Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் குரல் நிறுவனம் கிபிர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகப+ர்வ வானொலியான புலிகளின்குரல் நிறுவனம,; சிறீலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிபீர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

மேலதிக செய்திகள் இன்னும் சில நிமிடங்களில்........

-புலிகளின்குரல்.கொம்

Edited by தமிழினீ

  • Replies 52
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகப+ர்வ வானொலியான புலிகளின்குரல் நிறுவனமஇ; சிறீலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிபீர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

அப்ப மாவீரர் உரை?

  • தொடங்கியவர்

நிகழும்

5.35 ஆகிவிட்டது எங்கே, எப்படி கேட்பது?

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் உரை நிகழும். புலிகளின் குரல் நிறுவனத்தின் மாற்றிடமென்றில் இருந்து அது நேரடி அஞ்சல் செய்யப்படும்.

புலிகளின் குரல் மீதான தாக்குதலில் அங்கு பணியாற்றியோருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

சிங்கள பேரினவாத அரசின் அதி உச்ச பேரினவாதத்தாண்டவம் பிராந்திய மேற்குலக சர்வதேசத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் ஆடப்படுகிறது.

செச்சினிய போராளித் தலைவர்களைக் கொல்லப் பயன்படுத்திய அதே யுக்தி இங்கும் கையாளப்படுகிறது. மிகவும் பயிற்சி பெற்ற வெளிநாட்டு விமானிகள் இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கலாம்.

எதுஎப்படியோ ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல் ஒரு புறம்.. விமானப்படை தாக்குதல் ஒரு புறம் கள முனையில் படையினரின் முன்னர்வுகள் ஒரு புறம் என்று இந்த மாவீரர் தினம் என்றுமில்லாத வகையில் சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதுவே சாமாதானத்துக்கான அரசின் நல்லெண்ண வெளிப்பாடுமாகும்..!

Air force bombs Tamil Tiger radio

Sri Lankan air force jets have bombed the Tamil Tigers' radio station in the north of the island, the rebels say.

The raid came as the rebels' top leader was about to give his annual policy speech. A Tamil Tiger statement said many civilians had been killed.

It was not possible to independently verify the casualty claims.

The rebels still broadcast the speech. Their leader Prabhakaran said hopes of peace were "political naivety". The government says it wants to kill him.

Fighting between troops and the rebels, who want autonomy for minority Tamils in the north and east, has worsened in recent months.

Building 'flattened'

The Tamil Tigers said the air raid on their radio station, known as Voice of the Tigers, came at 1630 local time.

The rebels mark what they call War Heroes' Day every year on 27 November.

"Many civilian employees present at the Voice of Tigers office to broadcast the War Heroes' commemorations were killed by the bombing. The Voice of Tigers buildings were flattened," a statement on the rebels' website said.

"Two Kfir bombers dropped 12 bombs on the buildings. The building was situated on the A9 road and civilians travelling on the road were also killed."

Sri Lanka's military said the air force had raided "a clandestine radio station" in Kilinochchi, where the rebels have their headquarters.

Military spokesman Udaya Nanayakkara said he was not aware whether the radio station hit had been the Voice of the Tigers.

Government death threat

On Monday, the government marked Prabhakaran's 53rd birthday with a vow to kill him, after the leader of the Tigers' political wing SP Thamilselvan was killed in an air strike earlier this month.

"The killing of Thamilselvan sent a very powerful message: they know we have good intelligence on their movements," defence secretary Gotabhaya Rajapaksa told the AFP news agency.

"We are after him [Prabhakaran]. We are specifically targeting their leadership."

A Norwegian-brokered ceasefire in 2002 broke down after two years ago, resulting in renewed fighting that has killed more than 5,000 people.

At least 70,000 people have died since the war began in 1983.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7115043.stm

Edited by nedukkalapoovan

புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது கிபீர் வானூர்திகள் மிலேச்சத்தனமான தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007, 05:39 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இன்று மாலை 4:30 மணிக்கு மிலேச்சத்தனமான வான்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

கிளிநொச்சி நகரிலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஏ-9 வீதியில் புலிகளின் குரல் வானொலி நிலையம் அமைந்துள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காக பெருந்திரளான பொதுமக்கள் அங்கு குழுமியிருந்தனர். அப்போது வானொலி நிலையத்தின் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் 12 குண்டுகளை அகோரமாக வீசியுள்ளன.

