Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனவுகளின் கைப்பொம்மை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளின் கைப்பொம்மை

ஸ்கூல் பஸ் மெதுவாக ஓடி தெருவின் வளைவில் இருந்த அவளது வீட்டின் முன் நின்றது. கதவுகள் வாய் திறக்க குழந்தைகள் சில குதூகலமாக ஒவ்வொருவராக வெளிப்பட்டனர். தம் குழந்தைகளின் வரவுக்காகக் இரண்டு மூன்று பெற்றவர்கள் காத்து நின்றனர். தம் அன்னையரின் கைகளை அணைத்து மகிழும் பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்தபடி பஸ் யன்னலில் சாய்ந்து அமர்ந்திருந்த மது இறுதியாக இறங்க மனமற்றவள் போல் மெதுவாக இறங்கினாள். அவளுக்கு ஏனோ மனம் வெறுமையாக இருந்தது. பூட்டியிருந்த வீட்டைத் திறந்தாள். அவளை வரவேற்க யாரும் இருக்க மாட்டார்களென்று அவளுக்குத் தெரியும்.

புத்தகச் சுமையை மெதுவாக மேசையில் இறக்கி வைத்தாள். உடைமாற்ற மனமற்றவளாய் சோபாவில் விழுந்தவள் ரீவியின் றிமோட்டை எடுத்து தட்டினாள். மனது அதில் லயிக்க மறுத்தது. ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடினாள். “மதுக்குட்டி ஓடிவாம்மா”என்று இரு கைகளாலும் ;தன்னை அள்ளி எடுத்து அணைத்து மகிழ்ந்த அம்மம்மாவின் மெலிந்த உருவம் நிழலாய்த் தெரிந்தது. எத்தனை மகிழ்சியான வாழ்க்கையது இன்று சில வருடங்களாக ஏனோ இந்த அவல வாழ்க்கை. அம்மா வந்து கதவைத் திறந்ததும் “என்ன மது இன்னும் ரீவி பார்த்து முடியல்லையா? எந்த நேரமும் ரீவி பார்த்துக்கொண்டிருந்தால் எப்படிப் படிக்கிறது?” என்று தொடங்கி தனது வேலைப்பழு மனஅழுத்தம் கடன் தொல்லை அனைத்தையும் ஒரு தடவை பாடி முடிப்பாள்.

மதுவுக்கு மனம் கனத்தது. அம்மா வரமுதல் உடுப்பு மாற்றி வீட்டுப்பாடங்களைச் செய்யத் தொடங்க வேணும். குளிரில் வந்ததால் கை கால்கள் விறைத்துக் கிடந்தன. சுடச்சுட ஏதாவது குடித்தால் சுகமாக இருக்கும். பிரிஐ;சைத் திறந்து ஒரு கப் பால் எடுத்தாள். அம்மம்மாவின் ஞாபகம் மீண்டும் வந்தது. வீட்டு வளவினுள் வெள்வைப்பசு கட்டி நிற்க அம்மம்மா பால் கறப்பதும் தான் கன்றுக் குட்டியுடன் விளையாடியதுமான அந்த சிறுவயது ஞாபகத்திரைகள் அலைமோதின. சுண்டக் காய்ச்சிய பாலை அளவான சூட்டோடு பரிவோடு ஊட்டிய அந்தத் தாய்மை. குளிர்ந்த பால் தொண்டையால் இறங்க மறுத்தது. தனிமை கொடுமையாக இருந்தாலும் பழகிப் போய் விட்டது. கம்பியூட்டரின் முன் போய் அமர்ந்தாள். சயின்ஸ் புறொயக்ற் செய்வதற்கு விடயங்களைச் சேகரிக்கத் தொடங்கினாள். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. கதவு திறக்கும் சத்தம். அம்மாதான். கம்கியூட்டரின் முன் மகளைக் கண்டதும் முகம் கடுகடுப்பாகியது. “நான் சொல்லியிருக்கிறன் எந்த நேரமும் கம்பியூட்டரில போகவேணாமென்று. சும்மா இதில போய் தேவையில்லாத பிரச்சினையள உண்டாக்கப் படாது. தனது பாட்டில் ஏதேதோ சொல்லி சத்தமிட்டார். என்ன இது? ஏன் இப்படி? எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதுகூட இவர்கள் பண்பாடா? சில வேளைகளில் என் நண்பிகள் போன் எடுத்தால் போதும். “இங்கைபார் மது இப்பிடி பிரண்ஸ்சோட கதைக்கிறனெண்டு சீரழிந்த எத்தனை பேரின் கதைகளைக் கேட்டிருக்கிறன்” என்று ஊரில நடந்த பல கதைகளும் அரங்கேறும். அட இந்த அம்மாவுக்கு அன்பா ஆதரவா “என்ன மது சாப்பிட்டியா? ஸ்கூலில் இன்று என்ன நடந்தது?” என்று எதுவுமே கேட்கத் தோன்றாதா? இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று எந்த நேரமும் எதையாவது அட்வைஸ் பண்ணுவதுதான் பெற்றவரின் கடமையா?

