Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிடுக்ஸ், தூயவன்!

பெருயார் கொள்கைவாதிகள் தமிழ் நாட்டை கூறு போட்டு வைத்துள்ளார்கள் என்பதே உங்கள் வாதம்.

அவர்கள் அரசியல் செய்வதற்க்குதான் அந்த பகுத்தறிவுக் கொள்கைகள் என்று சொல்கின்றீர்கள்.

ஆக அந்த மதவாத தலைவர்கள் நல்லவர்கள் என்று நிகழ்கால நிகழ்சிகளைக் கொண்டு நிரூபிப்பதால் உங்கள் கருத்தை ஏற்க வேண்டி உள்ளது.

இன்று ஈழத்தின்கரங்களை அநாதரவாக்கு வதற்க்கு முக்கிய காரணமாய் இருப்பவர்கள் பெரியார்வாதிகளே காரனம். சுபவி மகிந்த ரத்தனா விருதும், நெடுமாறன் ரணில் ரத்னா விருதும் எடுத்திருக்கின்றார்கள்

ஆக துக்ளக் சோ, ராம் போன்றவர்களே எமக்காக அயராது உழைப்பவர்கள்.

இதை நான் கூறுவது எமக்காக பெரியார் வாதிகள் உழைப்பதால் அவர்கள் கொள்கைக்காக நீங்களும் நாதிகர்களாக வேண்டும் என்பதற்க்காக அல்ல.

யார் சமுதாயத்தின் நன்மைகள்?

யார் சமுதாயத்தின் கொள்ளிகள் என்பதை தெளிவாக்குவதற்க்கே சொல்கின்றேன்.

இப்படி எமக்காக உழைப்பவர்களை கொச்சைப் படுத்த உங்களுக்கு என்ன அருகதை உண்டு என எண்ணிப் பாருங்கள்.

  • Replies 144
  • Views 25.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சை பெரிய கோயில் விமானம் பற்றி தமிழினக்ஸ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் சாதனை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் விடை காண முடியாத அற்புதமும் இல்லை.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 80 டன் எடை உள்ள விமானம் ஒரே கல்லால் கட்டப்பட்டது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் இது உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று அல்ல.

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள் காணப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சிறிய கற்களே மேலே கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அதே வேளை ஒரே கல்லால்தான் கட்டப்பட்டது என்று கூறுபவர்களும், அந்தக் கல் மேலே எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள்.

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

இது அவர்களுடைய விளக்கம்.

எப்படித்தான் பார்த்தாலும், இதில் மனிதனுடைய உழைப்புத்தான் தெரிகிறதே தவிர, எந்த விளங்கமுடியாத அற்புதமும் தென்படவில்லை.

தஞ்சைக் கோயில் கட்டுவதற்கு பல ஆயிரக் கணக்கான சிற்பிகள் பயன்படுத்தப்பட்டார்கள். கட்டி முடிய 6 வருடங்கள் சென்றன.

தமிழர்களின் பெரும் சாதனையாக கருதப்படுகின்ற தஞ்சை பெரிய கோயிலை ஒரு மணல்திட்டோடு ஒப்பிடுவதற்கு சிலருடைய மதவெறியும் மூடநம்பிக்கையும் காரணமாக இருப்பது வேதனையான விடயம்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள்

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

உங்கள் ஆக்கத்தில் சொல்லப்பட் இந்த கருத்துக்களுக்கான இணைப்புக்களை தர முடியுமா??

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

அந்த மண்கும்பி எவ்வளவு உரமானதாக இருக்க வேண்டும் இவ்வளவு பாரமான பொருட்களை மேலே யானையுடன் கொண்ட செல்ல? அது வேறு அப்புறம் அகற்றப்பட்டதாம் :huh:

கோபுரத்தின் உயரம் என்ன?

மண்கும்பி எவ்வளவு துரத்திலிருந்து தொடங்க வேண்டும் அதுவும் சாய்வாக மேலும் உரமாக இருத்தல் வேண்டும்.

மண்கும்பி கதையின் படி நீங்கள் குறிபிட்ட 6 வருடமும் மழை பெய்யவில்லையா??? :unsure:

நல்ல காலம் மழை பெய்திருந்தால் மண்கும்பி கரைந்து போயிருக்கும்

அதைவிட யானை சரியான இடத்தில் இந்த கல்லை வைக்குமாம். இது என்ன விளாங்காயா யானை தும்பிக்கையால் துக்கி வைக்க :unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஆக மனிதனை அனுப்பாது குரங்கை அனுப்பியதன் நோக்கம் மனிதனை மிஞ்சிய சக்தி இருப்பதால்தான் என்பதே உங்கள் கருத்தா?

