Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவால் இலங்கை-இந்திய உறவில் விரிசல்

Featured Replies

பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமைக்கு சிறிலங்கா திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இலங்கை தயக்கத்துடன் எதிர்ப்பு

[24 - November - 2007] [Font Size - A - A - A]

டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு இலங்கை எதிராகவே வாக்களிக்குமென்று வெளி விவகார பிரதி அமைச்சரான ஹுசைன் பைலா நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

வியாழக்கிழமை உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டமொன்றில் பாகிஸ்தானை இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய பிரச்சினையை அடுத்தே அரசாங்க தரப்பிலிருந்து இந்த விவகாரம் பகிரங்கமாகியிருக்கிறது.

"பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு உதவியளித்து வந்த நாடு. ஒருபோதும் அதற்கெதிராக நாம் செயற்படக் கூடாதென முன்னாள் வெளிவிவகார அமைச்சரான லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டிக் காட்டி வலியுறுத்தியிருக்கின்ற போதிலும் தற்போதைய வெளிநாட்டமைச்சரான ரோஹித்த போகொல்லாகம பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு ஆதரவளித்திருக்கிறார். இது நாட்டுக்கு செய்த துரோகமாகும்" என்று லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா;

"இப்படியானதொன்று நடைபெற்றிருக்கிறது கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பு உச்சி மாநாட்டில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களிப்பதென்றே முடிவு செய்யப்பட்டது. அதாவது, பாகிஸ்தானை அவ் அமைப்பிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டது. எனினும், அமைச்சர் போகொல்லாகம நாட்டிலிருக்காததால் அவர் அதை அறிந்திருக்கவில்லை. இதனால் தான் அவர் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

எனினும், இன்று ( நேற்று ) பிரதமர் தலைமையில் கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி வாக்கெடுப்பின் போது பாகிஸ்தானை அமைப்பிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு இலங்கை எதிராக வாக்களிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. அது, அங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

இது தொடர்பாக ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயிடம் வினவிய போது பிரதி வெளிவிவகார அமைச்சரின் கருத்தை உறுதிப் படுத்தியதுடன் கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உகாண்டா சென்று விட்டதால் தீர்மானம் பற்றி அவர் அறிந்திருக்காததன் காரணமாகவே எதிராக வாக்களித்து விட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனினும், நேற்று பிரதமர் தலைமையில் கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களிப்பதென்று எடுத்த தீர்மானம் உடனடியாக தொலைபேசி மூலம் உகாண்டாவிலிருக்கும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவால் இலங்கை-இந்திய உறவில் விரிசல்

வீரகேசரி வாரவெளியீடு

பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் இலங்கை எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டால் இந்தியா அதிருப்தியடைந் திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து உகண்டாவிலுள்ள இலங்கை வெளியு றவு அமைச்சக அதிகாரிகள் குழுவுடன் இந்திய வெளி யுறவு அமைச்சக அதிகாரிகள் குழுவினர் கலந்துரையா டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானை ஆதரிக்கும் நிலைப்பாட்டால் இலங் கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரி சல் நிலை ஏற்படும் சாத்தியங்கள் தோன்றியிருப்பதாக இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இலங்கை அரச உயர்மட்டத்துடன் இந் தியா விரைவில் உத்தியோகபூர்வமாக பேச்சு நடத்த விருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் மலேஷியா மட்டுமே முதலில் எதிர்த்து வாக்களித்தது. பின்னர் இலங்கையும் எதிர்த்து வாக்களிப்பதாக அறிவித்தது.

இலங்கையுடன் மிக நெருக்மான உறவுகளை இந்தியா கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானை ஆதரிக்க இலங்கை எடுத்த முடிவானது இந்தியாவை சினம்கொள்ள வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளாராக இந்தியாவின் கமலேஷ் சர்மா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை காலமும் லண்டனிலுள்ள இந்திய தூதவராக பணியாற்றி வந்த இவர் எதிர்வரும் மார்ச் மாதம் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார்.