அகாலத்தில் வரும் அப்பா அம்மாவுடன்; கதைப்பதே வாரத்தில் சில மணி நேரமே. இதில் என்னுடன் கதைக்க ஏது நேரம். “மது உனக்காகத்தானே நாங்க இரவு பகலா கஸ்ரப்பட்டு உழைக்கிறது.” இது அப்பா அடிக்கடி சொல்லும் மந்திரம். நான் நல்லா இருக்க பணம் மட்டும் போதுமென்று இவர்களுக்கு யார் சொன்னது? மனிதம் மரத்துப் போன இவர்களுக்கு மத்தியில் என்னைப்போல இளம் குருத்துக்கள் வாயில்லாப் பூச்சிகளாய் வாழ்வது காலத்தின் கட்டளையா? போன வருடம் என் உடலில் ஏற்பட்ட இயற்கையின் மாற்றத்தை ஏனோ செயற்கையாக்கி கொலுப் பொம்மைபோல அலங்கரித்து தங்கள் அந்தஸ்தை பறைசாற்றிய அந்த நிகழ்ச்சி இப்ப நினைத்தாலும் வெறுப்பாக இருந்தது. தேவையில்லாத விடயங்களைப் பெரிது படுத்தும் இவர்கள் இந்த வயதில் எனக்குத் தேவைப்படும் அன்பு அரவணைப்பு இதமான வார்த்தை எதையுமே தர மறுப்பது ஏன்? ஏனோ எனக்கு இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நின்றால் பிழை நடந்தால் பிழை கூந்தலை காற்றில் பறக்கவிட்டால் பிழை. அம்மம்மாகூட அடிக்கடி போனில் கதைக்கும் போது “மது கவனமாக இரு கண்ட ஆட்களோடயும் கதைக்கக் கூடாது. சிரிக்கக் கூடாது. என்று ஏதேதோ சொல்லுவா. நானும் சரி அம்மம்மா என்று பதில் சொல்லுவேன்.

இண்டைக்கு அம்மா வரும்போதே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நான் அமைதியாகப் புத்தகத்துக்குள் மூழ்கிக் கிடந்தேன். லைபிறறிக்குக் கூட தனிய போக அனுமதி இல்லை. எனக்கு எல்லாமே வெறுப்பா இருக்கு. எங்கள் வீட்டுக் கன்றுக்குட்டிக்கு கிடைத்த சந்தோசம்கூட எனக்கு இல்லை. அந்த மாமர ஊஞ்சலும் முகத்தில் மோதும் மல்லிகை மணமும் மீண்டும் நினைவில் நிழலாடியது. அம்மா அருகில் வந்து “மது இனி நீ அந்த சுதாவோட கதைக்கக் கூடாது. அவவோட உடுப்பும் அவவும்.” “ஓ இதுதான் இன்றைய பிரச்சினையா?” என்று மனதுக்குள் நினைத்தபடி “ அம்மா சுதா அப்படி உடுத்த அவளோட அம்மாஅப்பா விட்டிருக்கினம். நீங்க ஏன் கோவிக்கிறீங்க?” “ஏன் நீரும் அப்பிடி போட விடஇல்லை எண்டு குத்திக் காட்டிறீரோ?” பட்டென்று பதில் வந்தது. எதைச் சொல்லிப் புரிய வைப்பது.

