Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

  • தொடங்கியவர்

இதுக்காக நான் இந்தியா போகவா முடியும். திரிஷா மெசஞ்சருக்கு வரும்போது கேட்டு சொல்கிறேன், ஏதோ வைரசாம் என்றூ கொஞ்ச நாளா வரலை :P

  • Replies 534
  • Views 45.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்காக நான் இந்தியா போகவா முடியும். திரிஷா மெசஞ்சருக்கு வரும்போது கேட்டு சொல்கிறேன், ஏதோ வைரசாம் என்றூ கொஞ்ச நாளா வரலை

_________________

:(:lol::lol: சயந்தனைக்கேட்டால் சொல்வாரோ என்னவோ.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:lol::lol: சயந்தனைக்கேட்டால் சொல்வாரோ என்னவோ.. :wink:

நல்லவேளை நானே நேரடியாக சொல்ல வேணுமோ என்று நினைத்தேன். நன்றி தமிழ்இனி

திரிஷா மெசஞ்சருக்கு வரும்போது கேட்டு சொல்கிறேன், ஏதோ வைரசாம் என்றூ கொஞ்ச நாளா வரலை

இல்லையே.. நேற்று வந்தாரே.. யாகூவிற்கு.. ஐயோ.. அப்போ அது யாரு...

என்ன வர வர திரிசாவின்ர உடுப்புகள் சின்னனாகிக் கொண்டே போகுது...சின்னப்பிள்ளையில போட்டதுகளைப் போட்டு அளவு பாக்கிறாவோ....! :roll: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:(:lol: :evil:

என்ன வர வர திரிசாவின்ர உடுப்புகள் சின்னனாகிக் கொண்டே போகுது...சின்னப்பிள்ளையில போட்டதுகளைப் போட்டு அளவு பாக்கிறாவோ....! :roll: :(

trisha4-450.jpg

இதையா சொல்லுறீங்க குருவி. இது திரிஷா நடிக்க வரமுதல் (வீட்டில்)

எடுத்த படம். எப்பவோ ஒரு பழைய விகடன் புத்தகத்தில் பார்த்திருக்கிறேன் :roll: .

அப்ப அவ மொடலிங் மட்டும் தான் செய்தவ 8) .

( அப்பாடி நாட்டுக்கு முக்கியமான

நல்ல செய்தி ஒன்று சொல்லிட்டன். :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடி நாட்டுக்கு முக்கியமான

நல்ல செய்தி ஒன்று சொல்லிட்டன்

கடவுளே கடவுளே.. :mrgreen: :mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறதை தானே காட்ட முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் போட முடியும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய் வசி அது திரிசா எண்டு ஏன் பொய் சொல்லுறா? :oops: :evil: :twisted:

  • தொடங்கியவர்

த்ரிஷாவுடன் போட்டி போடும் ஜெனிலியா

harini-vijay1-500.jpg

தெலுங்கு பட உலகில் த்ரிஷாவுக்கு கடும் போட்டியாக வருகிறார் சச்சின் நாயகி ஜெனிலியா.

கோலிவுட்டுக்கு வரும் நடிகைகளுக்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிவிட்டால் போதும். அடுத்த குறி அவர்களுக்கு தெலுங்கு தான். இதற்கு காரணம் தமிழை விட இங்கு அமௌன்ட் கொஞ்சம் அதிகமாக கிடைப்பது தான்.

தமிழில் பொத்திப் பொத்தி நடிக்கும் சில நடிகைகள் தெலுங்குக்கு சென்றுவிட்டால் மடை திறந்த வெள்ளம் போல தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார்கள். எல்லாம் வைட்டமின் "ப' படுத்தும் பாடு தான்.

தமிழில் நடித்தாலும் சில நடிகைகள் தெலுங்கில் காலூன்றுவதற்கு வசதியாக தங்களது படங்களை தெலுங்கிலும் வெளியிட வற்புறுத்துவார்கள். அங்கும் அந்தப் படம் ஓடிவிட்டால் பிறகென்ன தெலுங்கு தயாரிப்பாளர்கள் வீடு தேடி வந்துவிடுவார்கள்.