இலங்கை சுதந்திர நாடு. அவர்கள் யாரையும் ஆதரிக்கலாம். இந்தியா சுதந்திர நாடு அவர்கள் எங்களை ஆதரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரதம் கவனிக்க வேண்டிய பாக். இலங்கை உறவுநிலை

"இனம் இனத்தைச் சேரும்' என்பார்கள். பொது நல நாடுகள் அமைப்பு, பாகிஸ்தானை இடைநிறுத்தி எடுத்த முடிவு தொடர்பில் இலங்கை நடந்து கொண்ட விதம் இனம் இனத்தைச் சேரும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

பாகிஸ்தானை இடைநிறுத்தும் முடிவு முதலில் பொதுநல நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மலேசியா, இலங்கை, பிரிட்டன், நியூகினி, லெஸோதோ, கனடா, தன்ஸானியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச் சர்கள் பங்குபற்றினர். அங்கு பாகிஸ்தான் அரசின் போக்குக்கு எதிரான கருத்து நிலைப்பாடு சூடாக நிலவியது. அதனால் சர்வதேச சமூகத்தின் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு ஒத்துப் போக வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில், அந்தக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு இசைவு தெரிவிக்க வேண்டியவரானார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம. அது மட்டுமல்ல அத்தகைய ஒரு முடிவுக்கு அவர் இணங்கிய பின்னர் இலங்கை அரசுத் தலைமையின் சீற்றத்துக்கும் கடுப்புக்கும் கூட அவர் ஆளானார்.

அந்தப் பின்ன ணியில் கொழும்பு அரசின் அரசியல் நிர்வாக முறைமை பற்றிய ஆழமான ஓர் உண்மை புதைந்து கிடப் பதும் வெளிவெளியாகியிருக்கின்றது.

பாகிஸ்தான் விடயத்தில் இலங்கை அரசுத் தலைமையின் உள்ளக்கிடக்கையை கருத்து நிலைப்பாட்டை உண்மையிலேயே புரியாத நபராகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் விளங்கினாரா என்ற கேள்வி இவ்விடயத்தின் நிகழ்வுப் போக்கை ஊன்றிக் கவனிப்பவர்களின் மனதில் எழுவது தவிர்க்க முடியாததே.

சார்க் பிரதேச நாடு ஒன்று தொடர்பாக அரசுத் தலைமையின் கருத்தைப் புரிந்து கொள்ள இயலாத முடியாத ஒருவரைத்தான் இலங்கை அரசு தனது வெளிவிவகார அமைச்சராக வைத் திருக்கின்றதா?

இந்தக் கேள்விக்கு விடையைத் தேடுவதற்கு முதலில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தற்போதைய நட்புறவு இறுக்கத்தின் பின்னணியையும் கொழும்பு அரசுக் கட்டமைப்பின் செயற்பாட்டுப் போக்கையும் நாம் அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கொழும்பு அரசு 109 அமைச்சர்களுடன் பெரும் ஆரவாரப் பரிவாரங்களோடு ஆட்சியைத் தொடர்ந்தாலும், அதிகார மையம் ஏதோ ஒரு குறுகிய வட்டத்துக்குள் தான் புதைந்து கிடக்கின்றது என்பதையும், வெறும் கொடி, குடை, ஆலவட்டத்துடன் "பந்தா' பண்ணுவதோடு அமைச்சர்களின் அதிகாரம் அடங்கி விட்டது என்பதையும் இப்பந்தியில் ஏற்கனவே தெளிவாக எடுத்து விளக்கியிருக்கின்றோம்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் இலங்கை அரச அதிகாரத்தின் நாணயக் கயிறு, "ராஜபக்ஷ சகோதரர்கள் அண்ட் கம் பனி' யின் கையிலேயே முற்றாக வீழ்ந்து விட்டது என்பதும் தெளிவு.

