Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் படையினர் சோதனை : நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது

Featured Replies

கொழும்பில் கைதான தமிழர்களை விடு விக்குமாறு கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களை மூடி பாடசாலை களைப் பகிஷ்கரித்து ஹர்த்தாலுக்கு ஆத ரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

அதேவேளை

நாடாளுமன்றம் நாளை கூடும்போது தமிழ் எம்.பிக்கள் யாவரும் இணைந்து எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி உட்பட மற்றும் கட்சிகளின் ஆதரவு கோரப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் உதயனுக்குத் தெரிவித் தார்.

எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் அவசரகாலச் சட்டவாக்கெடுப்பில் சகல தமிழ் எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்து தமிழர்களைக் கைதுசெய்வதை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கேட்டுள்ளார்.

(நன்றி உதயன்)

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட நூற்றுக்காணக்கான தமிழர்கள் உடுத்த உடையுடன் காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலும் படையினரின் சோதனைகளும் தேடுதல்களும் தொடர்ந்து நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தாக்குதல் பீதி: கொழும்பில் ராணுவம் குவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 2, 2007

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த பீதி நிலவுவதால், கொழும்பு நகரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சமீபத்தில் அமைச்சரும், தமிழ் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். டக்ளஸ் அதிர்ஷ்டவசமாக தப்பிநார்.

பெண் விடுதலைப் புலி ஒருவர் வெடிகுண்டுடன் வந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்த அந்த சம்பவத்தின் நேரடிக் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து கொழும்பில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து கொழும்பு நகரம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான தமிழர்களை, கைது செய்து வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸாருக்குப் பதில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 15 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/12...rd-colombo.html

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட நூற்றுக்காணக்கான தமிழர்கள் உடுத்த உடையுடன் காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலும் படையினரின் சோதனைகளும் தேடுதல்களும் தொடர்ந்து நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

பெற்றோரின் கதறலின் மத்தியிலும் எந்தவித நிபந்தனையும் இன்றி தமிழர்கள் கைதுசெய்ப்பட்டு பூசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நட்ட நடு வீதியில் ஆண் பெண் வித்தியாசம் இன்றி முட்டுக்காலில் அமர வைக்க்பட்டு பூசாவிற்கு அனுப்பட்டுள்ளனர். தற்போது நண்பனுடன் கதைத்தபோது மகிந்தவின் அன்பு சோதரர்கள் தமிழர்கள் இனி கொழும்பில் இருக்க முடியாது என கூறியுள்ளார்களாம் என்று சிங்கள தொலைக்காட்சியில் கூறப்பட்டதாம். பொலிஸ் நிலையங்களின் முன்பு பெற்றோர் கதறியழும்போது கைது செய்த தமிழர்கள் அனைவரையும் பின்புறமாக வாகனங்களில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

கொடுமை இதற்கான பதிலை சிங்கள சமுகம் அனுவித்து தீரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குண்டை ஒருவர் கொடுத்து விட்டு கடைக்குள் போனாராம்.பிறகு திரும்பி வரும் போது அதனை ஏற்க மறுத்து விட்டாராம்.பின்னர் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் 48 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டு பூசாவுக்கு அனுப்பபட்டுள்ளார்கள். அடுத்து 18000 படையினர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.மகிந

58இன் தனிச்சிங்கள இலங்கை தன்னை தோள் உரித்துச் சர்வதேசச் சமூகத்திற்குக் காட்டுகிறது. மகிந்த தானாகவே தமிழீழ அங்கீகரிப்பைச் சர்வதேசம் வழங்கிறதிற்கான ஏற்பாடுகளைச் செய்யிறார் புரியுதோ?

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

கண்ணில்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்களாக நோக்கும் தென்னிலங்கைப் பாதுகாப்புத்துறை உயர்மட் டத்தின் "அதிமேதாவித்தனத்தினால்' தெற்கில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்வு பெரும் அச்சத்துக்குள்ளும் அவலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக் கின்றது.

