Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தின் வழியாக வியாபாரிகள் 1480ம் ஆண்டுகளில் நடந்து சென்று வியாபாரம் செய்திருப்பதும் வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

400 வருடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் ராமர் பாலம் மூடிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து தெளிவான ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்து சிடியாக வெளிட்டுள்ளோம் என்றார் ஹரி.

தற்ஸ்தமிழ்.கொம்

---------------------------

நாம் முன்னர் வந்த அறிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டது போல சான்றுகளைத் தேடாமல் அறிக்கை விடுவது அறிவியல் அன்று. இப்போ சான்றுகளைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். புவியியல் ரீதியா.. குறித்த இடத்தில் மேற்கொள்ளப்படும் தரைத்தோற்ற அல்லது தரைத்தோற்றக் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகள் என்பனவும் மேலும் இதுவிடயமாக உண்மைகளை அறிவியல் ரீதியா அணுக உதவும். இராமர் பாலம் இருந்தது என்பது மேலும் சான்றுகளூடு நிரூபணமாயினும் கூட சேது சமுத்திரத்திட்டத்தை நிறுத்த வேண்டிய தேவை அங்கு இல்லை. அது பொருளாதார மேம்பாட்டை வேண்டி நிற்கும் தமிழகத்துக்கு அவசியமான ஒன்று..! :unsure:

Edited by nedukkalapoovan

  • Replies 144
  • Views 25.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure:

பொதுப்புத்தியுள்ள எவரையையும் இப்படியான செய்திகள் சலசலப்புக்குள்ளாக்காது.

வால்மீகிக்கதைகள் பற்றி நிறையவே வந்துவிட்டன.

அனுமானின் கச்சைக்குள் இருந்து விழுந்ததுதான் கச்சைதீவு என்ற கதையும் கேள்விப்பட்டனான். இதன் விரிவாக அனுமானின் கச்சையின் அளவை நினைத்து மனம் விட்டுச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்.

"கதை சொல்ல ஒருவன் இருந்துவிட்டால் அந்த கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு... "

என் அம்மா சிறுவயதில் சொல்லித் தந்த வாசகம் "சொல்லுபவன் சொன்னா கேட்பவனுக்கு அறிவெங்கே போயிட்டுது?" என்று.

ஆக சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லிக் கொண்டே இருங்க!!!

நான் இப்படி கேள்விப்படவேயில்லை. வேறு யாரும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

இதிகாசங்களில் வரும் எல்லாம் பொய் என்று கூற முடியாது. சில காலப்போக்கில் திரிவடைந்து வந்திருக்கலாம்.

உதாரணமாக

புட்ப விமானம் அந்தகாலத்திலேயே விமானம் பற்றிய தகவல்

அர்ஜுனனிடம் இருந்த அஸ்திரம். இப்போ உள்ள ஏவுகணைகள் போல உள்ளது.

சுனாமி அப்போ கடற்கோள்

இப்படி பல உள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

சுழியன்

யாழ்களத்தில் தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று அடம்பிடிக்கின்றவர்கள் போல, நெடுங்காலபோவன் சொல்லவில்லையே!. அதுவும் இந்திய அறிவியல் மையம் சொன்னதைத் தான் அவர் சொல்லியிருக்கின்றாரே தவிர, அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பல்ல அது.

இராமர் பாலம் உண்டா இல்லையா என்பது எல்லாம் தனிப்பிரச்சனை. ஆனால் அரசியல், மத வெறுப்பைக் கொண்டு, எவ்வித ஆராட்சியும் செய்யாமல் அதைப் பொய் என்று விடாப்பிடியாக வாதிடுவது எல்லாம் பகுத்தறிவா என்பது சந்தேகமே.....

...என்ன நீங்கள் இப்போது இந்திய அறிவியல் மையத்தையும் பொய், முட்டாள், பார்ப்பானி என்று திட்டப் போறீங்கள்.... என்ன செய்வது உங்களின் கருத்திற்காக மற்றவர்கள் மாற இயலுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு, தூயவன் உங்களிடம் இருக்கும் தெய்வநம்பிக்கையை நான் குறையாக சொல்ல வரவில்லை.