மனித உயிருக்கு இருக்கும் மதிப்பே காரணம் மனித உயிரை பாதிக்கும் ஆராச்சிகளை சட்டம் அனுமதிக்காது.

என்பதாலேயே மனிதனை அனுப்பவில்லை.

விண்வெளியில் உள்ள சூழ்நிலை மனித உயிருக்கு எப்படி பொருத்தமானது என்றா ஆராச்சியும் அடங்கியதே அந்தப் பயணம்.

அமுக்க சமநிலை பேணப்பட விலை என்றால் உயிர் வாழ்தல் முடியாத காரியம்.

ஊதா கடந்தகதிர்களின் செறிவு அதிகம் என்றால் உடனே கைலாயம் பார்க்கவேண்டியதுதான்.

ஈர்பு விசை பலமடங்கு அதிகம் என்றால் தன்கால்களுக்கே தன் சுமையை சுமக்க முடியாது என்புகள் நொருங்கிவிடும். இவைகள் இங்கிருந்தே எம்மால் சிந்திக்க தக்கன ஆனால் இதற்க்கும் அப்பால் பல பிரச்சினைகள் எதிர்பார்க்கப் படலாம். எனவே அவை என்ன வென்று தெரியாத போது முன்னேற்பாடுகள் எவையும் அவற்றுக்கு எடுக்க முடியாது.

அதனால் தான் இப்படி குரங்கையும், நாயயும் வைத்து அனுப்புவதன் நோக்கம்.

இம் மிருகங்களில் வெளிப்படும் பாதிப்புக்களில் இருந்து அந்த காரணிகளின் தன்மையை கண்டு அறிவதே அதன் நோக்கம்.

இதை விட்டு கடவுள் குணம் குரங்கில் கொஞ்சம் இருப்பதால் தான் அனுப்பபட்டது என்று கூற வராதீர்கள்.

இதுக்கு தான் சொல்வதுவது

விடிய விடிய இராமாயணம்

விடிந்தால் சீதை இராமனுக்கு என்ன முறை என்பதோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு தான் சொல்வதுவது

விடிய விடிய இராமாயணம்

விடிந்தால் சீதை இராமனுக்கு என்ன முறை என்பதோ

சரி தேவையில்லாமல் அங்கே இங்கே என்று கடித்துவைய்யாமல்

ஒரு ஒழுங்காக உங்கள் விவாதத்தை நகர்த்துங்கள்.

இராமனில் வரலாறு பூமியில் உண்மையாக நிகழ்ந்த ஒன்றா?

20,000 வருடங்களுக்கு முன்னால் விலங்குகளின் வாழ்வியல் தரத்தில் மனிதகலாச்சாரம் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதற்க்கும் பலமடங்கு ஆண்டுகள் முன்னால் வாழ்ந்த வரலாறாகவே இராமன் கதை சொல்லப்படுகின்றது.

மானத்தை மறைக்க துணியையே கண்டு பிடிக்காத காலத்தில் இந்த கற்பனைகள் எல்லாம் உண்மையாய் இருக்க வாய்ப்புள்ளதா?

மண்கும்பி கதையின் படி நீங்கள் குறிபிட்ட 6 வருடமும் மழை பெய்யவில்லையா??? :huh:

நல்ல காலம் மழை பெய்திருந்தால் மண்கும்பி கரைந்து போயிருக்கும்

அதைவிட யானை சரியான இடத்தில் இந்த கல்லை வைக்குமாம். இது என்ன விளாங்காயா யானை தும்பிக்கையால் துக்கி வைக்க :unsure::unsure:

கோவில் கட்டப்பட்ட எடுக்கப்பட்டது ஆறு ஆண்டுகள். விமானம் கட்டவல்ல.

ராஜராஜ சோழன் இந்தக் பெரும் கருங்கல்லை பெருந்தொகை ஆட்கள் மூலம் தூக்கி வைக்க முயன்றான் முடியவில்லை. பிறகு யானையின் உதவியையும் நாடினான். ஆனா யானைக்கு விளாங்காய் தின்னுறதைத் தவிர ஒண்டும் தெரியயேல்லை. அப்பதான் இராமாயணக் கதையிலை இராமர் பாலம் கட்டினை கதை ராஜராஜ சோழனுக்கு வர ராமரைக் கும்பிட்ட ராமர் வந்து வானரங்களைக் கூப்பிட்டு 20 செக்கனிலை அந்த பெருங்கல்லைத் தூக்கி வைத்துவிட்டு போய்விட்டாரம். எனென்டா அவர் 5 நாளில் 34 கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினவராக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்ப விமானத்தில் வந்து சீதையை மண்ணுடனே அள்ளி சென்ற இராவணன். தான் இராமனிடம் தோற்கும்

தருணத்தில் கூட அந்த புஸ்ப விமானத்தை எதிரிக்கு எதிராக பாவிக்காதது...................????

எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாகவுமிருக்கலாம்...... இராமன் போரை தொடங்கியபோது பொருளாதார தடையை விதித்துவிட்டும் மிக தந்திரமாக போரை தொடங்கியிருக்கலாம்

புஸ்பவிமானத்தின் உதிரிபாகங்களை காட்டினில் கண்டெடுத்த புலிகள் அதன் கறளை தட்டி எண்ணை பூசி ஒன்றாக பொருத்தி அதே விமானத்தை கொண்டு கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று நான் சொல்கிறேன் ஒருவரும் நம்பமாட்டார்களாம்.

திருகோணமலையில் இராவணன் வெட்டு இன்னமும் இருக்கும் போது இராவணன் இருந்ததை எப்படி நம்பாமல் இருக்க முடியும்??? ஆனால் இராவணன் அதை வெட்டுவதற்கு பாவித்த வாளை நாம் கண்டெடுத்தால் ..............பாவம் பல நாடுகளில் மலையை குடைந்து வீதிகளை அமைப்பதற்கு எவ்வளவோ காசையும் காலத்தiயும் வீண்ணடிக்கின்றார்கள். அது மட்டும் கிடைத்தால் ஓரே ஓரு வெட்டு மலை பாதியாகும் வீதி வீதியாகும். படுபாவி அந்த வாளை எங்குதான் எறிந்தானோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியாக வருகிறேன்.

தஞ்சை பெரும் கோவிலை கட்ட பூத கணங்கள் தான் உதவியதாக சொல்லப்படுகின்றது.

பூத கணங்கள் என்றால் என்ன????. ஆவிகளா?

இப்போ ஆவிகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது .

அப்போ இந்து சமயத்தில் சொல்லும் போது மூட நம்பிக்கை என்றார்கள்

ஆனால் இப்போ அதற்கேன்றே தொலைக்காட்சியில் சனல்களை வைத்துள்ளார்கள் :rolleyes::rolleyes:

தஞ்சை பெரும் கோவில் கட்ட கற்களை எப்படி வெட்டி எடுத்தார்கள் என்று பார்த்தீர்களா?

காலத்துக்கு காலம் தொழில் நுட்பம் மாறலாம்.

இப்பொ கடினமான பாறைகளை துளையிட CO2 Laser Beam மூலம் முடியும் என்கிறார்கள்.

அண்மையில் சன் டிவியில் ஒரு தமிழ் நாட்டு இளைஞர் உலோகத்தாலான ஒரு கரண்டியை தனது கண்ணால் உற்று நோக்கிய படி அதை தடவும் போது கரண்டி முறிந்து விழுந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?

அட சீ லைட்ட அடிச்சு பாறையில ஓட்டை போடுறதா சொல்லுறாங்க. என்ன மாதிரி எல்லாம் கயிறு விடுறாங்க :rolleyes::rolleyes: இது தான் எமது நிலைமை

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியாக வருகிறேன்.

தஞ்சை பெரும் கோவிலை கட்ட பூத கணங்கள் தான் உதவியதாக சொல்லப்படுகின்றது.

பூத கணங்கள் என்றால் என்ன????. ஆவிகளா?

இப்போ ஆவிகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது .

அப்போ இந்து சமயத்தில் சொல்லும் போது மூட நம்பிக்கை என்றார்கள்

ஆனால் இப்போ அதற்கேன்றே தொலைக்காட்சியில் சனல்களை வைத்துள்ளார்கள் :rolleyes::rolleyes:

ஏன் தஞ்சைக் கோயிலிலேயே நிற்க்கின்றீர்கள்?

இப்படி சம்பந்தம் இல்லாத இடங்களில் சொறிந்து கொண்டிருக்கதான் உங்கள் வாததுக்கு முடிகிறதோ?

இராமன் என்ற வரலாறு இருந்ததா அதை நிரூபிக்க இயலவில்லையா?

தஞ்சை கோவில்களைக் கட்டியவர்கள் இருந்திருக்கின்றார்கள் அந்த சிறப்பான கட்டிடக்கலை ஒன்றும் மந்திரவாதம் இல்லையே!

