Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!

25 March 2026

1774382915_7229719_hirunews.jpg

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து விபரித்தார்.

"ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (24) ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்கள்.

அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை (Present) வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது," என்று டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) வர்த்தகம் தொடர்பானது.

குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களைக் குறைக்கும் அல்லது அங்குள்ள வளங்களைக் கையாளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை டிரம்ப் தற்போது வெளியிடவில்லை.

"நாங்கள் சரியான நபர்களுடன் தான் டீல் (Deal) செய்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சமாதானத் தூதாக அல்லது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

https://hirunews.lk/tm/455553/trump-is-surprised-by-the-mysterious-gift-from-iran

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இது ட்ரம்பின் ஒரு ஏமாற்றும் உளவியற் போர்த்தந்திரம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இது ட்ரம்பின் ஒரு ஏமாற்றும் உளவியற் போர்த்தந்திரம்!

யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று மூன்று நாளில் தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம்

hindutamil-prod%2F2026-03-25%2Fuq48664k%

நியூயார்க்: ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்' தளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தையில் நடந்த வர்த்தகம் மூலம் மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.

இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:20 மணி) இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி முதலாவதாக, எஸ் அண்ட் பி 500 பியூச்சர் குறியீட்டில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், இரண்டாவதாக கச்சா எண்ணெய் பியூச்சர் சந்தையில் ரூ.1,615 கோடி மதிப்பிலான விற்பனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, உலகளவில் நிச்சயமற்ற சூழலில் வர்த்தகம் மந்தமாக இருக்கும் அதிகாலை வேளையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் முதலீடு செய்தது சந்தையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பு வெளியானவுடன் பங்குச்சந்தை 2.5% உயர்ந்தது. அதேசமயம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 109 டாலரிலிருந்து 92 டாலராகச் சரிந்தது. இதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டும் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் பார்த்துள்ளார். பங்குச்சந்தை உயர்வையும் கணக்கிட்டால் இந்த லாபம் பன் மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

போர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இவ்வளவு துல்லியமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதால், அரசின் ரகசியத் தகவல்கள் முன்கூட்டியே கசிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் இப்புகார்களை மறுத்துள்ளார்.

‘‘அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை’’ என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!

25 March 2026

1774382915_7229719_hirunews.jpg

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து விபரித்தார்.

"ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (24) ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்கள்.

அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை (Present) வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது," என்று டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) வர்த்தகம் தொடர்பானது.

குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களைக் குறைக்கும் அல்லது அங்குள்ள வளங்களைக் கையாளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை டிரம்ப் தற்போது வெளியிடவில்லை.

"நாங்கள் சரியான நபர்களுடன் தான் டீல் (Deal) செய்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சமாதானத் தூதாக அல்லது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

https://hirunews.lk/tm/455553/trump-is-surprised-by-the-mysterious-gift-from-iran

என்ன பரிசா இருக்கும் (றம்பரிட்டைநிறைய பொன் இருக்கு அப்ப பெண்ணாயிருக்குமோ!)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.