ஹிட்லர் யூதர்களை நாசிவதை முகாம்களுக்கு அள்ளிச் சென்ற மாதிரி தென்னிலங்கையில் தமிழருக்கு குறிப் பாகத் தமிழ் இளம் சமுதாயத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு மேலிடத்து ஆசியோடும், வழிகாட்டலோடும் முழு மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

தலைநகர் கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங் களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் சல்லடை போட்டுத் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வீதிக ளில் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு, பயணிகள் இறக்கப் பட்டு, துருவப்படுகின்றார்கள். தமிழர்கள் தடுத்து வைக்கப் படுகின்றார்கள். உரிய ஆவணங்கள், அடையாளப் படுத்தல் பதிவுகள், சான்றுகள் இருந்தாலும் கூட வழி மறிக் கும் படையினருக்கு அல்லது பொலிஸாருக்கு வழி மறிக் கப்பட்ட தமிழரின் தோற்றம் குறித்து மனதில் ஏதும் சந்தே கம் தோன்றுமானால் அந்தத் தமிழர் தடுக்கப்படுகின்றார்; கைதுசெய்யப்படுகின்றார். ஏற்கனவே தயாராக இருக்கும் தடுப்புக் காவல் உத்தரவுப் பத்திரத்தில் அவரது பெயர் பொறிக் கப்படுவதோடு அவர் தடுப்புக் காவல் கைதியாகின்றார்.

இவ்வாறு கண்களில் கண்ட தமிழர்கள் எல்லோரையும் அள்ளுவதன் மூலம் புலிகளை மடக்கிப் பிடிக்கலாம் என்ற தென்னிலங்கை அறிவாளிகளின் "அதிபுத்திசாலித்தன' சிந்தனை செயலுருவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றத

  • தொடங்கியவர்

தலைநகர் கொழும்பிலும் மற்றும் புற நகரங்களிலும், பல்வேறு இடங்களில் நேற்று பயணிகளின் பஸ்கள் உட்பட சகல வாகனங்களையும் வழிமறித்து பயணித்தோரைத் துருவித் துருவி விசாரித்த பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும், பல நூற்றுக் கணக்கில் ஆயிரத்துக்கும் மேல் தமிழர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையங்களுக்கும் தனியான விசாரணை இடங்களுக்கும் கூட்டிச் சென்றனர்.

இந்தச் சோதனைகளுக்காக தலைநகரிலும் சுற்றுப் புறங்களிலும் பல இடங்களில் வாகனங்கள் சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் வரிசையில் தவம் கிடந்தமையாலும் அவற்றில் இருந்து இறக்கப்பட்ட தமிழர்கள் கொத்து கொத்தாகக் கைது செய்யப்பட்டு கூட்டிச் செல்லப்பட்ட கொடூரத்தாலும் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவின.

கொழும்பு நகரின் பல்வேறு சோதனைச் சாவடிகளிலும் வந்த அனைத்து வாகனங்களுமே நேற்று வழிமறிக்கப்பட்டு முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பஸ்களிலும் ஏனைய வாகனங்களிலும் பயணித்தோர் துருவித் துருவி ஆராயப்பட்டனர்.

அவர்களில் தமிழர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேச அடையாள அட்டைகளை வைத்திருப்போர் வழி மறிக்கப்பட்டனர்.

தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி,கிருலப்பனை, கொட்டாஞ்சேனை, கொள்ளுப்பிட்டி, மருதானை, மோதரை, வத்தளை, கந்தானை உட்பட சுமார் இருபது முப்பது இடங்களில் இவ்வாறு நடத்தப்பட்ட சோதனைகளின்போது ஆங்காங்கே வழி மறிக்கப்பட்ட தமிழர்கள் பல நூற்றுக்கணக்கில் அந்த இடங்களில் இருந்து பல விசாரணை கூட்டிச் செல்லப்பட்டனர்.

பொது இடங்கள் விசாரணை மையங்களாகின சில பிரதேசங்களில் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டோர் அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்குச் கூட்டிச் செல்லப்பட்டனர். சில இடங்களில் கைதானோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அவர்கள் அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து,விசாரிப்பது இயலாது என்ற காரணத்தால் பாடசாலைகள் போன்ற பொது இடங்களுக்கு அவர்கள் கூட்டிச் செல்லப்பட்டனர். அந்த இடங்கள் விசாரணை மையங்களாக்கப்பட்டன. இவ்வாறு பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கும் விசாரணை மையங்களுக்கும் கூட்டிச் செல்லப்பட்டமையைக் கேள்விப்பட்டு, அவர்களின் உற்றார், உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு அந்த இடங்களுக்கு முண்டியடித்தபடி திரண்டு வந்தமையால் அந்த இடங்களிலும் சனக்கூட்டம் நிரம்பி வழித்தது.

