Jump to content

யாழ் இணையம் - மாவீரர் தினம் 2007 : எங்கள் குரலில் ஒலிப்பதிவுகள்.. !!

Recommended Posts

யாழ் இணையம் - மாவீரர் தினம் 2007

வணக்கம்,

இங்கு நான் உங்கள் குரலில் மாவீரர்கள் பற்றிய ஒலிப்பதிவுகளை தாங்கிவரும் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்.

நீங்கள் பாடிய மாவீரர்களின் பாடல்களின் ஒலிப்பதிவுகளை, மாவீரர் சம்மந்தமாக நீங்கள் எழுதிய கவிதைகளின் ஒலிப்பதிவுகளை... இவ்வாறு மாவீரர் சம்மந்தமாக உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை கூறும் ஒலிப்பதிவுகளை இங்கு இணையுங்கள்.

நான் மாவீரர்கள் சம்மந்தமாக வெளியிடப்பட்ட விடுதலை கானங்கள் சிலவற்றை எனது குரலில் பாடி இங்கு இணைக்கின்றேன். இதுபோல் நீங்களும் உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்து இங்கே இணையுங்கள்.

ஜிக்:தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

ஈ சினிப்ஸ்: தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

--------------------------------------------------------------

ஜிக்:விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும் ..!!

ஈ சினிப்ஸ்: விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும் ..!!

-------------------------------------------------------------

ஜிக்: மாவீரர் யாரோ என்றால்... !!

ஈ சினிப்ஸ்: மாவீரர் யாரோ என்றால்... !!

--------------------------------------------------------------

ஜிக்:எங்கள் தோழர்களின் புதைகுழியில்..!!

ஈ சினிப்ஸ்: எங்கள் தோழர்களின் புதைகுழியில்..!!

---------------------------------------------------------------

ஜிக்:விடுதலைப்புலி தங்கச்சி உன் வீரஎழுச்சி தமிழீழப்புரட்சி!!

ஈ சினிப்ஸ்: விடுதலைப்புலி தங்கச்சி உன் வீரஎழுச்சி தமிழீழப்புரட்சி..

----------------------------------------------------------------

ஜிக்:மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

ஈ சினிப்ஸ்: மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

--------------------------------------------------------------

ஜிக்:விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

ஈ சினிப்ஸ்: விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

---------------------------------------------------------------

ஜிக்:மாவீரர் புகழ் பாடுவோம்!!!

ஈ சினிப்ஸ்: மாவீரர் புகழ் பாடுவோம்!

----------------------------------------------------------------

ஜிக்:மண்ணில் துயிலும் தெய்வங்களே! கள உறவு விகடகவி பாடிய பாடல்..

நன்றி!

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் கலைஞன்!

நான் இதுபற்றி ஏற்கெனவே வல்வை சஹாரா, தமிழ்த்தங்கை போன்றவர்களுடன் கலந்தாலோசித்தேன்.

நீங்கள் முந்திவிட்டீர்கள் மிகவும் சந்தோஷமான விடயம்.

எங்கள் முயற்சி நிச்சியம் வெற்றியடையும்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி கலைஞன், எங்கிட்ட விகடகவி அண்ணாவும் இதைப்பற்றி கேட்டிருந்தார். ஏதும் மாவீரர் தினத்துக்கு பாட்டு செய்யலாமோ எண்டு .... நானும் ஓம் எண்டனான். அவர்கூட கதைச்சிட்டு வந்து பார்க்க இந்த தலைப்பு கிடக்கு! :o

கவியரங்கம் எண்டால் இங்க கவி படைக்க நிறைய கவிஞர்கள் இருக்காங்க....! ஹிஹி :lol:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி எனக்கு ஒரு யோசனை இருந்தது அதனை ஒருவரிடம் கேட்டு இருகின்றேன் அவர் சரி என சொல்வாரானால் விரிவாக கதைகின்றேன்

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் இந்த முயற்சு வெற்றி பெற வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜிக்:விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும் ..!! பாடலை கேட்க

ஈ சினிப்ஸ்: விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும் ..! பாடலை கேட்க..

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே

தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே

தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த தீரர்களே

எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே

உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்

இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்

உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்

தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்

வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

நன்றி!

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

உணர்ச்சிபூர்வமாக நல்லா பாடுறீங்க வாழ்த்துகள் :D அது சரி பின்னால மீயூசிக் "டொக் டொக்" என்ற சத்தம் கேட்குது அதோ மியூசிக் என்னத்தை பயன் படுத்தினீங்கள் :wub: ...........வாழ்த்துகள் ஜெனரல்!! :lol:

அப்ப நான் வரட்டா!!!

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் கலைஞன்!