மூடநம்பிக்கைகளை தெய்வத்தின் பெயரைச்சொல்லி வளர்ப்பதை ஏற்கமுடியாதுள்ளது.

இராமன் இருந்து தொலைத்தானா பூமியில் என்பதை அவர்கள் நிறுவியிருந்தால் அனைத்தும் ஏறுக்கொள்ளப்பட்டிருக்கும் அப்படி அதை நிறுவவருவது உலகமகா பம்மாத்து. ஏன் என்றால் அவன் வாழ்ந்ததாக கூறப்படும் ஆண்டு பூமிக்கு மனித இனத்தின் சுவடே தெரிந்து இராதகாலம்.

இந்தியாவின் மதவெறிகூடாரம் தான் இப்படி குண்டுசட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள் என்றால் நீங்களுமா சவாரிக்கு கிழம்புகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக் கூடாடம் மட்டும் என்னவாம். இல்லாத, பொல்லாத கதைகளைச் சொல்லி அப்பாவித் தமிழர்களைச் சிதைத்துச் சின்னபின்னப்படுத்தவில்லையா?

உங்களுக்கு புரிந்த அறிவை வைத்துக் கொண்டு இயங்குங்கள் நண்பரே! யாரும் பாடம் எடுக்க வேண்டாம்.

எவ்வித ஆராய்வுமின்றி, தங்களுக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்களை முட்டாள், வெறியன் பட்டம் சூடி மகிழ்கின்ற திராவிடக் கும்பல் போல நாங்களில்லை. அவ்வளவு தான் உங்களுக்குச் சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுழியன்

யாழ்களத்தில் தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று அடம்பிடிக்கின்றவர்கள் போல, நெடுங்காலபோவன் சொல்லவில்லையே!. அதுவும் இந்திய அறிவியல் மையம் சொன்னதைத் தான் அவர் சொல்லியிருக்கின்றாரே தவிர, அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பல்ல அது.

இராமர் பாலம் உண்டா இல்லையா என்பது எல்லாம் தனிப்பிரச்சனை. ஆனால் அரசியல், மத வெறுப்பைக் கொண்டு, எவ்வித ஆராட்சியும் செய்யாமல் அதைப் பொய் என்று விடாப்பிடியாக வாதிடுவது எல்லாம் பகுத்தறிவா என்பது சந்தேகமே.....

...என்ன நீங்கள் இப்போது இந்திய அறிவியல் மையத்தையும் பொய், முட்டாள், பார்ப்பானி என்று திட்டப் போறீங்கள்.... என்ன செய்வது உங்களின் கருத்திற்காக மற்றவர்கள் மாற இயலுமா?

ஐயா! இந்திய நீதிதுறை என்ன எல்லாத்துறையும் யாருக்கு என்ன கழுவுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஆட்கள் இராமர் பாலம் பொய் என்றால் தலைமேலே வைத்துக் கொண்டாடி இருப்பியள். என்ன செய்வது....

இந்தியாவின் அரசியல் பற்றிய விவாதத்தை பிறிதொரு தலைப்பில் விவாதிப்போம். ஆனால் எவ்வித ஆராட்சியும் இன்றி கன்னடக்காரன் சொன்தற்காக .... கழுவுவதை என்னவென்று சொல்வது

பிராமணவெறியே இந்திய அரசியலின் விதியாய் இருக்கின்றது. இதை தெளிவாக வெளிப்படுத்தும் உதாரணம்.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கொடுமையான சட்டம் இந்தியாவில் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு தொழில் ஒரு சாதியினருக்கு அருகதை இல்லை என்று எந்த நாட்டிலாவது சட்டம் உண்டா அது இந்தியாவில் உள்ளது.