இயற்கையாகவே இருந்த நிலத்திட்டுக்கு பாட்டை எழுதிவைத்து விட்டு போய்விட்டான் ஒருவன்.

அதில் உள்ள ஆயியம் சுத்துமாத்துக்களும் எம்மால் நீரூபிக்க முடியும்.

ஆக் நாய்க்கு மனிதனை விட மோப்ப சக்தி அதிகமாக இருக்கின்றது எனவே குரங்கும் பாலம் கட்டி இருக்கும் என்பது அற்புதமான விவாதமோ?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அல்ல விவாதம்.

மனிதனுக்கு சுமக்க முடியாததை கழுதை சுமக்க முடியும் எனவே மனிதனைவிட பெருமை கூடிய மிருகம் கழுதை என்று வேறு சொல்லவருவீர்கள் போல் இருக்கின்றது.

விஞ்ஞானம் சொல்லுகின்ற ஆவி, வழி என்று நினைக்கின்றேன்

Edited by தேவன்

வாதம் என்றால் அதற்கு பல உதாரணங்களை வைக்கலாம். அதை முறியடிக்கும் திறமை வேண்டும் :rolleyes:

கட்டிடக்கலை ஒன்றும் மந்திரவாதம் இல்லையே!

அப்படி என்றால் அதை கட்டி விதம் பற்றி ஏன் ஒருவராலும் சரியான விளக்கம் தரமுடியவில்லை? அப்படி கட்டி இருக்கலாம் இப்படி கட்டி இருக்கலாம் என்று தான் சொல்கின்றார்கள். அவை எல்லாவற்றுக்கும் எதிர் கருத்துள்ளது.

இராமாயணத்தில் வரும் தற்போது கடலுக்குள் இருக்கும் திருக்கோணேஸ்வரம் என்ன அப்போ?

இராமாயணத்தில் குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கும் பாலம் இப்போது தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பாலத்தையும் அந்த இடத்தையும் பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதையில் எப்படி சரியாக சொன்னார்கள்????

தஞ்சை கோவிலை ஏன் வைத்தேன் என்றால் அதை ஒருவராலும் மறுக்க முடியாது. (உதாரணமாக வைத்தேன் .இல்லாவிட்டால் சொறிந்து கொண்டிருப்பவர்களுக்கு புரியாது)

இயற்கையாகவே இருந்த நிலத்திட்டுக்கு பாட்டை எழுதிவைத்து விட்டு போய்விட்டான் ஒருவன்.

அதில் உள்ள ஆயியம் சுத்துமாத்துக்களும் எம்மால் நீரூபிக்க முடியும்.

அப்படி என்றால்

தஞ்சையை பற்றி எப்படி தெரியும் உங்களுக்கு? ராஜராஜ சோழன் உங்களுக்கு வந்து சொன்னானா தான் தான் கட்டியதா :rolleyes::wub:

யாரோ எழுதி வைத்துள்ளார்கள் அதை தான் சொல்லுகின்றீர்கள்

நாய்க்கு மனிதனை விட மோப்ப சக்தி குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது என்ன அப்போ??

கழுதை இது தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது :o:icon_mrgreen:

விஞ்ஞானம் சொல்லுகின்ற ஆவி, வழி என்று நினைக்கின்றேன் என்ன??????

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சைக் கோயிலைப் பார்த்து எவனாவது இது இயற்கையால் உருவானதாக நினைப்பானா?

அதுபோல் இராமன்பாலம் என்று சொல்லபடுவதும் முதலாவது சந்தேகமே அது இயற்கையால் உருவானதானா? செயற்கையால் உருவானதா என்பதே

இங்கேதான் மொட்டந்தலையும் முழங்காலும் இருக்கின்றது.

வார்த்தைகளின் கனம் அறிந்து பேசுதல் நன்றாக இருக்கும்,

இப்போ ஆவிகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது .

அப்போ இந்து சமயத்தில் சொல்லும் போது மூட நம்பிக்கை என்றார்கள்

ஆனால் இப்போ அதற்கேன்றே தொலைக்காட்சியில் சனல்களை வைத்துள்ளார்கள் :rolleyes::rolleyes:

ஐயோ சாமி எந்த விஞ்ஞானம் ஆவி இருக்கிறது எண்டு நிருப்பித்திருக்கு?

மத விண்ணாணங்களில்தான் ஆவி பேய் பிசாசு. உங்கடை மத மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் நிருப்பிக்கிறது எண்டு இங்கை வந்து புலுடா விடவேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சைக் கோயிலைப் பார்த்து எவனாவது இது இயற்கையால் உருவானதாக நினைப்பானா?

