Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் மாவீரர் நாளில் கூத்தாட்டம்

Featured Replies

நவம்பர் 27 என்பது தமிழீழ தேசியப் போராட்டத்திற்காக தாம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்கும் புனிதமான நாளாகும். உலகம் எல்லாம் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் அந்த வீரபுருசர்களை சோகத்துடன் எண்ணிப் பார்க்கும் நாள். இந்த புனித நாளில் தமிழர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே, பங்கேற்பதே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது, மன்னிக்க முடியாது.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்து பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களின் அமைப்பு மாவீரர் நாளான நவம்பர் 27 இல் CLUB Night என்ற பெயரில் கூத்தாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இவ் நிகழ்ச்சி UCL University இலங்கை மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மற்றைய பல்கலைக்கழகங்களில் இருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவ் நிகழ்வுக்கு அனைவரும் வெள்ளை ஆடையில் வாருமாரும் கூறப்பட்டுள்ளது. இவ் அமைப்பின் தலைவராக தமிழ் மாணவி உள்ளார். இதைவிட இவ் அமைப்பின் பெரும்பாலான மாணவர்கள் தமிழ்ர்கள் ஆகும்.

மாவீரர் நாளில் இவ் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒழுங்கு செய்த தமிழ் மாணவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். தமிழ் மாணவர்கள் எவரும் இவ் நிகழ்ச்சியில் பங்குபற்றக் கூடாது. பங்குபற்றும் தமிழ் மாணவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஏதிரானவர்களாக கருதப்படுவர்கள். அவர்களின் முழுவிபரங்களும் புகைப் படங்களுடன் வெளியிடப்படும்.

இவ் நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின் புலத்தில் தமிழ் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் இருக்கக் கூடும். தமிழ் மாணவர்கள் இந்த சக்திகளின் வலையில் சிக்கி தமிழ் தேசியத்துக்காக உயிர் நீத்த மாவீரர்களை இழிவு படுத்த வேண்டாம் என வேண்டுகின்றோம்.

Edited by உமை

  • தொடங்கியவர்
ssskz3.jpg

இப்படியான நிகழ்வு இந்த நாளில் கண்டிக்கத்தக்கதே.... ஆனால் உங்களுக்கு தெரியுமா தமிழ் செல்வன் அண்ணாவின் இறுதி நிகழ்வுகள் வன்னியில் நடந்து கொண்டிருக்கும் போது லண்டனில் இதே போல் கூத்தாட்டம் ஒன்று இளையோர் ........னரால் நடாத்தப்பட்டது. புகைப்படங்கள் கூட face bookல் வந்தது. நீங்கள் இவ்வாறு செய்யும் போது மற்றவர்களை எப்படி தடுப்பது?

இந்த நிகழ்விலே கலந்து கொள்ளுமாறு எனக்கும் ஒரு அழைப்பு வந்திருந்தது. 7 பவுன் நுழைவு சீட்டு என்று எனது பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்களவர்கள் மூலம் இந்த செய்தி கிடைத்தது. இதனை நடத்துபவர்களுக்கான 10 பேர் கொண்ட குழுவில் 6 பேர் தமிழர்கள். DJ பண்ணுபவரும் south east பகுதியை சேர்ந்த ஒரு தமிழரே.

என்னுடைய கருத்து என்னவென்றால் தமிழர்கள் இந்த நிகழ்விற்கு போகாமல் விடுவது நல்லது. இல்லையேல் இதனையே தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கு உதாரனமாக மஹிந்த அடுத்த பிரித்தானிய பயனத்தின் போது பரப்புரையாக்கலாம்.

நான் என்க்கு தெரிந்த நன்பர்களிடம் கூறியபோது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இதனை வேனுமென்றே ஒழுங்கு செய்திருக்கலாம் என்றும் மற்றும் கருனாவின் உரை கூட வெளியிடப்படலாம் என நக்கலாக கூறினர்.

எனக்கு அரசியல் அவ்வலவாக தெரியாது. நான் இதற்கு போகவில்லை. இதற்குரிய டிக்கட்டுகளை தமிழ் மானவர்களும் விற்கின்றனர் என்பது வெட்கப்பட வெண்டிய விடயம். face bookல் அவர்களது தொடர்பு இலக்கங்கள் இருந்தது. இங்கு போடுவது சரியா பிழைய என தெரியவில்லை.

Edited by Mithan

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இலண்டனில் எயார் இலங்கா ஆதரவில் இலங்கைப் பாடசாலைகளின் துடுப்பாட்டம் நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணப் பாடசாலைகளும் கலந்து கொண்டது. அதனை அரசு தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என பிரச்சாரம் செய்தது. அதனால் 1996க்கு பிறகு தமிழ்பாடசாலைகள் இந்நிகழ்வைப் புறக்கணித்தார்கள்.