சமீபத்தில் இதுபோல தமிழில் இருந்து நடையைக் கட்டியவர் த்ரிஷா. சில மாதங்களுக்கு ஐதராபாத் பக்கமாக போனவர் தான். அதற்குப் பிறகு இவரது தலையை கோலிவுட் பக்கமே பார்க்க முடியவில்லையாம்.

போன் செய்தால் கூட அம்மணியை பிடிப்பது குதிரைக் கொம்பாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். த்ரிஷாவுக்கு அடுத்தடுத்து சில படங்கள் ஹிட்டானது தான் இதற்கு காரணம்.

இதோ, இப்போது இவருக்கு சரிக்கு சரி போட்டியாக உருவெடுத்து வருகிறார் சச்சின் நாயகி ஜெனிலியா. பாய்ஸுக்கு அப்புறம் ஏற்பட்ட கேப்பில் இவர் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். பாய்ஸ் தெலுங்கில் நன்றாக ஓடியதால் ஜெனிலியாவுக்கு சில படங்கள் தெலுங்கில் கிடைத்தன.

இந்த வரிசையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான "சத்யம்', "சை' ஆகிய 2 படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இது போதாதா..! த்ரிஷா கால்ஷீட் கிடைக்காத தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்போது ஜெனிலியாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

தற்போது இவர் "சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பிரமாண்டமான படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெனிலியாவின் நாயகன் வெங்கடேஷ்.

இந்தப் படத்தில் வெங்கடேஷ் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அப்பா வெங்கடேஷ் சுதந்திர போராட்ட வீரர். பிரைவேட் ஆர்மி நடத்துகிறார். அதன் மூலம் வெள்ளையர்களை வேட்டையாடுகிறார்.

மகன் வெங்கடேஷ் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை களை எடுக்கிறார். இப்படிப் போகிறது இந்த ப்படத்தின் கதை.

இதில் மகன் வெங்கடேஷின் ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. இந்தப் படமும் வெற்றி பெற்றால் தெலுங்கு பட உலகில் ஜெனிலியாவுக்கு அசைக்க முடியாத இடம் கிடைத்துவிடும்.

இதனால் த்ரிஷாவின் பாடு தான் சிக்கலாகி விடும்.

தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால் த்ரிஷாவின் பாடு தான் சிக்கலாகி விடும்.

ஏதோ நீங்கள் ஒருதரும் இன்னும் மாறேலை தானே :wink: :D

  • தொடங்கியவர்

பரந்த மனம் இருப்பதால் மாறவேண்டிய அவசியமில்லை அனைவரையும் உள்வாங்கலாம் :wink: :P

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சூர்யா த்ரிஷா ஜோடி சேரும் 'ஆறு'

trisha4-400.jpg

தெலுங்கில் படு பிஸியாகிவிட்ட த்ரிஷா இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சாமி படம் மூலம் த்ரிஷாவை ஹிட் ஆக்கி உச்சத்தில் கொண்டு போய்விட்ட ஹரி தான் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் ஆறு.

இந்தப் படத்தைத் தயாரிப்பது இயக்குனரும் ஹரியின் குருவுமாகிய சரண். தனது சொந்தப் பட நிறுவனமான ஜெமினி புரடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஆறு படத்தை தயாரிக்கிறார்.

