Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இப்படி நடந்துக்கிறாங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் இதழ் 82 இல் பக்கம் 33 இல் பலதும் பத்தும் பிரிவில் உடற் பருமன் அதிகரிப்பால் ஆபத்து என்ற அவசியமான ஒரு செய்தியை மக்கள் படிச்சு விழிப்புணர்வு பெற வெளியிட்டிருக்கிறாங்க.

அது வரைக்கும் நல்ல விடயம் தான். ஆனால் அந்தச் செய்தியின் தமிழாக்கத்தை இன்னொரு தளத்தில் இருந்து எடுத்துவிட்டு சிறிய ஒரு பகுதியை அதோட இணைச்சிட்டு.. கொஞ்சத்தை கட் பண்ணிட்டு.. தங்கட செய்தியா வெளியிட்டிருக்காங்களே ஏன்..??!

வரிக்கு வரி இங்கிருந்துதான் செய்தியைப் பெற்றிருக்கிறாங்க. ஆனால் சிறு செருகல்களின் பின் மூலம் குறிப்பிடாம செய்தி போட்டிருக்காங்க..!

http://kuruvikal.blogspot.com/2007/11/blog-post_1459.html

மக்களுக்கு பயனுள்ள செய்திகளை தேடிப் பிடிச்சு சென்றடைய வைக்கிறது சிரமமான பணிதான். இருந்தாலும் பாகுபாடு காட்டாத வகையில் அதைப் பிரசுரிக்க கற்றுக் கொள்வதுதான் பத்திரிகைத் தர்மம்..!

ஒரு பேப்பர் அதை கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளனும் என்பது தாழ்மையான கருத்து. மற்றும் படி செய்திகளை தேடிப் பிடிச்சு.. முக்கியம் அறிந்து பிரசுரிக்கிறதைப் பாராட்டியே ஆக வேண்டும்..!

அந்தச் செய்தியோடு பெறப்பட்ட இடத்தின் மூலத்தைப் போடுறதில ஒரு பேப்பருக்கு என்ன பிரச்சனை...?! செய்தித் தளத்தை அறிமுகம் செய்வதில் பிரச்சனையா இல்ல செய்தியை வெளியிடுபவரோடு முரண்பட்டவர்கள் ஒரு பேப்பருக்குள் அதற்கும் முரண்படுகின்றனரா..??!

பத்திரிகை என்பது இவற்றுக்கு அப்பால் இருக்கனும். இல்ல... அது பத்திரிகையல்ல.. பக்கச்சார்பு பிரச்சார இதழ் என்பதாகத்தான் அமையும்.

ஒரு பேப்பரில் சில நடுநிலைவாதிகள் இருப்பீங்க. உங்க மனச்சாட்சியை தொட்டு இச் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறதுதான் பண்பாக அமையும். செய்தியைப் போடுங்க அதை வரவேற்கிறம். ஆனால் அடுத்தவர்களின் முயற்சிக்கும் ஊக்கமளிக்கக் கற்றுக் கொள்ளுங்க. உங்களுக்கு வேண்டியவங்களை மட்டும் இனங்காட்டிட்டு மற்றவங்களப் புறக்கணிக்கிறது அநாகரிகமான செயல். பத்திரிகைத் தர்மத்துக்கு முரணானது. உங்கள் பத்திரிகை மீதுள்ள மதிப்பை தரங்குறைக்கிற செயலை செய்யாதேங்க.

மீண்டும் செய்திகளை தெரிவு செய்து பிரசுரிக்கிறதைப் பாராட்டிக் கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டுறது திருத்தவே அன்றி உங்களை சரிக்க அல்ல என்பதைப் புரிஞ்சு கொண்டு செயற்படுங்க.