முன்பு இலண்டனில் எயார் இலங்கா ஆதரவில் இலங்கைப் பாடசாலைகளின் துடுப்பாட்டம் நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணப் பாடசாலைகளும் கலந்து கொண்டது. அதனை அரசு தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என பிரச்சாரம் செய்தது. அதனால் 1996க்கு பிறகு தமிழ்பாடசாலைகள் இந்நிகழ்வைப் புறக்கணித்தார்கள்.

போனமுறை எம் பாஆசாலை பழையமாணவர் அமைப்பு கலந்து கொள்ள இருந்தது ஆனால் எம் பழையமாணவர்களின் எதிர்ப்பால் வாபஸ் வாங்கி கொண்டது எமது கோரிக்கையை ஏற்ற அந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகள்

இன்னும் மாறாத தமிழனின் அடிமைப் புத்தியும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம். எங்கே எதிர்த்துக் கதைத்தால் 'அவங்கள்' ஏதாவது நினைச்சிடுவாங்களோ எண்டு பயந்து பயந்தே எல்லாருக்கும் அடிமையாக இருக்கிறம்.

ஆனால் சிங்களவன் திட்டமிட்டே 27ம் திகதியைத் தெரிவுசெய்திருக்கிறான். அனால் அன்றைய தினம் எங்களுடைய மாவீரர் தினம் இருக்கிறது. அதற்கு நாங்கள் போக வேண்டும் என்று சொல்வதற்கு எம்மவர்க்குத் திராணியில்லை.

அதனால் மாவீரர் தினத்தைப் புறந்தள்ளிவிட்டுக் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னின்று நடத்திய தமிழர்களின் விபரம் (அவர்களின் முகரக்கட்டை உட்பட) களத்தில் போட நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள். உண்டியல் ஜெயதேவனுக்கு நிறைய வாரிசுகள் இலண்டனில் உருவாகிறார்கள். யார் தான் அது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டுமில்லையா?

Mithan Posted Yesterday, 12:40 AM

இப்படியான நிகழ்வு இந்த நாளில் கண்டிக்கத்தக்கதே.... ஆனால் உங்களுக்கு தெரியுமா தமிழ் செல்வன் அண்ணாவின் இறுதி நிகழ்வுகள் வன்னியில் நடந்து கொண்டிருக்கும் போது லண்டனில் இதே போல் கூத்தாட்டம் ஒன்று இளையோர் ........னரால் நடாத்தப்பட்டது. புகைப்படங்கள் கூட வந்தது. நீங்கள் இவ்வாறு செய்யும் போது மற்றவர்களை எப்படி தடுப்பது?

அந்த நிகழ்ச்சியை இளையோர் அமைப்பினரால் நடத்தபடவில்லை அவர்களுடன் ஒன்றாக இருந்த அமைப்புதான் அப்படி சய்த ஆனால் இளையோர் அமைப்பு அவர்களை விட்டு பிரிந்து பல மாதங்கள் ஆய்ட்டு

தமிழ் மாணவர்கள் சிலர் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் நானும் பல்கலைக்கழக மாணவன் சிலரை தெரியும் இப்படி லொல்லு பண்றவங்களை இனியும் பொறுக்கமாட்டன் என் என்டால் நம்ம தளத்தில 900படங்களை யாரோ அழித்து போட்டாங்க இன்று செய்தவன் தமிழன் தான் தேசத்துரோகி

நம்ம தளத்தில 900படங்களை யாரோ அழித்து போட்டாங்க இன்று செய்தவன் தமிழன் தான் தேசத்துரோகி

அழிந்தால் என்ன backup ல் இருந்து படங்களை ஒரே கிளிக்கிலேயெ எடுத்துவிடலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குத்தாட்டம் இல்லை என்றால் இந்த மரங்களுக்கு இன்னொரு நாயாட்டம் இருந்துவிடப் போகிறது.

சுளகால் சூரியனை மறைப்பதைப் போல் இருக்கின்றது இந்த குத்தாட்டம் மாவீரனர் தினத்துக்கு. ஏதோ இந்த தலைப்புதான் ஏதோ விவகாரமானது போல் தோற்றத்தைக் கொடுக்கின்றது.

ஈழத்தின் 100 % மும் தமிழ் உணர்வாளர்கள் தான் என்று எவராவது சத்தியம் தான் செய்திருக்கின்றார்களா?

இதற்க்கு யாழ்களத்தில் பக்கத்தை நிரப்புவதை விட முதலே அறிந்த்து பேசி பார்க்கனும் அதற்க்கு பின் அதற்க்கு யாரும் போக விடாம தடுப்பதற்க்கான வழிகளை பார்க்க வேண்டும்..

இந்த படித்த அதிமேதாவிகளாலே தான் தமிழன் சிரழியுறான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.