அதுபோல் இராமன்பாலம் என்று சொல்லபடுவதும் முதலாவது சந்தேகமே அது இயற்கையால் உருவானதானா? செயற்கையால் உருவானதா என்பதே

இங்கேதான் மொட்டந்தலையும் முழங்காலும் இருக்கின்றது.

வார்த்தைகளின் கனம் அறிந்து பேசுதல் நன்றாக இருக்கும்,

தஞ்சைக் கோயிலைப் பார்த்து எவனாவது இது இயற்கையால் உருவானதாக நினைப்பானா?

இப்படி அறிவுபூர்வமாக எழுதியதை பற்றி என்ன நினைப்பது :rolleyes::rolleyes:

இராமன்பாலம் அந்த பாலத்தையும் அந்த இடத்தையும் பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதையில் எப்படி சரியாக சொன்னார்கள்

இதற்கு ஒருவரும் பதில் சொல்கிறார்கள் இல்லை :wub::o

மொட்டந்தலையும் முழங்காலும் தங்களை தாங்கள் ஒப்பிடுவது போல இருக்கு :icon_mrgreen:

வார்த்தைகளின் கனம் அறிந்து பேசுதல் நன்றாக இருக்கும் சரியா மழுப்பலான பதில்.

அது சரி ஆவி வழி என்று ஏதோ சொன்னீர்கள் முதல்.

அதன் பின்னர் பதிலை காணோம்

அநுமான் எப்படி போனானோ அதே வித்தையைத்தான் இராவணனும் கையாண்டதாக மூலக்கதை சொல்கிறது.

பூத கணங்களா? அட நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா....

இப்படி நீங்கள் பூதம், ஆவி பின்னோக்கியே போங்கடா.

ராமர்தான்டா பாலத்தைக் கட்டினது. போதுமடா சாமி ஆக்களை விட்டுவிடுங்கடா.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சாமி எந்த விஞ்ஞானம் ஆவி இருக்கிறது எண்டு நிருப்பித்திருக்கு?

மத விண்ணாணங்களில்தான் ஆவி பேய் பிசாசு. உங்கடை மத மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் நிருப்பிக்கிறது எண்டு இங்கை வந்து புலுடா விடவேண்டாம்.

ஆகா வந்துட்டாரு ...மின்னிக்கொண்டு :o

தாங்கள் தொலைக் காட்சி பார்கிறதே இல்லையா :rolleyes: இதற்கென்றே சில சனல்கள் இருக்கு பாருங்கோ.

MSTRY and OLN

OLN இதில் தான் ஆவிகள் பற்றிய நேரடி நிகழ்சிகளை அதிகமா போடுவார்கள். Next time record பண்ணி போடுறேன்.

அதற்காக இந்த சனல்களை மதசார் இந்து சமய சனல்கள் என்று சொல்ல வராதிங்க :wub:

மின்னல் ஆனால் இவற்றில் தமிழ் படம் போட மாட்டாங்க :rolleyes:

பூத கணங்களா? அட நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா....

இப்படி நீங்கள் பூதம், ஆவி பின்னோக்கியே போங்கடா.

ராமர்தான்டா பாலத்தைக் கட்டினது. போதுமடா சாமி ஆக்களை விட்டுவிடுங்கடா.

ஜயோ அப்படியும் இல்லை இப்படியும் இல்லை என்றாமல் சரியான விளக்கத்தை தாருங்கோ ப்பிளிஸ் :icon_mrgreen:

இராமன்பாலம் அந்த பாலத்தையும் அந்த இடத்தையும் பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதையில் எப்படி சரியாக சொன்னார்கள்

அண்ணோய் கதையில் இருக்கும் இரு நாடுகள் இலங்கையும் இந்தியாவும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் போடுவதென்றால் என்ன மும்மையில் இருந்தா அல்லது கொச்சியில் இருந்தா பாலம் போடமுடியும். இலங்கைக்கு நெருக்கமான பகுதியில் இருந்துதானோ பாலம் போடமுடியும். இராமர் பாலம் போட முதலே அது இராமேஸ்வரமா? அல்லது போட்ட பின்னர் அது இராமேஸ்வரமா?

அது சரி பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதை என்கிறீர்கள். சும்மா குத்துமதிப்பா எத்தனை ஆண்டுகள் எண்டு சொல்லுங்கள்.

முட்டையிலிருந்து கோழி வந்ததா

கோழியிலிருந்து முட்டை வந்ததா :rolleyes:

அது சரி பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதை என்கிறீர்கள். சும்மா குத்துமதிப்பா எத்தனை ஆண்டுகள் எண்டு சொல்லுங்கள்

1000000000000000000000000000000000000000000000000000000000000000099 நாட்கள் சரியாக இன்றுடன்.