இதே சமயம், பாகிஸ்தானுடனான தற்போதைய நல்லுறவு இலங்கை இன யுத்தத்துடன் சம்பந்தப்பட்டே தற்போது இறுக்கமடைந்திருக்கின்றது. புலிகளுக்கு எதிரான இலங்கைப் படைகளின் யுத்தத்தில் இலங்கைத் தரப்புக்கு உதவும் பெரும் பின்னணிச் சக்தியாக பாகிஸ்தான் விளங்குகின்றது எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் அது பற்றிய விடயங்கள் எல்லாம் பெரும் மூடு மந்திரமாகவே பேணப்படுகின்றன. "ராஜபக்ஷ சகோதரர் அண்ட் கம்பனி'யால் நேரடியாகக் கையாளப்படும் இந்த இரகசிய செயற்பாடுகள் அனைத்தும் அரசும் கட்டமைப்பின் ஏனைய அங்கங்களுக்குத் தெரியாமல் அந்தரங்கமாகவே முன்னெடுக்கப்படுபவை.

பாகிஸ்தான் தொடர்பாக இலங்கை அரசுத் தலைமைக்கு இருக்கும் இந்த முக்கியத்துவம் நெருக்கம் இலங்கை அரசின் வெளிவிவக?992; அமைச்சருக்கோ கூட அறிய வராத பல ஆழமான விவகாரங்களையும் கொண்டது.

அதனால்தான் விவகாரம் தெரியாத அப்பாவித் தனத்தில் செயற்பட்டு அரசுத் தலைமையின் கடும் சீற்றத்தையும் ஏச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் ரோஹித போகொல்லாகம பொதுநல நாடுகள் அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தொடர்பில் கொழும்பு துள்ளிக் குதித்துச் சீறிச் செயற்பட்ட போக்கை முதலில் கவனிக்க வேண்டிய தரப்பு எது தெரியுமா? இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்திய உபகண்டமேயாகும். இந்த இறுக்கமான நட்புறவின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடு சம்பந்தமாக விசனம் தெரிவித்துவரும் ஈழத் தமிழ், ஆதரவு சக்திகள், ஓர் அம்சத்தை இந்தியாவுக்கும் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவது வழமை. அவையே இப்போது நாமும் தொட்டுச் செல்ல வேண் டியவர்களாக இருக்கிறோம்.

இந்தப் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கையில் தனது நேசசக்தி எது என்பதை அடையாளம் காண்பதில் இந்தியா தவ றக்கூடாது என்பதே அது. அயல் நாடான இந்தியாவுக்கு உள் ளார்ந்தமாக நேச சக்தியாக இலங்கையில் விளங்கக் கூடியது சிங்களவர் தேசமா? அல்லது தமிழர் தேசியமா? இக்கேள்விக்கு சரியான விடைகண்டு அந்த நேச சக்தியுடன் தனது உறவைப் பலப்படுத்தி அந்த நேச சக்தியை ஸ்திரப்படுத்துவதே இந்தியாவுக்கும் நல்லது இப்பிராந்தியத்துக்கும் நல்லது என்பது வெளிப்படை.

இந்து சமுத்திரப் பிராந்திய விவகாரத்தில் கொழும்பின் கடந்த காலப் போக்கை புதுடில்லி சரியான விமர்சனக் கண்ணோடு உற்று நோக்கி ஆராய்ந்து எடை போடுமாயின் இலங்கையில் தனது நேச சக்தி எது, நாசசக்தி எது என்பதை அது இலகு வில் உணர்ந்து கொள்ள முடியும்.

1971 ஆம் ஆண்டில் வங்கப்பிரச்சினை எழுந்த போது, மேற்குப் பாகிஸ்தானிலிருந்து விமானங்கள் இந்தியாவைக் கடந்து கிழக்குப் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு இந்தியா தடைபோட்டது.