உடை உடுத்தத் தடை. உணவு உண்ணத் தடை. ஆவர்கள் வேலைக்குப் போய் வருமட்டும் நான் இந்தக் கண்ணாடிக் கூட்டுக்குள் கைதி. இது என்ன ஆயுள் தண்டனையா? சில வேளை இவர்களுக்குத் தெரியாமல் வெளியே போய் பூங்காவில் காற்று வாங்கி வருவோமா? அல்லது பக்கத்திலுள்ள மோலுக்குப் போய் கடைகளைப் பராக்குப் பார்ப்போமா? ஏன்று மனம் துரு துருக்கும். ஆம்மாவக்குத் தெரிந்தால் வீட்டில் பூகம்பம்தான். பரபரக்கும் மனதை அடக்கிக் கொள்வேன். போன கிழமை ஒருநாள் ஸ்கூலில் ஸ்போட்ஸ் பிறக்ரிஸ் நடந்தது. பஸ்சில் வரமுடியவில்லை. அதனால் நடந்து வர நேரமாகி விட்டது. அம்மா பத்திரகாளியாகி விட்டாள். “நான் என்ன சின்னப் பாப்பாவா சொக்கிலேற் தந்து கடத்திக் கொண்டுபோக” இதைச் சொல்லப் போக அது வேறு வீண் பிரச்சனையாகிவிடும். “நீ சின்னப் பிள்ளை உனக்கு ஒண்டும் தெரியாது. பேசாமல் நான் சொல்லுறதைக் கேள்” என்று சொல்லும் அம்மா சில வேளைகளில் “இப்ப நீ பெரிய பிள்ளை இன்னும் உனக்கு ஒன்றும் செய்யத் தெரியவில்லை” என்பார். நான் என்ன சின்னப் பிள்ளையா? ஆல்லது பெரிய பிள்ளையா? எனக்குப் புரியவில்லை. அம்மாவுக்கும் தெரியவில்லை.

இன்றுடன் ஸ்கூல் விடுமுறை. அத்தனை மாணவர் முகத்திலும் மகிழ்ச்சியின் துள்ளல். ஏன் என் முகத்தில் மட்டும் துளிகூட மகிழ்ச்சி இல்லை. இன்னும் இரண்டு மாதத்துக்கு நான் சிறைப் பறவை. தினம் தினம் எனக்குள் கேள்விகளே பதில்களாய் மூழ்சிப்போன சந்தர்ப்பங்கள் ஏராளம். வகுப்பில் எல்லோரையும் மூன்று நாள் சுற்றுலாவுக்காக கியுபெக் கூட்டிக்கொண்டு போனார்கள். அம்மா அப்பா என்னை விடவில்லை. “எனக்கு உள்ளதே கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணு. அதையும் இப்பிடி கண்டபடி விட்டிட்டு என்ன செய்யிறது?” என்று தனது நண்பியிடம் போனில் சொல்லி பெருமைப்பட்டதைக் கேட்ட எனக்கு கோபம் கோபமாக வந்தது. நானா சொன்னேன்? கண்ணே கண்ணாக என்னை தனியே வளர்க்கும்படி. கியுபெக் போய்த் திரும்பியபின் தமது அனுபவங்களை சந்தோசமாகப் பரிமாறிக் கொண்டபோதும் அதைப்பற்றி புறொஐக்ற் எழுதியபோதும் நான் மட்டும், நான்மட்டும் மௌனமாய் மனதுக்குள் அழுவது இந்த அம்மாவுக்கோ அபபாவுக்கோ தெரியவா போகிறது. ஆம்மாவுக்கு தான் தனது அம்மா அப்பாவுடன் வளர்ந்த இனிய இளமைப்பருவ அநுபவங்களைப் பற்றி நெஞ்சு கொள்ளாத பூரிப்பு. ஆனால் அவளது மகளான எனக்கு கனவுகளே வரக்கூடாது. காதல் என்ற சொல் காதிலும் கேட்கக்கூடாது. இவர்களது கனவுகளின் கைப் பொம்மையாக எத்தனை காலம் இப்படி? இவர்கள் விருப்பப்படி உண்டு. உடுத்தி. உறங்கி. “ஐயோ வேண்டாமே இந்த அன்புச்சிறை” ஓங்கி அலறவேண்டும் போல் இருந்தது.

