Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார் 

Published By: Digital Desk 3

24 Mar, 2026 | 04:37 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

a9f5f71e-bbf0-47af-9e7b-f78e03747de7.jpg

https://www.virakesari.lk/article/241832

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! பிரான்ஸ் நகரங்களில் ஒரு மேயர் இருப்பார். அவருக்கு உதவியாக பல துணை மேயர்கள் நியமிக்கப் படுவார்கள். ஆதித்தியா இந்த நகரத்தின் 12 துணை மேயர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். நகரத்தின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை மேயராக இவர் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதித்யா…

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதித்யா!தமிழர்தாயகத்தில்ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிகளாகச் சென்றவர்கள் மேற்கு நாடுகளில் அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அதே வேளையில் தாய்த்தமிழகத்திற்கு அகதியாகச் சென்றவர்களுக்கு குடியுரிமையும் இல்லை. தாயகத்திற்கு திரும்பவும் கடவுச்சீட்டு இல்லை.முகாம்களில் அடைக்கப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் .வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு துன்பத்தில்வாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

வாழ்த்துக்கள் ஆதித்யா!தமிழர்தாயகத்தில்ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிகளாகச் சென்றவர்கள் மேற்கு நாடுகளில் அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அதே வேளையில் தாய்த்தமிழகத்திற்கு அகதியாகச் சென்றவர்களுக்கு குடியுரிமையும் இல்லை. தாயகத்திற்கு திரும்பவும் கடவுச்சீட்டு இல்லை.முகாம்களில் அடைக்கப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் .வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு துன்பத்தில்வாடுகிறார்கள்.

சந்தில சிந்து பாடும் முயற்சியை நீங்கள் தொடர வேண்டும்😂. ஆனால், தரவுகளை நினைவூட்ட வேண்டியது எம் கடமை: "தாய்த்தமிழகம்" இறைமையுடைய தனி தேசம் அல்ல குடிவரவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் அமல் படுத்தவும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் நாடு இந்தியாவின் அகதிக் கொள்கையை மாற்ற இயலாது என்பது கசப்பான உண்மை. ஏற்றுக் கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

தாய்த்தமிழகம்" இறைமையுடைய தனி தேசம் அல்ல குடிவரவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் அமல் படுத்தவும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் நாடு இந்தியாவின் அகதிக் கொள்கையை மாற்ற இயலாது என்பது கசப்பான உண்மை. ஏற்றுக் கொள்கிறீர்களா?

அது உண்மைதான் ஆனால் அழுத்தமும் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கொடுப்பதில்லையே. தங்கள் குடும்பத்தினருக்கு பதவிகளைப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் அக்கறை அற்று இருந்தாலும் தமிழக அரசு அதற்கான அழுத்தம் கொடுத்திருக்கலாம். அல்லவா. இலங்கை அரசு இந்தியமக்களுக்கு குடியுரிமை கொடுத்தது போல இந்திய அரசு குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கல்வி வேலை வாய்ப்பிலாவது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவில்லையே என்பதே எனது ஆதங்கம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

ஆனால் அழுத்தமும் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கொடுப்பதில்லையே

திமுக வும் தமிழ் நாடு அரசும் தொடர்ந்து அளுத்தம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.

ஆனால் அவர்களால் நீட்டை நீக்க சொல்லி அளுத்த கூட முடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் பாஜக வோட்டு கூட்டில் இல்லை.

ஆனால் சீமானால் சித்தப்பு, பச்சை தமிழர் என அழைக்கபடும் எடப்பாடி, அவர்களோடு கூட்டணி வைப்பதாயின் இதை செய்தே ஆகவேண்டும் என பாஜக வை வற்புறுத்தலாம்.

ஆனால் செய்வதில்லை.

https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-news/we-will-fight-for-permanent-citizenship-for-sri-lankan-tamils-chief-minister-stalin/4158420

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இலங்கை அரசு இந்தியமக்களுக்கு குடியுரிமை கொடுத்தது போல இந்திய அரசு குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கல்வி வேலை வாய்ப்பிலாவது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவில்லையே என்பதே எனது ஆதங்கம்

1991 இல் இந்தியாவில் இருந்தோருக்கு தெரியும் மருத்துவ கல்விக்கு கோட்டா உட்பட பலவசதிகலை அன்றைய எம்ஜிஆர், பின் கருணாநிதி அரசுகள் செய்தன (இதை பாவித்துத்தான் காசி ஆனந்தன் பிள்ளைகளை டொக்டர் ஆக்கினார்)….

ஆனால் அதையும் இன்னும் பல சலுகைகளையும் புடுங்கி, ஆடுமாடுகள் போல் ஈழத்தமிழர் பொலிஸ் நிலையத்தில் பதியவேண்டும் உட்பட பல சிக்கல்களை உருவாக்கியவர் ஜெ.