தடையை மீறி, பாரதத்தைச் சுற்றி வட்டமிட்டு மேற்குப் பாகிஸ்தானிலிருந்து விமானங்கள் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பறந்தன. அப்படி அவை பறக்கும் போது கொழும்பில் தரித்து எரிபொருள் நிரப்பிக் கொள்ள இலங்கை அனுமதித்து ஒத்துழைத்தது. வங்கதேச விடுதலையை ஒட்டி இந்திய பாகிஸ்தான் யுத்தம் வெடித்த சமயத்தில்அயல்நாடான இலங்கை இவ் வாறு பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து ஒத்துழைத்து உதவியது முதல் கொண்டு இப்போது பாகிஸ்தானுக்காக பொதுநல நாடு கள் அமைப்பில் அளவுக்கு மீறி குரல் எழுப்பியது வரை இஸ்லாமாபாத்துக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள நட்புறவுப் பின்னலின் இறுக்கத்தையும் வலிமையையும் புதுடில்லி புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் புரிதல் ஏற்படுமானால் இப்பிராந்தியத்தில் தனது நேசசக்திகளை அடையாளம் காண்பதில் அவற்றுடன் இணைந்து செயற்படத் தீர்மானிப்பதிலும் இந்தியாவுக்கு சிக்கல் இருக்காது. இனிமேலாவது புதுடில்லி தன்னை தனது நிலைப்பாட்டை சுய ஆய்வு செய்து நேர்சீர் செய்து கொள்ளுமா?

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் நினைப்பதுபோல் பாகிச்தானை ஆதரிப்பதற்காக இலங்கையை இந்தியா வெறுக்கப்போவதில்லை. ஏனென்றால் இலங்கை பாக் உறவென்பது, இந்திய-இலங்கை உறவை விட பழயது மட்டுமல்லாமல், நீண்டகாலமாக நீடித்து வருவது. பாக்கிச்தான் இலங்கைக்கு உதவி வருவது தெரிந்தும் கூட இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இதில் யார் அதிகளவு உதவி செய்து இலங்கைக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டுவதிலதான் போட்டியே தவிர வேறொன்றுமிலை.

தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கிய காலத்திலிருந்தே இலங்கை பாக்கிச்தானின் தோழனாகி விட்டது. ஏதோ இப்பத்தான் இலங்கை பாக்கிச்தானுடன் நெருங்குவது மாதிரியும், உடனே இந்தியா இலங்கையை ஒதுக்கி விட்டு தமிழருக்கு உதவ ஓடோடி வந்துவிடும் என்றமாதிரியும் உதயன் பூச்சாண்டி காட்டுது.

உதயனிடம் ஒரு கேள்வி :ஐய்யா, இதெல்லாம் தெரியாமல் கூடவா ஒரு பிராந்திய வல்லரசு 100 கோடி மக்களை வைத்து ஆட்சி நடத்தும் ? உங்கள் உள்ளத்து ஆதங்கங்களை சொல்வதுதனே, அதைவிடுத்து எதற்கு வாசகர்களை அநியாயத்திற்கு ஏங்க வைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லும் அறிவுரைகள் கல்லில் நாருரிப்பது போன்றது என்பது உங்களுக்கே தெரியும்தானே, பிறகு எதற்கு இந்த வேண்டாத ஆசையெல்லாம்?

சரியாக ச்சொனீர் ரகுனாதன், உதயன் ந்ம்பு கின்றதா? அல்லது ந்ம்பவைகின்றதா? அல்லது இ ந்தியா பத்திரிகைச் சேய்தியைய் வைத்துத்தான் முடிவு எடுக்குமா? அவர்களுக்கும் அது நன்கு தெரியும் தெரிஞ்சும் தான் உதவியும் செய்யின்ம்.

ஏதோ எனக்குப் பட்டதைச்சொலுறன்:

நம்ப நட நம்பி நடவாதே

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி!

பத்திரிகைச் செய்திகள் எப்போதுமே உண்மையாக இருக்க வேண்டுமென்பதில்லை. பொதுவாக ஆசிரியரின் கருத்தத்தான் அது பிரதிபலிக்கும். ஆசிரியர் என்பது யார் ? சாதாரண மனிதர் தானே ? இதைவிடவும் வியாபார நோக்கங்களும், பரந்துபட்ட வாசகர் கூட்டத்தையும் கவரும் நோக்கமும் இருக்கும். எல்லாவற்றையும் விட இந்தியா என்று வந்தவுடன் ஒரு பற்று வந்துவிடுகிறது பலபேருக்கு. இவர்கள் இன்னும் 25 வருடங்களுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இன்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து போடும் ஆட்டமெல்லாம் இவர்களுக்கு கனவுலகில் நடப்பது போலத் தெரிகிறது. விட்டுவிடுங்கள்....பாவம் , பிழைத்துப் போகட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரேன் !