நான் இதுபற்றி ஏற்கெனவே வல்வை சஹாரா, தமிழ்த்தங்கை போன்றவர்களுடன் கலந்தாலோசித்தேன்.

நீங்கள் முந்திவிட்டீர்கள் மிகவும் சந்தோஷமான விடயம்.

எங்கள் முயற்சி நிச்சியம் வெற்றியடையும்.

உங்கள் குரலிலும் இங்கு ஒலிப்பதிவை இணையுங்கோ..

நல்ல முயற்சி கலைஞன், எங்கிட்ட விகடகவி அண்ணாவும் இதைப்பற்றி கேட்டிருந்தார். ஏதும் மாவீரர் தினத்துக்கு பாட்டு செய்யலாமோ எண்டு .... நானும் ஓம் எண்டனான். அவர்கூட கதைச்சிட்டு வந்து பார்க்க இந்த தலைப்பு கிடக்கு! :wub:

கவியரங்கம் எண்டால் இங்க கவி படைக்க நிறைய கவிஞர்கள் இருக்காங்க....! ஹிஹி :lol:

உங்கள் குரலிலும் இங்கு ஒலிப்பதிவை இணையுங்கோ..

நல்ல முயற்சி எனக்கு ஒரு யோசனை இருந்தது அதனை ஒருவரிடம் கேட்டு இருகின்றேன் அவர் சரி என சொல்வாரானால் விரிவாக கதைகின்றேன்

உங்கள் குரலிலும் இங்கு ஒலிப்பதிவை இணையுங்கோ..

நல்ல முயற்சி இது வெற்றியடைய வாழ்த்துக்கள்

உங்கள் குரலிலும் இங்கு ஒலிப்பதிவை இணையுங்கோ..

ஜெனரல்!!

தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் இந்த முயற்சு வெற்றி பெற வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

உங்கள் குரலிலும் இங்கு ஒலிப்பதிவை இணையுங்கோ..

அது சரி பின்னால மீயூசிக் "டொக் டொக்" என்ற சத்தம் கேட்குது அதோ மியூசிக் என்னத்தை பயன் படுத்தினீங்கள் :lol: ...........வாழ்த்துகள் ஜெனரல்!! :D

அது பின்னாலபோற சத்தம் மிசின் தாளம் போடுது. தாளம் இல்லாமல் பாடுறது கஸ்டம் தானே. அதுதான் டொக் டொக் எண்டு பின்னால சத்தம் வருது.

நன்றி!

பி/கு: நான் இணைத்த அந்த லிங்க கிளிக் செய்ய பாட்டு கேக்கிதோ? கனக்க்ஷன் கொஞ்சம் சிலோ போல இருக்கு. என்னால கேக்கமுடியவில்லை.

...

...

...

நான் பாடியபோது மைக்கை வாய்க்கு அருகில் வைத்து படித்ததால் (அது கொஞ்சம் வித்தியசமான மைக்)கொஞ்சம் கரகரப்பு வந்துவிட்டது. பிறகு தெளிவான குரலில் இதே பாடலை பாடி இணைத்துவிடுகின்றேன்.. :D

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

என்ட குரலோ அது வேண்டாம் எனக்காக வேற யாரும் டிரை பண்ணி பாருங்கோ :lol: பாவம் தானே பேபி இது எப்படி இருக்கு :wub: !!ஓமோம் நீங்க கொடுத்த லிங்கில் கிளிக் பண்ண பாட்டு கேட்குது அவ்வளவு கரகரப்பு இல்லை நல்லா தான் இருக்கு ஜெனரல் :lol: !!நான் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் பார்போம் ஏதாவது நானும் செய்யிறேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

விண்வரும் மேகங்கள நான் திருப்பி பாடி தெளிவான ஒலிப்பதிவோட மேல இணைச்சு இருக்கிறன்.

ஜிக்: மாவீரர் யாரோ என்றால்... !! பாடலை கேட்க

ஈ சினிப்ஸ்: மாவீரர் யாரோ என்றால்... !! பாடலை கேட்க

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி

வதம் செய்யும் ஆட்சி தன்னை..

உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்..

உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்....

சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!

துணிந்தெழும் ஞானவான்கள்!

(மாவீரர்....)

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!

பலமாகி நிற்கும் தூண்கள்!

(மாவீரர்....)

பாடலை கேட்க முடியாவிட்டால் (சத்தம் வரவில்லை எண்டால்) சொல்லவும்.. :D

நன்றி!

Link to comment
Share on other sites

ஜிக்:எங்கள் தோழர்களின் புதைகுழியில்..!! பாடலை கேட்க

ஈ சினிப்ஸ்: எங்கள் தோழர்களின் புதைகுழியில்..!! பாடலை கேட்க.

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

மண்போட்டுச் செல்கின்றோம்!

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

மண்போட்டுச் செல்கின்றோம்!

இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி!

இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி!

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

மண்போட்டுச் செல்கின்றோம்!

இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்!

போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்!

இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்!

போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்!

எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்!

இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி!

இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி!

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

மண்போட்டுச் செல்கின்றோம்!

வாழும் நாளில் எங்கள் தோழர் வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம்!

எம்தோழர் நினைவில் மீண்டும் தோளில் துப்பாக்கிகளை அணைக்கின்றோம்!

தாவிப்பாயும் பாயும் புலிகள் நாங்கள் சாவைக்கண்டு பறப்போமா?

பூவாய் பிஞ்சாய் உதிரும்புலிகள் போனவழியை மறப்போமா?

எங்க மற்ற ஆக்களிண்ட குரலக்காண இல்ல.. :icon_idea:

Link to comment
Share on other sites

பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி கலைஞன். எனக்கு இதிலெல்லாம் பாடி இனைக்கத் தெரியாது. மண்ணிக்கவும். :icon_idea::D

Link to comment
Share on other sites

ஜிக்:விடுதலைப்புலி தங்கச்சி உன் வீரஎழுச்சி தமிழீழப்புரட்சி!! பாடலை கேட்க

ஈ சினிப்ஸ்: விடுதலைப்புலி தங்கச்சி உன் வீரஎழுச்சி தமிழீழப்புரட்சி!! பாடலை கேட்க..

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே!

அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண் பிறப்பே!

கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே!

அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண்பிறப்பே!

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

பெண்ணை பழித்த கொடியவர் முன்

பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்!

எங்கள் மண்ணை அழித்த பகைவனை

அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்!

பெண்ணை பழித்த கொடியவர் முன்

பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்!

எங்கள் மண்ணை அழித்த பகைவனை

அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்!

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

போரில் துப்பாக்கி ஏந்தி நீ நடந்தாய்!

பூரிப்பில் நெஞ்சு சிலிர்த்தோம்!

குருதி நீரில் கிடந்தாய் பார்த்தோம் புரட்சியின்

நெருப்பினில் நாங்கள் குளித்தோம்!

போரில் துப்பாக்கி ஏந்தி நீ நடந்தாய்!

பூரிப்பில் நெஞ்சு சிலிர்த்தோம்!

குருதி நீரில் கிடந்தாய் பார்த்தோம் புரட்சியின்

நெருப்பினில் நாங்கள் குளித்தோம்!

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

குழந்தைப் பருவத்தில் கண்முன்னே அழகுக் கொடியாய் நீ வளர்ந்தாய்!

இன்று எழுந்தாய் தமிழரின் எதிரிகள் தலையில் இடியாய் நீ விழுந்தாய்!

குழந்தைப் பருவத்தில் கண்முன்னே அழகுக் கொடியாய் நீ வளர்ந்தாய்!

இன்று எழுந்தாய் தமிழரின் எதிரிகள் தலையில் இடியாய் நீ விழுந்தாய்!

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி!

நன்றி!

Link to comment
Share on other sites

கலைஞன், உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.பாடச்சொல்லி கேட்டு என்னை ரென்சன் ஆக்காதீங்க. :)

Link to comment
Share on other sites

ஜிக்:மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

ஈ சினிப்ஸ்: மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

உலகபடைகள் ஒன்றாகவரினும் உரிமைதன்னை இழப்போமா?

உலகபடைகள் ஒன்றாகவரினும் உரிமைதன்னை இழப்போமா?

அந்தநிலமும்கடலும் சான்றாக எங்கள்நிலத்தில் ஆட்சிவிடுப்போமா?

அந்தநிலமும்கடலும் சான்றாக எங்கள்நிலத்தில் ஆட்சிவிடுப்போமா?

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

பாயும்புலிகள் வீரத்தைஅஞ்சி பழிகொண்டிறப்பார் பகையாளர்!

பாயும்புலிகள் வீரத்தைஅஞ்சி பழிகொண்டிறப்பார் பகையாளர்!

எங்கள்தாயின்விலங்கை அறுப்பவர்வாழ தனியாய்மலரும் தமிழீழம்!

எங்கள்தாயின்விலங்கை அறுப்பவர்வாழ தனியாய்மலரும் தமிழீழம்!

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

களத்தில்வீழும் வேங்கைகள்மேலாம் கல்லில்உறைவார் கலையாக!

களத்தில்வீழும் வேங்கைகள்மேலாம் கல்லில்உறைவார் கலையாக!

அவர்உளத்தில்கொண்ட கனவுகள்எல்லாம் உலகில்நிற்கும் நிலையாக!

அவர்உளத்தில்கொண்ட கனவுகள்எல்லாம் உலகில்நிற்கும் நிலையாக!

