Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_server_news-39.jpg?resize=600%2C37

சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், ‘சிரித்துக் கொண்டே அழுவதாக’ ம.தி.மு.க., தெரிவித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன.

ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது.

நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், ”சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,” என்றார்.

ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது.

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில்  கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, ‘முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை’ என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார்.

https://athavannews.com/2026/1470233

அரசியல் பச்சோந்தி வைகோவின் மதிமுக விற்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கியிருக்க கூடாது. தனித்து நின்றால் ஐந்து வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, ‘முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை

தனி…. அரசு…..பெயரில் உள்ள தில் செயலில் இல்லையேப்பா…கூட்டணிக்கு தவமிருக்கிறீர்களே😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நிழலி said:

அரசியல் பச்சோந்தி வைகோவின் மதிமுக விற்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கியிருக்க கூடாது. தனித்து நின்றால் ஐந்து வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது.

தமிழ்நாட்டின் ஈழ அரசியலை பொறுத்தவரை பழ.நெடுமாறனின் ஈழ அரசியலை விட, சீமானின் ஈழ அரசியலை விட வைகோ அவர்களின் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து. அது மட்டுமல்லாமல் நன்றிக் கடனும் உண்டு.

இன்னுமொன்று..... அல்லது என் கேள்வி? தமிழ்நாட்டு அரசியலில் யாரிடம்,எந்த கட்சியிடம் பச்சோந்தி தனம் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்? தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே ஒரு குறளி வித்தை அரசியல் நிறைந்த நாடு.

அந்த அரசியல் காற்று ஈழத்தமிழ் மண்ணில் வீசக்கூடாது என்பது என் நீண்ட கால பிரார்த்தனை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டின் ஈழ அரசியலை பொறுத்தவரை பழ.நெடுமாறனின் ஈழ அரசியலை விட, சீமானின் ஈழ அரசியலை விட வைகோ அவர்களின் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து. அது மட்டுமல்லாமல் நன்றிக் கடனும் உண்டு.

இன்னுமொன்று..... அல்லது என் கேள்வி? தமிழ்நாட்டு அரசியலில் யாரிடம்,எந்த கட்சியிடம் பச்சோந்தி தனம் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்? தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே ஒரு குறளி வித்தை அரசியல் நிறைந்த நாடு.

அந்த அரசியல் காற்று ஈழத்தமிழ் மண்ணில் வீசக்கூடாது என்பது என் நீண்ட கால பிரார்த்தனை.

இந்தியா அமைதிப்படை காலத்தில் மண்டையன் குழுவை நடாத்தி பல இளைஞர்கள் சித்திரைவாதை செய்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2004 இல் சேர்ந்த போது சொல்லப்பட்ட காரணம் சிங்கள தரப்புக்கு எதிராக தமிழ் அமைப்புகள் சேர்ந்து பலமான கூட்டணி அமைக்க வேண்டும்.

2010 தேர்தலில் தமிழர்களை அழித்த மகிந்தா சரத்பொன்சேகா ஆகிய இருவர்களில் சரத் பொன்சேகாவுக்கு யாழில் ஏன் அதிகளவு மக்கள் வாக்களித்தார்கள்? இவர்களை தவிர சிவாஜிலிங்கம் , விக்கிரமபாகு கருணாரத்தினா போன்றவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை.

கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியில் ஜேவிபிக்கு யாழ் மண்ணில் இருந்து 3 வேட்பாளர்கள் ஏன் தெரிவு செய்தார்கள். இதே ஜேவிபி தமிழர்கள் கொல்லபடும்போது தமிழர்களுக்கு எதிராக இருந்ததை யாழ் மக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. யாழ் மக்களும் சுயநலவாதிகளா?

எம்மவர்களில் சிலர் வைகோ அவர்களை கடந்த 7,8 வருடங்களாக குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் திமுகவில் இருந்து வை கோ பிரியும் போது வைகோவுக்காக சிலர் தீக்குளித்தார்கள். ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வை கோ இருந்தார். அப்பொழுது இயக்கமும் இருந்தது. அக்காலத்தில் எம்மவர்கள் திக்குளித்தவர்கள் பற்றி சொல்வதில்லை. வை கோ அவர்கள் பாரதீய ஜனதா, தமிழகத்தில் ஊடுருவதை தடுக்கத்தான் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். இதே போலதானே 2004 இல் சிங்களதரப்புக்கு எதிராக போட்டியிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இயக்கம் இருந்த காலத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சேர்க்கப்பட்டார்

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.