விரிசல் கூடக் கூட கொடுக்கும் பணம், ஆயுதத்தின் அளவும் கூடும். அதாவது பாகிச்தான் ஆயுதக் கப்பல் கொண்டு வந்தால் இந்தியா ஆயுதக் கப்பலே கொடுக்கும். ராஜதந்திர விரிசல் என்பது இதுதான்.

தமிழனை அழிக்கிறதை விட்டு விட்டு விரிசல் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கினம்...வேறு வேலை இல்லாமல்...விரிசலாவது மண்ணாங்கட்டியாவது.... .நாங்கள் எங்கட பாட்டில தமிழ்நாட்டுக் காரனையும் ஏமாற்றி, உலகையும் ஏமாற்றி இலங்கைக்கு இன்னும் முண்டு குடுப்பம்...உந்த திராவிடக் கூட்டத்துக்கு உதெல்லாம் விளங்கவே போகுது ?!!!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்க பந்தி பந்தியா விரிச்சலை பற்றி எழுதுவாங்க. நாமும் அதை நம்புவோம்.

ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சீறிலங்காவிற்கு பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ஆயுதம் வழங்குவது இந்தியாவுக்கு மிகவும் மகிழ்சியான விடயம் என்பதை.

தான் செய்யவேண்டியவற்றை அவர்கள் செய்கின்றார்கள் என்று. அதனால் தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பதும் தெரியும்

எமது கட்டுரையாளர்களின் அடிப்படை மூலம்

இன்னும் ஒரு 30 வருடம் பொறுமையாக கேட்கனும்.

பிற நாடுகளில் சூழல் இன்னம் கனிந்துவரவில்லை.

இந்தியா சீறிலங்காவின் கபட தன்மையை புரிந்து கொள்ளும் காலம் வெகுவிரைவில் ஏற்படும்.

இந்தியாவின் மத்திய அரசை நிர்ணயிக்கும் பலம் தமிழ் நாட்டின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இதையும் பாருங்கள்..... இப்படி இருக்கம் இந்தியா பாகிஸ்தானுக்கு அஞ்சுமா? அதோடு அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு மட்டு படுத்திய இராணுவ உதவியை தான் வழங்கும் என்பதும் இந்தியாவுக்கு தெரியும்.

http://tamilkalam.com/article/Tech/180/

SoSoSo..................... :D:D:D

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம் இலங்கைக்கு வேறு நியாயமா?

உகண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்று முடிந்த பொதுநல நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டைஒட்டி இலங்கை நடந்துகொண்ட குளறுபடித்தனம் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது.

அதேசமயம், பொதுநல அமைப்பு நாடுகள் ஒவ்வொரு தரப்புக்கு ஒவ்வொரு விதமாக மாறுபாடான அணுகுமுறையோடு நடந்துகொண்டமையைப் பார்க்கும்போது அதுவும் கூட நையாண்டி நளினமாகத்தான் தோன்றுகின் றது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

பொதுநல அமைப்பு நாடுகள் தமது கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்த எடுத்த முடிவையும்

அந்த முடிவை ஆரம்பத்தில் ஆதரித்த இலங்கை பின் னர் அதைக் கடுமையாக எதிர்த்தமையையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆனால், ஜன நாயக விழுமியங்கள் பாதிக்கப்பட்டு, அவசரகாலச் சட்டத் தினால் அடிப்படை மனித உரிமைகள் மிதிக்கப்படும் நாடாக பாகிஸ்தான் மட்டுமே பொதுநல அமைப்பு நாடுகளின் கண்களுக்குப் பட்டது என்பதைத் தான் எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாகிஸ்தானை இடைநிறுத்தும் பொதுநல நாடுகள் அமைப்பின் தீர்மானத்தை இலங்கை எதிர்த்தமைக்குப் பிர தான காரணங்கள் இரண்டு.