இதை என்ன தெரியாமல் இருந்தால் என் தப்பல்ல :rolleyes::wub:

தமிழ் லினக்ஸ் என்ற பெயரைப் பார்த்து விட்டு "கொஞ்ச விசயம் தெரிஞ்ச ஆள் போலக் கிடக்கு, விவாதம் செய்தால் சில விசயங்களை அறிந்து கொள்ளலாம்" என்ற எண்ணத்தோடு விவாதம் செய்யத் தொடங்கினால், அவரோ

யானை கல்லைத் தூக்கி எறிந்தது....

குரங்கு பாலம் கட்டியது....

குரங்கு விஞ்ஞான கூடத்தில் வேலை செய்கிறது (மாதச் சம்பளம் எவ்வளவாம்?)

பேய் கோயிலைக் கட்டியது....

பேய் இருப்பதை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது....

என்று "சீரியசாக" பேசிக் கொண்டிருக்கிறார். இவர் வேண்டுமென்றே விதண்டாவாதத்திற்குத்தான் இப்படிப் பேசுகிறாரோ என்றும் சந்தேகமாக இருக்கிறது.

தஞ்சை பெரிய கோயில் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறார். ஆது மனிதர்களால் கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி சில கட்டுக்கதைகள் பரப்பப்பட்டிருக்கிறது. கோபுரத்தில் உள்ள விமானம் ஓரே கல்லால் கட்டப்பட்டது.

கோபுர நிழல் தரையில் விழாது

தஞ்சையில் உள்ள நந்தி வளர்ந்து கொண்டே போகிறது.

இப்படியான நம்பிக்கை சிலரிடம் உண்டு. ஆனால் இவைகள் உண்மை அல்ல.

முனைவர் கலைக்கோவன் அவர்கள் கோபுரத்தில் உள்ள விமானம் சிறு சிறு கற்களாகக் கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டிருப்பதாக நிறுவியிருக்கிறார். (கல்லில் 12 விதமான கலவைகள் இருப்பதாக நான் சொன்ன தகவல் தவறு. வேறு ஒன்றை மாறிச் சொல்லிவிட்டேன்)

சாராப்பள்ளம் என்ற ஊரில் இருந்து சாய்வாக கோபுர உச்சி வரை மண் கொண்டு பாதை அமைக்கப்பட்டு, கல்லைக் கட்டி யானைகளின் உதவியோடு மேலே கொண்டு போனார்கள் என்ற கருத்தை சிலர் சொல்கிறார்கள். யானை தும்பிக்கையால் கல்லைத் தூக்கிப் போட்டதாக யாரும் சொல்வதில்லை. மேலே யானையின் உதவியோடு இழுத்துச் செல்லப்பட்ட கல்லை தூக்கிப் போட வேண்டிய தேவையும் எழவில்லை.

thanjaitr6.jpg

முனைவர் கலைக்கோவனின் ஆராய்ச்சிக்குப் பிறகு தற்பொழுது விமானம் ஓரே கல்லில் கட்டப்படவில்லை என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக் கோயில் பற்றி விக்கிப்பேடியாவிலும் "ஒரே கல்லால் கட்டப்பட்டது" என்ற தகவல் இல்லை.

தஞ்சைக் கோயிலில் உள்ள நந்திதான் ஓரே கல்லில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மை என்று பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (நந்தி தரையில்தான் இருக்கிறது) இந்த நந்தி நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி சற்று சிறியது. (இதைத்தான் நந்தி வளர்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள்)

கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர்காரனான மதன் ஆனந்தவிகடனில் "ஹாய் மதன்" பகுதியில் நிழல் கீழே விழும் என்று எழுதியிருக்கிறார். இதை விட வேறு பலரும் இதை புகைப்படங்களோடு நிரூபித்திருக்கிறார்கள்.

artpudam1wv4.jpg

ஆகா வந்துட்டாரு ...மின்னிக்கொண்டு :icon_mrgreen:

தாங்கள் தொலைக் காட்சி பார்கிறதே இல்லையா :rolleyes: இதற்கென்றே சில சனல்கள் இருக்கு பாருங்கோ.

MSTRY and OLN

OLN இதில் தான் ஆவிகள் பற்றிய நேரடி நிகழ்சிகளை அதிகமா போடுவார்கள். Next time record பண்ணி போடுறேன்.