பெரும் ஹிட் கொடுத்து வரும் விஜய்யின் படங்களில் நடிக்க மட்டுமே தமிழுக்கு வந்து போன த்ரிஷா மற்றபடி தெலுங்கில் மகா பிஸி. ஒரு படத்துக்கு ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் அவரை சூர்யாவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். இந்த இருவரும் ஜோடி சேரும் இரண்டாவது படம், ஆறு. முதல் படமான மௌனம் பேசியதே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் சூப்பர் கேரக்டராம். அதாவது சாமி படத்தில் மாமியாக வந்து வசீகரித்ததைப் போல இந்தப் படத்திலும் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். அதேபோல சூர்யாவுக்கும் மிக வித்தியாசமான பாத்திரமாம். ஸ்பெஷல் கெட்டப்புடன் வரப் போகும் சூர்யா, இதற்காக லண்டன் சென்று தனது உருவத்திற்கு மெருகேற்றப் போகிறார்.

இதுவரை நெல்லை, மதுரை, கோவையைச் சுற்றியே படம் பண்ணிக் கொண்டிருந்த ஹரி முதல் முறையாக சென்னைக்கு வருகிறார். ஆறு கதை, சென்னையை மையமாகக் கொண்டதாம்.

சச்சினுக்கு இசை அமைத்து கோர்ட் கேஸில் படத்தை மாட்டிவிட்ட தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தான் இப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். ப்ரியன் கேமராவைப் பிடிக்கிறார். ஜூன் மாதம் படத்தைத் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமாம்.

தெலுங்கில் படு ஸ்பீடாகப் போய்க் கொண்டிருக்கும் த்ரிஷா, அங்கு கோடியை நெருக்கி சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால், இந்தப் படத்தில் நடிக்கவும் ரூ. 50 லட்சம் கேட்டு வாங்கியதாக சொல்கிறார்கள்.

trisha4-380.jpg

இதன்மூலம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்போதைக்கு த்ரிஷா தான். ஒரு காலத்தில் ஜோதிகா முதலிடத்தில் இருந்தார்.

இந் நிலையில் தனது அடுத்த படத்தில் த்ரிஷாவையே ஹீரோயினாக்க விக்ரம் முடிவு செய்துள்ளாராம். அதற்குள் சம்பளம் ஒரு 10 லகரம் கூடினாலும் கூடிவிடும்.. சொல்ல முடியாது.

இதற்கிடையே, தமிழில் பொருத்தமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த விஜய்த்ரிஷா இடையே இப்போது பழைய நெருக்கம் இல்லையாம். இதற்கு காரணம் ஜெனிலியா தான் என்று பொருமிக் கொண்டிருக்கிறதாம் த்ரிஷா தரப்பு.

கில்லி படம் மூலம் விழுந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மீண்டும் பில்டப் செய்து கொண்டார். இந்தப் படத்தின் வெற்றிக்கு த்ரிஷாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஜய் நினைத்தாரோ, என்னவோ அடுத்து வெளியான திருப்பாச்சியிலும் த்ரிஷாவையே ஜோடியாக போட்டார்.

இந்தப் படமும் நன்றாக ஓடியதால் விஜய்த்ரிஷா இடையே நெருக்கம் மேலும் அதிகமானது. அடுத்து நடிக்கும் சிவகாசி படத்திலும் த்ரிஷா தான் நாயகி ஆவார் என்று கூறப்பட்டது.

ஆனால் சச்சின் படம் வெளிவந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம். இந்தப் படத்தில் ஜெனிலியாவிஜய் இடையே ஏற்பட்ட நெருக்கத்தை பார்த்து சச்சின் யூனிட்டே மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாம்.

புதிய கம்பெனி கிடைத்து விட்டதால் பழைய கம்பெனியை கழட்டி விடுவது தானே நியாயம். இதனால் சிவகாசி படத்தில் த்ரிஷா இல்லை. அவருக்குப் பதில் மீண்டும் ஜெனிலியாவுக்கே வாய்ப்பு தர விஜய் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.

இதில் விஜய்க்கு தங்கச்சியாக ஸ்ரீதேவிகா நடிப்பது தான் உங்களுக்குத் தெரியுமே.