ஒரு இனத்தின் பலதலைமுறைகளின் உழைப்பில் சட்டமாகிய பூசை உரிமைச் சட்டத்தை ஒரு துளிமைச் செலவில் குடும்பியர்கூட்டம் விதியை மாற்றி எழுதி வைத்திருக்கின்றது.

அந்த பூசை உரிமை ஒருசாதியினருக்குதான் சொந்தமாகலாம் என்பதை உங்களால் அவர்கள் தவறை நியாயப்படுத்த முடியுமா?

இந்த குடும்பிக்கூட்டமே இந்தியாவின் சாபம்.

தவிர பெரியாரைப் பற்றி தரம் குறைவாக பேசுவதை தமிழ் உணர்வாளர்களால் அனுமதிக்க முடியாது. அது அனைவரயும் துன்புறுத்துகின்ற செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதலில் மற்றவர்களை விழிக்கின்றபோது நாகரீகமாக்க கதைத்துப் பழகினால் ராமசாமிக்கும் தக்க மரியாதை தரலாம். உங்களின் வார்த்தைகள் துன்புறுத்தும் விதமாக எமக்கு அமையுமானால், இதைவிடக் கட்டுமையான வார்த்தைகள் சமர்ப்பனமாகும்.

தமிழகத்தில் ஐயர் இல்லாத பூசாரிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் பூசை செய்கின்ற விதமும் உள்ளது. குறித்த தொழிலைக் குறித்தவர் தான் செய்யவேண்டும் என்று அமைத்தவர்கள் யார் என்பது பற்றி ஏலவே நிறைய விவாதங்கள் நடந்திருந்தன.

விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்படி கேள்விப்படவேயில்லை. வேறு யாரும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

இதிகாசங்களில் வரும் எல்லாம் பொய் என்று கூற முடியாது. சில காலப்போக்கில் திரிவடைந்து வந்திருக்கலாம்.

உதாரணமாக

புட்ப விமானம் அந்தகாலத்திலேயே விமானம் பற்றிய தகவல்

அர்ஜுனனிடம் இருந்த அஸ்திரம். இப்போ உள்ள ஏவுகணைகள் போல உள்ளது.

சுனாமி அப்போ கடற்கோள்

இப்படி பல உள்ளன

அரிச்சுனன் வாழ்தான் எனும் அந்தக் காலத்தை தேடிப்போனால், அங்கே கோவணதுணியையும் அறிந்திராத மனித இனத்தைதான் காணமுடியும். அவனவன் தன் கற்பனைவித்தையை வாந்தி எடுத்துவிட்டு போக அதுக்கு கோயில் கட்ட இந்த நூற்றாண்டுகளுக்கு என்று சில ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் முதலில் மற்றவர்களை விழிக்கின்றபோது நாகரீகமாக்க கதைத்துப் பழகினால் ராமசாமிக்கும் தக்க மரியாதை தரலாம். உங்களின் வார்த்தைகள் துன்புறுத்தும் விதமாக எமக்கு அமையுமானால், இதைவிடக் கட்டுமையான வார்த்தைகள் சமர்ப்பனமாகும்.

தமிழகத்தில் ஐயர் இல்லாத பூசாரிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் பூசை செய்கின்ற விதமும் உள்ளது. குறித்த தொழிலைக் குறித்தவர் தான் செய்யவேண்டும் என்று அமைத்தவர்கள் யார் என்பது பற்றி ஏலவே நிறைய விவாதங்கள் நடந்திருந்தன.

விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்.

அதை சட்டம் செய்து தந்திருக்கின்றது அதுவும் இந்தியாவில் மட்டும்தான் அதைப் பற்றிதானே நான் கதைக்கின்றேன் இதை செய்தவர்கள் யார்?

பிராமண வெறியர் என்னும் போது பிராமணர்கள் தாக்கபடுவதாக அர்தமாகாது. சிங்களவர்களுக்கு சிங்களவெறியர்களுக்கும் உள்ள வேறுபாடுபோலத்தான் அது.