இத்தாக்குதலின் போது வீதியால் சென்ற பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்பட்டுகிறது.

மிகவும் நன்றி!

ஒரு வருடத்திற்கு முன்னரும் புலிகளின் குரல் வானொலி நிலையம் ஒன்று அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற்றன.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19944

இந்த வருடம், மாவீரர்தின ஒலி, ஒளிபரப்புகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்களலிருந்தே ஒளிபரப்பப்படும். இன்று தாக்குதல்கள் நடக்குமென புலிகள் நிச்சயமாக ஊகித்திருப்பார்கள். இவ்விடங்களில் மட்டுமின்றி, களங்களிலும் பல முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள் என ஊகித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை நேரடியாக அஞ்சல் செய்யப்பட்டது.. விசேடமாக தலைவர் ஒன்றையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை.

தலைவரின் வேண்டுகோள் புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தொடர்சியான ஆதரவை வழங்க வேண்டுமென்பதே.

மேலும் தன்னுடன் ஈகைசுடர் ஏற்றும் தனது தம்பி தமிழ் செல்வனுக்கு இம்முறை தான் ஈகை சுடர் ஏற்ற வெண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

புலத்து கற்பனை எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படித்து விட்டு அதே மாதிரி எதிர்பார்த்தால் யார் தப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இவ்வளவு காலமும் நடந்து வருவதையும், இனி நடக்க இருப்பதையும் கூறியிருக்கிறார். இந்தியாவின் போலி முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். சர்வதேச நாடுகளின் பம்மாத்துக்களையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இனி சர்வதேச அழுத்தங்கள் எடுபடாது என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

சுயநிணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென்று கூறியிருப்பதுடன், புலம்பெயர் தமிழரின் ஆதரவையும் வேண்டி நிற்கிறார்.

இனி நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று சிந்திப்போம்.

தலைவர் யாருக்கு சொன்னார் இந்த மாவீரர் நாளில் இராணுவ முகாம் அடிப்பதுக்கு நல்ல நேரம் குறிப்பார் என்று?

தலைவர் தெளிவாக இருக்கிறார் ஆனா இடையில் அவர் எழுதினார் இவர் எழுதினார் என்று யாரையும் யாரும் திட்ட முடியாது........

அதே போல தற்போது சில குறுக்கால போனதுகள் புலம் பெயர் நாட்டில் உள்ள ஊடகவியாளர்களை முடக்கும் போராட்டத்தை எடுப்பதாக எனக்கு தோனுகிறது.........

ஆசை யாருக்கு தான் இல்லை?

எனக்கும் தான் உங்களுக்கு இல்லையா?

கடந்த வருடம், தலைவர் அவர்கள் பங்களிப்புச் செய்த புலம்பெயர் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் முதன்முறையாக வெளிப்படையாக நன்றி சொல்லியிருந்தார். ஆனால், இந்த முறை மேலோட்டமாகவே நன்றி கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் விளங்கவில்லையா? அவர் எதிர்பார்த்த பங்களிப்புகள், ஆதரவுகளை நாம் வழங்கவில்லை என்பதை அவரது உரையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

உரையிலிருந்து எனக்குப் பிடித்த உரையின் ஒரு பகுதி:

"வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய "ல்லாளன்|| நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது.

இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது.

அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.

ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது.

அதாவதுஇ தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடுஇ இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது."

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல் மீதான தாக்குதலின் போது பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக பிபிசி கூறுகிறது. சிங்கள அரசு தான் புலிகளின் குரலை நொருக்கி விட்டதாக மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறது..! தனது வான் படைக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது..!

Air force bombs Tamil Tiger radio

Sri Lankan air force jets have bombed the Tamil Tigers' radio station in the north of the island, the rebels say.

The raid came as the rebels' top leader was about to give his annual policy speech. A Tamil Tiger statement said many civilians had been killed. :unsure:

It was not possible to independently verify the casualty claims. The military confirmed the bombing raid.

The rebels still broadcast the speech. Their leader Prabhakaran said hopes of a peace deal were "political naivety".