நன்றி வணக்கம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சங்கதி அதுவா இந்த செய்தியை வெட்டி ஒட்டினவர் கவனிக்கும்படி கேட்டு கொள்கிறேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ சங்கதி அதுவா இந்த செய்தியை வெட்டி ஒட்டினவர் கவனிக்கும்படி கேட்டு கொள்கிறேன் :D

இது முதற்தடவையல்ல. முன்னரும் நடந்திருக்குது. அவங்க செய்திகளை வெட்டி ஒட்டிறதில தப்பில்ல. அவங்களுக்கு நேரப்பிரச்சனைகள் ஆளணிப் பிரச்சனைகளை இருக்கும். ஆனால் மூலத்தை வெளியிடுறதில என்ன பிரச்சனை என்பதுதான் விளங்கேல்ல..!

அப்படி வெளியிடுறது எழுதிறவங்களையும் உற்சாகம் பண்ணும் பத்திரிகைக்கும் வரவேற்பாக அமையும்..! மற்றும் படி செய்தி ஒன்றை அதிகளவு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்படி செய்யுறாங்க என்பதில பாராட்டியே ஆகனும். அதில குறை பிடிப்பதாக எண்ணக் கூடாது. அவர்களின் தேர்வு செய்து வெட்டி ஒட்டுதலை நிச்சயம் குறை சொல்லேல்ல. அவங்க விடயங்களை தேர்வு செய்துதான் வெட்டி ஒட்டுறாங்க. அது பாராட்டுக்குரியது. அப்படித்தான் ஒன்றை ஆக்குபவனுக்கும் உற்சாகம் வழங்கனும். அதை அவர்களும் நிராகரிக்கக் கூடாது.

நானும் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் :D . ஒரு ஆக்கம் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த மூலத்தைக் குறிப்பிடுவது அவசியம். ஒருவரின் ஆக்கத்தை பிரசுரிக்க விரும்புகிற நாம் அந்த ஆக்கத்தை எழுதியவருக்கும் அவரின் உழைப்புக்கும் மரியாதை கொடுக்கவேண்டும். ஒரு ஆக்கத்தை எழுதுவதற்கு அவர் செலவழிக்கும் நேரம் உழைப்பு போன்றவற்றை நாம் உணரவேண்டும்.

நாளை ஒருபேப்பரில் வந்த சபேசனின் ஆக்கத்தையோ, சாத்திரியின் ஆக்கத்தையோ அல்லது வேறு ஒருவரின் ஆக்கத்தையோ இன்னொருவர் எடுத்து தனது தளத்தில் பெயர், மூலம் போன்றவற்றைக் குறிப்பிடாது இணைக்கலாம். எனவே நாம் எவ்வளவுக்கெவ்வளவு மற்றவரிடம் சரியாக நடந்துகொள்கிறோமோ, அப்போது தான் மற்றவர்கள் நம்மிடம் சரியாக நடந்துகொள்வார்கள். அப்படி நடந்துகொள்ளாவிட்டாலும் நடவடிக்கை எடுப்பதற்குரிய தகுதி நமக்கிருக்கும்.

எனவே ஒருபேப்பர் இதனைக் கவனத்தில் எடுத்து எதிர்வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயற்படவேண்டும்.

  • 2 weeks later...

உது என்ன உதுக்கு மேலேயும் செய்கின்றார்கள் நமது பத்திரிகையாளர்கள். உதாரணமாக இந்திய சினிமா சம்பந்தமான செய்திகளை குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வாரப்பத்திரிகைகளிலிருந்து சுட்டுப் போட்டு விட்டு செய்தியின் கீழே சென்னையிலிருந்து நமது நிருபர் என்று சேர்ப்பார்கள் பாருங்கள். அப்படியே புல்லரிச்சுப் போகுமுங்க. :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது என்ன உதுக்கு மேலேயும் செய்கின்றார்கள் நமது பத்திரிகையாளர்கள். உதாரணமாக இந்திய சினிமா சம்பந்தமான செய்திகளை குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வாரப்பத்திரிகைகளிலிருந்து சுட்டுப் போட்டு விட்டு செய்தியின் கீழே சென்னையிலிருந்து நமது நிருபர் என்று சேர்ப்பார்கள் பாருங்கள். அப்படியே புல்லரிச்சுப் போகுமுங்க. :wub::wub:

இதே போல் தான் நம் ஒருசில வானொலிகளும், தொலைக்காட்சிகளும் பிரபல இணையத்தளங்களில் இருப்பதை வரிசைக்கிரமம் தப்பாமல் மூச்சுவிடாமல் அப்படியே செய்திகளை வாரி வழங்குவார்கள் :lol:

அதென்ன நீங்க மாத்திரம் இணயத்தை பார்த்து எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கலாம். மற்றவையும் அறியட்டும் எண்டுதான் வெட்டி ஒட்டுகினம். வாறதே ஓசி பேப்பர் இதுக்கெல்லாம் சம்பளம் குடுத்து நிருபர் வைக்கேலுமே. அப்ப அப்படி இப்படிதான். முழுசா போட்டா வழக்கு போட்டிருவியள் அப்ப இடைக்கிடை வெட்டி ஒட்டி சட்ட ஓட்டையை தவிர்கிறது தானே.

மற்றது இன்னொரு விசயம் இது இணையத்தில சுட்டது எண்டு இன்ரநெற் உழுதாவைக்கு தெரியாது. அப்ப என்ன பிரச்சனை.

நல்ல சமத்தியான நிருபர் எண்டு பெயர் எடுக்கட்டும் விடுங்களன்.

சரி ஏதோ நல்ல விசயத்தை நாலு பேருக்கு பரப்பின புண்ணியம் ஒருபேப்பருக்கு போகட்டன்.

  • 2 weeks later...

கள உறவுகளுக்கு ஒரு தகவல்

கடந்தவாரம் வெளிவந்த ஒரு பேப்பரில் குழைக்கட்டான்/ குளக்காட்டான்/குளைக்காட்டன்

என்ற பெயரில் வெளிவந்த ஆக்கம் யாழ்களத்தில் மேற்படி பெயரில் அறியப்பட்ட என்னதில்லை. நான் இன்னும் அந்த ஆக்கத்தை (ஆண்கள் விடுதலை சங்கம்?? ) பார்க்கவில்லை. யாழ்களத்தின் மூலம் அறிமுகமான உறவுகள் இரண்டும் ஒருவரே என தப்பாக நினைக்க வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளுக்கு ஒரு தகவல்

கடந்தவாரம் வெளிவந்த ஒரு பேப்பரில் குழைக்கட்டான்/ குளக்காட்டான்/குளைக்காட்டன்

என்ற பெயரில் வெளிவந்த ஆக்கம் யாழ்களத்தில் மேற்படி பெயரில் அறியப்பட்ட என்னதில்லை. நான் இன்னும் அந்த ஆக்கத்தை (ஆண்கள் விடுதலை சங்கம்?? ) பார்க்கவில்லை. யாழ்களத்தின் மூலம் அறிமுகமான உறவுகள் இரண்டும் ஒருவரே என தப்பாக நினைக்க வேண்டாம்.

முன்னர் சில ஆக்கங்களில் குளக்கோட்டன் அப்படி என்று வந்ததாத் தான் ஞாபகம். இதழ் 83 நமக்கு பார்க்கக் கிடைக்கவில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பின்னை எப்படி ஈயடிச்சான் கொப்பிகளாக முழு பத்திரிகையும் அமைய முடியும்.?

கனடாவில் ஒரு பத்திரிகை பார்த்தால் போதும் மற்றதும் அதே சாயலில் அமையும் என எதிர்பார்க்கலாம்.அது தான் கசக்கின்ற உண்மையும் கூட.

உ+ம் : ஒரு செய்தியை சற்று மாறுதலாக அமைந்த போதிலும் கூட அச்செய்தி உண்மையாக இருந்தும் கூட யாராலும் சீரணிக்கமுடியவில்லை.

குறிப்பாக கருணா பிரிவு போன்றன.

பத்திரிகா சுதந்திரம் தமிழ் மக்களை மாக்களாக்கியுள்ளது என்பது தான் யதார்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.