ஈழம் சார்பாக இப்படி ஒரு பேததுக்கு இடமே இல்லை அவர்கள் தமிழர்களாகவே இருக்கின்றார்கள்

இந்தியாவில் கூட பிராமணர்கள் தமிழர்களே அல்ல என்பதல்ல என்வாதம். தமிழுக்கு கொள்ளிகட்டைகளாகவே இருக்கின்ற அவர்களின் போக்கில்தான் நான் வெறுப்பு கொண்டுள்ளேன்.

இந்த வெறிக்கூட்டதின் செயல்களை இன்றுவரைகூட உங்களால் இனம்காணமுடியாமையை இட்டு வருந்துகின்றேன்.

தவிர பெரியாரைப் பற்றி தரம் குறைவாக பேசுவதை தமிழ் உணர்வாளர்களால் அனுமதிக்க முடியாது. அது அனைவரயும் துன்புறுத்துகின்ற செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவனை தொழுவதை மூடநம்பிக்கை அறியாமை என்பவர்கள்கூட, பகுத்தறிவு என்ற போர்வையில் பெரியார் போன்றவர்களுக்கு சிலைகளை.. மேடைகளை எழுப்பி பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரில் மேடைப் பேச்சக்களால் தோத்திரம் செய்கிறார்கள்.. ஆக, மூடநம்பிக்கை என்ற பெயரிலும் பகுத்தறிவு என்ற பெயரிலும் அடிப்படையில் மாற்றமில்லாத அர்ச்சனைகளும் தோத்திரங்களும்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

மனித இனமே இல்லாத காலத்திலா இராமர் கதை? தேவன் சொன்ன பிறகும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் போலிருக்கே! எந்தக் கற்பனையும் வைத்திருக்க யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் இந்தியாவில் இந்த நம்பிக்கைகளுக்கு அரசியல் சாயம் தான் பூசப் படும். பாப்ரி மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்தது என்பதையும் ஒரு இந்திய விஞ்ஞான ஆய்வு தான் சொன்னதாக ஞாபகம். அது இந்தியாவை ஒரு இந்து மேலாதிக்க நாடாக மாற்ற மட்டும் தான் உதவியது. வேறென்ன நல்ல விளைவுகள் வந்தன அந்தக் கண்டுபிடிப்பால்?

ஸோ.. ராமர் நேரடியா வந்தாதான் இதெல்லாம் ஒரு முடிவுக்கு

வர முடியும். கடவுள் தானே.. ஒருக்கா வந்திட்டு போக முடியாதா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஸோ.. ராமர் நேரடியா வந்தாதான் இதெல்லாம் ஒரு முடிவுக்கு

வர முடியும். கடவுள் தானே.. ஒருக்கா வந்திட்டு போக முடியாதா?

ஒரு றவுண் ரிப் ரிக்கட் ஒன்று எடுத்து கொடுத்து விட்டியள் என்றால் இராமர் வந்து பிரச்சனையை தீர்த்து விட்டு போவார். :icon_idea::lol:

ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்ஸ்தமிழ்.கொம்

---------------------------

நாம் முன்னர் வந்த அறிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டது போல சான்றுகளைத் தேடாமல் அறிக்கை விடுவது அறிவியல் அன்று. இப்போ சான்றுகளைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். புவியியல் ரீதியா.. குறித்த இடத்தில் மேற்கொள்ளப்படும் தரைத்தோற்ற அல்லது தரைத்தோற்றக் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகள் என்பனவும் மேலும் இதுவிடயமாக உண்மைகளை அறிவியல் ரீதியா அணுக உதவும். இராமர் பாலம் இருந்தது என்பது மேலும் சான்றுகளூடு நிரூபணமாயினும் கூட சேது சமுத்திரத்திட்டத்தை நிறுத்த வேண்டிய தேவை அங்கு இல்லை. அது பொருளாதார மேம்பாட்டை வேண்டி நிற்கும் தமிழகத்துக்கு அவசியமான ஒன்று..! :icon_idea:

வால்மீகி இராமாயணத்தில் இருப்பதைத்தானே அந்த அறிவியல் மையத்தின் இயக்குனர் சொல்லியுள்ளார். வால்மீகி இராமாயனத்தைத்தான் ஆய்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதில் அறிவியல் ரீதியான ஆய்வுகள் என்ன செய்யப்பட்டன என்று எதுவுமே சொல்லப்படவுமில்லையே நெடுக்காலைபோவான்

நீங்கள் சொன்ன தரைத்தோற்றம் கட்டமைப்புத் தொடர்பாக ஆய்வுகள் ஏதாவது செய்யப்பட்டா? இராமர் பாலம் இருந்ததற்கு ஆதாரம் இருக்கிறதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் வால்மீகி இராமாயணத்தில் இருப்பதைத்தானே சொல்லியுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவனை தொழுவதை மூடநம்பிக்கை அறியாமை என்பவர்கள்கூட, பகுத்தறிவு என்ற போர்வையில் பெரியார் போன்றவர்களுக்கு சிலைகளை.. மேடைகளை எழுப்பி பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரில் மேடைப் பேச்சக்களால் தோத்திரம் செய்கிறார்கள்.. ஆக, மூடநம்பிக்கை என்ற பெயரிலும் பகுத்தறிவு என்ற பெயரிலும் அடிப்படையில் மாற்றமில்லாத அர்ச்சனைகளும் தோத்திரங்களும்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பது அல்ல எனது நோக்கம்.

இழைத்தவனின் உழைப்பை உறிஞ்ச, ஒருவனுக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை இல்லாது தடுக்க மதநம்பிக்கையையே ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் இருந்து அந்த பாமரர் அறிவை தடுப்பதென்பது மிக இலகுவான காரியம் அல்ல எனவேதான் பெரியார் கூட்டதின் செயற்பாடுகள் அந்த அளவு தூரம் பயணம் செய்யவேண்டி இருந்தது.

இன்றுகூட எத்தனை அம்மன்கள் வெளிக்கிட்டிருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிச்சுனன் வாழ்தான் எனும் அந்தக் காலத்தை தேடிப்போனால், அங்கே கோவணதுணியையும் அறிந்திராத மனித இனத்தைதான் காணமுடியும். அவனவன் தன் கற்பனைவித்தையை வாந்தி எடுத்துவிட்டு போக அதுக்கு கோயில் கட்ட இந்த நூற்றாண்டுகளுக்கு என்று சில ஜென்மங்கள்.

அப்போ அந்த கதைகளில் எப்படி அந்த பெயர்கள் வந்தன? சரி அதை விடுங்கள். 18ம் நுற்றாண்டில் தென்இந்தியாவில் கட்டப்பட்டு இன்றும் தலை நிமிர்ந்து நிற்கும் பிரமாண்டமான கோயில்களை பாருங்கள்.

அப்போ எப்படி அதை கட்டினார்கள்?

காரைக்காலுக்கு அண்மையில் கடலுக்கடியில் இருக்கும் நகரம் என்ன?

இது காலத்துக்கு காலம் அழிந்து மீண்டும் உருவாகும் யுகமாயும் இருக்கலாம்

ஆனால் ரோமிலிருக்கும் ஜேசுநாதர் இரத்தக்கரை படிந்ததாக சொல்லப்படும் துணியானது போலியானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது தெரியுமா.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமாயணத்திலே இராமர் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த இடமும் இராமேஸ்வரத்தில் இருக்கின்றது. இது பல நுற்றாண்டு காலமாக இருக்கும் கதையென்றால்.... அதே இடத்தில் இப்போ கடலுக்கடியில் பாலம் போல இருக்கும் பகுதி எப்படி உருவானது??. கதைகளில் பல திரிபடைந்து இருக்கலாம். ஆனால் மூலத்தில் ஏதோ உண்மையும் இருக்கும்