அதற்காக இந்த சனல்களை மதசார் இந்து சமய சனல்கள் என்று சொல்ல வராதிங்க :wub:

மின்னல் ஆனால் இவற்றில் தமிழ் படம் போட மாட்டாங்க :rolleyes:

ஜயோ அப்படியும் இல்லை இப்படியும் இல்லை என்றாமல் சரியான விளக்கத்தை தாருங்கோ ப்பிளிஸ் :icon_mrgreen:

அண்ணை நான் அப்பிடியும் இல்லை உப்பிடியும் இல்லை எண்டு ஒண்டு சொல்லவில்லை. உங்கடை விண்ணாணம் நிருப்பித்த ஆவிக்கான ஆதாரத்தை கொஞ்சம் வெளியிடுங்கள். ரிவியிலை மட்டும்தான் ஆவியின் ஆதாரம் வெளியிடுனமா? என்ன ரீவியிலை ஆவிப் படமெடுத்துக் காட்டுகினமா? ஒரு அறிவியல் ஆய்வு ரீவி என்ற ஒரு ஊடகத்திலை மட்டும்தான் வருமா? எத்தனையோ அறிவியல் இணையத் தளங்கள் இணைய வலையில் தவழுகின்றன. அனைத்து அண்டவெளி ஆய்விலை இருந்து ஆழ்கடல் ஆய்வுவரை அனைத்தையும் வெளியிடும் அறிவியல் இணையத் தளங்களில் ஆவியை கண்டுபிடித்த உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை.?

அதற்காக இந்த சனல்களை மதசார் இந்து சமய சனல்கள் என்று சொல்ல வராதிங்க :o

இந்த சண்டீவியும் மதச்சாராத டிவிதான் அங்கை வேப்பிலைக்காரி மைரிடியர் பூதம் இராஜஇராஜேஸ்வரி எண்டு தொடருகள் போடினம். அதிலையும் ஆவிகள் அரக்கர்கள் எண்டெல்லாம் வருகிறது. அதற்காக சண்டீவியை நாங்கள் என்ன இந்துமத டீவி எண்டா அழைக்கிறம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் லினக்ஸ் என்ற பெயரைப் பார்த்து விட்டு "கொஞ்ச விசயம் தெரிஞ்ச ஆள் போலக் கிடக்கு, விவாதம் செய்தால் சில விசயங்களை அறிந்து கொள்ளலாம்" என்ற எண்ணத்தோடு விவாதம் செய்யத் தொடங்கினால், அவரோ

பெயரை பார்த்து ஆளை எடைபோடக் கூடாது :rolleyes:

இணைப்புகளுக்கு நன்றி. இவை எல்லாம் ஊகங்கள் தான் அப்படியிருக்கலாம் இப்படியிருக்கலாம் என்று.

இப்படி படிபடியாக மண்கும்பி மூலம் நிரப்பி கட்டபட்டது என்றால். அந்த மண்கும்பி மிகவும் உறுதியானதாக இருத்தல் வேண்டும். அப்போ அதன் தாக்கம் கோபுரத்தின் மேல் ஏற்படும். அது கோபுரத்தின் உறுதிதன்மையை இழக்க செய்யும் என்பதும் உண்மை.

அதோடு மழை காலத்தில் மண்கும்பி என்னவாகும்? சேறும் சகதியாகி இன்னும் கோபுரத்துக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும். சில வேளை மூடி மறைத்து அல்லது குடை பிடித்தும் இருக்கலாம் :rolleyes:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ அறிவியல் இணையத் தளங்கள் இணைய வலையில் தவழுகின்றன. அனைத்து அண்டவெளி ஆய்விலை இருந்து ஆழ்கடல் ஆய்வுவரை அனைத்தையும் வெளியிடும் அறிவியல் இணையத் தளங்களில் ஆவியை கண்டுபிடித்த உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை.?

நிரந்தரமில்லா இணையத்தளங்களை நம்பலாமா ? தொலைக்காட்சியை நப்பலாமா?

அதிகம்.

உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை

இதற்கு மேல் கதைத்தால் எனக்கு தான் பேய் பிடிக்கும் :rolleyes::rolleyes:

நிரந்தரமில்லா இணையத்தளங்களை நம்பலாமா ? தொலைக்காட்சியை நப்பலாமா?

அதிகம்.

உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை

இதற்கு மேல் கதைத்தால் எனக்கு தான் பேய் பிடிக்கும் :wub::rolleyes:

இணையத் தளங்கள் நிரந்தரமில்லையா? அழிந்து கொண்டு போகின்றனவா? தமிழ் பொழுது போக்குத் தளங்கள் ஒண்டு இரண்டு ஆண்டுகளில் காணாமல் போவது போன்ற அனைத்துத் தளங்களும் போகுமெண்டு நினைக்கிறீர்கள்?