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

தாழ்வும்உயர்வும் இணையெனசொன்ன தலைவன்வாய்மை தப்பாது!

தாழ்வும்உயர்வும் இணையெனசொன்ன தலைவன்வாய்மை தப்பாது!

நல்லவாழ்வை இழந்து மருகியமாந்தர் மகிழ்ந்தேஇருப்பர் எப்போதும்!

நல்லவாழ்வை இழந்து மருகியமாந்தர் மகிழ்ந்தேஇருப்பர் எப்போதும்!

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்!

அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்!

நன்றி!

Link to comment
Share on other sites

ஜிக்:விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

ஈ சினிப்ஸ்: விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! ஈழ

மண்மீட்கவே வழிகாட்டிய தோழர்களே! மாவீரரே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

மலராகும் முன்னே சருகாவதோ?

ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ?

மலராகும் முன்னே சருகாவதோ?

ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ?

வளமான நாடு எமதாகிடும்! உங்கள்

வரிவேங்கை வீரம் நிலையாகிடும்! மாவீரரே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே!

களம் செவ்வானம் போல் மாறிடினும்

செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே!

களம் செவ்வானம் போல் மாறிடினும்

இனியெங்கள் தமிழீழ மண்ணில் எங்கும்

எதிரிகளை இருக்க விடமாட்டோம் நாமே! மாவீரரே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

இதயங்கள் தடுமாறும் நிலை காண்பதில்லை!

எண்ணங்கள் ஈடேறும் நாள்தூரம் இல்லை!

இதயங்கள் தடுமாறும் நிலை காண்பதில்லை!

எண்ணங்கள் ஈடேறும் நாள்தூரம் இல்லை!

மரணங்கள் வந்தாலும் விடப் போவதில்லை!

மண் எங்கள் வசமாகும்! நிச்சயம் உண்மை! மாவீரரே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! ஈழ

மண்மீட்கவே வழிகாட்டிய தோழர்களே! மாவீரரே!

விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!

நன்றி!

Link to comment
Share on other sites

ஜிக்:மாவீரர் புகழ் பாடுவோம்!!!

ஈ சினிப்ஸ்: மாவீரர் புகழ் பாடுவோம்!

மாவீரர் புகழ் பாடுவோம்!

மாவீரர் புகழ் பாடுவோம்!

ஈழ மண்ணினை மீட்கவே

கண்ணிமை போல் காத்த

மாவீரர் புகழ் பாடுவோம்!

சாவினுக்கஞ்சாமல் சரித்திரம் படைத்துமே!

சாவினுக்கஞ்சாமல் சரித்திரம் படைத்துமே!

ஆவிதனை ஈழ அன்னைக்கு அர்ப்பணித்த..

ஆவிதனை ஈழ அன்னைக்கு அர்ப்பணித்த..

மாவீரர் புகழ் பாடுவோம்!

அஞ்சா நெஞ்சமும் அறநெறி தீரமும்

அஞ்சா நெஞ்சமும் அறநெறி தீரமும்

நெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட

அஞ்சா நெஞ்சமும் அறநெறி தீரமும்

நெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட

துஞ்சாமல் சமரினில் துப்பாக்கி ஏந்திக்காக்க..

துஞ்சாமல் சமரினில் துப்பாக்கி ஏந்திக்காக்க..

மஞ்சாளும் புகழ்பூத்த மண்மீட்க தமிழீழ..

மஞ்சாளும் புகழ்பூத்த மண்மீட்க தமிழீழ..

மாவீரர் புகழ் பாடுவோம்!

ஈழ மண்ணினை மீட்கவே

கண்ணிமை போல் காத்த

மாவீரர் புகழ் பாடுவோம்!

கோட்டையில் புலிக்கொடி காட்டிய தீரம்!

கொக்காவில் தனிலே கொடியரை வதைத்த வீரம்!

கோட்டையில் புலிக்கொடி காட்டிய தீரம்!

கொக்காவில் தனிலே கொடியரை வதைத்த வீரம்!

நாட்டினை காத்திட கஜுவத்தை(?) சங்காரம்!

நாட்டினை காத்திட கஜுவத்தை(?) சங்காரம்!

நாட்டிய வீரப்புலி காட்டிய தமிழீழ..

நாட்டிய வீரப்புலி காட்டிய தமிழீழ..

மாவீரர் புகழ் பாடுவோம்!

ஈழ மண்ணினை மீட்கவே

கண்ணிமை போல் காத்த

மாவீரர் புகழ் பாடுவோம்!

நன்றி!

Link to comment
Share on other sites

ஜிக்:தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

ஈ சினிப்ஸ்: தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!

எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
    • இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும்.  முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள்.  இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும்.  அவ்வளவுதான்.     நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
    • நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣
    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.