அனுதாபத்தின் மூலம் பெரும் நன்கொடைகளையும் பெற இந்தச் சதி தீட்டப்பட்டுள்ளதா?

உலகம் முழுவதும் தற்போது நிலவும் அரசியல் சூழலில், யூத சமூகத்திற்கு எதிராகப் பெருகி வரும் வெறுப்பு மற்றும் போராட்டங்களால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் தீவைப்புச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு தந்திரமான நோக்கம் உள்ளது

தங்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் காட்டி, அரசாங்கத்தையும் காவல்துறையையும் தங்களின் தெருக்களிலும், நிறுவனங்களிலும் நிரந்தரமாகக் காவல் (Babysitting) இருக்கச் செய்வது.

தாங்கள் ஒரு "பாதிக்கப்பட்ட இனம்" (Victim Playing) என்ற பிம்பத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன் மூலம், சர்வதேச அளவில் தங்களுக்கு எதிரான விமர்சனங்களை மௌனிக்கச் செய்வது.

ஒரு சம்பவம் நடந்தவுடன் ஊடகங்கள் காட்டும் குற்றவாளியை அப்படியே நம்பிவிடக் கூடாது.

  1. யாருக்கு லாபம்? (புதிய ஆம்புலன்ஸ் நிதி, காப்பீட்டுப் பணம்)

  2. யார் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்? (காவல்துறையைத் தங்கள் பகுதிக்கு வரவழைத்தல்)

  3. யார் பழிவாங்கப்படுகிறார்கள்? (ஈரானிய ஆதரவு அமைப்புகள் மீது பழி)

இந்த மூன்று கேள்விகளுக்கான விடையும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் 'False Flag' தந்திரத்தையே நோக்கியே செல்கின்றன. உளவு அமைப்புகளும், சில அமைப்புகளும் இணைந்து மக்களை ஏமாற்றத் தீட்டிய இந்தத் திட்டம் இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகத் தொடங்கியுள்ளது.

ஆதாரங்கள் இன்றி ஈரானிய அமைப்புகள் மீது பழி சுமத்துவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் எரிக்கப்பட்ட வாகனங்களின் பின்னணியில் இருக்கும் பொருளாதார லாபங்கள் இந்தச் சம்பவத்தை ஒரு அப்பட்டமான 'False Flag' என உறுதிப்படுத்துகின்றன.

யூத உளவு அமைப்புகளும், சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றத் தீட்டிய திட்டமே இது என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

1954-ல் லாவோன் விவகாரத்தில் எப்படித் தந்திரங்கள் அம்பலமானதோ, அதேபோல் 2026-ன் இந்த லண்டன் நாடகமும் காலப்போக்கில் முழுமையாக வெளிப்படும்.

Mukinthan Thurairajasingham's post

https://www.facebook.com/story.php?story_fbid=2795081927500823&id=100009971290894&post_id=100009971290894_2795081927500823&rdid=ftQ5Grvo9axmGfNn#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.