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7115043.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகப+ர்வ வானொலியான புலிகளின்குரல் நிறுவனமஇ; சிறீலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிபீர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இதை பலமுறை கூறிப்பிட்டுள்ளேன். எக்காரணத்தைக் கொண்டும் புலிகளின் தலைவர்கள் நேரடி ஒலி ஒளி அஞ்சல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவிர்கபடல் வேண்டும்

தொழில் நுட்ப வளர்சி மிக அதிகம்

  • தொடங்கியவர்
20071127001.jpg

யாருக்கு இந்த அறிவுரையைச் சொல்கிறீர்கள் தமிழ்லீனக்ஸ்? எமது அமைப்பையும் அவர்களின் கட்டுமானங்களையும் நீங்கள் இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதையே உங்களின் இந்த அறிவுரைகள் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தாக்குதலில் இந்திய விமான படை விமானிகளும் பங்குபற்றியதாக சிங்கள இராணுவ செய்திகளை உரையாடும் சாட்டில் இப்போ சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

கொடியாட வடதெண்ட அபே இந்திய கூவன் கமுதாவே கட்டிய தமாய் அத அபித்தெக்க ஆவே. கொதடம கெமெக்க துன்னா தன்னவத

Edited by tamillinux

கொடியாட வடதெண்ட அபே இந்திய கூவன் கமுதாவே கட்டிய தமாய் அத அபித்தெக்க ஆவே. கொதடம கெமெக்க துன்னா தன்னவத


எல்லாருக்கும் சிங்களம் விளங்காது எனவே விளக்கத்தையும் கொடுத்திருக்க வேண்டும்

புலிகளின் குரல் மீதான தாக்குதலில் முக்கியபிரமுகர்கள் சிலர் அகப்பட்டதாக உறுதிப்படாத வாய்வழித்தகவல் யாராவது தகவல் தெரிந்தவர்கள் விபரம் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடியாட வடதெண்ட அபே இந்திய கூவன் கமுதாவே கட்டிய தமாய் அத அபித்தெக்க ஆவே. கொதடம கெமெக்க துன்னா தன்னவத

எல்லாருக்கும் சிங்களம் விளங்காது எனவே விளக்கத்தையும் கொடுத்திருக்க வேண்டும்


புலிக்கு வேலை கொடுக்க இந்திய விமானபடை ஆட்கள் தான் இன்று எம்மோடு வந்தவை.

நல்ல வடிவா அடிச்சுப் போட்டோம்.

நான் சொன்ன ஒரு கருத்தை வைத்து, என்னை இந்திய விசுவாசி என நீங்கள் நினைத்தால், அது உங்களின் விளக்கமின்மையையே காட்டுகிறது. நான் சொன்னதெல்லாம், ஒரு இனத்தைச் சேர்ந்து ஓரிருவரின் கருத்தை வைத்துக் கொண்டு அந்த இனமே அப்படியான எண்ணங்களைக் கொண்டது என நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது என்றே. அதுமட்டுமின்றி, ஒருவர் செய்த ஒரு சின்ன விடயத்திற்காக மணித்தியாலங்களாக அதனைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்க்கவே சொன்னேன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்கு நடந்தது தற்செயலானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அத்தாக்குதலின்போது, தொழில்நுட்பம் நிச்சயமாகப் உபயோகப்படுத்தப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அத்தாக்குதல் நடந்தபோது, தமிழ்ச்செல்வன் அண்ணா, மக்களோடு மக்களாக, கவனக்குறைவாக இருந்தார் என்பதே உண்மை. அந்தத் தாக்குதல் யாரால், எவ்வாறு செயற்படுத்தப்பட்டது என்பதை நானும் அறிவேன். அவற்றையெல்லாம் நாம் வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள் என நினைக்கிறேன். தமிழ்ச்செல்வன் அண்ணா, தான் அரசியல் பொறுப்பாளராக இருப்பதோடு, அனைத்துலகத் தொடர்போடு இருப்பதால், தன்மீது தாக்கமாட்டார்கள் என நினைத்திருந்தார். அதனால்தான் அவர் தனது பாதுகாப்பில் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை என்பது எனது கணிப்பு. அவ்வாறு நினைத்திராவிட்டால், அத்தாக்குதல் நடந்த இடத்தில் தங்கியிருக்கமாட்டார். சிறீலங்கா அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு, தாங்கள் நேரடியாக இருந்து பார்த்ததைப் போன்று எழுதுபவர்களின் வலையில் நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அரசின் பணமும் பிரச்சாரமும் நன்றாகவே வேலை செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு வேலை கொடுக்க இந்திய விமானபடை ஆட்கள் தான் இன்று எம்மோடு வந்தவை.