Thats Tamil

À¡ò¾¢§Â À¢û¨Ç ÌÕÅ¢ ÌÆõÀ£ðÎÐ திரிஷா ±ñ¼¡ø ÌÕÅ¢ìÌ ¯Â¢÷

:P :P :P :P

:shock: :shock: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

அட லணடனிலா மெருகேத்துகிறார்...........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா... திரிசா தப்பிட்டா என்று கொஞ்ச பேர் சந்தோசப்படுற போலை இருக்கு :lol:

  • தொடங்கியவர்

த்ரிஷா கேட்ட கமிஷன்

8364.jpg

தெலுங்கில் முன்னணி நாயகியாகிவிட்ட த்ரிஷா சமீபத்தில் ஹைதராபாத் ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். காரணம் என்ன தெரியுமா? மறுபடியும் குளியலறை வீடியோ விவகாரம் மாதிரி என்னவோ, ஏதோ என்று கருதிவிடாதீர்கள்.

ஹோட்டலில் தங்குதவற்கு ஹோட்டல்காரர்களிடமே கமிஷன் கேட்டாராம். அதனால் அவரை காலி செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

தமிழிலும் தெலுங்கிலும் கால்ஷீட் கொடுத்த மாள முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் த்ரிஷா. இதனால் ரேட்டையும் கன்னாபின்னாவென்று உயர்த்தி தெலுங்கி ரூ. 90 லட்சத்தில் போய் நிற்கிறார். தமிழில் ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் கேட்கிறார்.

அதைத் தர தயாரிப்பு பார்ட்டிகள் சிலர் தயாராகவே இருந்தாலும், அவர்களுக்கு டேட்ஸ் தர கால்ஷீட்டில் இடம் இல்லை. அந்த அளவுக்கு த்ரிஷா பிஸி. ஏகத்துக்கும் பணம் குவிந்து வருவதால், அதையெல்லாம் அப்படியே ஆந்திராவிலும் சென்னையிலுமாக கட்டடங்களில் முதலீடு செய்து வருகிறார்.

ஹைதரபாத்தின் போஷ் ஏரியாவில் பங்களாவை விலை பேசி வரும் த்ரிஷா, சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் சில கோடிகளுக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கிப் போட்டார்.

ஹைதராபாத்துக்கு சூட்டிங்குக்குச் செல்லும்போது அங்கு ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில்தான் த்ரிஷா தங்கி வந்தார். செலவு தயாரிப்பாளருடையது என்பதால் த்ரிஷா மாதக்கணக்கில் தங்கி படத்தில் நடித்துத் தருவதுண்டு.

பேகம்பேட் சாலையில் உள்ள அந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்கல், சாப்பாடு, இத்யாதி விஷயங்களுக்கு எல்லாம் சேர்த்து பல ஆயிரங்களைத் தாண்டுமாம் கட்டணம்.

த்ரிஷா நீண்ட நாட்கள் தங்குவதால், அவரது அறைக்குரிய கட்டணத்தை குறைத்து ஹோட்டல் நிர்வாகம் தயாரிப்பாளருக்கு சலுகையும் அளித்ததாம்.

இந்த சமயத்தில்தான் த்ரிஷாவின் மூளை வேறு மாதியாக யோசித்தது. ஹோட்டல் நிர்வாகத்தை அணுகிய அவர், நான் நீண்ட நாட்கள் உங்களது ஹோட்டலில் தங்கி நடித்து வருவதால், உங்களுக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல வரும்படி வருகிறது.

எனவே இதற்காக என்னை நீங்கள் 'கவனிக்க' வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒன்றும் புரியாமல் ஹோட்டல் நிர்வாகம் த்ரிஷாவிடம், என்ன வேண்டும் என்று கேட்டுள்ளது. அதிகமில்லை, நான் தங்குவதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாடகை, மற்றும் வருமானத்தில் எனக்கும் கமிஷன் கொடுங்கள் என்று த்ரிஷா கூறவே, அதிர்ந்து போய்விட்டார்களாம் ஹோட்டல் நிர்வாகிகள்.

ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமராக இருந்தால் கட்டணத்தில் சலுகைதான் தர முடியும். அதை உங்களது தயாரிப்பாளருக்கு நாங்கள் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு எப்படி கமிஷன் தர முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார்கள் ஹோட்டல்காரர்கள்.

ஆனால் விடாத த்ரிஷா, நீங்கள் கமிஷன் கொடுத்தால், இனிமேல் நான் நடிக்கும் அத்தனை படங்களுக்கும், எனக்கு இந்த ஹோட்டலிலேயே ரூம் போட தயாரிப்பாளருக்கு ரெக்கமண்ட் செய்வேன். இல்லாட்டி போங்க என்று கூறிவிட்டு கமிஷன் குறித்து யோசியுங்கள் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடுப்பாகிப் போன ஹோட்டல் நிர்வாகிகள், தயாரிப்பளரைக் கூப்பிட்டு உடனடியாக த்ரிஷாவை பேக்அப் செய்யச் சொல்லிவிட்டார்களாம். இனிமேல் இந்த ஹோட்டலில் அவரைத் தங்க வைக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார்களாம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் (படம் ஒழுங்காக முடிய வேண்டுமே) த்ரிஷாவை வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜாகை மாற்றிவிட்டாராம்.

அட இப்படிக் கூட சம்பாதிக்க முடியுமா?

Thats tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா திரிஷா இப்படி சீப்பா இருக்கிறா.. இரசிகர் மாரே.. முயற்சியை விடாதைங்கோ... :lol:

  • தொடங்கியவர்

அவர்களின் நிஜ வாழ்க்கையில் என்ன செய்தால் என்ன, ரசிகர்கள் வெள்ளி திரையிலும் புகைபடங்களிலும் ரசிப்பதோடு சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகா.. .. :lol:

  • தொடங்கியவர்

யாரை சொல்றீங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாரை சொல்றீங்க?
:lol:
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கொண்டு தெரியுமா? திரிஷாவும் எனது நண்பனும் 2 வருடமா லவ் பண்ணினவங்களாம் (இந்திய தமிழ் நண்பன், திரிஷா மொடலிங்க்குக்குள் கால் பதிக்க முன்னார்) (அதன்பின்புதான் அவர் சினிமாவில் புகுந்தார்). நண்பன் சென்னையில் ஒரு டிஸ்கோ கிளப்பில் வேலைசெய்தவனாம், அவனது நண்பர்கள் மூலம் முதல் பழக்கத்தில் பின்பு காதலாக மாறியதாம்,, (அதைவிட இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள்) 2 வருடம் லவ்வில் யாரோ ஒரு புண்ணியவாங்கள் ஆப்பு வைத்துவிட்டார்கள்.. (அண்மையில் தான் தெரியவந்தது,, ஒரு ஆர்வகோளரால் அவனைக்கேட்டேன் தமிழ் சினிமாவில் சிம்ரான் எப்படி திரிஷா எப்படி வடிவா இருப்பாங்களா எல்லோருடும் கதைப்பாங்களா எண்டு கேட்டபோதுதான் ரொம்ப சாதரணமக சொன்னான்) இப்படி இப்படியெண்டு..அவன் ஆதரங்கள் எல்லாத்தையும் நம்ம புலுனாய்வு குழு ஆரய்ந்தபின்பு தான் தகவலை வெளியிட்டுஇருக்கிறது) எதுக்கும் திரிஷா இந்த யாழ்களத்தைப்பார்த்தா எண்டா "அல்ட் ரோய்" (ALD ROJ) தெரியுமா எண்டு கேழுங்க.. 8)

பி.கு: திரிஷா பிறகு எனக்கு தனிமடல் அனுப்பி. என்னை தொந்தரவு பண்ணக்கூடாது ஆமா சொல்லிபுட்டன்,, :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புல gadog1jq.gif நாய்வு.. எங்கை எல்லாம் போகுது பாருங்க :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.