எந்த ஜெ?

ஈழத்தாய் என சீமான் வாக்கு கேட்ட அதே ஜெ.

எமது போராட்டதில் திமுக நடந்து கொண்டவிதம், குறிப்பாக 2009 இல், துரோகத்தனமானது..மாற்று கருத்து இல்லை.

ஆனால் தமிழகத்தில் வாழும் ஈழ தமிழ் அகதிகள் விடயத்தில் அரசு சார்பாக நடவடிக்கை எடுத்த வகையில், திமுகவுக்கு கிட்டே வேறு எவரும் வர முடியாது.

திமுகவின் புலிகள் மீதான அணுகுமுறையிம், ஈழதமிழ் அகதிகள் மீதான அணுகுமுறையும் ஒன்றல்ல.

பிகு

பங்களதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கும் சட்டம் ஏலவே பிஜேபி நிறைவேற்றி உள்ளது.

அடுத்து தமிழக கட்சி ஒன்றில் மத்திய ஆட்சி தங்கி இருக்கும் நிலை வந்தால் (ரஜீவ் காந்தி-மோடி இடைப்பட்ட காலம் போல்) அப்போது இதை குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

திமுக, தவெகவில் மத்திய ஆட்சி தங்கி இருந்தால் நாம் கேட்காமலே செய்யகூடும்.

அதிமுகவில் எண்டால் நாம் கேட்டாலும் நடக்குமா என்பது நிச்சயம் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

அது உண்மைதான் ஆனால் அழுத்தமும் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கொடுப்பதில்லையே. தங்கள் குடும்பத்தினருக்கு பதவிகளைப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் அக்கறை அற்று இருந்தாலும் தமிழக அரசு அதற்கான அழுத்தம் கொடுத்திருக்கலாம். அல்லவா. இலங்கை அரசு இந்தியமக்களுக்கு குடியுரிமை கொடுத்தது போல இந்திய அரசு குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கல்வி வேலை வாய்ப்பிலாவது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவில்லையே என்பதே எனது ஆதங்கம்

உங்கள் ஆதங்கம் அதுவல்ல. உண்மையில் முன்னைய அரசுகளை விட இப்போதைய ஸராலின் அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாகவே அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் அங்கு சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த யூருப்பர் ஈழத்தமிழ் மக்களை சந்தித்த போதும் அதை தெரிவித்திருந்தனர். பாஜக கொண்டுவர முற்படும் புதிய கலவிகொள்கை அமுலுக்கு வந்தால் அதனால் பாதிக்கப்படுவர்களல் ஈழத்தமிழ் அகதிகளும் அடங்குவர். புதிய கல்விகொள்கையை அமுல் படுத்துவதை திமுக அரசு கடுமையாக எதிர்ககிறது. ஆனால் பிரபாகரனை வைத்தும் இனவெறியை வெறியை வைத்தும் அரசியல் செய்யும் உங்கள் செபஸ்ரியன் சீமான் புதிய கல்விகொள்கையை எதிர்த்து என்ன போராட்டங்களை மேற்கொண்டார்.

ஈழத்தமிழ் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட உயர் கல்வி இட ஒதுக்கீட்டை, உங்கள் அண்ணன் செபஸ்ரியனால் ஈழத்தாய் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, ஜெயலலிதா பறித்ததார். 1996 ல் கருணாநிதி அதை திரும்ப வழங்கினார். அண்மையில் பெரியாரை எதிர்பதற்காக மபொசியை தமிழ் பெரியார் என உங்கள் அண்ணன் பெருமைப்படுத்தினார். புலிகள் இயகத்தை கொடிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்தவர் மபொசி. பிரபாகரனை எனது தலைவன் என்று கூறி அரசியல் நடத்திக்கொண்டு அவரது புலிகள் இயக்கத்தை கொடிய பயங்கரவாதிகள் என்று அழைத்த மபொசியை பெரியார் என்று அழைப்பது அயோக்கியத்தனம் அல்லவா. வெறும் அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறான மோசமான அயோக்கியத்தனத்தை புரியும் சீமானை ஆதரிக்கும் நீங்கள் மற்றைய சாதாரண அரசியல்வாதிகளை நோக்கி விரல் நீட்டலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு இறைமையுடைய தனி தேசம் இல்லை அப்படி இருக்க தமிழ்நாட்டில் சீமான் இரத்த பரிசோதனை செய்து அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லை அவர் தெலுங்கன் என்று இனவெறுப்பு பேசி உசுப்பேத்தி அப்படி பேசுபவர்களையும் உருவாக்கியுள்ளார். அவரை பின்பற்றி இந்திய அரசும் தனது குடிவரவு கொள்கையில் அயல்நாடுகளை சேர்ந்தோரை இலங்கை தமிழர்களாகிய எங்களை வெறுக்கலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.