நல்ல வடிவா அடிச்சுப் போட்டோம்.

இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இஸ்ரேலிய விமானப்படை அமெரிக்க விமானப்படை உக்ரேனிய விமானப்படை ரஷ்சிய விமானப்படை சீன விமானப்படை ஈரானிய விமானப்படை என்று எல்லா விமானப்படையும் சிறீலங்காவுக்கு உதவி செய்து. புலிகள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நிற்பது ஈராக்கில் சதாம் தாங்கி நின்றதை விட மேலானது என்பதை உணரனும் முதலில..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்ன ஒரு கருத்தை வைத்து, என்னை இந்திய விசுவாசி என நீங்கள் நினைத்தால், அது உங்களின் விளக்கமின்மையையே காட்டுகிறது. நான் சொன்னதெல்லாம், ஒரு இனத்தைச் சேர்ந்து ஓரிருவரின் கருத்தை வைத்துக் கொண்டு அந்த இனமே அப்படியான எண்ணங்களைக் கொண்டது என நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது என்றே. அதுமட்டுமின்றி, ஒருவர் செய்த ஒரு சின்ன விடயத்திற்காக மணித்தியாலங்களாக அதனைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்க்கவே சொன்னேன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்கு நடந்தது தற்செயலானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அத்தாக்குதலின்போது, தொழில்நுட்பம் நிச்சயமாகப் உபயோகப்படுத்தப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அத்தாக்குதல் நடந்தபோது, தமிழ்ச்செல்வன் அண்ணா, மக்களோடு மக்களாக, கவனக்குறைவாக இருந்தார் என்பதே உண்மை. அந்தத் தாக்குதல் யாரால், எவ்வாறு செயற்படுத்தப்பட்டது என்பதை நானும் அறிவேன். அவற்றையெல்லாம் நாம் வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள் என நினைக்கிறேன். தமிழ்ச்செல்வன் அண்ணா, தான் அரசியல் பொறுப்பாளராக இருப்பதோடு, அனைத்துலகத் தொடர்போடு இருப்பதால், தன்மீது தாக்கமாட்டார்கள் என நினைத்திருந்தார். அதனால்தான் அவர் தனது பாதுகாப்பில் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை என்பது எனது கணிப்பு. அவ்வாறு நினைத்திராவிட்டால், அத்தாக்குதல் நடந்த இடத்தில் தங்கியிருக்கமாட்டார். சிறீலங்கா அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு, தாங்கள் நேரடியாக இருந்து பார்த்ததைப் போன்று எழுதுபவர்களின் வலையில் நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அரசின் பணமும் பிரச்சாரமும் நன்றாகவே வேலை செய்கிறது.

இந்திய விசுவாசிகளின் எழுத்து திறமையை பற்றி நான் நன்றாக அறிவேன். அவர்கள்களின் பேச்சு திறனுக்கோ எழுத்து திறனுக்கோ ஈழத் தமிழர் மயங்கும் காலம் இப்போ இல்லை.

தமிழ்ச்செல்வன் அண்ணா, தான் அரசியல் பொறுப்பாளராக இருப்பதோடு, அனைத்துலகத் தொடர்போடு இருப்பதால், தன்மீது தாக்கமாட்டார்கள் என நினைத்திருந்தார். அதனால்தான் அவர் தனது பாதுகாப்பில் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை என்பது எனது கணிப்பு. அவ்வாறு நினைத்திராவிட்டால், அத்தாக்குதல் நடந்த இடத்தில் தங்கியிருக்கமாட்டார்.

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் இந்திய வீசுவாசிகளின் இராணுவ அரசியல் அறிவு என்ன என்பது தான்....

சிவசிவா எப்படி ஈழ தமிழர் மீளபோகிறோமோ தெரியவில்லை.

தமிழச்சி எனது கருத்துக்கள் உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. என்னை எதிர்த்து வாதாடுபவர்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ தான் என் பிழைகளையும் நான் திருத்தி கொள்ளலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.