ஒன்று உள்நாட்டு யுத்தத்தில் அந்தரிக்கும் கொழும் புக்கு இராணுவ ஆயுதத் தளபாடங்கள் மற்றும் இராணுவச் சேவை, பயிற்சி உதவிகளை வழங்கிக் கைகொடுத்து வரும் முக்கிய நாடு பாகிஸ்தான்தான். ஆகவே, அந்த நாட்டுக்கு இயல் பாகவே கைகொடுக்க இலங்கை முன்வந்தமை ஆச்சரியப் படத்தக்கதல்ல. அத்துடன், பாகிஸ்தானை பொதுநல நாடு கள் அமைப்பிலிருந்து இடைநிறுத்தும் முடிவை இலங் கையும் ஆதரித்தது என்ற காரணத்துக்காக இலங்கை மீது பாகிஸ்தான் சீற்றம் கொண்டு, இலங்கைக்கான உதவிகளை நிறுத்தத் தீர்மானித்து, பாகிஸ்தான் இலங்கையைக் கைவிடுமானால் கொழும்பின் கதி அம்போதான். ஆகவே, எப்படி யாவது பாகிஸ்தானை தாஜா பண்ணி, சமாளித்து, திருப்தி செய்து, தன்னுடன் அரவணைத்து வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கொழும்புக்கு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதற்காகத்தான் ஆரம்பத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லா கம திசைமாறிச் செயற்பட்டபோதும், பின்னர் இலங்கை ஜனாதிபதி தாமே நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு பாகிஸ்தானுக்காகக் குரல் எழுப்பி, பாகிஸ்தானுடனான உற வைச் சமாளித்துக் கொண்டார்.

அடுத்தது "இனம் இனத்தையே சாரும்' என்ற கார ணத்தில் அமைந்தது. அவசரகாலச் சட்டத்தை நடை முறைப்படுத்தி, ஜனநாயக விழுமியங்களைக் குழி தோண் டிப் புதைத்தமைக்காக பாகிஸ்தான் மீது பொதுநல நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்குமானால் அந்தத் தொப்பி தனக்கும் அளவாக விழும் என்பதால் அடுத்த இலக்குத் தானாகி விடலாமோ என்ற அச்சம் கொழும்புக்கு. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தானைப் பொறுப் பாக நிறுத்தும் நடவடிக்கையிலிருந்து அந்த நாட்டை விடு விக்கத் தலைகீழாக நின்றது கொழும்பு.

கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் பாகிஸ்தானில் நடந்தது என்ன? ஆக, அவசரகாலச் சட்டம் புதிதாகக் கொண்டுவரப்பட்ட விடயம்தான். அதன் கீழ் ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வளவே. அவசரகாலச் சட்டத்தின் கீழ் புதிதாகக் கொலைகளோ, கொடூரங்களோ அங்கு அரங் கேறவில்லை.

ஆனால், இலங்கையிலோ நிலைமை அதைவிட மோசம். இந்த அரசின் ஆட்சி, அவசரகாலச் சட்டம் என்ற தூணில் தான் நீண்ட காலமாகத் தொங்கிக் கொண்டு தொடர்கின்றது.

இந்த அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ்

ஆள்கள் கடத்தப்படுகின்றார்கள்; காணாமற்போகச் செய்யப்படுகின்றார்கள்; கடத்திக் கப்பம் அறவிடப்படு கின்றது; சட்ட விரோதக் கொலைகள் கணக்கு, வழக்கின் றித் தொடர்கின்றன. கைதுகளும், தடுத்து வைப்புகளும் எல்லை மீறி நடக்கின்றன. துணைப் படைகளின் அட்ட காசம் அளவு கடந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம் பறிக் கப்பட்டுள்ளது. ஊடகங்களும், ஊடகவியலாளரும் கொடூ ரத் தாக்குதலுக்கு இலக்காகும் அவலம் நீடிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களோ அச்சுறுத்தப்பட்டு அவர் களின் நாடாளுமன்றச் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. குற்றமிழைக்கும் சீருடையினரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாதவாறு விசேட சட்ட விலக்களிப்புக் கவசம் வழங் கப்பட்டிருக்கின்றது. பெரும் தொகைப் பணத்திற்கு அரசி யல்வாதிகளை விலைக்கு வாங்கும் "வர்த்தக அரசியல்' நாடாளுமன்றத்தில் கோலோச்சுகின்றது. மொத்தத்தில் இங்கு அவசரகால விதிகளின் கீழ் அராஜக ஆட்சி அரங்கேறுகின் றது.