அதிகாலையிலேயே போன் கிணுகிணுத்தது. “மது என்னம்மா செய்கிறாய்? அம்மா வேலைக்கா? நீ தனியவா இருக்கிறாய்? சாப்பிட்டியா? எல்லாக் கேள்விகளுக்கும் “உம்” கொட்டியபடி மது மெல்ல விசும்பத் தொடங்கினாள். “மது என்னம்மா? ஏன் அழுகிறாய்?” அம்மம்மா மறுமுனையில் பதறுவது தெளிவாகத் தெரிந்தது. என் உணர்வுகனைப் புரிந்துகொள்ள ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உண்மை உறைக்க “அம்மம்மா நான் உங்களோட வந்து இருக்கப் போறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை அம்மம்மா.” என்று தீர்மானமாகச் சொல்லவும் “மது நீ வாம்மா. எனக்கு நீ போதும் அம்மா. இந்தத் தனிமை எனக்கும் வெறுத்துப் போச்சம்மா. நான் அம்மாட்ட கதைக்கிறன். தைரியமாஇரு.”என்று கூறி குரலில் ஆனந்தம் கூத்தாட போனை வைத்தார்.

அம்மா வந்ததும் அம்மம்மா போன் எடுத்ததும் விடயம் அறிந்து அதிர்ந்ததும் அதிர்ச்சி; நீங்கி தீவிரமாய் சிந்தித்ததும் சிந்தனை முடிவில் சிந்தை தெளிவாகியதும் எல்லாமே ஏதோ கனவுலகில் நடப்பதுபோல இருந்தது. மது என்ற இந்தச் சின்னப் பறவைக்கு சிறகு முளைத்து விட்டதா? இந்த அற்புதம் எப்படி நடந்தது. மதுவுக்கு நம்ப முடியவில்லை. எயாப்போட்டில் அம்மாவும் அப்பாவும் என்னென்னவோ சொன்னார்கள். எப்படி எப்படியோ கொஞ்சினார்கள். இந்த மண்ணின் மைந்தர்களாகிப்போன இந்த இயந்திர இதயங்கள் என்னைப்போல ஓர் இதமான வார்த்தைக்கு ஏங்கும் மனிதங்களை எப்படி புரிந்து கொள்வார்கள். இவர்கள் தேவை எல்லாம் பணம் பகட்டு படோடோபமான வாழ்க்கை. அன்பும் பண்பும் அரவணைப்பும் கொண்ட அந்த மண்ணின் வாசனையில் வாழும் அந்தத் தாய்மை அதன் மென்மை. மதுவுக்கு அம்மம்மாவின் மடியில் படுத்து இழந்துபோன அந்த சில வருட மனப்பாரம் இறங்க அழவேண்டும்போல இருந்தது. விமானம் மெல்ல மெல்ல மேலெழும்ப அந்த சின்னப் பறவையின் எண்ணச் சிறகுகள் இலேசாக விரியத் தொடங்கின.

பல வீடுகளிள் நடக்கும் பிரச்சினையை மிகவும் எளிதாக ஒரு கதையில் சொல்லி சென்ற விதம் நன்றாக இருகிறது வாழ்த்துகள் :wub: .....மதுவை போல் அன்பிற்காகவும்,அரவணைப்பிற்க??கவும் ஏங்குபவர்கள் எத்தனை பேர்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி,

'கனவுகளின் கைப்பொம்மை" என்ற உங்களின் சிறுகதைக்குள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறுமியின் வலி தெரிகிறது. வலியை எடுத்துரைத்துத் தீர்வையும் வழங்கிவிட்டீர்கள். வரட்டுத்தனங்களுக்கு அடிமையாகிய பெற்றோரும், அதன் நிமித்தம் பெற்ற பிள்ளைகளைக் கவனிக்க முடியாமல் வேலைப்பளுக்களை தம் சக்தியை மீறிச் சுமக்கும் சந்தர்ப்பங்கள் எத்தகைய வாழ்நிலையைத் தோற்றுவிக்கும் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். 'நச் " சென்று வரட்டுத்தனங்களின் உச்சந்தலையில் குட்டியுள்ளீர்கள். எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதையை வாசித்து சிறப்பாகப் பாராட்டிய யமுனாவுக்கும் வல்லை சகாராவுக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.