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் லினிக்ஸ்

எமது பகுத்தறிவாளர்கள் பாலம் கட்டியதைக் காணவில்லை. அவர்களின் பகுத்தறிவு விதி 9 சொல்வதன் படி, காணாத ஒன்றை அவர்கள் நம்ப மாட்டார்கள். அதை விடுங்கோ!..நான் இருப்பதைக் கூட அவர்கள் நம்பமாட்டார்கள் ஏன் என்றால் என்னை ஒருத்தரும் காணவில்லை

தூயவன்

உண்மையில் தென்இந்தியாவில் இருக்கும் அந்த பிரமாண்டமான கோயில்கள் மற்றும் சிற்ப கலைகளை பார்க்கும் போது எவ்வளவு முன்னேறிய சமூதாயம் இப்போ இப்படி அடிமைதனமாய் இருக்க வேண்டியுள்ளதே என்ற எண்ணம் தான் ஏற்படுகின்றது.

எமது இதிகாசங்களில் பல உண்மைகள் மறைந்துள்ளன. அதற்கு சான்றாக இப்பவும் இருப்பது இந்த சிற்ப கலைகளும் அடையாள சின்னங்களுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காக இந்த இணைப்பு. இராஜஇராஜ சோழன் தஞ்சாவூர் கோவிலை எப்படிக் கட்டியிருப்பான் என்பது பற்றிய ஒரு ஆய்வு.

http://video.google.ca/videoplay?docid=-5096103596865842301

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்திலே இராமர் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த இடமும் இராமேஸ்வரத்தில் இருக்கின்றது. இது பல நுற்றாண்டு காலமாக இருக்கும் கதையென்றால்.... அதே இடத்தில் இப்போ கடலுக்கடியில் பாலம் போல இருக்கும் பகுதி எப்படி உருவானது??. கதைகளில் பல திரிபடைந்து இருக்கலாம். ஆனால் மூலத்தில் ஏதோ உண்மையும் இருக்கும்

இலங்கையும் இந்தியாவும் கண்டமேடை எனும் ஒரு பொது அடித்தளத்தின் மேல் தான் அமைந்துள்ளன. இந்தப் புவியியல் அமைப்பு இலங்கையின் வடமுனைக்கும் இந்தியாவின் தென் துருவத்திற்குமிடையில் ஒரு பாலம் அமைந்திருப்பது போன்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கக் கூடும். நான் இராமர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் தீர்ப்பெழுத வரவில்லை. ஆனால் இப்படியான பண்டைய கட்டமைப்புகள் இருந்தனவா என அறிய, நுணுக்கமான முறைகள் எல்லாம் நவீன தொல்பொருளியலில் தற்போது பயன்படுகின்றன. இந்தியாவுக்கோ அல்லது முன்னேறிய இன்னொரு நாட்டுக்கோ இத்தொழில்நுட்பங்கள் எட்டாதவை அல்ல. இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாததால் ஆய்வுகள் செய்யப் படாமல் இருக்கக் கூடும். அல்லது ஆழ ஆராயப் போய் அப்படி இல்லை என்று கண்டுபிடித்தால் மதத்தை வைத்து அரசியல் நடத்தும் கைங்கரியத்தில் ஆப்பு விழலாம் என்ற பயமும் உண்மையான விஞ்ஞான ஆய்வைத் தள்ளிப் போட ஒரு காரணமாக இருக்கலாம். இதற்காகத்தான் திறந்த மனதுடன் இப்படியான விடயங்கள் அணுகப்பட வேண்டும். யேசுவின் உடலைப் போர்த்தியதாக ஒரு துணி கண்டுபிடிக்கப் பட்ட போது முதலில் வத்திக்கான் அதை ஒரு புனிதப் பொருளாக மறைத்து வைத்தது. பின்னர் வத்திக்கான் தலைமையில் மாற்றம் வந்த போது இத்துணியின் மாதிரிகள் உலகின் சில முன்னணி ஆய்வுகூடங்களுக்கு காபன் டேற்றிங் செய்வதற்காக அனுப்பப் பட்டன. திறந்த மனதுடனான அணுகுமுறை இப்படிப் பட்ட உணர்ச்சி மயமான விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.