இவற்றையெல்லாம் இங்கு கண்டுகொள்ளாத பொது நல நாடுகள் அமைப்பின் கண்களுக்கு பாகிஸ்தான் அராஜ கங்கள் மட்டுமே தோற்றுகின்றன.

இந்தச் "சீத்துவத்தில்' பொதுநல அமைப்பு நாடுகளின் அடுத்த அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தை நடத்தும் வாய்ப்பு என்ற கௌரவத்தையும் கொழும்புக்கு வழங்க அந்த அமைப்பு முன்வந்திருக்கின்றதாம்!

ஒருபுறம் பாகிஸ்தான் மீது பாய்ந்துகொண்டு, மறுபுறம் இலங்கைக் கொடூரங்களைக் கண்டும் காணாதது போல பொறுப்பற்று இந்த அமைப்பு செயற்படுவது ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெய்யும் தடவு வதற்கு ஒப்பாகும். பொதுநல நாடுகள் அமைப்பு சகல நாடு களின் விடயத்திலும் ஒரே நீதியைப் பின்பற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அப்படிப் பின்பற்றுமானால் பாகிஸ்தானுக்கு விதித்த உறுப்பினர் உரிமை இடைநிறுத்தம் என்ற நடவடிக்கையை அது இலங்கை மீதும் பிரயோகித்திருக்க வேண்டும். தவறி விட்டதே!

-உதயன்

உன்மைதான் இது உங்களுக்கும் எங்களூம் தெரியுது.. ஆனா அவர்களுக்கு தெரியுதில்லையே... என்ன செய்ய? இது பாழாப்போன உலகமுங்கோ....

இந்தியா சீறிலங்காவின் கபட தன்மையை புரிந்து கொள்ளும் காலம் வெகுவிரைவில் ஏற்படும்.

இந்தியாவின் மத்திய அரசை நிர்ணயிக்கும் பலம் தமிழ் நாட்டின் கைகளிலேயே தங்கியுள்ளது.

1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இலங்கை வந்த பாரதப்பிரதமருக்கு முறையா துப்பாக்கி பிடியால் பிடரியில் முறையாக குடுத்த போதும் சிங்களத்தின் கபடத்தன்மையை இன்றுவரை புரிந்துகொள்ளாத இந்திய அரசு இனியாவதாவது.....? புரிந்துகொள்வதாவது...?

Edited by muruga

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

muruga

நான் சொல்ல வந்தது நமது கட்டுரையாளர் எப்போதும் இந்த கருத்தை வைத்து தான் தங்கள் ஆக்கங்களை வெளியிடுகின்றனர் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு தான் பெயர் விரிச்சலா???

சிறிலங்காவின் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழாவில் மன்மோகன் சிங்

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007, 03:33 PM ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்காவின் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழாவில் தலைமை விருந்தினராக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க உள்ளார்.

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெறும் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க உள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

source eelampage.com

இதற்கு தான் பெயர் விரிச்சலா???

சிறிலங்காவின் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழாவில் மன்மோகன் சிங்

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007, 03:33 PM ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்காவின் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழாவில் தலைமை விருந்தினராக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க உள்ளார்.

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெறும் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க உள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

source eelampage.com

இவருக்கெண்டாலும் துவக்குப்பிடியால அடிக்காமல் விட்டால் அதுவே அவருக்கு கொடுக்கப்படும் பெரிய வரவேற்பாக இருக்கும். :icon_idea::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.