இதற்கு மேல் கதைத்தால் எனக்கு தான் பேய் பிடிக்கும் :o:rolleyes:

மனிதனுக்கு பேய் பிடிக்கிறது ஆவி அடிக்கிறது. நாமெல்லாம் 21ம் நூற்றாண்டில் வாழ்க. அறிவியல்

இதிலே எதுவும் ஊகம் இல்லை.

கோபுர நிழல் கிழே விழும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மண் கும்பி போன்று செய்து கல்லை மேலே கொண்டு போனார்கள் என்பதுதான் ஒரு ஊகம். சாய்வாக உருவாக்கப்படும் உறுதியான மண்கும்பித் தோற்றம் மிகப் பலமான கோபுரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மண்கும்பியின் பிடிமானம் தரையிலும் இருக்கும். 80டன் கல்லை தாங்கி நிற்கும்படி மிகப் பலமான முறையில் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஊகம் தவறு என்று சொல்வதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன.

அதே வேளை "இந்த ஊகம் தவறு, ஒரே கல் மேலே கொண்டு செல்லப்படவில்லை, பல சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு, கோபுர விமானம் கட்டப்பட்டுள்ளது" என்று முனைவர் கலைக்கோவன் நிறுவியுள்ளார். இதுதான் சரியானது. இங்கே ஊகத்திற்கு இடம் இல்லை.

ஆகவே கோபுரத்தில் கல் இருப்பதில் விளங்க முடியாத அற்புதம் இதுவும் இல்லை. மனித உழைப்பின் சாதனை அது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே,

செய்திகளையும் தகவல்களையும் கேட்பதும் பார்ப்பதும் தமிழ் லினக்ஸாக இருந்தால், குரங்கென்ன அணிலே ரொக்கட் ஓட்டும். ஆவிகள் வந்து மண்சுமந்து வீடு கோயில் எல்லாம் கட்டும். சாதாரண உண்மைகள் தகவல்கள் என்று நண்பர் தமிழ் லினக்ஸ் முன்வைக்கும் தரவுகளின் மூலம் விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும் துணுக்குச் செய்திகளாகவோ தான் தெரிகின்றன. இதைப் பார்த்து ஒருவர் அறிவியல் இது தான் என்று நம்பிக் கொண்டிருந்தால், மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து செல்லுங்கள் என விட்டு விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன். நேரம் வேஸ்ட் நண்பர்களே, உங்கள் உங்கள் வேலைகளப் பார்க்கப் போங்கள். நண்பர் தமிழ் லினக்ஸ் ஆவிச் சனல் பார்க்கப் போங்கள், இன்னும் அறிவாளியாவீர்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே,

செய்திகளையும் தகவல்களையும் கேட்பதும் பார்ப்பதும் தமிழ் லினக்ஸாக இருந்தால், குரங்கென்ன அணிலே ரொக்கட் ஓட்டும். ஆவிகள் வந்து மண்சுமந்து வீடு கோயில் எல்லாம் கட்டும். சாதாரண உண்மைகள் தகவல்கள் என்று நண்பர் தமிழ் லினக்ஸ் முன்வைக்கும் தரவுகளின் மூலம் விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும் துணுக்குச் செய்திகளாகவோ தான் தெரிகின்றன. இதைப் பார்த்து ஒருவர் அறிவியல் இது தான் என்று நம்பிக் கொண்டிருந்தால், மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து செல்லுங்கள் என விட்டு விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன். நேரம் வேஸ்ட் நண்பர்களே, உங்கள் உங்கள் வேலைகளப் பார்க்கப் போங்கள். நண்பர் தமிழ் லினக்ஸ் ஆவிச் சனல் பார்க்கப் போங்கள், இன்னும் அறிவாளியாவீர்கள். :o

ரொம்ப ரொம்ப துத்துவம் பேசுராறுறுறுறுறுறுறுறுறுறு :rolleyes:

ஜஸ்டினுக்கு செய்திகள் தகவல்கள் எல்லாம் அவதார புரசர்கள் மூலம் தான் வருகின்றன :rolleyes:

விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும்

அப்போ நீங்க மட்டும் பெயர் தகுதி ஓட வந்து இங்கே எழுதிரிங்களோ :wub:

MOHAN PLEASE Justin Biodata provide பண்ணுங்கோ :icon_mrgreen::icon_mrgreen:

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.