ஒரு புறம், பாதைகளின் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பம், மறுபுறம் வகைதொகையின்றி பல நூற்றுக்கணக்கில் ஆங்காங்கே தமிழர்கள் அள்ளப்பட்டதனால் ஏற்பட்ட பீதி, போக்குவரத்து மற்றும் இந்தக் கெடுபிடிகளால்

பெரும்பான்மையினத்தவர் உட்பட அனைவருக்கும் ஏற்பட்ட சினம் என்று நேற்று ஞாயிறு விடுமுறை தினமான போதிலும் தலைநகரில் குழப்பமும், பதற்றமும், களேபரமும் நீடித்தன.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணை மையங்களுக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் கணிசமானோர் நேற்றே விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் பல நூற்றுக்கணக்கானோர் ஐந்நூறுக்கும் அதிகமானோர் நேற்று மட்டும் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான

தடுப்புக் காவலுக்கு மாற்றப்படவிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு காரணம் ஏதுமின்றித் தமிழர்கள் என்பதை மட்டும் அடிப்படையாக வைத்துத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கைதுசெய்யப்பட்டுக் கூட்டிச் செல்லப்பட்டமை, கொழும்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் அவமானச் சீற்றத்தையும், ஆழமான மன உளைச்சலையும், அரசுடன் உறவாடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள் மீது வெஞ்சினத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியமையை நேரடியாக உணரக்கூடியதாக இருந்தது

>

  • தொடங்கியவர்

தமிழர்கள் வகை தொகையின்றிக் கைதுசெய்து அடைக்கப்படு வது குறித்து ஜனாதி பதியிடமும் அர சிடமும் முறை யிட்டும் பயன் ஏது மில்லை என்று விசனம் தெரிவிக்கின்றது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று விடுத்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பவை வருமாறு:

அண்மைக்காலங்களில் கொழும் பிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந் துவரும் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களால் எதுவுமேசெய்ய முடியாது. அவர்களது பேச்சு செல்லாக்காசு. அவர்கள் செய்யவேண்டியது தமது பாராளுமன்ற பதவிகளை ராஜினாமாச் செய்வதுதான். ஆனாலும் செய்வார்களா? ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தமது கதிரையைத் தக்கவைக்கத்தான் பார்ப்பார்கள்.

  • தொடங்கியவர்

கடந்த சில நாள்களாகத் தலைநகரிலும் சுற்றுப் புறங்களிலும் நடத்தப்பட்ட கொடூர மான கைது நடவடிக்கைகளின்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக் கணக் கான வடக்கு கிழக்குத் தமிழர்கள் தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப்படவிருக் கின்றனர் என்று தெரிய வருகின்றது.

தலையாட்டிகள் முன்னால் நிறுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், அந்நடவடிக்கைகளின் மூலம் அப்பாவிகள் என உறுதிப்படுத்தப்படுவோரே விடுதலை செய்யப்படுவர். எனினும் இந்நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அரச உயர்மட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேற்றுத் தெரியப்படுத்தப்பட்டதாக நம்பகரமாக அறியவந்தது.

விடுதலைப் புலிகளோடு செயற்பட்ட பலர் இப்போது அரசுப் பாதுகாப்புத் தரப்பின ரின் தகவல் வழங்கும் உளவாளிகளாகச் செயற்பட்டு வருகின்றனர். அவர்களே முகமூடி அணிந்து தலையாட்டிகளாக நிறுத்தப்படுவர் என்றும் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் இந்த முகமூடி ஆட்கள் முன் நிறுத்தப்படுவர் என்றும்

புலிகளுடன் தொடர்புடையவர்களை அவர்கள் அடையாளம் கண்டு தலையாட்டினால், அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விரிவான விசாரணைக்கு உட்படுத்தப் படுவர் என்றும் கூறப்படுகின்றது.

uthayanpmuz6.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.